தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழகத்தில் ஐடிஐ வினாத்தாள் வெளியானது-தேர்வு ரத்து

ஐடிஐ பரீட்சைக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த 23-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. தேர்வு அட்டவணைப்படி நேற்று ஃபிட்டர் பாடப்பிரிவுக்கு கருத்தியல் தேர்வு நடக்க வேண்டும்.

ஆனால், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் லீக் ஆனதாகவும், மாணவர்களுக்கு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற வேண்டிய 2-ம் ஆண்டு பிட்டர் கருத்தியல் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அந்தியூர் குருநாதசாமி கோவில் அருகே உள்ள சத்தி ஐ.டி.ஐ. தொழிற் பள்ளியில் படிக்கும் மாணவர் வரதராஜன் என்பவர்தான் வினாத்தாளை அவுட் செய்துள்ளார். அவர் உள்பட 3 பேருக்கு பிட்டர் கருத்தியல் வினாத்தாள் மயிலாடுதுறையில் இருந்து ஒருவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்து உள்ளார்.

இந்த வினாத்தாளை பெற்ற மாணவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து, ஈரோடு மாவட்டத்தில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு வினியோகித்துள்ளனர்.

இந்த வினாத்தாளை பிட்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து உள்ளார்கள். இந்த வினாத்தாள் 100-க்கும் மேற்பட்டவர்களின் கைகளில் கிடைத்து உள்ளது. இந்த வினாத்தாளை வினியோகம் செய்தவர் யார் என்பது தெரியவில்லை.

வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது. மேலும் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு உரிய விடைகளும் டிக் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து கோபி ஆர்.டி.ஓ. மணிமேகலை, நேற்று அந்தியூரில் உள்ள சக்தி ஐ.டி.ஐ. முதல்வர் அப்துல் ரசூல் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

வினாத்தாளை அவுட் செய்ததாக சந்தேகப்படும் மாணவர் வரதராஜ், மோட்டார் மெக்கானிக் படிக்கும் மாணவர் விஸ்வநாதன், ஒயர்மேன் பிரிவில் படிக்கும் மாணவர் உதயகுமார், எலக்ட்ரீசியன் பிரிவில் படிக்கும் மாணவர்கள் தவசி, குணசேகரன் ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. மணிமேகலை ரகசிய விசாரணை நடத்தினார்.

கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் சக்தி ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதா? இந்த கேள்வித்தாள்கள் எங்கிருந்து மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்டது. ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் மூலம் இந்த கேள்வித்தாள்கள் வாங்கப்பட்டதா? இதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதா? எத்தனை ஆண்டுகளாக கேள்வித்தாள்களை வெளியிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன? என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் ஐ.டி.ஐ.களுக்கான அகில இந்திய தொழில் தேர்வுகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 125 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்ததேர்வை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அதிகாரிகள், வருவாய்த்துறை சப்-கலெக்டர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தேர்வு பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிட்டர் தொழிற்பிரிவிற்கான தேர்வு வினாத்தாள் வெளியானதாக செய்தி வெளியிடப்பட்டது. இது அரசின் கவனத்திற்கு வந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கையின் படி வினாத்தாள் தமிழகத்தில் வெளியானதா? அல்லது வினாத்தாள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளதால் வேறு மாநிலங்களில் இருந்து வரப்பெற்றதா? என்பதற்கான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று நடைபெறுவதாக இருந்த 2 வருட அனைத்து தொழிற்பிரிவிற்கான கருத்தியல் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

விரிவான விசாரணைக்குப்பின் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்துசெய்யப்பட்ட கருத்தியல் தேர்வு நடைபெறும் தேதி தேர்வு வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்தும் டெல்லியில் உள்ள மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைமை ஆணையரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் இடஒதுக்கீடு-'தண்டவாளத்தை பெயர்த்தெடுப்போம்'

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸும் கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி காஞ்சிபுரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

இங்கு நடைபெறுவது முதல் கட்ட போராட்டம். தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகம் தாங்காது. தயவு செய்து எங்களை அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளாதீர். நாங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி அமைதியாகப் போராட்டம் நடத்துகிறோம்.

அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் சொந்தங்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளோம். நாங்கள் சலுகை கேட்டு போராடவில்லை.

உரிமை கேட்டு போராடுகிறோம். இது ஜாதி போராட்டம் அல்ல; நீதி கேட்டு போராட்டம். எங்கள் உரிமையைப் பெறுவதற்காக தேவைப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.

கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்றார் அன்புமணி.

தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம்-காடுவெட்டி:

வன்னியர்களுக்கு ஒழுங்காக 20 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்து விடுங்கள். இல்லாவிட்டால், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் தண்டவாளங்களைப் பெயர்த்து போராடியதைப் போல வன்னியர்களும் போராட நேரிடும் என வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசினார்.

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தரக் கோரி நேற்று வன்னியர் சங்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு ராமதாஸ் தலைமை தாங்கினார்.

அதேபோல அரியலூரில்நடந்த போராட்டத்திற்கு காடுவெட்டிகுரு தலைமை தாங்கினார். அவரது பேச்சில் அனல் பறந்தது. வன்முறையைத் தூண்டும் வகையிலும் அவர் பேசினார்.

காடுவெட்டி குரு பேசுகையில்,

வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஜாதி இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களைப் போல, ரயில் மறியல் போராட்டம் நடத்தி, தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மை ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும், கடந்த 63 ஆண்டாக தனி இட ஒதுக்கீடு இல்லை. வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும் என்றார் காடுவெட்டி.

ஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது-பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு

ஆணவம் பிடித்த ஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் திரைப்பட விநியோகஸ்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சத்தீஸ் முனியாண்டி, தமிழ்த் திரைப்படங்களை மலேசியாவில் விநியோகிக்கும் பிரமீட் சாய்மீரா குழுமம், லோட்டஸ் குழுமம் ஆகியவற்றுக்கு விடுத்துள்ள கோரிக்கை...

இலங்கையின் வட கிழக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை, உலக வல்லரசுகளின் உதவியோடு, ஆயுதம் பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு கூடி, களித்து, கும்மாளமடித்து திரியும் ஆசின் என்ற திமிர் பிடித்த நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக் கூடாது என்று மலேசிய தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.

இலங்கை என்றாலே சிங்கள பேரினவாதமும், சிங்கள இனவெறித்தனமும்தான் நமது நினைவுக்கு வரும். கடந்த பல்வேறுகாலங்களிலும், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை, தங்களின் இனவெறி தாக்குதல்களுக்கு உட்படுத்தி, இன அழிப்பு நாடகத்தை நடத்தி வந்தது.

இலங்கைப் பேரினவாதத்தைத் தட்டிக் கேட்க ஈழத்தில் பல அமைப்புகள் பிறந்த பொழுதிலும், மாவீரன் பிரபாகரனின் விடுதலைப் புலிகள் இயக்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கிய பிறகே அந்த இனவெறி ஆட்டங்கள் சற்று தணிந்தன.

இவ்வேளையில், ஈழத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்று போராடிய அந்த விடுதலை அமைப்பை அழித்து விட வேண்டும் என்று, இந்தியா உள்ளிட்ட பல பிராந்திய உலக வல்லரசுகளின் ஒத்துழைப்போடு, கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையின் கிழக்கில் முள்ளிவாய்க்கால், என்ற பகுதியில், ஒரு இன அழிப்பு நாடகத்தை நடத்தி முடித்தது இலங்கையின் இனவெறி அரசு.

விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில், ஒட்டுமொத்த ஈழத் தமிழினத்தையே அழிக்கப் பார்த்தான் ராஜபக்சே என்ற கொடுங்கோலன்.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு. அத்தோடு தனது இன அழிப்புப் படலத்தை நிறுத்தி விடாமல் ஈழத் தமிழர்களை, தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆக்கி விட்டுள்ளது. முள்வேளி முகாம்களுக்குள் ஈழத் தமிழர்கள் படும் கொடுமையை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று அண்மையில் கூட இலங்கைக்குச் சென்று வந்த சிலாங்கூரைச் சேர்ந்த தமிழின உதவும் கரங்கள் அமைப்பின் தோழர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமல்லாமல் இலங்கை ராணுவம் கடும் போர்க் குற்றங்களை புரிந்திருப்பதாக கூறி உலக நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு ஐ.நா. சபையே இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க தனது போர்க்குற்றங்களையும், இன அழிப்பு படலத்தையும் மூடி மறைக்க இலங்கை அரசு கடுமையாக முயன்றுவருகிறது. அதன் காரணமாகவே, இலங்கையில் அனைத்து உலக திரைப்பட விருந்தளிப்பு விழாவை நடத்தியது. இந்த விழாவில் பெரும் நடிகர் பட்டாளமே திரளும் என காத்திருந்த இலங்கை அரசுக்கு கிடைத்தது பெரிய ஏமாற்றம்தான். இந்தி திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், என புகழ் பெற்ற இந்தி திரைப்பட நடிகர்கள், அண்ணன் சீமானின் நாம் தமிழர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்த விழாவைப் புறக்கணித்தனர்.

தென்னகத்து நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி என அனைவரும் இலங்கை இனவெறி அரசின் அழைப்பைப் புறக்கணித்தனர். ஈழத் தமிழர்கள் படும் இன்னல்களைக் கண்டு அவர்கள் அவ்வாறு முடிவெடுத்தனர் என்று கூறலாம்.

நிலைமை இவ்வாறிரருக்க இலங்கைக்குப் படப்பிடிப்புக்குச் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பத்தினரோடு சேர்ந்து தமிழர்கள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் ஆசின், இலங்கை அரசின் பிரசார கருவியாக செயல்படுகிறார்.

இலங்கையில் இன அழிப்பு நடக்கவே இல்லை என்று பிரசாரம் செய்யும் நோக்கத்திலேயே இலங்கை இனவெறி அரசு தற்போது நடிகர், நடிகையரை தம் வசம் இழுக்கும் செயலில் இறங்கியுள்ளது.

இலங்கை இனவெறி அரசின் வஞ்சகத்தை உணர்ந்துதான் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள், தமிழகத்துக்குக்க் கொஞ்சமும் தொடர்பில்லாத அமிதாப் பச்சன் உள்பட அனைவரும் இலங்கை அரசின் அழைப்பைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

இவ்வேளையில், இலங்கை அரசின் பிரசார பொம்மையாக செயல்பட்டது மட்டுமின்றி, அவரின் முட்டாள்தனமான செயலுக்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்றும், ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமிராகப் பேசும் ஆசின் என்ற ஆணவக்காரியின் திரைப்படங்களை மலேசியாவில் திரையிட வேண்டாம் என்று மலேசியில் உள்ள தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும், தாழ்மையான வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழ்நாட்டில் வந்திருந்து தமிழர்களின் இயக்கத்தில் நடித்து, தமிழர்களின் பணத்தை சம்பாதித்துச் சென்ற பிறகு, இன்று தமிழர்களின் முகத்தில் காரி உமிழும் செயலைப் போன்றது ஆசினின் செயல்.

உலகத் தமிழினேம, எமது ஈழத்து சகோதரர்களுக்காக அழுகையிலே, தமிழர்களின பணததில் ஒயயாரமாக வாழும் ஆசின், எமது ஈழதது சகோதரர்களின் கண்ணீரை மறைக்கும் வண்ணம், இனெவறி ராஜபக்சேவின் குடும்பத்திடம் உறவு கொண்டு, அவர்கள் தரும் பணத்திற்காக, பிரசசார பொம்மையாக வநது, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது ஈழத் தமிழர்களுக்கு செய்யும் துரோகம், மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இந்தத் துரோகியின் படங்களை திரையிட்டால் இவருக்கு விளம்பரம் தந்ததாகி விடும். அதை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு முறை நாடகமாடி பணம் சமபாதிப்பார். ஆகவே, இவர் செய்யும் துரோகத்திற்கு நாம் உடந்தையாகி விடக் கூடாது என்று தாங்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

வியாபாரம் செய்வது உங்கள் உரிமை. அதே வேளையில், உணர்வுகளும் முக்கியம். உலகத் தமிழினேம இன்று ஈழத் தமிழர்களுக்காக தவிக்கின்றது; அந்த தவிப்பு உங்களுக்கும் புரியும் என்று நம்புகின்றோம். ஆசின் நடிக்கும் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதில்லை என்று நீங்கள் அறிவிக்கும் பட்சத்தில், உலகத் தமிழர்களுக்கு உங்கள் மீதுள்ள மதிப்பும் உயரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தமிழர்கள் முறையாக கேட்டும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கை சென்ற ஆசின் என்ற நடிக்யைின் படத்தைத் திரையிட மாட்டோம் என்று நீங்கள் அறிவித்தால், தமிழர்களை கேட்காமலேயே அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் உங்களை தமிழ் உலகம் என்றுமே மறவாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

லோட்டஸ் பைவ் ஸ்டார் மலேசியாவி்ன் தலை சிறந்த திரைப்பட விநியோகஸ்தர்கள். வள்ளல் ரெனாவின் புதல்வர்கள் இதை நிர்வகிக்கின்றனர் என்து குறிப்பிடத்தக்கது.

வள்ளல் ரெனாவின் வழிவந்த அவர்தம் புதல்வர்கள், தமது தந்தையைப் போலவே, மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கும், உலகத்தமிழர்களின் மனவோட்டத்துக்கும் கண்டிப்பாக மதிப்பளிபபார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதைப் போலவே பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் வேள்பாரி சாமிவேல் அவர்களும், இந்த விவகாரத்தில் அரசியல எல்லைகளைத் தாண்டி, தமிழர்களின் மனவோட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


தமிழகத்தில் ஐடிஐ வினாத்தாள் வெளியானது-தேர்வு ரத்து

ஐடிஐ பரீட்சைக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த 23-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது. தேர்வு அட்டவணைப்படி நேற்று ஃபிட்டர் பாடப்பிரிவுக்கு கருத்தியல் தேர்வு நடக்க வேண்டும்.

ஆனால், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் லீக் ஆனதாகவும், மாணவர்களுக்கு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற வேண்டிய 2-ம் ஆண்டு பிட்டர் கருத்தியல் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

அந்தியூர் குருநாதசாமி கோவில் அருகே உள்ள சத்தி ஐ.டி.ஐ. தொழிற் பள்ளியில் படிக்கும் மாணவர் வரதராஜன் என்பவர்தான் வினாத்தாளை அவுட் செய்துள்ளார். அவர் உள்பட 3 பேருக்கு பிட்டர் கருத்தியல் வினாத்தாள் மயிலாடுதுறையில் இருந்து ஒருவர் பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்து உள்ளார்.

இந்த வினாத்தாளை பெற்ற மாணவர்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து, ஈரோடு மாவட்டத்தில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களுக்கு வினியோகித்துள்ளனர்.

இந்த வினாத்தாளை பிட்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்து உள்ளார்கள். இந்த வினாத்தாள் 100-க்கும் மேற்பட்டவர்களின் கைகளில் கிடைத்து உள்ளது. இந்த வினாத்தாளை வினியோகம் செய்தவர் யார் என்பது தெரியவில்லை.

வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது. மேலும் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு உரிய விடைகளும் டிக் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து கோபி ஆர்.டி.ஓ. மணிமேகலை, நேற்று அந்தியூரில் உள்ள சக்தி ஐ.டி.ஐ. முதல்வர் அப்துல் ரசூல் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

வினாத்தாளை அவுட் செய்ததாக சந்தேகப்படும் மாணவர் வரதராஜ், மோட்டார் மெக்கானிக் படிக்கும் மாணவர் விஸ்வநாதன், ஒயர்மேன் பிரிவில் படிக்கும் மாணவர் உதயகுமார், எலக்ட்ரீசியன் பிரிவில் படிக்கும் மாணவர்கள் தவசி, குணசேகரன் ஆகியோரிடம் ஆர்.டி.ஓ. மணிமேகலை ரகசிய விசாரணை நடத்தினார்.

கேள்வித்தாள் அவுட் ஆன விவகாரத்தில் சக்தி ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதா? இந்த கேள்வித்தாள்கள் எங்கிருந்து மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்டது. ஐ.டி.ஐ. ஆசிரியர்கள் மூலம் இந்த கேள்வித்தாள்கள் வாங்கப்பட்டதா? இதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதா? எத்தனை ஆண்டுகளாக கேள்வித்தாள்களை வெளியிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன? என்ற பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் ஐ.டி.ஐ.களுக்கான அகில இந்திய தொழில் தேர்வுகள் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 125 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்ததேர்வை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அதிகாரிகள், வருவாய்த்துறை சப்-கலெக்டர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தேர்வு பாதுகாப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிட்டர் தொழிற்பிரிவிற்கான தேர்வு வினாத்தாள் வெளியானதாக செய்தி வெளியிடப்பட்டது. இது அரசின் கவனத்திற்கு வந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கையின் படி வினாத்தாள் தமிழகத்தில் வெளியானதா? அல்லது வினாத்தாள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளதால் வேறு மாநிலங்களில் இருந்து வரப்பெற்றதா? என்பதற்கான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று நடைபெறுவதாக இருந்த 2 வருட அனைத்து தொழிற்பிரிவிற்கான கருத்தியல் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

விரிவான விசாரணைக்குப்பின் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்துசெய்யப்பட்ட கருத்தியல் தேர்வு நடைபெறும் தேதி தேர்வு வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்தும் டெல்லியில் உள்ள மத்திய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைமை ஆணையரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பலியாயினர்.

இந்த வழக்கை அதிமுக தரப்பு இழுத்தடித்தது. அதிமுக ஆட்சி இருந்தபோது வழக்கை நடத்த போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை.

எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் 28 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டு நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சேலம் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.

தண்டனையை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்தது. இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடந்தது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அல்தாப் அஹமத் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி குற்றவாளிகளுக்கு கீழ்க் கோர்ட்டுகள் விதித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதாடினர்.

அதிமுகவினர் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார், இந்த வழக்கில் சாட்சிகள் நம்பகத்தன்மையுடன் இல்லை. அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அனுமானத்தின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும் இவர்கள் செய்திருப்பார்கள் என்று கருதியும் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதற்கான புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ள நிலையில் இந்த 3 பேரும் தான் பஸ்சை எரித்திருப்பார்கள் என்பது யூகமே.

மேலும் வாக்குமூலங்களை முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே இவர்கள் மீது குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இல்லாததால் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.சவுஹான் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

சொத்து குவிப்பு-கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா மனு:

இந் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது குடும்பத்தினர் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சாட்சிகளின் ஆவணங்களின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் மனு செய்யப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தின் நகல் வழங்கப்பட்டது. அந்த நகலில் தவறுகள் இருப்பதாகவும், எனவே அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஆவணங்களை ஏற்கக்கூடாது என்றும் ஜெயலலிதா தரப்பில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிமன்றம், மொழி பெயர்க்கப்பட்ட ஆவணத்தில் இருக்கும் தவறுகளை மட்டும் சரி செய்ய மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடிப்பதாகக் கூறி திமுக போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டான்சி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மரணம்:

ஜெயலலிதா தலைமையிலான முதல் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்காக 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

3வது தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா, அதிமுக ஆட்சி ஊழல் வழக்குகளை அவர் விசாரித்தார். டான்சி வழக்கில் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

மூடப்படும் நிலையில் ஆங்கில வழி வகுப்புகள்!



தமிழக அளவில் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தருவதற்கு பல அரசுப் பள்ளிகள் அல்லல்பட நேரிடுகிறது. சுயநிதி அடிப்படையில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டாலும், மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வழி இல்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள்.  ஆங்கில வழி கற்பித்தல் கட்டணமாக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் ஆண்டுக் கட்டணத்தை ரத்து செய்வதோடு, ஆங்கில வழி வகுப்புகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொடக்கத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் தமிழ் வழிப் பாடத் திட்டத்தை மட்டுமே கொண்டிருந்தன. தனியார், மெட்ரிக் பள்ளிகளின் தாக்கத்தால், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியும் தேவை எனும் சூழல் எழும்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை அரசு தொடங்கியது. பின்னர் அதை சுயநிதி அடிப்படையில் நடத்துமாறு அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கான ஆசிரியர்களை பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமித்து, ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மாணவர்களிடம் இருந்து கற்பித்தல் கட்டணத்தை வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவில் கூறப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு தலா ரூ.200, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு தலா ரூ.250, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு தலா ரூ.500 எனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு, அரசுக்கு செலுத்தப்படுகிறது. ஆனாலும், மற்ற மாணவர்களுக்கு வழங்குவதைப்போல இலவச புத்தகங்கள், சீருடைகள், உணவு போன்ற பிற சலுகைகளை அரசு வழங்குகிறது. இதற்காக  ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 5 முதல் 12 ஆசிரியர்கள் வரை பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் நியமித்துள்ளன. தொடக்கத்தில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சேர்க்கைக் கட்டணம் மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒவ்வொரு அரசுப் பள்ளியும் ஒரு மாணவரிடம் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு தலா ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் போதிய நிதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை நீடித்தால், ஆங்கில வழி வகுப்புகளை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

ம(û)றக்கப்படும் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்...

போலி ரூபாய் நோட்டுகள், போலி முத்திரைத்தாள், போலி பாஸ்போர்ட், போலி மருந்துகள், போலி கல்வி நிறுவனங்கள் என போலிகள் பலவிதம்.  இந்த வரிசையில் போலி வீட்டுப் பத்திரம், போலி அதிகாரப் பகிர்வு பத்திரம்,  போலி இருப்பிட சான்றிதழ், போலி ஜாதிச் சான்றிதழ், போலி வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை அடங்கும். இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில், படித்தவர், பாமரர் என எல்லா தரப்பிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம். எம்.பி.பி.எஸ்., பி.இ. உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களைப் பயன்படுத்தியிருப்பதும், பல ஆண்டுகளாக இந்த மோசடி தொடர்ந்துள்ளதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸôர் 5 தனிப்படைகள் அமைத்து இதனை விசாரித்து வருகின்றனர்.போலி புதிதல்ல... போலி மதிப்பெண் சான்றிதழ் என்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது என்ப அரசுத் தேர்வுகள் துறையே பறைசாற்றும்.  அரசு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்த மாணவி. பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., ஆகிய படிப்புகளை எல்லாம் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மூலமாகவே கொடுத்து சேர்ந்த மாணவர் என போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.வேலைவாய்ப்புகளிலும், உயர்கல்வியிலும் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக அவர்களின் சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு வருகின்றன. அவர்களுடைய சான்றிதழ்கள் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கையைத் தொடங்கியவுடனேயே சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்று விடுகின்றனர். பெரும்பாலானவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சிலர் பணியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்' என்றார். உதவுவது யார்? அரசு துறைகளைச் சேர்ந்த அல்லது அவற்றில் இருந்து ஓய்வுபெற்ற பலரது ஒத்துழைப்புடன் இந்த போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்போது நடைபெற்று வரும்  போலீஸ் விசாரணையும் அதை உறுதி செய்துள்ளது. கல்வித் துறையில் உள்ள ஊழியர்களே போலி சான்றிதழ் தயாரிக்க உதவுவது, அத்துறையில் மோசடி எந்த அளவுக்கு மலிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது. நடவடிக்கைகள்தான் என்ன?போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தொடர்பாக இதுவரை அமைச்சர், அதிகாரிகள் அளவில்  பல கட்டங்களாக ஆலோசனை நடைபெற்றுள்ளன. அவற்றில் எதிர்காலத்தில் போலி சான்றிதழ்களைத் தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி பேசியதாகத் தெரியவில்லை.  வருமுன் காப்போம் என்பதை அறிவுறுத்தும் அரசு, போலி மதிப்பெண் சான்றிதழ் விஷயத்தில் மெüனமாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.  மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அது வெறும் பேச்சாகவே உள்ளது. புகைப்படத்துடன் சான்றிதழ் வழங்கினால் ஒரு சான்றிதழுக்கு ரூ.20 செலவாகும். இதை மாணவர்களிடம் வசூலித்தால், தேர்தல் நேரத்தில் அது சரியாக இருக்காது என்று அதைக் கொண்டு வர அரசு தயங்குவதாகக் கூறப்படுகிறது. சந்தையில் எந்தவொரு பொருள் வந்தாலும், அதை அப்படியே ஒத்துப் போவது போல் போலி பொருளைத் தயாரித்து உலவவிடும் நிலை உள்ளது.  அப்படியிருக்கும்போது மதிப்பெண் சான்றிதழைப் போலியாக தயாரிப்பது ஒன்றும் பெரிதல்ல. தவிர, மாணவர்களுக்கு இப்போது வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ் மிகச் சாதாரணமாக உள்ளது. அதில் சொல்லும்படியாக ரகசியக் குறியீடுகள் எதுவும் இல்லை.  பல்கலைக்கழகங்களின் மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் போன்றவற்றில் ரகசிய பாதுகாப்பு குறியீடுகள் உள்ளன. இவை நடைமுறைக்கு வந்த பின்னர், அவற்றின் போலி சான்றிதழ்கள் பயன்படுத்தப்படுவது குறைந்துள்ளதாக கூறப்படுகின்றன.  எனவே, போலி மதிப்பெண் சான்றிதழைத் தவிர்க்க, மதிப்பெண் சான்றிதழில் ரகசிய குறியீடுகளை அதிகப்படுத்துதல், போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர், பெற்றோர் மத்தியில் ஏற்படுத்துதல், கல்வி நிறுவனங்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து அரசு சிந்திக்கலாம். போலி மதிப்பெண் சான்றிதழ்கள் சமூகத்தின் உயிர்த் துடிப்பையே நிறுத்திவிடும். இதை அரசு உணர வேண்டும். போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு விசாரணையின் வேகம் இப்போது குறைந்து வருவதாகத் தெரிகிறது. மற்ற விவகாரங்களைப் போல் போலிச் சான்றிதழ் விவகாரமும் ம(û)றந்து விடும் நிலை ஏற்படக் கூடாது.



அறிவுசார் சொத்துரிமைக் கல்வி...


மேலைநாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை (இன்டலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ்) தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனால்தான் இந்தியாவின் படைப்புகள் பலவற்றுக்கு மேலைநாடுகள் அறிவுசார் சொத்துரிமையைப் பெற போட்டியிடுகின்றன. இந்தியாவில் இது தொடர்பான நிபுணர்களும், கல்வி அறிவும் குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம்.இக்குறையைப் போக்கும் வகையில் இப்போது இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான புதிய சான்றிதழ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பும் (சிஐஐ), "ஜிஐஎஸ்டி எட்ஜ்' கல்வி நிறுவனமும் இணைந்து சர்வதேச தரத்தில் இந்தப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.இதுவரை தனியாக கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் வகையில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போதைய புதிய முறையில் மிகக் குறுகிய காலத்தில் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த கல்வியைப் பெறமுடியும் என்பது கூடுதல் சிறப்பு.÷இணையதளம் மூலம் 5 வாரங்களில் இந்த சான்றிதழ் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. நாள்தோறும் தங்களுக்கு வசதிப்பட்ட 2 மணிநேரத்தை செலவிட்டால் போதுமானது. இப்போது கல்லூரிகளில் படித்து வருபவர்கள் மற்றும் வேலைகளில் இருப்பவர்களும் கூட இதில் சேர முடியும். பயிற்சி, தேர்வு என அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.÷மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இணையதளம் மூலம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள். டிரேட் மார்க், தாவர வகைகள், புவியியல் குறியீடுகள் மற்றும் தொழில், கல்வி என அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள அறிவுசார் சொத்துரிமை விவரங்களுடன் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொழில்துறை சார்ந்த அறிவுசார் சொத்துரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இக்கல்வி முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகம் உள்ளது என்று ஜிஐஎஸ்டி எட்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.÷இன்றைய உலகில் வெறும் பட்டப்படிப்புக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம். எனவே மாணவர்கள் இதுபோன்ற கூடுதல் சான்றிதழ் படிப்புகளைப் படிப்பது வேலை பெறும் தகுதியை உயர்த்திக் கொள்ள நிச்சயமாக உதவும். இது தொடர்பான மேலும் விவரங்களை என்ற gistedge.com   இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

வகுப்புகள் ரத்தாகும் அவலம்: அரசுக் கல்லூரிகளில் தொடரும் காலிப் பணியிடங்கள்


தமிழகத்தின் பல அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்  காலிப் பணியிடங்கள் நிகழாண்டிலும் நிரப்பப்படவில்லை. இதனால் வகுப்புகள் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  தமிழகத்தில் உள்ள 67 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,055 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்தப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வது தொடர்பாக ஆசிரியர் தேர்வாணையம் மார்ச் 29-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலைப் பட்டத்துடன் மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலைப் பட்டத்துடன் முனைவர் பட்டம் பெற்றிருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டது.  விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, சென்னையில் முதல் கட்டச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கியது.  இதில், கல்வித் தகுதிகளுக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்களும், கல்லூரி அல்லது பல்கலைக்கழகக் கற்பித்தல் பணி அனுபவத்துக்கு ஆண்டொன்றுக்கு இரு மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்களும் என மொத்தம் 24 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பணி நாடுநர்களின் கற்பித்தல் அனுபவத்துக்கான மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்கு இடையேயும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்தது. அடுத்த கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவோம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுவரை நேர்காணலுக்கான அழைப்பாணை அனுப்பப்படாததே இதற்குக் காரணம்.  இதனால், அரசுக் கல்லூரிகளில் நிகழாண்டிலும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருக்கின்றன.  இந்நிலையில், கெüரவ விரிவுரையாளர்கள் பணி நியமனத்திலும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால், அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு எடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.  எனவே, ஒவ்வொரு அரசுக் கல்லூரியிலும் சராசரியாக 10 முதல் 15 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி, திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 60 பணியிடங்கள் காலியாக இருக்கும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.  இதுகுறித்து பேராசிரியர்கள் மேலும் தெரிவித்தது:  "அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், வகுப்புகள் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.  இதனால், நாள்தோறும் ஒரு மணிநேரமோ அல்லது இரண்டு மணிநேரமோ வகுப்புகள் ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.  நிகழாண்டில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், நிகழாண்டிலும் காலிப் பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளது.  இந்நிலையில், அடுத்த 3 மாதங்களில் பருவத் தேர்வு தொடங்கவுள்ளது. எனவே, நிகழாண்டிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை நிலவுகிறது' என்றனர்.  எனவே, ஏற்கெனவே, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பணி நாடுநர்களுக்கு நேர்காணல் நடத்தி காலிப் பணியிடங்களில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்பதே பேராசிரியர்களின் எதிர்பார்ப்பு.


மேம்படுத்தப்படுமா கிராமக் கல்விக் குழுக்கள்?


அரசுப் பள்ளிகள் வளர்ச்சியில் பள்ளி நிர்வாகத்துக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுபவை கிராமக் கல்விக் குழுக்கள். தமிழகத்தின் பல இடங்களில் இக்குழுக்கள் சரிவர செயல்படாததால் கிராமப்புறக் கல்வி வளர்ச்சியில் எதிர்பார்த்த வேகம் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. இக்குறையைப் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராமப்புற மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.   அரசுப் பள்ளிகளில் 1997-ம் ஆண்டில் கிராமக் கல்விக் குழுக்கள் தொடங்கப்பட்டன. இந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதி தலைவராகச் செயல்படுவார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் துணைத் தலைவராகச் செயல்படுவார். பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலராகச் செயல்படுவார். கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர், ஆதிதிராவிடர், தொண்டு நிறுவனப் பிரதிநிதி, பட்டதாரிகள் எனக் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் 6 பேர் என 15 பேர் உறுப்பினர்களாகச் செயல்படுவர்.  ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 17 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 22 ஆயிரத்து 500, உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 60 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் என்கிற அளவில் இக்குழுவின் நிர்வாகத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிதியில், மத்திய அரசின் பங்கு 85 சதவீதம்; மாநில அரசின் பங்கு 15 சதவீதமாகும்.  இந்தக் குழுவின் பொறுப்பாளர்கள் மாதந்தோறும் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து விவாதித்து, இந்நிதியைத் தேவையானதற்குப் பயன்படுத்த வேண்டும்.  இந்த நிதியானது ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும்,பள்ளிகள் தம் உடனடித் தேவைகளை தாமே நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறது. பெற்றோர்களுக்கும் பள்ளி வளர்ச்சியில் அக்கறையுள்ள அந்தந்தப் பகுதியில் உள்ள கல்வியாளர்களுக்கும் சிறிய அளவில் ஓர் அதிகாரத்தை அளிக்கிறது. பள்ளி வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தும் ஒரு குழுவாக இதை முன்னெடுக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது.  உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்குடி என்னும் குக்கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்படும் கல்விக் குழு சிறப்பான செயல்பாட்டால் பல பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.   இந்தக் குழுவினர் கல்விக் குழுவின் செயல்பாடுகளையெல்லாம் தாண்டி, ஒரு நல இயக்கமாக உருவெடுத்து, பல்வேறு நலத் திட்டங்களை அந்தப் பள்ளியில் நிறைவேற்றியுள்ளனர். பல்வேறு கட்டுமானங்களுடன் மின் விசிறிகள்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காட்சிகள் வாயிலாக பாடம் நடத்த வகுப்பறைகள்தோறும் தொலைக்காட்சிப் பெட்டிகள், கணினிகள் என ஏறத்தாழ ரூ. 7 லட்சத்தில் பல்வேறு வசதிகள் கல்விக் குழுவினர் முயற்சியில் இப்பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளன.   குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் சுயநிதி மற்றும் நன்கொடைகள் வாயிலாக இந்தப் பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையான வசதி கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கின்றனர்.  ஆனால், பல இடங்களில் இந்தக் குழுக்கள் பெயர் அளவிலேயே இருக்கின்றன. குழுவினர்  முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவது கிடையாது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் பலர் கூட்டங்களில் பங்கேற்பதோ, ஆக்கபூர்வமாக செயல்படுவதோ கிடையாது. இதனால், பல இடங்களில் இக்குழுக்கள் பெயரளவிலேயே - பள்ளி நிர்வாகிகளில் கைப்பாவைகளால் நடத்தப்படும் அமைப்பாக - செயல்படுகின்றன.  இதற்குப் பள்ளி நிர்வாகங்கள் இந்தக் குழுக்களை தம்முடைய கட்டுப்பாட்டில் தமக்கு வேண்டியவர்களைக் கொண்டு அமைப்பதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தவிர, கல்வித் துறை இக்குழுக்களைக் கண்காணிக்காததும் இன்னொரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.    இதுகுறித்து மாங்குடி நடுநிலைப் பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் பாலாமணி ரங்கசாமி கூறியது:  ""கிராமக் கல்விக் குழுக்கள் அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளன. ஒரு குக்கிராமத்திலுள்ள எங்கள் பள்ளி நகரப் பள்ளிகளுக்கு இணையாக இருக்க கல்விக் குழுவின் செயல்பாடும் ஒரு காரணம். ஆனால், இந்தக் குழுவின் வெற்றிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிமணியே முக்கியப் பங்கு வகித்தார். அவர்தான் இக்குழுவின் செயல்பாடுகள் என்ன, ஆசிரியர்கள் - பெற்றோர்கள் கூட்டுமுயற்சியால் என்னென்ன செயல்களை சாதிக்கலாம் என்றெல்லாம் எங்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார்.  அதேபோல, பல இடங்களில் கல்விக் குழுக்கள் செயல்படவில்லை என்றால், அதற்குக் காரணமும் பள்ளி நிர்வாகங்கள்தான். குழுக்கள் பெயர் அளவில் இருப்பதையே பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள்  விரும்புகின்றன. அரசும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் அவர்.   அரசு நல்ல நோக்கங்களுடன்தான் கல்விக் குழுக்களை அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட குழுக்களின்  ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதி செய்வதிலும் அரசுக்குப் பங்கு உண்டு. ஆகையால், கிராமக் கல்விக் குழுக்களின் நோக்கம் நிறைவேற இந்த அமைப்புகளின் மீது அரசின் பார்வை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாகும்.


தமிழ் இணையப் பல்கலை. பெயர் மீண்டும் மாற்றம்


சென்னை, ஜூலை 28: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மூன்றே மாதங்களில் இரண்டாவது முறையாக பெயர் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.1999-ல் தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி இணைய வழியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவித்தார்.அந்த அறிவிப்புக்கு இணங்க, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் இணையப் பல்கலைக்கழகம் பதிவு செய்யப்பட்டது.இதன் மூலம், மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயம், மேற் பட்டயம், பட்டம், முதுகலை என்ற நிலைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இணையப் பல்கலைக்கழகம் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்டதால் அதற்கு சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் இல்லை.பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் பொறுப்பு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகமாக்க நடவடிக்கை: இதனிடையே, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உண்மையிலேயே பல்கலைக்கழகமாக்க முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி கோரப்பட்டது. சங்கங்களின் கீழ் பதிவு என்பதால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.இதனிடையே, இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர், பன்னாட்டுத் தமிழ்ப் பயிற்சி இணையம் என மாற்றப்பட்டது.மீண்டும் மாற்றம்: இந்த நிலையில், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றி அமைத்தது குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. ஆங்கிலத்திலும், தமிழிலும் மாற்றி அமைக்கப்பட்ட இரு பெயர்களையும் மீண்டும் சற்றே மாற்றி அமைக்க வேண்டும் என கருதப்பட்டது.அதன்படி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் குழுமம் விரிவாக விவாதம் நடத்தியது. இதன்பின், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழ் இணையக் கல்விக் கழகம் என மாற்றம் செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்களில்: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் கடந்த ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பெயர் மாற்றப்படவில்லை. இப்போது மீண்டும் பெயர் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் அம்பலப்படுத்திய ரகசியங்கள் புதியவை அல்ல: ஒபாமா


வாஷிங்டன், ஜூலை 28: விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்திய புலானாய்வு ரகசிய தகவல்களில் புதிய  விஷயங்கள் ஏதும் இல்லை. அதில் உள்ள பல விஷயங்கள் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் போர் தொடர்பாக போர்க்களத்திலிருந்து திரட்டப்பட்ட புலனாய்வு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் என்கிற இணையதளம் வெளியிட்டது. இது பெரியபரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு அல்-காய்தா தீவிரவாதிகளுடனும், தலிபான்களுடனும் நெருங்கிய உறவுவைத்து அவர்களுக்கு உதவுவதாகவும் புலனாய்வு ரகசிய குறிப்புகளில் உள்ளது. இந்த ரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ்  அம்பலப்படுத்தியது. ஆப்கானிஸ்தான் போர்க்கள ரகசிய தகவல்கள் அம்பலமாகவே ஆப்கான் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் மீது 2001 செப்டம்பர் 11ம் தேதி அல்காய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும் சரி அமெரிக்கா மீதும் அதன் தோழமை நாடுகள் மீதும் நடந்த இதர தாக்குதல்களும் சரி, ஆப்கானிஸ்தானில் தான் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க தனி கொள்கையை வகுத்தது. இதற்காக பாகிஸ்தானையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டது. விக்கிலீக்ஸ் இணையதளம் ரகசிய புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்தியபிறகு முதல்முறையாக நாடாளுமன்ற அவைத் தலைவர்களை சந்தித்து ஒபாமா ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிருபர்களிடம் ஒபாமா பேசினார். ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர போதிய நிதியுதவி வழங்க செனட் அவை ஒப்புக்கொண்டதுபோல் பிரதிநிதிகள் அவையும் சம்மதம் தெரிவிக்கவேண்டும் என ஒபாமா வலியுறுத்தியுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்திய தகவல்களில் எதுவுமே புதியவை அல்ல. அதில் உள்ள விஷயங்கள் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டவைதான். ஆப்கானிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா புதிய யுக்தியை வகுத்து செயல்பட்டுவருகிறது. இது வெற்றிகரமாக அமைய முடிந்த எல்லா வழிகளும் கையாளப்படுகிறது. போர்க்களத்தில் திரட்டப்பட்ட ரகசிய புலனாய்வு தகவல்கள் அம்பலமானது கவலை அளிக்கிறது. ரகசிய தகவல்கள் அம்பலமாவது போர்க்களக்தில் உள்ள படையினருக்கு நல்லதல்ல. அது ஆபத்தையே விளைவிக்கும். மேலும் போர் நடவடிக்கைகளுக்கும் அது குந்தகம் ஏற்படுத்திவிடக்கூடும் என்பதே எனது முக்கிய கவலை என்று நிருபர்களிடம் தெரிவித்தார் ஒபாமா.


தலையங்கம்: ஆகட்டும் பார்க்கலாம்!

புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணைய அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு சந்தைப் பொருளாதாரத்தை நாம் ஏற்றுக் கொண்டதன் விளைவுகளை தற்போது சந்தித்து வருகிறோம். சந்தைப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் நேர்கொள்ளும் பொருளாதாரத் தடுமாற்றங்களுக்கு நாமும் ஆள்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.இந்த நிலையில், ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் சில மாற்றங்களை ஏற்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. சாதாரண இந்தியனின் கைக்கு எட்டாத உயரத்தில் பறந்துவிட்டிருக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படாமல், விற்பனை குறைந்துவிடாமல் அதன் தொடர்விளைவாக பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது.உணவுப் பொருள்களின் விலையும் சரி, நுகர்வோர் தேவைகளும் சரி இரண்டு இலக்க விலைவாசி உயர்விலிருந்து இன்னும் கணிசமாக இறங்கி வரவில்லை. ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனைய பொருள்களின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டு முயற்சிகளைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சாதகமான பருவநிலை, எதிர்பார்ப்புப் பொய்க்காமல் உணவு உற்பத்தி, உலக கச்சா எண்ணெய் விலையில் மாற்றமின்மை என்று சாதகமான நிலைமை இருக்குமேயானால், விலைவாசி ஏற்றம் அடுத்த நிதியாண்டுக்குள் 6 விழுக்காடாகக் குறைந்துவிடும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.நாம் உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக் கொண்டதுமுதல், நமது உள்நாட்டுப் பொருளாதாரத்தையும், நமது நிதிநிர்வாகத்தையும் நிர்ணயிப்பது நமது உற்பத்தியோ, சேமிப்போ, செலவினங்களோ அல்ல. நமது ஏற்றுமதி, இறக்குமதி விகிதம் கட்டுக்குள் இருந்தாலும்கூட, நமது பொருளாதாரத்தை உலக நிகழ்வுகள் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பே ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி, தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் விந்தையை, அமெரிக்கப் பொருளாதாரத் தடுமாற்றம் இந்தியாவைப் பாதித்தபோது நாம் சந்திக்க நேரிட்டது.ஐரோப்பிய யூனியனில், குறிப்பாக கிரேக்க நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தடுமாற்றம் ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல, உலக நாடுகளையே பாதித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அன்னிய முதலீடுகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. அன்னிய முதலீடு குறையும்போது, வெளிவர்த்தகப் பற்றுவரவு (பாலன்ஸ் ஆப் பேமண்ட்) தடுமாற்றம் காண்பதைத் தவிர்க்க இயலாது. இதை முன்யோசனையுடன் நேரிட நமது ரிசர்வ் வங்கி எடுக்க இருக்கும் முடிவுகள், பல இந்திய முதலீட்டாளர்களை, குறிப்பாக ஓய்வூதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.கடந்த 1996 முதல் நமது நிதியமைச்சகம் வங்கிகளில் போடப்படும் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 12 விழுக்காட்டிலிருந்து படிப்படியாகக் குறைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. மேலைநாடுகளில் குறைந்த வட்டிக்குக் கடன் கிடைப்பதால் பலரும் அங்கே கடன் பெற்று இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் வைப்பு நிதியாகப் போட்டு வட்டி வித்தியாசத்தில் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள் என்று இதற்கு ஒரு காரணம் காட்டப்பட்டது. மேலும், வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரும்போது கடன் வழங்கும்போது அதற்கான வட்டி விகிதமும் அதிகரிப்பதால் தொழில் தொடங்க முன்வருபவர்களை ஊக்குவிக்க முடியவில்லை என்பது சொல்லப்பட்ட இன்னொரு காரணம்.பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்தான் தாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்ததையும், ஓய்வுபெறும்போது பெற்ற பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்புகளையும் பாதுகாப்புக் கருதி அரசு வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதிகளாகப் போட்டு வைத்திருந்தனர். அரசு வங்கிகளில் பணத்தைச் சேமிப்பதில் இருக்கும் பத்திரத்தன்மை இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்தியப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டாக வேண்டும் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தப் பத்திரத் தன்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. வங்கிகளின் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், அவர்களைப் பங்கு மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்ய ஊக்குவிப்பது என்று  கொள்கை முடிவு செய்யப்பட்டது.பங்கு மார்க்கெட்டில் பணத்தைப் போட்டு விவரமில்லாமல் சூதாடி நஷ்டமடைந்த நடுத்தர வர்க்கத்தினரின் சோகக் கதைகளை சுதந்திர இந்தியாவின் சரித்திரம் பதிவு செய்யப் போவதும் இல்லை. அவர்களுக்காக நமது சந்தைப் பொருளாதார மேதைகள் அனுதாபப்படவும் போவதில்லை.இப்போதும் வங்கிகளில் பழைய நிலைமையிலான வட்டி விகிதம் வைப்பு நிதிக்கு வழங்கப்படுமானால், தங்கத்தில் முதலீடு செய்வதையும், பங்கு மார்க்கெட்டில் தங்களது அதிர்ஷ்டத்தைச் சோதனை செய்வதையும் விட்டுவிட்டு, பலரும் வங்கிகளிலான நிரந்தர வைப்பு நிதியில்தான் முதலீடு செய்வார்கள் என்பதும் நிஜம்.வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த இருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவு. வரவேற்போம். வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க யோசிக்கிறது. அதுவும்கூட ஏற்புடையதே. தொழில் முனைவோருக்கான வங்கி வட்டி விகித அணுகுமுறையில் மாற்றம் இருக்கப் போவதில்லை. உற்பத்திப் பின்னடைவு தடுக்கப்படும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது மட்டும்தான் ஏற்புடையதாகத் தெரியவில்லை.சேமிப்பை அதிகரிப்பது; மக்களின் கடன் வாங்கும் போக்கைக் கட்டுப்படுத்திக் குறைப்பது - இதுதான் சரியான நிதிநிர்வாகமாக இருக்க முடியும்! அதை ரிசர்வ் வங்கி உணரத் தொடங்கி இருப்பதுபோலத் தெரிகிறது. காலம் கடந்தாவது யோசிக்கத் தொடங்கி இருக்கிறதே, மகிழ்ச்சி!


தமிழினத்தைக் கைவிட்ட வரலாற்றுப் பழியைக் கருணாநிதி சுமக்க வேண்டி வரும் : தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்.

இலங்கையால் கொல்லப்படும் மீனவர்கள் சார்பாக குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களைச் சிறையில் அடைத்து அழகு பார்ப்பதைக் கைவிட்டு கச்சதீவை மீட்க முதல்வர் கருணாநிதி தமிழகத்தை ஒன்றிணைத்துப் போராட முன்வர வேண்டும். அதற்கு முனனோடியாக சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி தமிழினத்தைக் கைவிட்ட வரலாற்றுப் பழியைக் காலம் எல்லாம் சுமக்க வேண்டி வரும் என்று கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை: 


கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே என்றொரு பழமொழி தமிழில் உண்டு.


இந்திய இறையாண்மைக்கும் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் காரணம் காட்டி நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை தமிழக அரசு கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளது. இந்தக் கொடுமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


இதேபோல் இலங்கையில் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவை இலங்கை செல்ல அனுமதிக்க வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும், சென்னையில் புதன்கிழமை (ஜூலை 14 ) இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் திராவிடக் கழகப் பொது செயலாளர் விடுதலை இராஜேந்திரன், திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் தமிழக அரசு தமிழின உணர்வாளர்களது பேச்சுச் சுதந்திரத்தை மறுத்து அவர்களது வாய்களை அடைப்பது மக்களாட்சி முறைமைக்கு முரணானது எனச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பேச்சுச் சுதந்திரத்துக்காக சிறை சென்ற பெரியார், அண்ணா பெயர்களை மூச்சுக்கு முந்நூறு தரம் உச்சரிக்கும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஏறிய ஏணியை உதைக்கும் செயலாகும். தமிழக மீனவர்கள் தவணை முறையில் சிங்களக் கடற்படையினரால் கொல்லப்பட்டு வருகிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்களது எண்ணிக்கை 450 யும் தாண்டியுள்ளது. இறுதியாக செல்லப்பன் என்ற மீனவர் சிறிலங்கா கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலையைக் கண்டித்து திமுக சிறிலங்கா துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.

போர் முடிந்த பின்னரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையினரால் கொல்லப்படுவது முழுத் தமிழினத்துக்குமே இழிவையும் தலைக் குனிவையும் ஏற்படுத்தியுள்ளது.சிறிலங்கா அரசைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசு வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறது. சாகிறவன் தமிழன் என்ற இளக்காரம் இந்திய மத்திய அரசுக்கு இருக்கலாம்! தமிழக அரசுக்கு இருக்கலாமா? தமிழினத்துக்கு என்ன கேடு நடந்தாலும் பதவி போகக் கூடாது அதிகாரம் கைநழுவக் கூடாது என்பதிலேயே முதல்வர் கருணாநிதி முனைப்போடு இருக்கிறார் எனக் குற்றம் சாட்டுகிறோம்.

பதவி என்பது தோளில் போடும் துண்டு கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி என்று பேரறிஞர் அண்ணா முழங்கினார். ஆனால் இன்று அந்த முழக்கம் கனவாய் பழங்கதையாய் போய்விட்டது. இன்று கொள்கை தோளில் போடும் துண்டு பதவி இடுப்பில் கட்டும் கோவணம் எனத் தலைகீழாக மாறிவிட்டது!நக்கினார் நாவிழந்தார் என்பதற்கு ஒப்ப இந்திய அரசைத் தட்டிக் கேட்க முதல்வர் கருணாநிதி தயங்கலாம். அல்லது பேசா மடந்தையாக இருக்கலாம். ஆனால் தன்மானமும் பெருமிதமும் படைத்த தமிழ் உணர்வாளர்கள் அப்படி இருக்க முடியுமா? இருக்கத்தான் வேண்டுமா? அப்படி இருப்பது இழுக்கல்லவா? நாளாந்தம் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் அடிப்படைக் காரணம் 1974 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கச்சதீவை மத்திய அரசு சிறிலங்காவிற்குத் தாரவார்த்துக் கொடுத்ததுதான்.

இதனால் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் எல்லை சுருங்கிவிட்டது. எனவே கொல்லப்படும் மீனவர்கள் சார்பாக குரல் கொடுக்கும் தமிழ் உணர்வாளர்களைச் சிறையில் அடைத்து அழகு பார்ப்பதைக் கைவிட்டு கச்சதீவை மீட்க முதல்வர் கருணாநிதி தமிழகத்தை ஒன்றிணைத்துப் போராட முன்வர வேண்டும். அதற்கு முனனோடியாக சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் முதல்வர் கருணாநிதி தமிழினத்தைக் கைவிட்ட வரலாற்றுப் பழியைக் காலம் எல்லாம் சுமக்க வேண்டி வரும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



அசினையும் அவர் விளம்பர படுத்தும் பொருட்களையும் புறக்கணியுங்கள்....!!!!!!

தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக மாறியுள்ள அசின் என்ற தமிழினத் துரோகியையும்,  அவரால் விளம்பரப் படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணித்து அவரால் தூற்றப்படும்  நம் இனமானத்தை இன்றே காப்பாற்றுவோம் .

 
முதலில் படப்பிடிப்புக்காகத்தான் இலங்கை சென்றுள்ளதாக அசின் அப்பாவியாகக் கூறினார். 


பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவ அறக்கட்டளை அமைத்துள்ளேன் என்றார். அறக்கட்டளை அமைப்பதற்கு சிங்கள இளவரசர் நாமல் ராஜபக்சாவே முன் நின்று உதவினார் என்பதை வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அவரின் பெருந்தன்மையை விலாவாரியாகப் புகழ்ந்து தள்ளினார். 


சிங்கள மகாராணியும் மன்னர் ராஜபக்சாவின் தர்மபத்னியுமான சிராந்தியின் பரிவாரத்தில் தமிழச்சியாக வேடமேற்று வவுனியா முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிடம் "ராஜபக்சா அரசின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு நல்வாழ்வு வாழவேண்டும்" என்று அறிவுரை செய்தார் .

போரின்போது 1 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களை ராஜபக்சா அரசு கொன்று குவித்தது.  உயிர்தப்பிய அப்பாவி மக்களை முள்வேலி முகாமில் அடைத்து வைத்து உணவும், மருந்தும் கொடுக்காமல் பிச்சைக்காரர்களாக்கி  வேடிக்கை பார்த்து அது சிரித்தது. 

தமிழீழ அரசின் நிர்வாகத் துறையில் இருந்த ஆண்களையும், பெண்களையும் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைத்து இன்றளவும் அவர்களை அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் தாயக நிலத்தின் அனைத்துக் கலாச்சார சின்னங்களையும் அழித்து  அவற்றை சிங்களமயமாக்கிக் கொண்டிருக்கிறது. தாயகத்தின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தான் செய்த குற்றங்களுக்கு வக்காலத்து வாங்கும் நாடுகளுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறது. தாயக நிலம் முழுவதையும் சிங்கள இராணுவ முகாமகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறது. முள்வேலி முகாமில் இருந்து சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பிய குடுமபங்களில் பெண்களும், சிரார்களும், வயோதிகர்களும் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதனைத் தட்டிக் கேட்ட ஐ.நா.சபையின் கொழும்பு அலுவலகத்தை சிங்கள ரௌடிகளைக் கொண்டு சூரையாடியிருக்கிறது. 

இப்படிப்பட்ட ராஜபகசா அரசினைத் தமிழ் மக்களால் வளர்க்கப் பட்ட அசின் "பெருந்தன்மை கொண்டது" என்றுபுகழ்பாடத் தொடங்கியிருக்கிறார். மேலும், ராஜபக்சா அரசு தமிழர்கள் அனைவரையும் சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது என்றும், தமிழ் மக்களுக்கு அது சர்வதேச தரத்தில் ராஜ வைத்தியம் செய்து வருவதாகவும் கூறத் தொடங்கியிருக்கிறார்.  இவ்வளவு பெருந்தன்மை கொண்டதாக சிங்கள அரசு இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஏன் சுதந்திரமும், சுயாட்சியும்? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இலங்கை வந்து தன்னைபோல சிங்கள இளவரசர் நாமல் ராஜபக்சாவுடன் கூட்டுச் சேர்ந்து அறக்கட்டளைகள் பல திறந்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவி, சிங்களர்களுக்கு இணையான அரசியல் சமத்துவ அதிகாரம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என்று முழங்க வேண்டும் என்றும் தமிழ்த் திரையுலகினருக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறார். 
எனவேதான்:


- உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ள அசினையும், அவரால் விளம்பரப் படுத்தப்படும்  பொருட்களையும்  இன்றே நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவோம். 
 

- சர்வதேச உலகத்தினரின் முன்பு தமிழினத்தை இகழத் தொடங்கியிருக்கும்  அசினைத் தமிழ்த் திரையுலகம்  இனி ஒருபோதும் ஏற்கக் கூடாது.
 

- அவரால் சந்தையில் விளம்பரப் படுத்தப் படும் அனைத்துப் பொருட்களையும் அவரை விளம்பரத்தில் இருந்து சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் நீக்கும் வரை உடனடியாகப் புறக்கணிப்போம். 

 

அசினால் விளபரப்படுத்தப்படும் பொருட்களும் , சேவைகளும் :

 

1. பெப்சிகோ நிறுவனத்தின் மிரிண்டா குளிர் பானம்

2. இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் Clinic All Clear ஷாம்பூ, SURE deodarant spray,




3. கோல்கேட் பாமாலிவ் நிறுவனத்தின் கோல்கேட்  பற்பசை
4. கவின்கேர் நிறுவனத்தின் - Fair Ever சிகப்பழகுக் கிரீம் , Spinz முகப்பூச்சுப் பவுடர்




5. மரிகோ நிறுவனத்தின் Parachute தேங்காய் எண்ணை

6. டாட்டா நிறுவனத்தின் Tata Sky TV மற்றும் தனிஷ்க் நகைக்கடைகள்



7. ரிலையன்ஸ் நிறுவனத்தின் BIG BAZAR கடைகள், BIG FM வானொலி

கருணாஸ் சிங்களவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துப் பாடல் : சிங்கள வானொலியில் நேரடி ஒலிபரப்பு

சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த, ரய்னர் சில்வா என்ற சிங்களவரும், பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் சூரியன் எப்.எம்யின் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருந்த கருணாஸ், தமிழன உணர்வாளர்களின் எதிர்ப்பால் கொழும்பு செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தாலும் சிங்களனிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.

நேற்றைய சிங்கள சூரியன் எப்.எம். நிகழ்ச்சி ஒன்றில் கருணாசும் அவரது மனைவி கிரேஸ் கருணாசும் தாங்கள் இருவரும் இலங்கை வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து, சிங்களவர்களுக்கு திரைப்பட வாழ்த்து பாடல் ஒன்றை பாடி உள்ளனர், அது நேரடியாக ஒளிபரப்ப பட்டுள்ளது.  

இவர்களது இத்தகைய செயல் உலக தமிழர்களுக்கு ஆழ்ந்த வருத்தம் ஏற்படுத்தி உள்ளது.


இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும்.

தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும்.சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார்.

இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது.இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ்,அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ்,அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.கறுப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத்தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர்.


இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு,தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும் ,தான் நடிகன் எனக்கு ஜாதி,மதம்,இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும்,பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும்,தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார். ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது. அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.


இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சில முண்ணனி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது. தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா,அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக்குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத்தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத்துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார். தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப்பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும்.

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது குறித்து ராம்புகவெல கூறுகையில், அதிபர் ராஜபக்சே டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ராஜபக்சேசவின் இந்த வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதி அனுப்பப்படுகிறார். முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்காக அல்ல என்றார்.

வன்னியர் இடஒதுக்கீடு-அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வரும் காலங்களில் போராட்டம் வேறு வடிவம் என்று என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில்,

வன்னியர்கள் பொருளாதரம் மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். பெரும்பாலான வன்னியர்கள் குடிசைகளில்தான் வாழ்கின்றனர். எனவே அவர்களின் உயர்வுக்காக 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்தப் போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம். நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை கணக்கெடுத்தால் வன்னியர்கள் மிகச் சொற்ப அளவிலேயே உள்ளனர்.

அருந்ததியர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என்று தனி இடஒதுக்கீடு கேட்டவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அதன் அடிப்படையில் தற்போது வன்னியர்களுக்கும் கேட்கிறார்.

தமிழக அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலித்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் போராட்டம் வேறு வடிவம் பெறும் . ஓராண்டு, இரண்டு ஆண்டு அல்ல இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் ஏழு ஆண்டுகள் கூட சிறை செல்ல தயாராக இருக்கிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை அந்தந்த மாநிலங்கள் நிர்ணயித்துக் கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

எந்த ஜாதியினர் எவ்வளவு பேர் உள்ளனரோ அதற்கு தகுந்தாற்போல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு

பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

முதல்வர் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியதற்கு பொன்முடி இவ்வாறு பதில் தந்துள்ளார்.

தஞ்சை திலகர் திடலில் நேற்றிரவு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி கூறியதாவது:

இந்த நிகழ்ச்சியிலே கலைஞர் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று மாலை ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

வாய்தா வாங்கும ஜெயலலிதாவுக்கு எதிராக துணை முதல்வர் ஸ்டாலின், 4ஆம் தேதி நடக்க இருக்கும் இளைஞரணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதை அறிவித்தவுடனேயே, அலறிக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார் ஜெயலலிதா.

அறிக்கை விடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, அரசியல்ரீதியாக இந்தக் கழகத்தைப் பற்றியோ, முதல்வரைப் பற்றியோ ஸ்டாலின் பற்றியோ விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். எனக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று பழக்கப்பட்டிருந்தாலும் கூட, அண்ணன் 'வெற்றிகொண்டான் பாணியில்' பதில் சொன்னால்தான் ஜெயலலிதாவுக்கு புரியும்.

'வெற்றிக்கொண்டான் பானியில்' சொல்ல வேண்டும் என்றால், பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா, தனக்கு எப்போதும் ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களை ஆட்டிப்படைத்து, அரசியல் செய்து கொண்டிக்கும் ஜெயலலிதா, இன்று நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை என்றவுடன், நமக்கு என்ன கதி என்று கதிகலங்கியிருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில் அரிசி போட வக்குண்டா, வழியுண்டா?. இப்போகு அங்கு இருக்கின்ற இதே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் சொன்னார்களே ஜெயலலிதா ஆட்சியிலே எலி கறி திண்றார்கள் என்று. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா, முதல்வரைப் பார்த்து ஏகவசனத்தில் விமர்சனம் செய்யுகிற ஜெயலலிதாவே, நாவை அடக்கி வை என்று எச்சரிக்கிறோம்.

வருகிறது தீர்ப்பு.. காத்திருக்கிறது பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு. அதற்காகக் காத்திருக்கிறோம். ஜெயலலிதாவே முறையாக அறிக்கை விடு, பதில் சொல்கிறோம். வழக்குகளை நேர்மையாக சந்திகக திராணியில்லாத ஜெயலலிதாவே நாவை அடக்கு என்றார் பொன்முடி.

நல்லா மழை பெய்யனும்.. காமன்வெல்த் போட்டி 'பிளாப்' ஆகனும்-அய்யர் வேண்டுதல்

கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி டெல்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 'பிளாப்' ஆனால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர அய்யர் கூறியுள்ளார்.

ஊரக வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மணி. முன்பு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

இந் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அய்யர்,

காமன்வெல்த் போட்டிகளுக்கு மழையால் இடையூறு ஏற்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உண்மையைச் சொன்னால், இந்த காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

இந்தப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், அடுத்தடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று வரிசையாக இந்தியாவில் நடத்தத் துடிப்பார்கள்.

இந்தியா போன்ற ஒரு நாடு விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவது மிகவும் வீணான செயல்.

டெல்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ.35,000 கோடி செலவிடப்படுகிறது. இந்தப் பணம் வசதியற்ற குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன் மத்திய அரசு, ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்றார் மணி.

மணி சங்கர அய்யரின் இந்தக் கருத்துக்கு அவரது காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மணி சங்கரின் கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

மணி சங்கர அய்யரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பாஜக கூறியுள்ளது.

இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவது நாட்டின் கெளரவப் பிரச்சனை என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை அய்யர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

தேசவிரோத பேச்சு-காங்கிரஸ் கடும் கண்டனம்:

மணிசங்கர் அய்யரின் கருத்து தேசவிரோதமானது என்று காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாதி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், அய்யரின் கருத்து முழுக்க, முழுக்க பொறுப்பற்றது, அபத்தமானது. மூத்த தலைவர், விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பு வகித்தவர் இப்படிப் பேசலாமா? இந்தியர் யாரும் இப்படிப் பேசமாட்டார்கள்.

விளையாட்டுத் துறையை அவரிடமிருந்து பறித்த விரக்தியில் இவ்வாறு பேசுகிறார். அவர் விளையாட்டு அமைச்சராக இருந்திருந்தால் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவுக்கே வந்திருக்காது என்றார் கல்மாதி.

ஆனால், ரூ. 35,000 கோடியைக் கொட்டி விளையாட்டுப் போட்டி நடத்தி தான் இந்தியாவுக்கு இந்த ஊழல் அரசியல்வாதிகள் மரியாதையை வாங்கித் தரப் போகிறார்களா?.

நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?


13 வகை ரசாயாணக் கழிவுகள் கலந்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நினைத்தால் அச்சமாக இருக்கிறது-ஜெ.

இரு வேறு ரசாயனப் பொருட்கள் கலந்தாலே புதிய நச்சு வாயுக்கள் உருவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்ற போது, 13 வகையான நச்சுக் கழிவுகள் சேர்ந்தால் எத்தனை பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அதிமுக.பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அபாயகரமான கழிவுப்பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தி.மு.க. அரசின் கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த திட்டத்திற்கான அறிக்கை அப்பகுதியிலுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வுரி மையை பறிப்பதாக அமைந்துள்ளதே தவிர, கழிவுப் பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்று வதற்கான நடவடிக்கையாக தெரியவில்லை.

ஏற்கனவே, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்வளாகத்தில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 575 தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டில் வெளியாகும் 28,900 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை சேமித்து வைக்க பெருந்துறை சிப்காட் வணிக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் சேமிப்புக்கிடங்கு அமைக்க இருப்பதாகத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சேமிப்புக் கிடங்கு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நிறுவப்பட்டால், பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், ஏற்கனவே கூத்தம் பாளையம், செங்குளம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று நீர் உவர் நீராக மாறி விட்டதாகவும், சில பகுதிகளில் காற்றடிக்கும் போது, வயிற்றை குமட்டும் அளவுக்கு துர்நாற்றம் வீசு வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கையில், இத்திட்டம் அமையும் இடத்தைச்சுற்றி வறண்ட விவசாய பூமி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், 20 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி நீர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இத்திட்டம் அமையும் இடத்தைச்சுற்றியுள்ள கிராமங்களில் வாழை, தென்னை முதலியவை பெருமளவு விளைகின்றன என்றும், இந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் நதி இருக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வரைவு திட்டத்தில், 13 வகையான நச்சுக்கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இரு வேறு ரசாயனப் பொருட்கள் கலந்தாலே புதிய நச்சு வாயுக்கள் உருவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்ற போது, 13 வகையான நச்சுக் கழிவுகள் சேர்ந்தால் எத்தனை பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இந்த நச்சுக்கழிவுகளோடு மழை நீர் கலந்து பூமிக்குச் சென்றால், நிலத்தடி நீரும் மாசுபடும். ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக இப்பகுதியில் மழை வளமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், மக்கள் வாழும் பகுதிகளில் நச்சுக்கழிவுகளை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என்ற விதிமுறை மீறப்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பெருந்துறை மக்களின் கடுமையான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அறிவுரையையும் மீறி, இத்திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டம் 28.7.2010 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கருத்து கேட்புக்கூட்டம் என்ற பெயரில், இந்தத்திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை மட்டும் திரட்டி அரசுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஐயப்படுகிறார்கள்.

எனவே, ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அறிவுரையையும் புறந்தள்ளி விட்டு, இந்தத் திட்டத்தினை நடை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் அரசைக் கண்டித்தும், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நச்சுக் கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்தினை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில், வருகின்ற 2.8.2010 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பெருந்துறை தாலுகா அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தலைமை நிலையச் செயலாளர், கே.ஏ. செங்கோட்டையன், தலைமையிலும், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி. சிவசாமி, எம்.பி., மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் சி. பொன்னுதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

1987ல் நடத்தியதைப் போல பெரிய போராட்டத்தை நடத்த நேரிடும்-ராமதாஸ் எச்சரிக்கை

தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் 1987 ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் நடக்கும் சூழ்நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். தேர்தலை மனதில் வைத்து சொல்லவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற காத்திருப்போம். இல்லை என்றால் 87 ல் நடைபெற்றது போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் எடுத்து சொல்லவே இந்த போராட்டம் நடக்கிறது. வன்னியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கேட்கிறோம்.

அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க போராடியதும் நான்தான். எனவே வன்னியர்களுக்காகவும் போராடுகிறேன். எல்லா மக்களுக்கும் சேர்ந்து போராடுவதால் இது குறுகிய நோக்கம் உடையதாக ஆகாது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்பது ஜாதி வெறியால் அல்ல. 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்கள். அனைத்து நிலைகளிலும் வன்னியர்கள் பின்தங்கி உள்ளனர்.

1983 ம் ஆண்டு சட்டநாதன் பரிந்துரையை அமுல்படுத்தி இருந்தால் இந்த சமுதாயம் முன்னேறி இருக்கும். இடஒதுக்கீட்டுக்காக 1987 ம் ஆண்டு 7 நாள் தொடர் சாலை மறியல் செய்தோம்.

இந்த போராட்டதை பார்த்து உலகமே அதிசயப்பட்டது. வாகனங்கள் ஓடாததால் சென்னை மக்கள் பதறினார்கள். பின்னர் எம்.ஜி.ஆர். எங்களை அழைத்து பேசினார். அதன்பிறகும் வன்னிய சமுதாயத்துக்கு நீதி கிடைக்கவில்லை.

இப்போதைய முதல்வர் கருணாநிதியும் எங்களுக்காக குரல் கொடுத்தவர்தான். ஆனாலும் வன்னியர்களுக்கு இன்னமும் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. 109 ஜாதிகளுக்கு சேர்த்துதான் இடஒதுக்கீடு உள்ளது.

வன்னியர் பிரச்சினை பற்றி பேச எந்த கட்சி இருக்கு? யாருமே இல்லை. அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு கொடுத்ததுபோல் வன்னியர்களுக்கும் கேட்கிறோம்.

தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் 87 ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் நடக்கும் சூழ்நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். தேர்தலை மனதில் வைத்து சொல்லவில்லை. தேர்தலை 2 ம் பட்சமாக நினைக்கிறோம். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேற காத்திருப்போம். இல்லை என்றால் 87 ல் நடைபெற்றது போல் மிகப்பெரிய போராட்டத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு நடத்துவோம் என்று எச்சரித்தார் ராமதாஸ்.

தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக் கட்ட விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர்.

தர்மபுரியில் போராட்டம் நடத்திய அதிமுகவினர் அந்த வழியாக வந்த கோவை விவசாயப் பல்கலைக்கழகப் பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் 3 மாணவிகள் உடல் கருகி பலியாயினர்.

இந்த வழக்கில் 3 அதிமுக நி்ர்வாகிகளுக்கு தூக்கு தண்டை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுகவினர் அப்பீல் செய்தனர்.

இதையடுத்து தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த அப்பீல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்னும் ஒரு வார காலத்துக்குள் தமிழக காவல்துறை வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் ரிமாண்ட் அறிக்கை ஆகிய இரண்டையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை தேதி, ஏப்ரல் 13ம் தேதி அறிவிக்கப்படும் என கூறினர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் 13ம் தேதி நடந்த விசாரணையின்போது, இரு தரப்பினரிடமும் நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். இரு தரப்பினரும் இறுதி விசாரணையில் முன்வைக்க உள்ள வாத கருத்துகளை ஜுலை இரண்டாவது வாரத்துக்குள் எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை ஜுலை 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என அறிவித்தனர்.

இதன்படி நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கில் இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களான அல்தாப் அகமத், சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் 40 பேர் மத்தியில் குற்றவாளிகள் அடையாளம் காண்பிக்கப்பட்டதாக அல்தாப் கூறினார்.

அப்போது இடைமறித்த நீதிபதி, எந்தெந்த குற்றவாளிகளை யார் யார் கண்டுபிடித்தார்கள் என்ற விவரங்கள் கொண்ட அட்டவணை ஒன்றை 28ம் தேதி (இன்று) தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இன்று தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல்கள், வழக்கின் அத்தனை சாட்சிகளையும் விசாரித்து, சேலம் செசன்ஸ் நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு தொடர்பில்லை என்று சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

தண்டனை பெற்றவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சுசில்குமார், செவ்வாய்க்கிழமையே தனது வாதத்தை முடித்துக்கொண்டதால், வழக்கு விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி என்று அத்தகவல்கள் கூறுகின்றன. இதைக் கேட்ட முதல்வர், இப்போதைக்கு அமைச்சர் பதவியில் நீடிக்குமாறும், அவசரப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பதவியில் ஆரம்பத்திலிருந்தே அழகிரி விருப்பமில்லாமல்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மாநில அரசியலில் அவருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே முட்டல் மோதல் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அழகிரியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் முதல்வர்.

இருப்பினும் அழகிரிக்கு டெல்லியில் நல்ல பெயர் கிடைக்கவில்லை. மொழிப் பிரச்சினை காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்திற்கும் பெரும்பாலும் போவதில்லை. மாநில அரசியல் மீதுதான் அவருக்கு அதிக நாட்டம் உள்ளது.

மேலும், மு.க.ஸ்டாலினை கட்சித் தலைமைப் பதவிக்கு உயர்த்துவதையும் அழகிரி நேரடியாகவே எதிர்த்து வருகிறார். கட்சித்தலைவர் பதவிக்கு கருணாநிதியைத் தவிர தகுதியானவர் யாரும் கிடையாது. கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி வைத்தால் நான் நிச்சயம் நிற்பேன் என பகிரங்கமாகவே அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானம் இஸ்லாமாபாத் அருகே மலையில் மோதி 152 பேர் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே இன்று விமானம் மலையில் மோதி வெடித்துச் சிதறியது. அந்த விமானத்தில் 152 பேர் இருந்தனர். யாரும் உயிர் பிழைக்கவில்லை.

ஏர் ப்ளூ ஏர்லைன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் துருக்கியிலிருந்து கராச்சி வழியாக இஸ்லாமாபாத் வந்தது.

தரைப் பகுதியே தெரியாத அளவுக்கு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் இஸ்லாபாத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மர்கல்லா என்ற மலைப் பகுதியில் வந்தபோது அந்த விமானம் மலையில் மோதி வெடித்துச் சிதறியது.

அதிலிருந்த பயணிகள், விமானிகள், சிபந்திகள் உள்ளிட்ட 152 பேரும் பலியாகி விட்டதாகத் தெரிகிறது.

மோசமான வானிலையே இந்த விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் மதுவிலக்கு?-கருணாநிதி 'சூசகம்'!

மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: "டாஸ்மாக்'' ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே?

பதில்: "டாஸ்மாக்'' ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல-மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.

கேள்வி: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச்சொல்லி தொண்டர்களை உசுப்பி விட்டு அறிக்கை விடுவதோடு தன் பணி முடிந்து விட்டது என்றிருந்த ஜெயலலிதா, தற்போது மாதத்திற்கு ஓரிரு முறை தானே அவற்றில் கலந்து கொள்வதாக அறிவிப்பதும்-சிறிய சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு "போட்டோ தரிசனம்'' கொடுப்பதும் எதைக் காட்டுகிறது?

பதில்: தேர்தல் நெருங்கிவிட்டது என்பதைத்தான்!

கேள்வி: "தினபூமி'' பத்திரிகை ஆசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து ஜெயலலிதா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: "தினபூமி'' பத்திரிகை ஆசிரியரின் கைது பற்றி பத்திரிக்கை செய்திகள் மூலமாக அறிந்ததும் நான் உடனடியாக காவல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுவிட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென்று கூறி அவர்களும் ஒரு சில மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டு விட்டனர். பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான ரவீந்தரதாஸ் அவர்களையும் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு நான் பேசினேன். அதைப் பற்றி அவரே எனக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையும் விடுத்துள்ளார்.

இது என்னுடைய நடைமுறை. ஆனால் பத்திரிகையாளர்களுக்காக வக்காலத்து வாங்கி அறிக்கை விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? இந்து பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் செய்தது எந்த ஆட்சியிலே? நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கி அதன் ஆசிரியர் கோபாலை கைது செய்து, அவரது குடும்பத்தினர் ஒருவரே சாகக் காரணமாக இருந்தது எந்த ஆட்சியிலே? "பத்திரிகை பிதாமகன்'' என்று சொல்லத் தக்க அளவிற்கு மரியாதை பெற்ற ஆசிரியர் சாவி கைது செய்யப்பட்டது எந்த ஆட்சியிலே? ஆனந்த விகடன் ஆசிரியர் நண்பர் பாலு கைது செய்யப்பட்டது எப்போது? முரசொலியில் வெளி வந்த செய்தி ஒன்றுக்காக முரசொலி செல்வத்தை சட்டமன்ற வளாகத்திற்கே வரவழைத்து, சரித்திரத்திலேயே நடைபெறாத அளவிற்கு கூண்டிலே நிறுத்தியது எந்த ஆட்சியிலே? "சாத்தான் வேதம் ஓதலாமா?'' என்று ஒரு பழமொழி கூட உண்டே!

கேள்வி: மார்க்சிஸ்ட்கள் தமிழக அரசைப் பற்றி எந்தவொரு பிரச்சினை என்றாலும் உடனே அதனைத் தாக்கி அறிக்கை விடுகிறார்களே; அவர்கள் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் என்ன நிலை என்பதை நினைத்தே பார்க்க மாட்டார்களா?

பதில்: ஐ.நா.வின் சர்வதேச மனித வள மேம்பாட்டுத் திட்டத்தின் இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி, வறுமை ஒழிப்பு நடவடிக்கை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு முனையத் திட்டத்துடன் இணைந்து, பல்நோக்கு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் உள்ள எட்டு மாநிலங்கள்; ஆப்பிரிக்காவில் உள்ள 26 நாடுகளை விட, அதிக அளவில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 42 கோடி மக்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியிருக்கிறாரே?

பதில்: மத்திய அரசு மானியத்தில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், எல்லா மாநிலங்களிலுமே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கலாமே! மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கும் அரிசியைத் தான் நமது மாநிலத்திற்கும் அதே விலையில் வழங்குகிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் தான் இந்தியாவிலேயே ஒரே மாநிலமாக ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

அது மாத்திரமல்ல; சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அத்தியாவசிய உணவுப் பொருள்களாகிய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றையும், மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் தமிழக அரசுதான் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக இந்த ஆண்டு மட்டும் 3,750 கோடி ரூபாயை தமிழக அரசுதான் தன் நிதியிலிருந்து அளித்து இத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்திதான். அந்தத் திட்டம் உலக வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்றுத்தான்- ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி, நடத்தப்படுகின்ற திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்கான நடைமுறைச் செலவிலே தான் ஒரு பகுதியை மட்டும் மத்திய அரசு வழங்குகிறது.

கேள்வி: ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது அதிமுகவிற்குக் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்: ஆமாம், அவர் என்ன செய்து விடுவாரோ என்று பயந்து கொண்டுதான் அந்தப் பெயர் சூட்டப்பட்டது!

பெருந்தலைவர் காமராஜர் மீது திடீரென்று அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம்! அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர் தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பேருந்து நிலையங்கள் எத்தனை தெரியுமா? சிரிப்புத் தான் வருகிறது.

காமராஜர் பெயரை வைக்கக்கூடாது என்று கருதுகின்ற அரசா இது? கக்கன் சிலையை வைக்கத் தயங்குகின்ற ஆட்சியா இது? காமராஜர் பிறந்தநாளை தியாகிகள் தினமாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்து சட்டம் நிறைவேற்றிக் கொண்டாடுகின்ற அரசல்லவா இது?

காமராஜர் மறைந்த போது, அவரது உடலை அரசு மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்க வேண்டுமென்று சொன்னவனே நான் தானே? அவரது உடலை அடக்கம் செய்ய நள்ளிரவிலே நானும், அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ப.உ.சண்முகமும் இடம் தேடிச் சென்று ஏற்பாடு செய்ததைப் பற்றி, சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு பேசும் போது, காமராஜரின் சகோதரர் ஒருவர் உயிரோடு இருந்து அவர் உடலை அடக்கம் செய்திருந்தால் கூட இந்த அளவிற்கு செய்திருக்க மாட்டார் என்று கூறியது இன்றும் அவைக்குறிப்பிலே இடம் பெற்றுள்ளதே!

கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று இவர்கள் எல்லாம் கோரிக்கை வைத்த பிறகு, உண்ணாவிரதம் இருந்த பிறகா நான் பெயர் சூட்டினேன்?

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரையும், காமராஜரின் பெயரையும் வைக்க வேண்டுமென்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்து நிறைவேற்றிய போது ஜெயலலிதாவும் அவருடைய கட்சியினரும் எங்கே போயிருந்தார்கள்?

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்று குமரி அனந்தன் கோரிக்கை வைத்து, அந்த இடம் கடலுக்கு அருகிலே இருப்பதாகக் கூறி வாஜ்பாய் தலைமையில் இருந்த மத்திய அரசு ஏற்க மறுத்தபோது-அதற்காக வாஜ்பாயிடம் வாதாடி விதிவிலக்கு பெற்று காமராஜர் மணிமண்டபத்தை எழுப்பக் காரணமாக இருந்தவன் நான் அல்லவா?

1961ம் ஆண்டு பெரியார் பாலத்திற்கு அருகே பெருந்தலைவர் காமராஜருக்கு சிலை அமைத்து, மாநகராட்சிப் பொறுப்பில் திமுக இருந்தபோதுதான் அன்றைய பிரதமர் பண்டித நேருவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது என்ற சரித்திரம் எல்லாம் அப்போது அரசியலுக்கே வராமல் குழந்தை நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க முடியாதுதான்!

தியாகி கக்கன் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலை ரூ.4.10 லட்சம் செலவிலே உருவாக்கப்பட்டு, மதுரையிலே நான் கலந்து கொண்டு 31-8-1997 அன்று திறந்து வைத்த போது இப்போது அறிக்கை விடும் ஜெயலலிதா எங்கே இருந்தார்?

மதுரை மாவட்டம், கக்கன் பிறந்த தும்பப்பட்டியில் தியாகி கக்கன் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டி முடித்து, அங்கே கக்கன் மார்பளவு சிலையும் 13-2-2001 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளதே! அன்று ஜெயலலிதா எங்கே போனார்?

1971-ம் ஆண்டிலேயே சென்னை மாம்பலம் சி.ஐ.டி. நகரில் தியாகி கக்கனுக்கு அரசுக்குடியிருப்பு ஒன்றை ஒதுக்கீடு செய்து தந்ததே தி.மு. கழக அரசுதானே?

கக்கன் வாரிசுகளில் ஒருவரான அவரது மகன் க.பாக்யநாதனுக்கும், பேரன் கண்ணன் என்பவருக்கும் லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையை அவர்கள் இருவரின் செலவுகளுக்கும் மாதந்தோறும் வழங்கிடவும், அவர்கள் இருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவியையும் செய்தது தி.மு.கழக ஆட்சி அல்லவா?

எனது பெரு முயற்சி காரணமாக 9-12-1999 அன்று மத்திய அரசின் மூலம் கக்கன் நினைவு தபால் தலை வெளியிடப்பட்டதே, அதை மறந்து விடலாமா; மறதிக்குடுக்கை!

இதையெல்லாம் மறைத்து விட்டு- கக்கன் மீது ஜெயலலிதாவிற்கு திடீரென்று அக்கறை ஏற்பட்டு விட்டதா? கக்கன் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராக அருணாசலம் என்பவர் இருந்தார். அவர் ஒரு நாள் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில் பயணம் செய்திட ஏறி அமர்ந்த பிறகு, அவரை விமானத்திலிருந்து இறக்கி விட்ட முற்போக்குவாதி அல்லவா ஜெயலலிதா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முதல்வரை பாராட்டிய கம்யூனிஸ்ட் ச ம உ சிவபுண்ணியம் .

முதல்வர்  பேசியதை விட  , சிவபுண்ணியம் பேசியதுதான் இப்போது செய்தியாக பதிய படுகிறது.



திருவாரூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம்  புகழாரம் சூட்டினார்.

விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிவபுண்ணியம் பேசியதாவது:



பின்தங்கிய பகுதியான இங்கு அத்தியாவசியத் தேவையான மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அவசரச் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும். இதனால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவர். இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தமிழகத்தில் மருத்துவச் சேவைப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 



திருவாரூர் எம்.எல்.ஏ.வாக கருணாநிதி-அமைச்சர் பன்னீர்செல்வம் விருப்பம்: திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினராகப் போட்டியின்றி தமிழக முதல்வர் கருணாநிதியை தேர்வு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார்.

 


திருவாரூர் மாவட்ட மக்களுக்கு முதல்வர் ஆற்றியுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரை இத்தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அவர்.



தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் சுப்புராஜ்.மிகக் குறுகிய காலத்தில் திருவாரூரில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.


பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

(நமக்கு மின் அஞ்சலில் வந்தது )

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்என்றுஅழைத்திருப்பார்
கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.



Save = வெச்சிக்கோ

Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ

Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ

Help = ஒதவு

Find = பாரு

Find Again = இன்னொரு தபா பாரு

Move = அப்பால போ

Mail = போஸ்ட்டு

Mailer = போஸ்ட்டு மேன்

Zoom = பெருசா காட்டு

Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு

Open = தெற நயினா

Close = பொத்திக்கோ

New = புச்சு

Old = பழ்சு

Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு

Run = ஓடு நய்னா

Execute = கொல்லு

Print = போஸ்டர் போடு

Print Preview = பாத்து போஸ்டர் போடு

Cut = வெட்டு - குத்து

Copy = ஈயடிச்சான் காப்பி

Paste = ஒட்டு

Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு

Delete = கீச்சிடு

anti virus = மாமியா கொடுமை

View = லுக்கு உடு

Tools = ஸ்பானரு

Toolbar = ஸ்பானரு செட்டு

Spreadsheet = பெரிசிட்டு

Database = டப்பா

Exit = ஓடுறா டேய்

Compress = அமுக்கி போடு

Mouse = எலி

Click = போட்டு சாத்து

Double click = ரெண்டு தபா போட்டு சாத்து

Scrollbar = இங்க அங்க அலத்தடி

Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு

Next = அப்பால

Previous = முன்னாங்கட்டி

Trash bin = கூவம் ஆறு

Solitaire = மங்காத்தா

Drag & hold = நல்லா இஸ்து புடி

Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?

Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?

Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?

Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு

Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?

General protection fault = காலி

Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!

Unrecoverable error = படா பேஜார்பா

Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்

Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

ஓட்டுக்கு பணம் திணறிய தெலுங்கானா ?

ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளில் இன்று 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று அனைத்து தொகுதிகளிலும் பெரிய அளவில் வன்முறை நடக்கவில்லை என்றாலும், நேற்று வரை பல தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தபோது அரசியல் கட்சிககள் ஆளுக்கொரு பக்கம் புகார் கொடுத்து ஆங்காங்கே ஒரே பிரச்னையாக இருந்து வந்திருக்கிறது.



ஆனால் இது போன்ற தொல்லைகள் ஆந்திராவில் இல்லையாம். ஏனெனில் எல்லா கட்சி சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதால், திருடனோடு, திருடனாக , ஊரோடு ஒத்துவாழ் என்ற கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆந்திராவில் தெலுங்கானா மாநிலம் என அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும், தெலுங்கு தேசம், மற்றும் பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.



இந்த 12 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இங்குள்ள பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிர்புர், மஞ்சோரியல் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர பிரதேச காங்., தலைவர் சீனிவாசன், பா.ஜ.,வை சேர்ந்த லட்சுமி நாராயணன், தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த நர்சா ரெட்டி ஆகியோர் போட்டியிடும் தொகுதியில் ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.



இந்த தொகுதிகளில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள்தான். இவர்கள் வேலைக்கு போய் திரும்பி வந்து பார்க்கும் போது ஒவ்வொரு ஓட்டுச்சிலிப்பிலும் ஆயிரம் ரூபாய் பின் செய்யப்பட்டிருக்கிறது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு போஸ்ட் கார்டு போல வீடுகளுக்குள் போடப்பட்டிக்கிறது. இந்த விஷயம் ஆந்திரமாநிலம் கிராம பகுதிகள் முழுவதும் ஆங்காங்கே பணம் குறித்த பேச்சுதான் நடக்கிறது.


மதுரையில் நடந்த பாமக ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் மட்டுமே பங்கேற்

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெறும் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு பாமக சார்பில் இன்று முதல் தொடர் போராட்டம் தொடங்கியது.

ப்லவேறு ஊர்களில் போராட்டங்கள் நடப்பதாக பாமக தரப்பில் கூறினாலும் வட மாவட்டங்களைத் தவிர மற்ற ஊர்களில் ஒரு கூட்டத்தையும் காணோம்.

மதுரையில் மேலமாசி வீதி-வடக்குமாசிவீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் மற்றும் மாவட்ட தலைவர் திருப்பதி உட்பட வெறும் 19 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஒரு இருபது பேரைக் கூட முடியாமல் போய் விட்டதா இவர்களுக்கு என்று வேடிக்கை பார்த்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

30 ஆண்டுகளாக தனி இடஒதுக்கீடு கேட்டு பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், சிறைக் கொடுமை, உயிர் தியாகங்கள் செய்தும் அரசு நிறைவேற்றவில்லை என்பது வன்னியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழக அரசு சமூக நீதி அடிப்படையில் வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் பின் தங்கி இருக்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை உடனே அமல் படுத்தவேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிகை விடுக்கிறோம் என்று கோஷம் எழுப்பினர் அந்த 19 பேரும்.

தமிழ் உணர்வை தட்டி எழுப்பும் இயக்குனர் கீராவின் பாடல் வரிகள்

இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா?` இப்படி ஒரு கேள்வியை வைகோ கேட்டிருந்தால் அது அரசியல். கீரா கேட்டால்?


ஆமாம்... இந்த கீரா `பச்சை என்கிற காத்து` படத்தின் இயக்குனர். படத்தில் வரும் ஒரு பாடலில்தான் இப்படி ஒரு வரி. அது மட்டுமல்ல, இன்னொரு பாடலில் `தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்` என்று இன்னொரு வரி.


படத்தின் பாடல்களும், காட்சிகளும் இது வேறு மாதிரியான படம் என்கிற உணர்வை வரவழைக்கிற அதே நேரத்தில் இப்படியெல்லாம் பாடல் வரிகள் வருகிறதே, படம் இலங்கை பிரச்சனை பற்றியதா என்ற கேள்வியை எழுப்ப தோன்றும்தானே? தோன்றியது. ஆனால் கீராவின் பதிலில் ஆவேசம் சற்று தூக்கலாகவே இருந்தது.


"நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள். மற்றபடி இந்த கதைக்கும் இலங்கை பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றார்.


தங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கீரா. இவரை பற்றி தங்கர் என்ன சொல்கிறார்? "எனக்கு உதவியாளர்களாக 150 பேர் பணியாற்றியிருக்கிறார்கள். எல்லாரும் வேலையை மட்டும்தான் கற்றார்கள். கீரா மட்டும்தான் என் சிந்தனையையும் சேர்த்து எடுத்துச் சென்றவர். எனக்கும் கீராவுக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. மற்றவர்கள் அமைதியாக இருக்கும்போது இவர் சண்டை போடுவதில் குறியாக இருப்பார். பல முறை என்னை விட்டு வெளியேறியும் இருக்கிறார். எல்லாமே ஆரோக்கியமான சண்டைதான். கருத்தியல் சண்டைதான்" என்கிறார் தங்கர்பச்சான்.


படத்தில் தேவதை என்ற மலையாளப் பெண்ணையும், வாசகர் என்ற இளைஞரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் கீரா. என் இயற்பெயரே வாசகர்தான். தேனிக்கு அருகில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் ஊரில் மாணிக்கவாசகரின் கோவில் இருக்கிறது. அந்த நினைவாக வைக்கப்பட்ட பெயர்தான் இது என்றார் வாசகர். படத்தில்தான் செல்வி. நேரில் தேவதை போல தெரிவதால் அதையே பெயராக வைத்துவிட்டாராம் கீரா. மலையாளத்திலிருந்து வந்தாலும், தத்தி தத்தி தமிழ் பேசுகிறார் தேவதை.


"நான் பார்த்த பேன்ட்டசி டைட் படமல்ல இது. எங்க மாநிலத்தில்கூட சமீபகாலமாக நல்ல படங்கள் வர்றது குறைஞ்சு போச்சு. மலையாளத்தின் சிறந்த இயக்குனர்கள்கூட தமிழ் பக்கம் வர ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் என்னோட முதல் படம் தமிழ்ல இருக்கணும்னு நினைச்சேன். நான் நினைச்சதை விட ஒரு சிறந்த படத்துல ஹீரோவுக்கு இணையான ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்" என்று முகமெல்லாம் பூரிக்கிறார் தேவதை.



13 வகை ரசாயாணக் கழிவுகள் கலந்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நினைத்தால் அச்சமாக இருக்கிறது-ஜெ.

இரு வேறு ரசாயனப் பொருட்கள் கலந்தாலே புதிய நச்சு வாயுக்கள் உருவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்ற போது, 13 வகையான நச்சுக் கழிவுகள் சேர்ந்தால் எத்தனை பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அதிமுக.பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அபாயகரமான கழிவுப்பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான வசதியை ஏற்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தி.மு.க. அரசின் கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த திட்டத்திற்கான அறிக்கை அப்பகுதியிலுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வுரி மையை பறிப்பதாக அமைந்துள்ளதே தவிர, கழிவுப் பொருட்களை சுத்திகரித்து பாதுகாப்பாக அகற்று வதற்கான நடவடிக்கையாக தெரியவில்லை.

ஏற்கனவே, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்வளாகத்தில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 575 தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டில் வெளியாகும் 28,900 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை சேமித்து வைக்க பெருந்துறை சிப்காட் வணிக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் சேமிப்புக்கிடங்கு அமைக்க இருப்பதாகத் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சேமிப்புக் கிடங்கு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நிறுவப்பட்டால், பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், ஏற்கனவே கூத்தம் பாளையம், செங்குளம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று நீர் உவர் நீராக மாறி விட்டதாகவும், சில பகுதிகளில் காற்றடிக்கும் போது, வயிற்றை குமட்டும் அளவுக்கு துர்நாற்றம் வீசு வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திட்டத்திற்கான வரைவு அறிக்கையில், இத்திட்டம் அமையும் இடத்தைச்சுற்றி வறண்ட விவசாய பூமி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், 20 கிலோ மீட்டர் தொலைவில் காவேரி நீர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் உண்மை நிலை என்னவென்றால், இத்திட்டம் அமையும் இடத்தைச்சுற்றியுள்ள கிராமங்களில் வாழை, தென்னை முதலியவை பெருமளவு விளைகின்றன என்றும், இந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் நதி இருக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வரைவு திட்டத்தில், 13 வகையான நச்சுக்கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இரு வேறு ரசாயனப் பொருட்கள் கலந்தாலே புதிய நச்சு வாயுக்கள் உருவாகக்கூடிய சாத்தியம் இருக்கின்ற போது, 13 வகையான நச்சுக் கழிவுகள் சேர்ந்தால் எத்தனை பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இந்த நச்சுக்கழிவுகளோடு மழை நீர் கலந்து பூமிக்குச் சென்றால், நிலத்தடி நீரும் மாசுபடும். ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக இப்பகுதியில் மழை வளமும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், மக்கள் வாழும் பகுதிகளில் நச்சுக்கழிவுகளை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என்ற விதிமுறை மீறப்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பெருந்துறை மக்களின் கடுமையான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அறிவுரையையும் மீறி, இத்திட்டத்திற்கான கருத்து கேட்புக் கூட்டம் 28.7.2010 அன்று நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கருத்து கேட்புக்கூட்டம் என்ற பெயரில், இந்தத்திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை மட்டும் திரட்டி அரசுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஐயப்படுகிறார்கள்.

எனவே, ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அறிவுரையையும் புறந்தள்ளி விட்டு, இந்தத் திட்டத்தினை நடை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் அரசைக் கண்டித்தும், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் நச்சுக் கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்கும் திட்டத்தினை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில், வருகின்ற 2.8.2010 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பெருந்துறை தாலுகா அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தலைமை நிலையச் செயலாளர், கே.ஏ. செங்கோட்டையன், தலைமையிலும், ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சி. சிவசாமி, எம்.பி., மற்றும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் சி. பொன்னுதுரை ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார்.