தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மதுரையில் நடந்த பாமக ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் மட்டுமே பங்கேற்

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெறும் 19 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு பாமக சார்பில் இன்று முதல் தொடர் போராட்டம் தொடங்கியது.

ப்லவேறு ஊர்களில் போராட்டங்கள் நடப்பதாக பாமக தரப்பில் கூறினாலும் வட மாவட்டங்களைத் தவிர மற்ற ஊர்களில் ஒரு கூட்டத்தையும் காணோம்.

மதுரையில் மேலமாசி வீதி-வடக்குமாசிவீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் மற்றும் மாவட்ட தலைவர் திருப்பதி உட்பட வெறும் 19 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஒரு இருபது பேரைக் கூட முடியாமல் போய் விட்டதா இவர்களுக்கு என்று வேடிக்கை பார்த்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

30 ஆண்டுகளாக தனி இடஒதுக்கீடு கேட்டு பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், சிறைக் கொடுமை, உயிர் தியாகங்கள் செய்தும் அரசு நிறைவேற்றவில்லை என்பது வன்னியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

தமிழக அரசு சமூக நீதி அடிப்படையில் வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் பின் தங்கி இருக்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை உடனே அமல் படுத்தவேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிகை விடுக்கிறோம் என்று கோஷம் எழுப்பினர் அந்த 19 பேரும்.