தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக மாறியுள்ள அசின் என்ற தமிழினத் துரோகியையும், அவரால் விளம்பரப் படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் புறக்கணித்து அவரால் தூற்றப்படும் நம் இனமானத்தை இன்றே காப்பாற்றுவோம் .
முதலில் படப்பிடிப்புக்காகத்தான் இலங்கை சென்றுள்ளதாக அசின் அப்பாவியாகக் கூறினார்.
பின்னர் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவ அறக்கட்டளை அமைத்துள்ளேன் என்றார். அறக்கட்டளை அமைப்பதற்கு சிங்கள இளவரசர் நாமல் ராஜபக்சாவே முன் நின்று உதவினார் என்பதை வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அவரின் பெருந்தன்மையை விலாவாரியாகப் புகழ்ந்து தள்ளினார்.
சிங்கள மகாராணியும் மன்னர் ராஜபக்சாவின் தர்மபத்னியுமான சிராந்தியின் பரிவாரத்தில் தமிழச்சியாக வேடமேற்று வவுனியா முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களிடம் "ராஜபக்சா அரசின் பெருந்தன்மையைப் புரிந்துகொண்டு நல்வாழ்வு வாழவேண்டும்" என்று அறிவுரை செய்தார் .
போரின்போது 1 லட்சத்து 20 ஆயிரம் தமிழர்களை ராஜபக்சா அரசு கொன்று குவித்தது. உயிர்தப்பிய அப்பாவி மக்களை முள்வேலி முகாமில் அடைத்து வைத்து உணவும், மருந்தும் கொடுக்காமல் பிச்சைக்காரர்களாக்கி வேடிக்கை பார்த்து அது சிரித்தது.
தமிழீழ அரசின் நிர்வாகத் துறையில் இருந்த ஆண்களையும், பெண்களையும் சித்திரவதை முகாம்களில் அடைத்துவைத்து இன்றளவும் அவர்களை அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் தாயக நிலத்தின் அனைத்துக் கலாச்சார சின்னங்களையும் அழித்து அவற்றை சிங்களமயமாக்கிக் கொண்டிருக்கிறது. தாயகத்தின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தான் செய்த குற்றங்களுக்கு வக்காலத்து வாங்கும் நாடுகளுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறது. தாயக நிலம் முழுவதையும் சிங்கள இராணுவ முகாமகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறது. முள்வேலி முகாமில் இருந்து சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பிய குடுமபங்களில் பெண்களும், சிரார்களும், வயோதிகர்களும் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதனைத் தட்டிக் கேட்ட ஐ.நா.சபையின் கொழும்பு அலுவலகத்தை சிங்கள ரௌடிகளைக் கொண்டு சூரையாடியிருக்கிறது.
இப்படிப்பட்ட ராஜபகசா அரசினைத் தமிழ் மக்களால் வளர்க்கப் பட்ட அசின் "பெருந்தன்மை கொண்டது" என்றுபுகழ்பாடத் தொடங்கியிருக்கிறார். மேலும், ராஜபக்சா அரசு தமிழர்கள் அனைவரையும் சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது என்றும், தமிழ் மக்களுக்கு அது சர்வதேச தரத்தில் ராஜ வைத்தியம் செய்து வருவதாகவும் கூறத் தொடங்கியிருக்கிறார். இவ்வளவு பெருந்தன்மை கொண்டதாக சிங்கள அரசு இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஏன் சுதந்திரமும், சுயாட்சியும்? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இலங்கை வந்து தன்னைபோல சிங்கள இளவரசர் நாமல் ராஜபக்சாவுடன் கூட்டுச் சேர்ந்து அறக்கட்டளைகள் பல திறந்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவி, சிங்களர்களுக்கு இணையான அரசியல் சமத்துவ அதிகாரம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என்று முழங்க வேண்டும் என்றும் தமிழ்த் திரையுலகினருக்கு விண்ணப்பம் வைத்திருக்கிறார்.
எனவேதான்:
- உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ள அசினையும், அவரால் விளம்பரப் படுத்தப்படும் பொருட்களையும் இன்றே நம் வாழ்வில் இருந்து தூக்கி எறிவோம்.
- சர்வதேச உலகத்தினரின் முன்பு தமிழினத்தை இகழத் தொடங்கியிருக்கும் அசினைத் தமிழ்த் திரையுலகம் இனி ஒருபோதும் ஏற்கக் கூடாது.
- அவரால் சந்தையில் விளம்பரப் படுத்தப் படும் அனைத்துப் பொருட்களையும் அவரை விளம்பரத்தில் இருந்து சம்பத்தப்பட்ட நிறுவனங்கள் நீக்கும் வரை உடனடியாகப் புறக்கணிப்போம்.
அசினால் விளபரப்படுத்தப்படும் பொருட்களும் , சேவைகளும் :
1. பெப்சிகோ நிறுவனத்தின் மிரிண்டா குளிர் பானம்
2. இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் Clinic All Clear ஷாம்பூ, SURE deodarant spray,
3. கோல்கேட் பாமாலிவ் நிறுவனத்தின் கோல்கேட் பற்பசை
4. கவின்கேர் நிறுவனத்தின் - Fair Ever சிகப்பழகுக் கிரீம் , Spinz முகப்பூச்சுப் பவுடர்
5. மரிகோ நிறுவனத்தின் Parachute தேங்காய் எண்ணை
6. டாட்டா நிறுவனத்தின் Tata Sky TV மற்றும் தனிஷ்க் நகைக்கடைகள்
7. ரிலையன்ஸ் நிறுவனத்தின் BIG BAZAR கடைகள், BIG FM வானொலி