தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

என்ன நடக்கிறது கர்நாடகாவில் ?

சொக்கத்தங்கம் நாங்கள் - காங்கிரஸ் தலைவர்கள்தாம் ஊழல் பேர்வழிகள்-சொல்லுவது கர்நாடகாவின் இப்போதைய கதாநாயகர்கள் (!) ரெட்டி சகோதரர்கள்


தினமும் ஒரு அறிக்கை  விடும் கருணாநிதி அல்லது ஜெயலலிதாவின் வார்த்தைகளில் மண்டை காய்ந்து வரும் நாம் இந்த செய்தியையும் எற்றிகொள்வோம்.



கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் மூன்று பேர். மூன்று பெரும் அரசின் அதிகார பதவியில் இருப்பவர்கள்.



ஒருவர் G. ஜனார்தன  ரெட்டி , அந்த மாநில சுற்றுலா மற்றும் சுரங்க தொழில் அதிபர் .
G. கருணாகர  ரெட்டி  இவர் வருவாய் துறை அமைச்சர்
G. சோமசேகர  ரெட்டி  இவர் அனைவருக்கும் இளையவர்  இவரும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்.



இந்த மூவரின் மீதுதான் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற  உறுப்பினர்கள் , சட்டத்தை மீறி சுரங்க வளங்களை சுரண்டி வருகிறன்றனர் என்ற புகார் கூறி வருகின்றனர்.



மூன்று மாதங்களிற்கு ஒருமுறை  இம்மோவர் பிரச்சினை கர்நாடகா அரசியலை தாக்கும்.  எதியூரப்பா சுஷ்மா ச்வராஜை சந்திப்பார் பின்பு இம்மூவரும் நல்லவர் என்பார். அம்மூவரில் ஒருவர் நாங்கள் எந்த சட்ட விரோத தொழிலும் செய்யவில்லை என்று பெட்டி கொடுப்பார்கள்.



ஆந்திராவை ஒட்டிய கர்நாடக மாநிலமான பெல்லாரியில் இருக்கிறது இவர்களது  இரும்பு தாது நிறுவனமான ,ஒபுலபுரம்  மைனிங்   கம்பெனி , இந்த பெல்லாரி மாவட்டதில்தால் இரும்பு தாது எடுத்து உருக்கும் "ஜிண்டால்"  பாக்டரி உள்ளது.



இந்த ஒபுலபுரம்  மைனிங்   கம்பெனி நிறுவனம் மீதுதான் இப்போது குற்றசாட்டு.



இதற்க்கு ரெட்டி சகோதரர்கள் அளித்துள்ள பதில் , நாங்கள் சொக்க தங்கம் போல் உள்ளவர்கள் . மாற்றாக ஊழல் செய்வது காங்கிரஸ் தலைவர்கள்தாம்  என்று ஒரு பட்டியலை அளித்துள்ளார்கள். அவர்கள் கூற்றுப்படி ,



M.Y. க்ஹோர்ப்பாடே , V.S. லட்  and சன்ஸ் , அல்லும்  வீரபாட்ரப்ப , H.G. ராமுலு , S.M. ஜெயின்  and அதபுல்  வாஹாப்  மற்றும் ஒரு நிறுவனமான பல்டோடஸ்  ஆகியவைதான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து  இரும்புதாதை சுரண்டுகிறது என்கிறார்கள். இதில்



க்ஹோர்ப்பாடே முன்னாள் அமைச்சர் ,

வீரபாட்ரப்ப  முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ,

ராமுலு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ,

வாஹாப்  பெல்லாரி மாவட்ட  காங்கிரஸ்  கமிட்டி தலைவர்.

அதை போல ஜெயின் முன்னாள்  இந்திய  காங்கிரஸ்  கமிட்டி உறுப்பினர்  மற்றும் அணில்  லட்  ராஜ்ய  சபா  உறுப்பினர்  சந்தோஷ்  லட்  சட்டமன்ற உறுப்பினர்.



மேற்சொன்ன யாவரும் காங்கிரஸ் தலைவர்கள் தாம். இவர்கள் தாம் சட்ட விரோதமாய் சுரங்க தொழில் செய்பவர்கள்  நாங்கள் அல்ல என்று ரெட்டி சகோதர்கள் ஆதாரபூர்வமாய் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.



அரசியலில் ஒருவரை ஒருவாறு குற்றம் சாட்டுவதில் இருவர் சொல்வதிலும் உண்மை இருக்கும் என்ற உண்மையின் படி ரெட்டி சகோதர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டும் இப்போது சொல்வது உண்மைதான்.