ஆட்டத்துக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு தென்ஆப்பிரிக்கர்களுக்கு
விற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்காக இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு 10
டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் $400
மதிப்புள்ளவை. இந்த டிக்கெட்டுகளை இந்திய கால்பந்து சம்மேளனம்
தென்ஆப்பிரிக்கர்களுக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டதாக மோகன்பகான்
அணியின் செயலாளர் அஞ்சன் மித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர்
கூறுகையில்,
''உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்காக 17,18,19,20 நம்பர் டிக்கெட்டுகள்
எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த டிக்கெட்டுகளின் விலை $400-.நான்
18வது எண் இருக்கையில் இருந்தேன்.20வது எண் இருக்கையில் அகில இந்திய
கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் அன்குர் தத்தா இருந்தார். மற்ற
இரு இருக்கைகளில் இரண்டு தென்ஆப்பிரிக்கர்கள் அமர்ந்து போட்டியை
பார்த்தனர்.நான் அவர்களுடைய டிக்கெட்டுகளை வாங்கி பார்த்தேன்.அது
எங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகள்தான். எங்களுக்கு இது வியப்பாக
இருந்தது.ஆனால் கொஞ்சம் தாமதமாக உண்மை புரிந்தது.''
''தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை இந்திய கால்பந்து சம்மேளன
நிர்வாகிகள் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர் என்பதும்
தெரிய வந்தது.இந்த பிரச்சினையை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை.ஆசிய
கால்பந்து சம்மேளனத்திற்கும் 'பிபா'வுக்கும் கடிதம் வாயிலாக புகார்
தெரிவிக்க உள்ளோம்'' என்றார்.
இந்த இரண்டு டிக்கெட்டுகளும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின்
மற்றொரு துணைத் தலைவர் சுப்ரதா தத்தா பொருளாளர் ஹர்தேவ் ஜடஜாவுக்கும்
வழங்கப்பட்டவை.