தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வாக்குகளிற்கு பணம் வாங்காதீர்கள் - அடிமையாகாதீர்கள் - வைகோ

வாக்குகளிற்கு பணம் வாங்காதீர்கள் - அடிமையாகாதீர்கள் - வைகோ

மதிமுக பொது செயலாளர் வைகோ கோவில்பட்டி பகுதியில் கொடி பயணத்தை தொடங்கினார்


இன்று 26ம் தேதி மாலை கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் வில்லிச்சேரியில்
துவங்கி மந்தித்தோப்பு, ஈராச்சி, கோவில்பட்டி டவுண், குருமலை உட்பட
கோவில்பட்டி பகுதியில் அவர் கொடி பயணத்தை நடத்தி பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது அவர் பேசியதாவது:

விலைவாசி விண்ணைத் தொடுகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மத்திய மாநில
அரசுகள் மவுனம் சாதிக்கின்றன. சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை அழித்து
வருகிறார்கள். மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை. தேர்தல் காலத்தில்
ஆளும் கட்சியினர் தொகுதிக்கு 50 லட்சம் செலவழிக்கின்றனர். மக்கள்
குறைகளை சுட்டிக் காட்டினால் 'துட்டுக்குதானே ஓட்டு போட்டாய்' என
ஏசுகிறார்கள்.

தமிழகத்தில் குடும்ப அரசியல் நடக்கிறது. விவசாய நிலங்கள் விற்பனை ஆவதை
தடுக்க வேண்டும். நிலத்தையும் நிலத்தடி நீரையும் நாம் வருங்கால
சந்ததிக்காக காத்துக்கொள்ள வேண்டும். வயதான பெரியோர்களை முதியோர்
இல்லத்திற்கு அனுப்பாமல் பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். அவருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகம் ரமேஷ்,
நகர செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் மற்றும் மதிமுக நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.


தேர்தலில் பணம் வாங்கி, ஓட்டுப்போடாதீர்கள். மாறாக, கட்சி, அதன்
கொள்கைகளை பார்த்து ஓட்டுப்போடுங்கள்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர்
வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பில், நேற்று
மாலை கட்சி கொடிப்பயணத்தை துவக்கிய வைகோ பேசியதாவது: ""தமிழகத்தின்
எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. தி.மு.க., அரசு சுயநல ஆட்சி நடத்தி
வருகிறது. ஆனால், ம.தி.மு.க., கடந்த 17 ஆண்டாக சுயநலமில்லாமல்
மக்களுக்காக போராடுகிறது.

தி.மு.க., அரசு கோவையில் நடத்திய உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டால்,
பொதுமக்கள் அதிருப்தியிலுள்ளனர். தேர்தலில் பணம் வாங்கி
ஓட்டுப்போடாதீர்கள். அது அடுத்த ஐந்து ஆண்டிற்கு உங்களை ஆளும் கட்சியின்
அடிமையாக இருக்க செய்து விடும். மாறாக, கட்சி, அதன் கொள்கைகளை பார்த்து
ஓட்டுப்போடுங்கள்.


நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றால், ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலை
ஏற்படும்,'' என்றார்.