தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

2020 ன் தமிழகத்தின் முதல்வர் சினேகா அம்மையார் !

சினிமாவில் ரசிகர்கள் சீண்டவில்லை என்ற நிலை ஏற்ப்பட்டால் அரசியல்தானே அள்ளிக்கொட்டும் அடுத்த தொழில். இதோ புன்னகை இளவரசி என்று பட்டம் பெற்று இன்று புண்ணாக்கு திரைப்படங்களில் நடித்து கலை சேவை செய்து கொண்டிருக்கும் சினேகாக்கும் அரசியல் ஆசை ஆரம்பமாகி விட்டது.



நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.

யார் வேண்டுமானாலும் இப்போது அரசியலுக்கு வந்து விடலாம். மக்களுக்கான போராட்டத்தை நடத்திய அனுபவம் தேவையில்லை, அடிப்படை தகுதி தேவையில்லை. சினிமாக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், நான்கு படங்களில் நடித்தாலே நாற்காலி கனவுக்குப் போய் விடுகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது சினேகாவும் அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வர மாட்டாராம். பத்து வருடங்களுக்குப் பிறகு அது குறித்து தெரிவிப்பாராம்.


தமிழக திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட `வைஜயந்தி ஐபிஎஸ்' படம் ரீமேக்காக `பவானி' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது. விஜயசாந்தி நடித்த வேடத்தில், சினேகா நடிக்கிறார். கிச்சா இயக்குகிறார். இசையமைப்பாளர் தினா. ஒளிப்பதிவு பூபதி. இப்படம் குறித்து சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

'நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். இந்த 9 வருடங்களில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களிலும், மாறுபட்ட வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் அவ்வப்போது ஏற்படும்.

சேலையை விட்டால், சுடிதார். சுடிதாரை விட்டால், பாவாடை அல்லது தாவணி என ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து அலுத்துப்போய் விட்டது.


வைஜயந்தி ஐபிஎஸ் படத்துக்கு பிறகுதான் விஜயசாந்தி அரசியலுக்கு வந்தார். அதேபோல் நானும் வருவேனா என கேட்கிறார்கள்.

முதலில் பவானி படம் திரைக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம். நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன்' என்றார்.

கண்டிப்பாக உங்களை போன்று மக்களுக்கு சேவை செய்யும் பெண்கள்தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு வர வேண்டும். என்ன செய்ய எல்லாம் எங்கள் தலைவிதி !

ஒரு ஜெயலலிதா அம்மையார்,பிரேமலதா அம்மையார் இருக்கும் போது ஒரு சினேகா அம்மையார் இருக்க கூடாதா என்ன?

....பகலவன்....



இந்த கொசு தொல்ல தாங்க முடியல பா ! விஜய்க்கு பத்மஸ்ரீயா !

தமிழ் நாட்டு மக்களே உங்களுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வேண்டுமா! வேண்டும் என்றால் பகலவன் குழுமத்தை தொடர்பு கொள்ளவும்.கொஞ்சம் பணம் ,நிறைய விருதுகள்,இந்த சலுகை விருதுகள் உள்ள வரை மட்டுமே.உடனே முந்துங்கள்.

தோழர்களே விருதுகள் என்பது ஒரு தனி மனிதனின் உழைப்புக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு.ஆனால் அரசியலால் அந்த விருதுகள் பணத்துக்காகவே விலை போவதுதான் வேதனையிலும் வேதனை.


காங்கிரஸ் கட் சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் பின் வாங்கிய நடிகர் டாக்டர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

இது வரை திரைப்படங்களில் எதையுமே மக்களுக்கு உபயோகமாக எந்த கதையையும் அவர் கொடுக்கவில்லை.அதாவது இவர் நடிக்கும் படங்களில் இன்னும் இவர் கல்லுரி மாணவரே.கடைசியாக இவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இவர் +2 மாணவர்.நான்கு பேரை ஒரே கையாள அடிப்பது.கதாநாயகியுடன் 4 பாடல்களில் குத்து நடனம் ஆடுவது இதுதான் இன்ற வரை திரையுலகில் இவர் செய்த சாதனை.

இவர் தன்னுடைய ரசிகர்களை வைத்து விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் . அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து (கொசு தொல்ல தாங்க முடியல) தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார்.


உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல ரகசிய வேலைகளில் இறங்கியதால் அப்செட் ஆகி அரசியல் பிரவேசம் இப்போது இல்லை என்று அறிவித்து விட்டு ஆஃப் ஆகி விட்டார்.

இருந்தாலும் காங்கிரஸ் தரப்பு விஜய்யை வளைக்காமல் ஓயாது எனத் தெரிகிறது. அதை உறுதி செய்வது போல விஜய்க்கு பத்மஸ்ரீ விருது தர முடிவு செய்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன.

விஜய் காசு கொடுத்து படம் ஓட்டுவார்.காசு கொடுத்து டாக்டர் பட்டம் பெறுவார்,இப்போது காசு கொடுத்து பத்மா ஸ்ரீ வாங்க முடிவு செய்து விட்டார்.விட்டால் காசு கொடுத்து முதல் அமைச்சர் பதவி வாங்க ட்ரை பண்ணுவார் போலும் .

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பாரதரத்னா விருது மிக உயரிய விருதாகும்.

பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகளும் பத்ம விருதுகளில் அடங்கும். இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் சிறந்த சேவையாளர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து விருதுக்கு உரிய வர்களை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்காக 20 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் நடிகர் விஜய் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

காங்கிரஸின் அன்பு வட்டத்திற்குள் விஜய் இருப்பதால் கண்டிப்பாக அவருக்கு இந்த விருது கிடைத்து விடும் என்றே தெரிகிறது.

விஜய்க்கு பத்மஸ்ரீ என்று இப்போது பரபரப்பு கிளம்பியுள்ளதால், சுறா ரிலீஸின்போது மீண்டும் காங்கிரஸில் சேரும் படலத்தை அவர் ஆரம்பிக்கக் கூடும் எனத் தெரிகிறது. என்ன கொடுமை சார் இது

இந்திய தேசிய விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா. இதற்கு அடுத்த விருது பத்ம விபூஷண். மூன்றாவது பெரிய விருது பத்ம பூஷண். நான்காவது விருது பத்மஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டு மக்களே உங்களுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வேண்டுமா! வேண்டும் என்றால் பகலவன் குழுமத்தை தொடர்பு கொள்ளவும்.கொஞ்சம் பணம் ,நிறைய விருதுகள்,இந்த சலுகை விருதுகள் உள்ள வரை மட்டுமே.உடனே முந்துங்கள்.



அம்மாவின் முடிவு சின்னம்மாவின் கலக்கம் - மிஸ்டர் நாரதர்

நாராயணா... நாராயணா...என்ற திருநாமம் காதில் விழுந்ததுமே நாரதரை வரவேற்க தயரானார் நான்முகன் நாரதர் அமர்ந்தும் அமராமலும் தொடங்கினார்.

’’பிரபு, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று ஜெயலலிதா அ.தி.மு.க தலைமைக் கழகம் வந்தார்.’

’’என்ன நாரதரே, கட்சித்தலைவி கட்சி அலுவலகம் வருவது கூட செய்தியா...?

’’ஆம் பிரபு, ஜெயலலிதா வருவதே செய்திதான். எப்போதும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளின்போது தலைமைக் கழகத்தில் நீண்ட
நேரம் இருப்பார். கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்கள் சந்திப்பு எல்லாம் நடக்கும் . ஆனால் இந்த முறை அதெல்லாம் இல்லை’’

"அது ஏனாம்?"

"கட்சித் தேர்தல் தான் காரணம். ஏற்கனவே கட்சி தேர்தல் காரணமாக அ.தி.மு.க கொடியை இறக்கிக் கறுப்புக் கொடி ஏற்றல் ,
போயஸ்தோட்டத்தில் சாலை மறியல், ஆர்பாட்டம் என்று தொண்டர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த எதிர்ப்புகுரல்கள்
தலைமைக் கழகத்திலும் ஒலித்தால் எப்படிச் சமாளிப்பது? ஆகவே உஷாராக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணிவிப்பு, இனிப்பு
வழங்கல். வட சென்னை மாவட்டச் செயலர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர்
பயிற்சி சான்றிதழ் விநியோகம் என்று அரை மணியில் எலலா நிகழ்சசிக¨ள்யும் முடித்துவிட்டு பறந்துவிட்டார் ஜெயலலிதா’’ ...

’’ நாரதரே ...உள்கட்சித் தேர்தல் தலைமையை இவ்வளவு பாதித்து இருக்கிறதா என்ன..?’’

’’ஆம் பிரபு ... இப்போது உள்கட்சி தேர்தல் தொடர்பாக ஜெயலலிதா செய்துள்ள முடிவு வரும் சட்டமன்றத் தேர்தல்வரை
கட்சியின் எந்த மட்டதிலும் மாற்றம் வேண்டாம்என்பதுதான்’’

’’இது நல்ல முடிவு என்று தொண்டர்கள் ஏற்கிறார்களா?’’

’’அது தெரியவில்லை.ஆனால் தலைவியின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் சொந்த பந்தங்களுக்கு இந்த முடிவு நல்ல
முடிவு அல்ல’’

’’அது ஏன்?’’

’’நீதான் மாவட்டச் செயலாளர், பகுதி செயலாளர் பதவி உனக்கு, கிளைக்கழகச் செயலாள்ர் இனிமேல் நீதான் என்று கைநீட்டி
கரன்சிகளை வாங்கிவிட்டார்கள். இப்போது அதற்கெல்லாம் என்ன செய்வது என்று பேய்முழி முழிக்கிறார்கள் பாவம்’’

’’சரி,அடுத்த செய்திக்கு வாரும்.’’

’’அப்படியே பிரபு.தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிற்கு சோதனைமேல் சோதனை’’

’’சமீபத்தில் வந்த சோதனை என்ன? அதை மட்டும் சொல்லும்’’

’’மகா நகர் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (எம்.டி.என்.எல்) தலைவர் ஆர்.எஸ்.பி.சின்க¡ அமைச்சர் ராசாவுக்கு
நெருக்கமான அதிகாரி. சென்ற வாரம் எம்.டி.என்.எல் நிர்வாக குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தச் சென்றபோது
பொதுத் தொலைத்தொடர்பு துறைச் செயலாளர் , அவரை செல்பேசியில் அழைத்து உஙகளை பதவியிலிருந்து
விலகிக்கொள்ள சொல்லியிருக்கிற்து. எனவே நீஙகள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்.சின்காவும்
அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் திரும்பி விட்டார்’’

’’ நாரதரே ... ராசாவின் ஜாதகத்தை வாங்கி அவரை பாடாய் படுத்துவது எது என்று நீராவது சொல்லக் கூடாதா?’’

’’அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் பிரபு, நான் அடுத்த செய்திக்கு போகலாமா?”

’’கேட்கவேண்டுமா நாரதரே’’ ...

’’புதிய ஆளுநர் நியமனம் தான் எம்.கே.நாராயணன் சர்வ அதிகாரம் கொண்ட அதிகாரமயைமாக இருந்தார் . அவரை
மே.வங்க ஆளுநராக டெல்லியை விட்டு இடப்பெயர்ச்சி செய்துவிட்டார் ப.சிதம்பரம்’’

’’காரணம்?’’

’’உள்துறை,பாதுகாப்பு ஏற்பாடு போன்றவற்றில் மாற்றங்கள் செய்யத் தீர்மானித்திருக்கிறார் ப.சிதம்பரம் ... நாராயணன்
இருந்தால் சரிப்படாது என்பதால் அவரை டெல்ல்¢யை விட்டே அனுப்பிவிட்டார்’’


’’பாதுகாப்பு விஷயமல்லவா? ப.சிதம்பரத்தின் முடிவு சரியாகத்தான் இருக்கும். சரி, அடுத்த செய்தி?’’

’’அடுத்த செய்தியும் ஆளுநர் நியமனம் சம்பந்தப்பட்டது தான். ஆளுநர் பதவி கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.
பாலசுப்ரமணியம் முயற்சி செய்தார். இதற்காக டெல்லிக்கு அடிக்கடி பறந்தார்.இதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அன்பரசுவும் முயற்சி செய்தார். கோஷ்டி பூசல் காரணமாக இவர்கள் பெயர் பரிசீலிக்கப்படவேயில்லை.ஆனால் பாண்டிச்சேரி
முன்னாள் முதல்வர் பருக் மரைக்காயர் பெயரை எல்லோரும் சிபாரிசு செய்தனர். அவரும் ஆளுநராகி விட்டார்’’

’’அடடா ...தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டிப்பூசல் முதலுக்கே மோசம் விளைவிக்கிறதே நாரதரே?’’

’’நீங்களும் . நானும் கவலைப்பட்டு என்ன செய்ய பிரபு? ’’ என்று விசனத்துடன் எழுந்தார் நாரதர்.

கருணாநிதி (vs) எம்.ஜி.ஆர்

இன்று சட்ட சபையில் நடந்த இந்த உரையாடல்களும் அது செய்தியானபின்பு வாசகர்களிடமிருந்து வந்த விமர்சனங்களும் இங்கே பதியபடுகிறது :

செய்தி :


என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே!' என்ற பாடல் எனக்காக எம்.ஜி.ஆர். பாடினார்'' என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

எனக்குத் தெரியும், எம்.ஜி.ஆர். என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது.​ ஏனென்றால் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் அவர்.​ இன்னும் சொல்லப் போனால், திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றபோது, தலைவராக நான் தான் வரவேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர். அதற்காக ஆட்களைச் சேர்த்தவர்.

அந்த நன்றி எனக்கு உண்டு. சாகின்ற வரையிலே உண்டு. அதைபோல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். எனவே, எம்.ஜி.ஆர். பாடிய பாடலை நான் இப்படி கருதிக் கொள்கிறேன். அந்தப் பாடலில் "தலைவன் இருக்கின்றான் மயங்காதே' என்று வரும் வரி, என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். தலைவி இருக்கிறார் மயங்காதே எனச் சொல்லவில்லை'' என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

வாசகர் விமர்சனங்கள் :

1 ) "மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" அதே எம்.ஜி.ஆர்.தான் பாடினார் இந்த கருணாநிதிக்காக

2 ) திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என கருணாநிதியை மனதில் வைத்தே பாடப்பட்டது.எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்கள் அத்துணையும் பொருள் திருடன்,தமிழினத் துரோகி கருணாநிதியை மனதில் வைத்தே பாடப்பட்டது.அதனால் தான் எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தவரை இந்த பன்னாடை கருணாநிதியால் பதவிக்கு வரமுடியவில்லை.

3 ) ஒரு வாலுமில்லை நாலு காலுமில்லை ஒரு மிருகம் இருக்குது நாட்டுக்குள்ளே" '"மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" "நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும்" "மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே" "ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே " "சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க" "நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்" " உரத்தில் கூட ஊழல்பண்ணி எங்க பேரைக் கெடுக்கிறான்" இப்படியெல்லாம் அதே எம்.ஜி.ஆர்.தான் பாடினார். இவை காலத்தால் அழியாத பாடல் வரிகள்

4 ) 40 ஆண்டுகளாக இருந்த நண்பரையும்(MGR), தம்பியையும்(வைகோ) கட்சியை விட்டு அனுப்பிவிட்டு, கழகம் என்ற குடும்பத்தின் தலைவராக தனக்கு போட்டியில்லாமையை உருவாக்கியப்பின், அதற்கு வெளியேறியவர்கள் தான் காரணம் என்று கூறும் கைவந்த கலைஞர். 'நேருக்கு நேராய் வரட்டும்' என்று MGR பிரிந்தப்பின்பு கருணநிதிக்கு பாடிய பாடலுக்கேர்ப்ப, நேருக்கு நேராய் வந்து தோல்வியுற்றப்பின், நேரு கட்சி துணையுடன் MGR ஆட்சியை கவிழ்க்கப் பார்த்ததும் ஒரு நண்பர் செய்யும் செயலா? ஆயிரத்தில் ஒருவன் MGR அப்படத்தில் வரும் MGR, ஜயலலிதா, நம்பியார்(கருணாநிதி) இன்றும் அப்படியே பொருந்தும்

5 ) நிலைமாறி எதிர் எதிர் ஆக மாறிய பின்பு எத்தனைக் காலத்திற்குத்தான் 40 ஆண்டு கால நட்பைக் கூறிக் கொண்டிருப்பது? வாழ்ந்த பொழுது ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு விட்டுத் திரும்பத்திரும்ப பழைய பல்லவியையே பாடுவது நன்றாக இல்லை. எனவே, எதிர் நிலைப்பாடு ஏற்பட்ட வரலாற்று உண்மையைத் திரிக்காமல் மறுக்காமல் மறைக்காமல் மழுப்பால் தன்னுடைய இயக்கப் பணிகள் கருத்துகள் போராட்டங்கள் அடிப்படையிலேயே தன்னை முன்னிறுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயல வேண்டும். நாடெங்கும் ஆழமான அழுத்தமான கலைஞர் எதிர்ப்பு கருத்தினை ஆழமாக விதைத்துத் தாம் மறைந்தாலும் தம்மால் விதைக்கப்பட்ட கருத்தினை மறையாமல் இருக்கச செய்த புரட்சித்தலைவரின் தோழமை என்ற புகழில் தன்னை மறைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயலக கூடாது. புரட்சித் தலைவருக்கு எதிரான இயக்க விளக்கும் அணையாமல் இருப்பதை உணர்ந்து இனியேனும் எதிர்ப்பிற்கு முந்தைய நிலை‌யைக் கூறி மக்க‌ளை எரிச்சல்படுத்தக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

6 ) 40 ஆண்டுக் கால நண்பரா மகனா என்ற நிலை வந்த பொழுது நிலைப்பாடு மாறியதை மறக்கக் கூடாது. தந்தை பெரியார் இறை மறுப்பாளராக மாறிய பின்பு அவரின் முந்தைய கருத்துகளை எவ்வாறு எடுத்தாளக் கூடாதோ, அதே போல் நிலைமாறி எதிர் எதிர் ஆக மாறிய பின்பு எத்தனைக் காலத்திற்குத்தான் 40 ஆண்டு கால நட்பைக் கூறிக் கொண்டிருப்பது? வாழ்ந்த பொழுது ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு விட்டுத் திரும்பத்திரும்ப பழைய பல்லவியையே பாடுவது நன்றாக இல்லை. எனவே, எதிர் நிலைப்பாடு ஏற்பட்ட வரலாற்று உண்மையைத் திரிக்காமல் மறுக்காமல் மறைக்காமல் மழுப்பால் தன்னுடைய இயக்கப் பணிகள் கருத்துகள் போராட்டங்கள் அடிப்படையிலேயே தன்னை முன்னிறுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயல வேண்டும். நாடெங்கும் ஆழமான அழுத்தமான கலைஞர் எதிர்ப்பு கருத்தினை ஆழமாக விதைத்துத் தாம் மறைந்தாலும் தம்மால் விதைக்கப்பட்ட கருத்தினை மறையாமல் இருக்கச செய்த புரட்சித்தலைவரின் தோழமை என்ற புகழில் தன்னை மறைக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முயலக கூடாது.


1982 - காதல் கதை

என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!
gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்.”இளமை என்னும்
பூங்காற்று” கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக……..!
“கண்ணே கலை மானே” ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது “மடை திறந்து” பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் “உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்” முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.

அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்.”இதயம் ஒரு கோவில்”"பூ மலையே தோள் சேரவா” “மன்றம் வந்த
தென்றலுக்கு” “என்ன சத்தம் இந்த நேரம்…”

மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்….! அவளும் காதலிக்கிறாள் …..

“ஒரு கோலமே

கோலம் போடுகிறதே…..!”

நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்.”அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்”.இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.

நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.

“உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே”……அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்.”சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்”
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்

பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் “நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்”



‘தேசபக்தி’ புல்லரிக்குது….


‘தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு’ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும், தங்கபாலுவும், மயிலாப்பூரில் அண்மையில் நடத்தியிருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் தீவிரவாதத்தை எதிர்த்து, இவர்கள் செய்த “வீரமுழக்கங்களை” ‘தினத்தந்தி’ நாளேடு (5.1.2010) வெளியிட்டிருக்கிறது. அந்த ‘சிந்தனை முத்துகளை’ப் படிக்கும் ‘அரிய’ வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, தங்கபாலுவும், இளங்கோவனும் தனியே சந்தித்துப் பேசியிருந்தால், எப்படிப் பேசியிருப்பார்கள்?

தங்கபாலுவும், இளங்கோவனும், கருத்தரங்கு முடித்து, தனியறையில் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து, முகம் மலர சிரித்து, தங்கள் உரையாடலைத் தொடங்குகிறார்கள்:

இளங்கோவன்: தங்கபாலு சார், தீவிரவாத எதிர்ப்பை நான் மட்டும்தான், காங்கிரசில் தனியாகப் பேசி வந்தேன். இப்போது நீங்களும் என்னுடன் சேர்ந்திருப்பது, மிகவும் மகிழ்ச்சி.

தங்கபாலு: எனக்கு மட்டும் மகிழ்ச்சி இருக்காதா? தீவிரவாதத்தை இப்போது எதிர்த்தே தீர வேண்டிய கட்டாய நெருக்கடி, கட்சிக்குள் நமக்கு இருக்கிறதே?

இளங்கோ : நீங்க, என்ன சொல்ல வர்றீங்க…

தங்கபாலு: என்ன சார், தெரியாததுபோல நடிக் கிறீங்க? கட்சிக்குள்ள, நம்ம இரண்டு அணிகளுக்கும் எதிரா, வாசன், வேகமாக வளர்ந்துகிட்டு வர்ராறே; அதைத்தான் சொல்கிறேன். இது நமக்கு எதிரான பயங்கரவாதம் தானே! இந்த பயங்கரவாதத்தை எதிர்க்கிறதுக்கு – நாம இரண்டு பேரும் தீவிரவாத எதிர்ப்பு அணியிலே கை கோர்த்து நிற்க வேண்டியிருக்கே!

இளங்கோ : சரியாகச் சொன்னீங்க… உங்க பேச்சிலேயே, தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப் பட்ட கட்சி, நம் கட்சி தான்னு குறிப்பிட்டீங்களே…. அப்போதே புரிஞ்சுகிட்டேன். ஆனாலும், என்னை விட, நீங்க, பெரிய துணிச்சல் காரராயிட்டீங்க….

தங்கபாலு: எப்படி, சொல்றீங்க…

இளங்கோ: “நாம் அரசியலை சேவையாக செய் கிறோம்; தீவிரவாதிகள், தொழிலாக நடத்து கிறார்கள்” என்று, ஒரு போடு போட்டீர்களே, அதைத்தான் சொன்னேன்.

தங்கபாலு: இந்த கிண்டல்தானே வேண்டாம்ங் குறேன். நான், பொறியியல் கல்லூரிகளை நடத்துறதைத் தானே குத்திக் காட்டுறீங்க…. எனக்கு தெரியாதாக்கும்.

இளங்கோ: சே…. சே…. அப்படி எல்லாம் இல்லீங்க…. நீங்க, கல்வி வியாபாரம் நடத்துறத ஏன், ஒரு தொழிலாக நினைக்கிறீங்க. அது பெரிய மக்கள் சேவையாச்சே… இந்த விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற தீவிரவாதிகள்தான் அடிக்கடி சிறைக்குப் போவதை தொழிலாக வச்சிருக்காங்க. நாம சேவை செய்யறோம்; அவுங்க தான் தொழில் நடத்துறாங்க; இப்போ புரியுதா?

தங்கபாலு: இப்போ நல்லா புரியுது. ஆனாலும் ஒரு சந்தேகம். காந்தி, நேரு காலத்திலேயிருந்து, ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் குரல் கொடுத்து வருதுன்னும், ஈழத் தமிழர்களுக்கு, நேரு தான், வாக்குரிமை வாங்கித் தந்தாருன்னும் அதிரடியாக பேசியிருக்கிறீங்களே, அது என்னங்க புது வரலாறு?

இளங்கோ: எனக்கு மட்டும் தெரியுமா? என்ன கேள்வி கேக்குறீங்க? எல்லாத்தையும், காந்தி செய்தார்; நேரு செய்தார்ன்னு பேசுவதுதானே நமக்கு வரலாறு. 125 வருட காங்கிரஸ் வரலாறு தெரிஞ்சுகிட்டு, என்ன கிழிக்கப் போறோம்! வாசனை எதிர்க்க இது துரும்புக்காவது பயன்படுமா? சோனியா, ராகுல், பிரியங்கா பற்றித் தெரிஞ்சா போதும். மற்றபடி காமராசர் ஆட்சி அமைப்போம் என்று, அவ்வப் போது பேச வேண்டும். காமராசர்ன்னு, தமிழ்நாட்டில ஒரு தலைவர் இருந்தார் என்கிற அந்த ஒரு வரலாறு மட்டும் தெரிஞ்சா போதும்.

தங்கபாலு: காங்கிரஸ் வரலாறு, தத்துவம் எல்லாத்தையும் இப்போதான் தெளிவா புரிய வெச்சுருக்கீங்க. ஆனாலும், தமிழ்நாட்டுல தீவிரவாதம் தலைதூக்கி ஆடுதுன்னு நாம, தீவிரமா பேசியாகணும். இப்போ பாருங்க, எனக்கு மிரட்டல் கடிதம் வருது. உங்க வீடு, பூட்டியிருக்கும்போதே, பெட்ரோல் குண்டுகள வீசுறாங்க… இப்படி எல்லாம் சட்டத்தை கையில் எடுத்தால் நாடு என்னவாகும்?

இளங்கோ: ஓகோ, இப்ப என்ன குத்தி காட்டு றீங்களா? ஈரோட்டில் – நம்ம ஆட்கள் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு, பிரபாகரன் படம் போட்ட பேனர்களை எல்லாம், கிழித்து தள்ளச் சொன்னேன் என்பது உண்மைதான். நாம் சட்டத்தைக் கையில் எடுக்கலாம்; அது தேசபக்தி. அவர்கள் எப்படி பிரபாகரன் படத்தை வைக்கலாம்? அது சீனா – பாகிஸ்தான் ஊடுருவலைவிட ஆபத்தானதாயிற்றே.

தங்கபாலு: சரியாச் சொன்னீங்க. இப்போ சத்தியமூர்த்தி பவன் கூட்டத்துலேயே நாம அரிவாளால் வெட்டிக்கிறோம்; அடிச்சுக்கிறோம்; மாற்றி மாற்றி செருப்பால அடிச்சுக்குறோம்; சட்டையைக் கிழிச்சுக்குறோம்; வெளி மாநில பார்வையாளர் உள்ளாடையாக கதர் போட்டிருக்கிறாரா என்று வேட்டியைக் கிழிச்சு சோதிச்சுப் பாக்குறோம்; சுதந்திரம் வாங்கித் தந்த நமக்கு இந்த உரிமைகூட கிடையாதா? அவசரத்துக்கு காவல்துறையைக் கூட அழைக்கிறோம். இதெல்லாம், தேதசபக்திக்காக நாம நடத்துற போராட்டங்களே தவிர, தீவிரவாதம் ஆகாது. தமிழ்நாட்டில் பிரபாகரனை ஆதரிக்கிறவங்களுக்கு, இதெல்லாம் ஒரு எழவும் புரியவே மாட்டேங்குது. அதனாலதான், பிரபாகரன் படத்தையே மாட்டக் கூடாதுன்னு நாம, ஒரு போராட்டத்தை உடனே தொடங்கியாக வேண்டும்.

இளங்கோ: அப்படின்னா, நாடாளுமன்றத் திலேயே குண்டு வீசிய பகவத்சிங் படத்தை, நாடாளுமன்றத்திலேயே மாட்டியிருக்கிறீர்களே, அது சரிதானா என்று கேக்குறாங்களே, அதற்கு என்ன சார் பதில் சொல்றது? நம்ம தெலுங்கானா காங்கிரஸ்காரங்க, தனி மாநிலம் கேட்டு, பதவியை தூக்கி எறிஞ்சிட்டு, வீதிக்கு வந்து சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு போராடுறாங்களே.

தங்கபாலு: இதெல்லாம் ஒரு கேள்வியா? தெளிவா சொல்லுங்க. நாம சட்டத்தை கையிலே எடுத்தா அது தேசபக்தி; பிரபாகரன் படத்தை வைத்தாலே அதுக்கு பேரு பயங்கரவாதம்.

இளங்கோ : நல்லா, புரிஞ்சுகிட்டேங்க…. நீங்க, காங்கிரசை, இப்பதான் காந்தி காட்டிய வழிக்கு அழைச்சிக்கிட்டுப் போறீங்க…

தங்கபாலு : அது, எப்படி சொல்றீங்க?

இளங்கோ: காந்தி, சுதந்திரம் வாங்கின கையோட காங்கிரசை கலைச்சிடுங்கன்னு சொன்னாரே, நாம கேட்காம விட்டுட்டோம். நீங்கதான், காந்தி கண்ட கனவை, நினைவாக்குறீங்க. அது சரி, கூட்டணி மாறுவது கொள்கையான்னு, பேசியிருக்கீங்களே, இதை எப்படிங்க சகிச்சுக்குறது? நம்ம தமிழக காங்கிரசு வரலாறே – அவ்வப்போது கூட்டணி மாறுவது தானே?

தங்கபாலு : நாம கூட்டணி மாறினா, அதுக்குப் பேரு கொள்கை கூட்டணி. மற்ற கட்சிகள் மாறினா, அது கொள்கையற்ற கூட்டணி. நாம சட்டத்தைக் கையில் எடுத்தா – அது தேச பக்தி. மற்றவங்க புலிகளை ஆதரித்து கூட்டங்களில் பேசினாலேயே – அது தீவிரவாதம். அம்மா இந்திரா சுடப்பட்டபோது மூவாயிரம் சீக்கியர்களை டெல்லியில் ஒரே நாளில், நம்ம ஆளுங்கதானே காலி பண்ணுனாங்க. அதெல்லாம் தேசபக்தி தானே. நல்லா புரிஞ்சுக்குங்க. தேசபக்தி, தேச கவுரவம் என்பதில் நமக்குன்னு

தனி பாரம்பர்யம் இருக்கு! நாமெல்லாம் காந்தி

வழி வந்தவங்க. காந்தி குல்லா போடுற பாரம்பர்யம்.

இளங்கோ: ஆமாங்க; நம்ம ஆந்திர ஆளுநர் என்.டி. திவாரிகூட காந்தி குல்லா போடுறவருதான். அது பாருங்க. பெண்களுடன் படுக்கையறைக் குள்ளே போறப்ப, குல்லாவை கழட்டி வச்சிட்டு, அதற்கான மரியாதை தராரு பாருங்க. அவரோட அந்த தேசபக்தி புல்லரிக்குதுங்க.

தங்கபாலு: அதனாலதான், பெருந்தன்மையோடு பதவி விலகி, ஜனநாயகத்தின் ‘கற்பை’ காப்பாத் திட்டதா, நம்ம கட்சியே அறிக்கை விட்டிருக்கு; இதெல்லாம், இந்த விடுதலைப் புலி ஆதரவாளர் களுக்கு புரியவே புரியாது!

இளங்கோ: இப்படி, நாம அடிக்கடி கலந்து பேசி, மனம் விட்டு விவாதிச்சா தான் நமக்குள்ள ஒருமைப்பாட்டை வளர்த்து, வாசன் கோஷ்டியை தனிமைப்படுத்தி, தேசபக்தியைக் கட்டிக் காப்பாத்த முடியும்.

தங்கபாலு: ஆமாம்! ஆமாம்! கடைசியா ஒரு விண்ணப்பம். கள்ளுக்கடைய திறக்கக் கூடாதுன்னு நீங்க போராட்டம் நடத்தினப்போ, நான் கள்ளுக் கடைகளை திறக்கனும்னு அறிக்கை விட்டதை யெல்லாம், இப்ப மறந்திடுங்க. கடந்த தேர்தலில், உணர்ச்சியுள்ள தமிழர்கள் இருந்ததாலேதான், நாம இரண்டு பேருமே மண்ணைக் கவ்வினோம். எனவே தமிழன்ங்குற உணர்ச்சிய மழுங்கடிச்சாதான் நமக்கு வாழ்வு, எதிர்காலம். அதுல மட்டும் சத்தியமா நாம உறுதியா இருக்கணும். வரட்டுமா?

- கோடங்குடி மாரிமுத்து,மீனகம்

நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம்


பில்கேட்ஸுக்கு புகார் கடிதம் !

ஐயா பில்கேட்ஸு,


http://tamiljournal.com/show_image_NpAdvSinglePhoto.php?filename=/bilgates-300.jpg&cat=17&pid=6866&cache=false


சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find*" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts*" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடை கம்ப்யூட்டரில் "My pictures*"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய "Microsoft Home" மனைவி கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?


CuteBabyPicIsitFridayYet.jpg image by HeyUBabyDotCom

லூசாடி நீ!

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.



உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. ந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள். அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் றையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது. அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.

அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை. அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.

அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள்.. அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,SURFEXCEL போடு கறை போயிடும்" என்றது.



இதைப் படித்ததும் உடனே என்னை உதைக்கத் தோணுமே உங்களுக்கு! நானே இதை எனக்கு அனுப்பியவரைத் தேடிக்கிட்டு இருக்குறேன் .
....பகலவன்....