தமிழ் நாட்டு மக்களே உங்களுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வேண்டுமா! வேண்டும் என்றால் பகலவன் குழுமத்தை தொடர்பு கொள்ளவும்.கொஞ்சம் பணம் ,நிறைய விருதுகள்,இந்த சலுகை விருதுகள் உள்ள வரை மட்டுமே.உடனே முந்துங்கள்.
தோழர்களே விருதுகள் என்பது ஒரு தனி மனிதனின் உழைப்புக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு.ஆனால் அரசியலால் அந்த விருதுகள் பணத்துக்காகவே விலை போவதுதான் வேதனையிலும் வேதனை.
காங்கிரஸ் கட் சியில் சேருவார் என முன்பு கூறப்பட்டு, பின்னர் பின் வாங்கிய நடிகர் டாக்டர் விஜய்க்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.
இது வரை திரைப்படங்களில் எதையுமே மக்களுக்கு உபயோகமாக எந்த கதையையும் அவர் கொடுக்கவில்லை.அதாவது இவர் நடிக்கும் படங்களில் இன்னும் இவர் கல்லுரி மாணவரே.கடைசியாக இவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இவர் +2 மாணவர்.நான்கு பேரை ஒரே கையாள அடிப்பது.கதாநாயகியுடன் 4 பாடல்களில் குத்து நடனம் ஆடுவது இதுதான் இன்ற வரை திரையுலகில் இவர் செய்த சாதனை.
இவர் தன்னுடைய ரசிகர்களை வைத்து விரைவில் அரசியலில் குதிப்பேன் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் . அரசியலை மனதில் கொண்டு தனது ரசிகர் மன்றத்துக்கென தனி கொடியையும் வெளியிட்டார். தனது படங்களில் எல்லாம் தவறாமல் பன்ச் வசனம் வைத்து (கொசு தொல்ல தாங்க முடியல) தனது எண்ணங்களை கொட்டியும் வருகிறார்.
உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று ராகுல் காந்தியையும் சந்தித்தார். ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது அவர் முன்பாக காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அதைத் தடுக்கும் வகையில் சென்னையில் சிலர், சில பல ரகசிய வேலைகளில் இறங்கியதால் அப்செட் ஆகி அரசியல் பிரவேசம் இப்போது இல்லை என்று அறிவித்து விட்டு ஆஃப் ஆகி விட்டார்.
இருந்தாலும் காங்கிரஸ் தரப்பு விஜய்யை வளைக்காமல் ஓயாது எனத் தெரிகிறது. அதை உறுதி செய்வது போல விஜய்க்கு பத்மஸ்ரீ விருது தர முடிவு செய்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன.
விஜய் காசு கொடுத்து படம் ஓட்டுவார்.காசு கொடுத்து டாக்டர் பட்டம் பெறுவார்,இப்போது காசு கொடுத்து பத்மா ஸ்ரீ வாங்க முடிவு செய்து விட்டார்.விட்டால் காசு கொடுத்து முதல் அமைச்சர் பதவி வாங்க ட்ரை பண்ணுவார் போலும் .
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம விருதுகளில் பாரதரத்னா விருது மிக உயரிய விருதாகும்.
பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகளும் பத்ம விருதுகளில் அடங்கும். இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் சிறந்த சேவையாளர்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அந்த பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து விருதுக்கு உரிய வர்களை தேர்வு செய்யும்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்காக 20 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இருந்து மூன்றில் ஒரு பங்கு பேர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களில் நடிகர் விஜய் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காங்கிரஸின் அன்பு வட்டத்திற்குள் விஜய் இருப்பதால் கண்டிப்பாக அவருக்கு இந்த விருது கிடைத்து விடும் என்றே தெரிகிறது.
விஜய்க்கு பத்மஸ்ரீ என்று இப்போது பரபரப்பு கிளம்பியுள்ளதால், சுறா ரிலீஸின்போது மீண்டும் காங்கிரஸில் சேரும் படலத்தை அவர் ஆரம்பிக்கக் கூடும் எனத் தெரிகிறது. என்ன கொடுமை சார் இது
இந்திய தேசிய விருதுகளில் மிக உயர்ந்தது பாரத ரத்னா. இதற்கு அடுத்த விருது பத்ம விபூஷண். மூன்றாவது பெரிய விருது பத்ம பூஷண். நான்காவது விருது பத்மஸ்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டு மக்களே உங்களுக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வேண்டுமா! வேண்டும் என்றால் பகலவன் குழுமத்தை தொடர்பு கொள்ளவும்.கொஞ்சம் பணம் ,நிறைய விருதுகள்,இந்த சலுகை விருதுகள் உள்ள வரை மட்டுமே.உடனே முந்துங்கள்.