தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சதுர அடிக்கு நூறு ரூபாயில் வீடு - அரசு அறிவிப்பு ? வீடு கட்டுவதில் புரட்சியா ?

இன்று படித்ததில் ஆராய்ந்தது:
இன்று சட்ட சபையில் கவர்னர் உரையில் மேலும் பல சலுகைகள் அரசாங்கத்தால் வாசிக்கப்பட்டது. வாழ்வாதார பிரச்சினைகளை பற்றி எந்த அறிவிப்பும் இருந்த மாதிரி தெரியவில்லை.
அதில் முக்கியமானது , குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவம் அல்லது தொழில்நுட்ப கல்லூரிக்கான முழு செலவையும் அரசு ஏற்கும். - வரவேற்க வேண்டியதுதான் .
அடுத்து இருபத்தி ஒன்று லக்ஷம் கான்க்ரீட் வீடுகள் கட்டும் அரசின் திட்டம். , உள்ளூர் கட்சிகாரர்களிர்க்கும் மற்றும் உள்ளூர் ஒப்பண்டகாரர்களிற்குமான திட்டம். அரசு கட்டும் வீடுகள் எதுவும் தரமானதாக இருந்ததில்லை. கான்க்ரீட் வீடென்றால் சதுர அடிக்கு குறைந்தது (இடம் போக) இப்போதைய நிலவரப்படி எண்ணூறு ரூபாய் செலவாகும், அரசு 600 சதுர அடி வீடு கொடுத்தால், ஒரு வீட்டுக்கு 4,80,000/- வீதம்
21,00,000 வீடுகளிற்கு 100,08,00000000 (ஒரு லக்ஷதி எம்பதினாயிரம் ) கோடி ரூபாய் செலவாகும். இவர்கள் ஒதுக்கி இருப்பது மூன்று லக்ஷம் வீட்டிற்கு 1800 கோடிகள். என்றால் சதுர அடிக்கு வெறும் நூறு ரூபாய் ?
சதுர அடிக்கு வெறும் நூறு ரூபாயில் வீடு கட்ட முடியா ? முடிந்தால் அது புரட்சிதான் அல்லது வீட்டின் அளவை குறைக்க வேண்டும் , முன்னூறு சதுர அடியாக குறைக்கலாம் என்றால் முநூர்று சதுர அடியில் நான்கு பேருள்ள குடும்பம் குடித்தனம் நடத்த இயலுமா? ஒன்றும் விளங்கவில்லை.
நல்ல திட்டம்தான் ஆனால் எப்படி செயல்படுத்த போகிறார்கள் ? ஒப்புக்கு திட்டம் அறிவித்து பயனாளிகளையும் பங்கு கொடுக்க வேண்டும் என்று இழுத்தால், பயனாளிகள் எவ்வளவு பணம் போடா வேண்டும் அல்லது உழைப்பு போட வேண்டும் . ? மறுபடியும் தெளிவில்லை .
இன்றுதான் திட்டம் வந்துள்ளது கொஞ்ச நாள் பொறுப்போம் எப்படி சாத்தியகூறுகளை நோக்கி நகர்த்துகிறார்கள் என்று பார்ப்போம்.
படித்ததில் பிடித்தது :
எந்த இணைய செய்திகளிலும் பின்னூட்டம் வரும் அப்படி வந்த ஒரு பின்னூட்ட செய்தி இது,இட்டவர் அப்துல்லா துபாயில் இருந்து:
"வெளிநாட்டில் கஷ்டப்படும் என்னிடம் ஒருவர், ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய் என்று வினவ புரியாமல் நான் விழிக்க, அவர் சிரித்தப்படி என்னிடம் சொன்னார். என்னைப் பார். 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன்.
போரடித்தால் கலர் டிவியில் திரைப்படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிவிடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன். உழைக்காமல் எப்படியய்யா இது முடியும் என அப்பாவியாய் நான் கேட்க,
நான் தமிழ்நாட்டு குடிமகன் ஐயா என பெருமையுடன் பதில் கூறினார்.
என் நாட்டில் 1 ரூபாய்க்கு அரிசி, சமைப்பதற்கு கேஸ் அடுப்பும், பொழுது போக்கிற்க்கு கலர் டிவியும் , குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்?. நான் கேட்டேன். உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?. பலமாக சிரித்தபடி உரைத்தார். மனைவி பிள்ளை பெற்றால் 5000 இலவச சிகிச்சையுடன், குழந்தைக்கு சத்துணவும் பாலர் பள்ளியில், படிப்பு சீருடையுடன் மதிய உணவும் முட்டையுடன், பாடப் புத்தகமும் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம், தேவையென்றால் சைக்கிளும் இலவசம், மேலும் பெண்கள் திருமண உதவித் தொகை ரூபாய் 25000 , 1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் எல்லாவற்றுக்கும் மணிமகுடமாய் தேர்தல் வந்தால் ஓட்டுக்கு ஆயிரங்கள் இலவசம் .நான் எதற்கு உழைக்க வேண்டும்?.வியந்து போனேன் நான். இலவசம் என்பதற்கு 2 அர்த்தம் உண்டு.
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை?
உழைக்காமல் உண்டு சோம்பேறியானாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாட முயற்சிப்பாய். இதே நிலை தொடர்ந்தால் - தமிழகம் கள்வர் பூங்காவாக மாறும் நிலை ஏன் ஏற்படாது? "