தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மூன்றரை ஆண்டில் மருத்துவம் அதுவும் அவர்கள் கிராமத்தில் வேலை பார்க்க மட்டுமே என்றால் அந்த படிப்பின் தரம் என்ன ?

படித்ததில் பிடித்தது .

மூன்றரை ஆண்டில் மருத்துவம் அதுவும் அவர்கள் கிராமத்தில் வேலை பார்க்க மட்டுமே என்றால் அந்த படிப்பின் தரம் என்ன ?

கிராமத்தான் எப்படி போனால் என்ன என்ற நோக்கில் தான் இது இருப்பதாக தெரிகிறது .

செய்தி இங்கே :

கிராம மக்களுக்கு தரமற்ற சிகிச்சை அளிக்கவா கிராம எம்.பி.பி.எஸ். படிப்பை அறிமுகப்படுத்த முயற்சி நடைபெறுகிறது என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினார்.கிராம மாணவர்களுக்கு என அறிமுகப்படுத்த உள்ள மூன்றரை ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது.கிராமப்புறங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை; கிராமங்களுக்கு மருத்துவர்கள் செல்ல மறுக்கிறார்கள்' என்ற காரணத்தைக் கூறி புதிய மூன்றரை ஆண்டு கிராமப்புற எம்.பி.பி.எஸ். படிப்பைத் தொடங்க மத்திய சுகாதாரத் துறை முயற்சி செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி கிராமப்புற மாணவர்கள் மூன்றரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு, கிராமங்களில் மட்டுமே மருத்துவ சேவை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


உண்மை நிலை என்ன?

மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதைவிட, முதுநிலை மருத்துவப் படிப்பு படித்த மருத்துவர்களின் பற்றாக்குறையே நமது கிராமப்புற சுகாதாரத் துறையை பாதித்துள்ளது. எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள் பணியாற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை 15 சதவீதம்தான்; ஆனால், சமுதாய மருத்துவ மையங்களில் அறுவைச் சிகிச்சை-மகப்பேறு-குழந்தைகள்-பொது மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை 72 சதவீதத்துக்கு மேல் உள்ளது. நமது சுகாதாரத் துறையின் மனித ஆற்றலையெல்லாம் பெரிய தனியார் மருத்துவமனைகள் அபகரித்துக் கொள்வதே இதற்கு முக்கியக் காரணம். மேலும் போதிய கிராமப்புற வளர்ச்சியின்மை, கிராமப்புற மருத்துவப் பணியில் திருப்தியின்மை, கிராமங்களில் மருத்துவ சேவை செய்வோருக்கு அரசு உரிய முறையில் ஊக்கம் அளிக்காதது ஆகியவையும் காரணங்களாகும்.

முதுநிலை மருத்துவர்கள் செய்யும் பணியை ஐந்தரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்களே செய்ய முடியாத நிலை உள்ளபோது, மூன்றரை ஆண்டு மட்டும் எம்.பி.பி.எஸ். படிக்க உள்ள டாக்டர்களால் எவ்வாறு செய்ய முடியும்?



தகுதி உள்ள டாக்டர்கள் பற்றாக்குறைதான் பிரச்னை என்ற நிலையில், தகுதி குறைவான டாக்டர்களை உருவாக்க மத்திய அரசு கருதுவது ஏன்?


இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு முடித்த டாக்டர்களின் சேவை நகர மக்களுக்கும், மூன்றரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்களின் சேவை கிராம மக்களுக்கும் என்பது சரியா என்றும் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.