தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழா மலையாளி உனக்கு வைக்கும் அடுத்த ஆப்பு அமராவதி - பிச்சை எடுக்க தயாராகி விடு ....

தமிழா மலையாளி உனக்கு அடுத்த ஆப்பு வைக்க துவங்கி விட்டான் .நீ வருத்தப்படாதே தமிழா நீ மானாட மயிலாடபார்த்து கொண்டே இரு. கடைசியில் உனக்கு --- கழுவ கூட தண்ணி இல்லாம நாற போற.

வட தமிழகத்தின் பாலாறு ஆந்திராவின் சுழச்சியால் ஆறே இல்லாமல் போய் விட்டது.முல்லை பெரியாறு மலையாளியின் சூழ்ச்சியில் வறண்டு போக காத்துக்கொண்டு உள்ளது.காவிரி கர்நாடகாவிடம் தமிழனின் பிச்சை பாத்திரமாக மாறி போய் விட்டது.விருதுநகர் மாவட்டத்தின் ஆணைமலை கேரளாவின் அரசியலால் அது வறண்ட பூமியாகவும் மாறி அந்த மண்ணின் மக்களே அதை மறந்து போய் வாழ்கின்றனர்.இதோ அடுத்து மலையாளி ஆரம்பித்து விட்டான்.இந்த முறை அவன் கை வைத்து இருப்பது கொங்குச் சீமையின் அமராவதி .

தமிழ்நாட்டின் நதிநீர் வாழ்வாதாரங்களுக்குத் தீங்கான கேடு செய்யும் வகையில், கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது நாம் அறிந்ததே. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அராஜகப் போக்கை மேற்கொண்டு உள்ள கேரள அரசு, தற்போது, கொங்குச் சீமையிலும் நமக்குக் கேடு செய்ய முற்பட்டு விட்டது.

கேரளா நமக்கு எதிராக காரியம் செய்துகொண்டிருக்கிறது.நம்மை பகைப்பது பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை.ஆனால் இங்கே நம் முதல்வர் அவர்களை பகைக்க தயாராக இல்லை.வெறும் கடிதம் மட்டும் ஒப்புக்கு எழுதி தன் கடமையை முடித்துக்கொள்வார்.ஏனென்றால் இது அவர் வீட்டு பிரச்சினை அல்ல.துரோகம் எங்கிருக்கிறது புரிகிறதா?

யார் இந்த அமராவதி ?


http://thatstamil.oneindia.in/img/2010/01/12-amaravathi-dam200.jpg

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு, கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, தமிழக எல்லையில் உள்ள சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. 1956-ஆம் ஆண்டு இந்த அணை நீர்ப்பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.


அணை கட்டுவதற்கு முன்பே உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருந்து கரூர் வரை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. அமராவதி அணை கட்டிய பின்னர், புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் இந்தத் தண்ணீரால், 30-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் மூலம் பல கிராமங்களுக்கும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழக -கேரள எல்லையான மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள, மறையூர் அருகே ரூ.230 கோடி செலவில் புதிய அணைகட்ட கேரள அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் குறுக்கே, 110 ஏக்கர் பரப்பளவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


இந்த அணையின் மூலம் சுமார் 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்போவதாகக் கூறும் கேரள அரசு, இதற்கான இறுதிக்கட்ட சர்வேயை முடித்து உள்ளது. பாம்பாற்றின் வழித்தடத்தில் உள்ள தூவானம் அருவிக்கு மேல்புறம் 170 மீட்டர் நீளமும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவது எனவும், நான்கு ஆண்டுகளில் அணையைக்கட்டி முடித்து விடுவது எனவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.


ஜனவரி 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச்சூழல்துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மின்சாரம் தயாரிக்கத்தான் அணைகட்டுகிறோம் என கேரள அரசு சொல்வது ஏமாற்று வேலை. தனியார் குளிர்பானக் கம்பெனிகளின் வசதிக்காகத்தான் இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிகிறது.


ஏற்கனவே காவிரியின் உப நதிகளில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணைப்பகுதி, காவிரி நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட வழக்கின் ஒரு பகுதி ஆகும். அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சி ஆகும். இதனால் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீரை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாலைவனமாகி விடும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்து உள்ள, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும்.


தொடக்கத்திலேயே இதைத்தடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் அமைச்சரகம், அனுமதி தரக்கூடாது. முல்லைப்பெரியாறு பிரச்சினையில், மத்திய அரசு, தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக, புதிய அணை கட்ட, ஆய்வுக்கு அனுமதி அளித்த துரோகத்தை, பாம்பாற்றுப் பிரச்சினையிலும் செய்து விடக்கூடாது .

மத்திய அம்மைச்சருக்கும்,பிரதம மந்திரிக்கும் கடிதம் எழுதி உள்ளேன் இதை பற்றி என்று வெகு விரைவில் நம் முதலவர் அறிக்கை விடுவார்.அதையும் இந்த சொரணை இல்லாத மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் ..

....pagalavan....