தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வலிக்குது அழுதுடுவேன் - விஜயகாந்த்



ஒரு கொள்கையும் இல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால் என்னாகும்? கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல தே.மு.க விற்கும் விஜயகாந்த் சொத்துகளுக்கும் ஆனது போல "வலிக்குது அழுதுடுவேன்" வடிவேலு ரேஞ்சுக்கு வந்து நிற்கும்.

"நான் தமிழன்... தமிழா " என்ற தமிழன் வேடம் டெல்கி சென்று வந்ததும் முடங்கிப் போய் "இந்தியா... இந்தியன் "திரிந்த பால் போல அழுகிப்போனது. தமிழனாய் இருந்த போது "பிரபாகரன்"என்று சொந்த மகனுக்கே பெயர் வைத்த கப்டன் இந்தியனாகிப்போன பின்பு இந்தியாவால் கொல்லப்பட்ட 5 இலட்சம் மக்களுக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் கூட விடவில்லை.

அரசியலுக்கு வந்தபின்பு "மக்களுடனேயே கூட்டு..அந்த ஆண்டவனுடன் தான் கூட்டு " என்று வீர வசனம் பேசியவர் இன்று அந்த மக்களையே திட்டத் தொடங்கி விட்டார்.

"திமுக, அதிமுகவினர் எவ்வளவு நாள்தான் பணத்தை கொடுத்து ஓட்டு (மக்களிடம்)வாங்குவார்கள். மக்கள் ஒருநாள் விழித்தெழுவார்கள். "

விழித்தெழ மக்கள் என்ன தூங்குகின்றார்களா? தூங்குவது போல பாவனை செய்யும் மக்களுக்குத் தெரியாதா? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுவது தான் வாழ்வதற்கு வழியென்று சொல்லிக்கொடுத்ததே நீங்கள் தானே.

எத்தனை சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை அமைத்துக் காட்டீனீர்கள்? ஏன் அப்படியென்று கேட்டால் ராஜதந்திரம் என்றீர்கள் கூடியிருந்து கெடுப்பது ,எடுப்பது என்றீர்கள்.. எல்லோரின் நோக்கமும் பணம் பண்ணுவது தான் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்களே..

இப்போது மக்களும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன இருக்கின்றது? இது வரை துங்கிக்கொண்டா இருந்தார்கள்?
ஏன்? மக்கள் இனித்தான் விழித்தெழ வேண்டுமா?
விழித்தெழுந்த மக்களால் தானே திருமங்கலத்தில் அரசியல்வாதிகளால் பணநாயகத்தை நிலை நாட்ட முடிந்தது..

அரசியலில் அனா ஆவன்னா தெரியாத...நீயெல்லாம் கட்சி தொடங்கவில்லையென்று மக்கள் அழுதார்களா ? என்ன? நீங்க உங்க அரிப்பால் கொழுப்பால் கட்சி தொடங்குவீர்கள் பின்னர் மக்களைக் குறை சொல்வீர்கள்... பாவம் எவ்வளவு கஸ்டப்பட்டு கட்சி நடாத்தும் கருப்புக்கண்ணாடியை வம்புக்கிழுப்பீர்கள்... கோடி கோடியாக அடிக்காவிட்டால் ஐநூறு ஆயிரம் இலவச டீவீ என்று கேட்கும் மக்கள் என்ற இந்த பரசைப் பன்னாடைகளுக்கு எங்கிருந்து கொடுப்பது... திருக்குவளையில் தெண்டித்திரிந்த முத்து வேலரின் எதை அறுத்துக் கொடுப்பது... இது புரியாம ..கருப்புக் கண்ணாடியை வம்புக்கிழுத்தால்... நீ பெரிய அரசியல் கோவணம் என்று நினைப்பா?

நான் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியைத் தான் கருணாநிதி நடத்திக் கொண்டு இருக்கிறார். அந்த கட்சியில்தான் ஸ்டாலின் இருந்து கொண்டு இவ்வாறு பேசுகிறார். நீங்கள் தனியாக கட்சி ஆரம்பியுங்கள். உங்களுக்கு அதன் வலி தெரியும்.

ஏய்யா... அண்ணா பெரீய்ய அம்பானி பரம்பரை ...செலவழிக்க வழிதெரியாம கட்சியைத் துவங்கினாரு... கருணாநிதி காலாட்டிக்கொண்டு கட்சி நடாத்த...கருப்புக்கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் கருப்பு இதயத்தைக் கேட்டுப் பார்த்தால் அது கண்ணீர் வடிக்கும்... எத்தனை பாடுபட்டு ..எத்தனை தகிடு தத்தம் செய்து எத்தனை உடன் பரிப்புகளை பலி கொடுத்து தமிழனைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்து நரகத்து எண்ணெய்க் கொப்பரையில் பொரியும் வரை பாவம் செய்து ஒரு பண சாம்ராஜ்யத்தை ..நிறுவியாகிவிட்டது என்று...

கொடி பிடிச்சா நீயெல்லாம் கோமானாகி விட முடியுமா? தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தாயா? கடிதம் எழுதினாயா? அட்லீஸ்ட் ஒரு தந்தியாவது அடிக்கத் தெரியுமா? மூணரை மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கத் தெரியுமா?

இதெல்லாம் தெரியாம... நீயெல்லாம் ஒரு அரசியல் வாதி ..இதெல்லாம் ஒரு அரசியல் கட்சி.... மரம் வெட்டி ராமதாசே சொல்லிட்டாரு ... தே.மு.க வை ஒரு கட்சியாவே தான் நெனைக்கலன்னு... அதான்னே...அவர் அளவிற்கு மரங்கூட வெட்டத்தெரியாத வெட்டிப்பயல்களை வைத்துக் கொண்டு....

மக்களிடம் வந்தா... நாங்க என்னா இதை வெச்சு முதுகு சொரியவா முடியும்னு அவங்க கேக்கத்தானே செய்வாங்க...

முதல்ல கட்சிக்கு "கொள்கை" அப்படீன்னு இருக்கணும்...கொள்கையைக் காட்டித்தானே கொள்ளையே அடிக்க முடியும்... அதையாவது உழுந்து படுத்துப் புரண்டு யோசீப்பா... இல்லைன்னா "வலிக்குது அழுதுடுவேன்" வடிவேலு இடமும் தங்காதுப்பா...