தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா!'

ஏன் இப்படி இருக்கீங்க' என்று ஆரம்பித்து திட்டு திட்டு என்று திட்டினர் போலீசார்.
http://www.anytimeproperty.com/prop_events/images/jbj_logo.gif

ஏற்கெனவே நொந்து போனவர்களை இப்படித் திட்டவதற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும்... அவர்கள் சொன்ன விஷயத்தை யோசித்தால் நிச்சயம் பரிதாபம் வரவில்லை... இன்னும் அதிகமாகவே திட்டத் தோன்றும்!

இந்த மனநிலையில்தான் போலீசாரும் இருந்திருப்பார்கள் போல.. அவர்கள் நேரடியாகவே இப்படித்தான் திட்டினார்கள், புகார் கொடுக்க போலிப் பத்திரங்களுடன் வந்து கூடி நின்றவர்களைப் பார்த்து.

என்ன விவகாரம்?:
http://www.deccanherald.com/images/editor_images/December%202009/5th%20DEC%202009/city-conman-justin-devraj.jpg

ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்றொரு மோசடி ரியல் எஸ்டேட் நிறுவனம்... கூவிக்கூவி நிலம் விற்றது. இதன் அதிபர் “வீட்டுமனை திலகம்” ஜஸ்டின் தேவதாஸ். இந்த நிறுவனத்துக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 120 கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

தவணை முறையில் கட்டுங்கள், ஒண்ணு வாங்கினால் ஒண்ணு ஃப்ரீ... இப்படி கலர் கலராக ரீல் விட்டது இந்த நிறுவனம்.

"முதல்ல ரூ 10000 கட்டுங்க... அப்புறம் மாசம் ரூ 500 கொடுங்க. அரக்கோணத்துல ஒரு கிரவுண்ட் தர்றோம்... கூடவே அரை கிரவுண்ட் ஃப்ரீயா தர்றோம்..." என்று இவர்கள் ஒரு பக்கம் வாக்குறுதி தர,

இன்னொரு பக்கம், 'ஜேபிஜெக்கு நான் கியாரண்டி... நிலம் வாங்குணா ஜேபிஜேவுலதான் நீங்க வாங்கணும்' என இத்துப்போன நடிகரும், நடிகையும் டிவி தொடர்களுக்கு நடுவில் வந்த விளம்பரங்களில் பல்லிளித்தனர்...

நம்மாளுங்க பாலிஷ் போட்ட பாத்திரத்துல மூட்டைப் பூச்சி மருந்தைக் கொடுத்தாலும் குடிப்பவர்களாயிற்றே... அதுதான் இப்போதும் நடந்தது.

ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த நிறுவனத்தின் ஆட்கள் போன் செய்து பேசுவார்கள். குறிப்பாக இளம் பெண்கள் தங்கள் குரலை மகா இனிமையாக்கிக் கொண்டு வழிவார்கள் (சமயத்தில் இப்படி எஸ்எம்எஸ் வரும்..."I'm Yasmine... Please feel free to call me at any time!").

இந்த டெக்னிக்குகளையெல்லாம் பார்த்து, 'சரி, போய் பார்த்துவிட்டுத்தான் வரலாமே' என்று இவர்கள் மயங்க, வரிசையாய் வீட்டுக்கே கார் அனுப்பும் இந்த நிறுவனம். இவர்களும் ஜம்மென்று ஏறி அமர்ந்து, மணிக்கணக்கில் பயணித்து, எங்கோ பொட்டல் காட்டில் புள்ளிப் புள்ளியாய் நட்டு வைக்கப்பட்ட மஞ்சள் கற்களைப் பார்த்துவிட்டு, மண்டையை ஆட்டிக் கொண்டு, 'அந்த பீஸு எனக்கு, இந்தப் பீஸூ எங்க அண்ணனுக்கு' என ஏதோ பிரியாணி லெக் பீஸூக்கு ரிஸர்வ் பண்ணுவது போல மேலே விழுந்து பிறாண்டி பணம் கட்டுவார்கள்.

கிட்டத்தட்ட பல வருடங்களாக நாம் பார்த்து வரும் சமாச்சாரம் இது.

தெரிந்தே விஷத்தைக் குடித்துவிட்டு இப்போது கழுத்தை இறுக்குதே என கதறுகிறார்கள்.

இப்படி கதறுவதோடு நின்றிருந்தால், 'பனகல் பார்க் பைனான்ஸ் பார்ட்டி'களுக்கு காட்டியது போன்ற அனுதாபத்தையாவது காட்டியிருக்கலாம்.

அதற்கு மேல் ஒன்று சொன்னார்கள்... அதைக் கேட்டுதான் நொந்து போனோம்.

"விஜயகுமார், மீனா போன்ற 'நல்ல நடிகர்கள்' சொன்னதை நம்பி பணம் கட்டினோம்... இப்போது ஏமாந்து நிற்கிறோமே..." என்று புலம்பினர். ஒருவர் இருவரல்ல... ஏமாந்தவர்களில் பாதிப் பேருக்கு மேல் அப்படித்தான் சொன்னார்கள்...

நடிகர் விஜயகுமாரும், நடிகை மீனாவும் இவர்களுக்கு உத்தரவாதப் பத்திரமா எழுதிக் கொடுத்தார்கள்?. இவர்கள் சொன்னதால்தான் பணம் கட்டி ஏமாந்தோம் என்று சொல்லும் இந்த முட்டாள்களை வேறு என்னவென்று சொல்வது?. வாங்கின காசுக்கு விளம்பரத்தில் நடித்துவிட்டு, அன்றோடு அதை மறந்தே போனவர்கள் அந்த நடிகர்கள். அவர்களை நம்பி இருக்கிற காசை கொட்டிய இவர்கள் தங்களின் அறிவை எங்கே அடகு வைத்திருந்தார்கள்?.

மீனா ஏற்கெனவே 'உத்தரவாதம்' கொடுத்த, அனுபவ் பவுண்டேஷன், ரமேஷ் கார்ஸ் ஆகியவை தந்த 'அல்வா' அதற்குள்ளாகவா மறந்து போனது இவர்களுக்கு!.

நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட்காரர்களிடம் ஏமாறுவதும், புலம்புவதும் தமிழர்களுக்கு புதிதல்ல. பல காலமாக நாம் பார்த்து வரும் சமாச்சாரம் இது.

ஆனாலும் யாராவது திருந்தினார்களா பாருங்கள்... தங்கள் தவறுக்கு யார் மீது பழிபோடுவது என்றுதான் பார்க்கிறார்களே தவிர, சரியான நபர் மூலம்தான் இந்த நிலத்தை வாங்குகிறோமா என்று ஒரு நிமிடமாவது யோசிக்கிறார்களா மக்கள்?.

நிறுவன அதிபர் பெங்களூரில் கைது:

கடந்த ஒரு வருட காலமாக ஜஸ்டின் தேவதாஸ் மீது ஏராளமான புகார்கள் தமிழகத்தில் பல நிலையங்களிலும் கொடுக்கபட்டன. குறிப்பாக சென்னை கமிஷனர் அலுவலகம், திருநெல்வேலி, ஓசூர் போலீஸ் நிலையத்திலும் கொடுக்கப்பட்ட புகார்கள் என்ன ஆனது என்பது போலீசாருக்கு மட்டுமே தெரிந்த ரசிகயம்.

இந் நிலையில் ஜஸ்டின் தேவதாஸ் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் ரூ. 7.5 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மக்களை ஏமாற்றியுள்ளார் ஜஸ்டின். இதையடுத்து அவரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்க தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்த வருகின்றனர்.

இவருக்கு ''வீட்டுமனை திலகம்'' என்ற பட்டத்தை சூட்டியது நடிகர் விஜயகுமார் தானாம். சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள அடியாட்கள் போல புடை சூழ, கோர்ட்-சூட்டில் தான் திரிந்து வந்தார் ஜஸ்டின்.

நன்றி
தட்ஸ் தமிழ்