தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழக மக்களே பகலவன் குமுறலில் முதல் கடிதம்.

தோழர்களே தமிழக மக்களாகிய உங்களுக்கு இந்த பாமர தமிழன் பகலவனின் கடிதம்.என்னடா இவன் கவிதை எழுத மட்டுமே தெரிஞ்ச இவனுக்கு கடிதம் வேற எழுத ஆரம்பிச்சிட்டானே அப்படின்னு நினைக்காதிங்க.என்ன செய்ய இன்றைய நிலையில் பல பேர் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டாங்க.காசுக்காக நமீதாவை புகழ்ந்து எழுத சொன்னாலும் எழுதுவானுங்க. சரி நான் சொல்ல வேண்டியதை ஆரம்பிக்கிறேன்.

பிழைப்புவாதிகளான தமிழக மக்களே நமது அரசியலும் பிழைப்பு வாதம் கொண்டதுதான் .இன்றைய தலைமுறை ஆகிய எங்களுக்கு எங்களின் பள்ளிப் படிப்பில் புத்தகத்தில் முகம் காட்டியவர்களோ காமராசர் போன்ற ஒரு சிலர் மட்டுமே.நாளை என் சந்ததி படிக்க போகும் புத்தகத்தில் இடம் பிடிக்க பல பிழைப்புவாதிகள் வரிசையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஒன்றுமே தெரியாத மழலை வயதில் ஓடி விளையாடு பாப்பா படிக்கும் பொழுது சில சமயம் நினைதேன்.ஒ இதுதான் உலகமா என்று. எனக்குள் சொல்லி மாளாத அளவற்ற மகிழ்ச்சி. காரணம் என்னை விளையாட மட்டுமே செய்து அழகு பார்த்த என்ன ஒரு கேலிக்குரிய சமுதாயம். என்ன செய்ய என் அம்மாவும் நிலவை காட்டி சோறு ஊட்டும் பொழுது அந்த நிலவு கூட அம்மா கூப்பிட்டால் வருமோ என்று நான் கடந்த அந்த நினைவுகள் .காரணம் நம்மிடம் திணிக்கப்பட்ட இலவச சுய சிந்தனையற்ற கல்வி.

மாணவர்களுக்கு இலவச பேருந்து ,இலவச புத்தகம் ,இலவச முட்டையுடன் கூடிய சத்துணவு இப்படி எல்லாத்தையும் இலவசமாக கொடுக்கிறார்களே இவங்க ரொம்ப நல்லவங்க அப்படின்னு நினைக்க தோணும. இப்பொழுது தானே புரிகிறது இப்படி எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து நமது சிந்திக்கும் திறனை அல்லவா மழுங்கடித்து இருக்கிறார்கள்.கஜினி முகமது நம்மிடம் பதினேழு முறை படை எடுத்தான் என்று மாணவர்கள் மனதில் திணிக்கும் இவர்கள் சேகுவேரா,நேதாஜி போன்றோரின் சுயசரிதையை அதே மாணவ பருவத்தில் திணிக்க மறுத்தது ஏனோ?

இன்று பத்தாவது படித்து மாநில அளவில் முதல் அளவில் வந்த எத்தனை மாணவர்களிடம் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கும் என்று நாம் கூற முடியுமா ?முடியாது காரணம் நமது ஆரம்ப கல்வியே தரம் அற்று போனது தான்.

அன்று நாம் ஓடி ஓடி விளையாட மற்றவன் இன்று நம்மை ஓட ஓட அடிக்கிறான்.நாம் புத்தகத்தில் மட்டுமே படித்த காவிரி தென் பெண்ணை பாலாறு இன்றைக்கு பாதி மணல் மட்டும்தான் இருக்கு ஆனால் நாளைய நாம் சந்ததி புத்தகத்தில் படிக்க அது கூட இருக்காது .இந்த எல்லா அவலங்களையும் பார்த்து மணம் வெதும்பி வெளியில் வரும் பொழுது என்னை அரவணைக்க எந்த கைகளும் இல்லை.என்னுடைய பதினைந்து வருட தோழனே எனக்கு முரண்பாடான கட்டையாக என் முன்னே வந்து நின்றான்.என்ன செய்ய நாட்டில் பல பேர் இவனை போலத்தான் தனக்கு மட்டும் சாப்பாடு கிடைச்ச போதும்னு நினைக்கிற கூட்டம் இருக்கு.நான் இவர்களை போன்றவர்களிடம் பேசும் பொழுது கவனித்த விசயம் இப்ப நான் குடும்பத்தை கவனிக்கணும்.நாளை நேரம் இருந்தா இந்த சமுதாயத்த நெனைக்கிறேன்.இவர்கள் பேசும் பொழுது நாளை பெரியதாக எதோ செய்ய போகிறார்கள் என்று என்ன தோன்றும்.பல லட்சம் மக்கள் சாகும் பொழுது ஒன்றுமே செய்யாத இந்த கூட்டம் நாளை செய்தால் என்ன செய்யா விட்டால் என்ன ?இன்று இவனை போல் இனப் பற்று இல்லாதவர்களை நாம் திருத்த முடியாது என்பது அறிந்ததே. நட்பை முறித்து கொள்வதே சிறந்தது.இன்று இவனை போல பல நடை பிணங்களை நான் இழக்க தயாராகிவிட்டேன் என்பதே உண்மை .

தமிழ் இனத்தின் இன்றைய சாபக்கேடு சாதியில் இருந்து ஆரம்பம் ஆவதாகவே நான் உணர்கிறேன்.

சாதியின் பெயரால் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அதே ஒடுக்கும் அடையாளத்தை கொண்டே உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆயுதமாக கூர்மையாக செயல்படவேண்டிய இடஒதுக்கீட்டை கூர்மழுங்கச் செய்து, இன்று இட ஒதுக்கீட்டை தங்களின் வாக்கு அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது இன்றைய பிழைப்புவாத கூட்டம். இடஒதுக்கீடு மட்டும் இருந்தால் போதாது, மாறாக கல்வி திட்டத்தில் சாதி ஒழிப்பு தீவிரமாக கற்பிக்கப்பட்டால் ஒழிய சாதி ஒழியாது. நீங்கள் நானும் இணைந்தே இந்த சாதி ஒழிப்பை தீவிரப்படுத்த, நம்மை பிளவுப்படுத்தி வைத்திருப்பதே தம்முடைய நோக்கமாக கொண்டு செயல்படும் பிழைப்புவாத சாதி கட்சிகளின் உண்மையான முகத்தை தோல் உரிக்கும் முதல் கடிதமாகவே இதை கொண்டு செல்கிறேன.

இன்று நாம் பார்க்க போகும் அந்த கட்சி தமிழகத்தை வட தமிழகமாக பிரித்து அதில் சாதி மேலாண்மையை நிறுவ முயலும் ராமதாஸின் பட்டாளி மக்கள் கட்சி பற்றித்தான்.என்னடா இவன் எடுத்த உடனே முக்கிய கட்சிகளை பற்றி எழுதாமல் சிறிய கட்சியை பற்றி எழுதுகிறானே என் நினைக்க வேண்டாம்.கண்டிப்பாக ஒவ்வொரு கட்சியாக தோல் உரித்து காட்டப்படும் தொடர் வரும் கடிதங்களில்.........


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சொந்தசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

முதலில் பா.ம.க கடந்து வந்த பாதையை பார்ப்போம்.கிழே உள்ள புகைப்படம் வினவுல இருந்து எடுத்தது.

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!




































கட்சி : முக்கிய தமிழக சாதி கட்சி
நிறுவனர் : மருத்துவர் இராமதாசு.
கட்சி ஆரம்பித்த ஆண்டு : 1989
கட்சியின் தலைமை இடம் : தைலாபுரம், தின்டிவனம்.
கட்சியின் தலைவர் : கோ.க. மணி
சாதி செல்வாக்கு : வடக்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு.

1998 - அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி,
1999 - தி.மு.க, பா.ஜ.க கூட்டணி,
2001 - அ.தி.மு.க கூட்டணி,
2004 - தி.மு.க கூட்டணி,
2009 - அ.தி.மு.க கூட்டணி,


சந்தர்பவாத அரசியலுக்கு அடிபணியாத அரசியல்வாதிகளே கிடையாது. ஆனாலும் மருத்துவர் அடித்த அளவிற்கு அரசியல் பல்டி அடித்தவர்கள் யாராவது உண்டா என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது ரொம்பவே சிரமம். சட்டமன்றத் தேர்தல் - நாடாளுமன்றத் தேர்தல் என தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி, பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்துள்ளது.

1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க. 2004 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் மட்டுமே தொடர்ந்து இரு முறை தி.மு.க கூட்டணியில் இருந்ததே தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க இந்தக் கட்சியிலிருந்து அந்தக்கட்சி - அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சி என்று அணித் தாவல் நடத்தியே பிழைப்பை ஓட்டியுள்ளது.


1991, 1996 சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்ட பா.ம.க 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வென்றது. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 5 இடங்களை வென்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வென்றது.

http://thatstamil.oneindia.in/img/2009/03/26-ramadoss1-karuna200.jpgJayalalitha with Ramadoss


2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் நீடித்து 18 தொகுதிகளில் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

எனக்கு டாக்டர் ராமதாஸ் என்றாலே நினைவுக்கு வருவது இதுதான்.

2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. பிறகு ஜெயலலிதாவுடன் சண்டை போட்டுவிட்டு கூட்டணியிலிருந்து பிரியும் பொது ராமதாஸ் சொன்னதாக பல செய்தித்தாள்களில் வந்தது என் நினைவில் இன்றும் உள்ளது.

எண்ணற்ற ஊடகவியலாளர்களுக்கு முன்னிலையில், “ மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வது என்பது, ஒரு மகன் தன் தாயை புணர்வதற்கு சமமானது ” என்று கூறி ‘இனி அதிமுகவுடன் கூட்டு என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்பதை அறிவித்தார்.
ஆனால், ஒரு சீட்டு அதிகம் கிடைக்கிறது என்பதற்காக, 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்த பொழுது அவர் கூறிய ஒரு வாசகம் பலரை சிரிப்புட்டவே செய்தது .இந்த முறை ராமதாஸ் ஜெயலலிதாவை 'அன்புச் சகோதரி' என்றார் பாருங்கள் அது தான் உச்சகட்ட காமெடி.

http://thatstamil.oneindia.in/news/2009/03/28/tn-jaya-refers-ramdoss-as-brother.html

யாரும் இது பற்றி கேட்டதாய் தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் எந்த சொரணையும் இல்லாமல் இருக்கலாம். இதனை கேட்டுக்கொண்டு இருந்த வாக்காளர்களுக்குமா சொரணை இல்லாமல் போயிருக்கும்? படு கேவலமாய் அனைத்து தொகுதியிலும் தோற்றிருந்தாலும் செய்தி ஊடகங்கள் நியாபகமாய் இதுபற்றி அப்போதே மக்களிடம் எடுத்து வைத்திருந்தால் இவ்வளவு கேவலமா கூட ஒட்டு வாங்கி இருந்திருக்க மாட்டார்.இதை விட இன்னும் படு கேவலமாய் தோற்று இருப்பார்.

சமிபத்தில் அவர் கூறிய ஒரு கருத்தை படிக்க நேர்ந்தது.தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டுமாம்.1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை.வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்று கூறி உள்ளார்.

இப்பொழுது சொல்லுங்கள் தமிழக மாக சனமே இது சாதி வெறி இல்லாமல் என்னவென்று சொல்வது.தமிழ் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க அதற்கெல்லாம் சிறை செல்ல நினைக்காத ராமதாஸ் எதற்க்கு சிறை செல்ல தயார் என சொல்லி இருக்கிறார் என பார்த்தீர்களா?

பா.ம.கவினால் வன்னிய மக்கள் சமூக, பொருளாதார ரீதியாக எந்த பயனையும் அடையவில்லை. சிறுபான்மை வன்னிய நடுத்தர வர்க்கம் மட்டும் இட ஒதுக்கீட்டால் சற்று பயனடைந்ததாகக் கூறலாம். மத்திய அமைச்சரவையில் பங்கேற்றதன் மூலம் சில எடுபிடிகள் ஆதாயம் அடைந்திருக்கலாம். மற்றபடி வாழ்க்கை என்ற அளவில் பெரும்பான்மை வன்னிய மக்கள் தலித் மக்களைப்போல வறுமையில்தான் வாழ்கிறார்கள். 80 ,90 களில் பா.ம.கவுக்கு இருந்த வன்னிய வாக்கு வங்கி இன்று இல்லை. காரணம் ராமதாசின் சுயநல குடும்ப அரசியல், மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதங்கள் முதலியனவற்றால் அந்த கணிசமான வாக்கு வங்கி இன்று கலைந்து விட்டது. மேலும் ராமாதசுக்குஆதரவு இருந்த காலங்களில் கூட அவர் கூட்டணி மூலமே ஆதாயங்களைப் பெற்றார். இன்று தனித்துப் போட்டியிட்டால் அவர் கட்சிக்கு டெப்பாசிட் கிடைப்பதே கடினம். இன்னும் தலித்துக்களை அடக்க வேண்டுமென்ற ஆதிக்க சாதி உணர்வு வன்னிய மக்களிடம் இருந்தாலும் அவர்கள் இப்போது சாதிய அரசியலுக்கு முற்றிலுமாக ஆதரவளிப்பதில்லை. இந்த சாதி பெருமையை வைத்தும், இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை வைத்துமே பா.ம.க வளர்ந்தது. ஆனால் அத்துடன் அதன் காலம் முடிந்து விட்டது. தற்போது மீண்டும் வன்னியர்களுக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கோரிக்கையை ரமாதாசு எழுப்பினாலும் மக்களிடம் அது எடுபடாது. ராமதாசின் தவறுகளில் அமைப்பின் தவறுகள் பாதி என்றால் மீதி அவரது சந்தர்ப்பவாதத் தவறுகள்.

சாதிகளின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தும் இது போன்ற அரசியல் வாதிகளை களை எடுக்க மக்கள் துவங்கி விட்டனர். தமிழக மக்களே இன்னும் நாம் இவர்களை ஒடுக்கா விட்டால் ஈழத்தில் நடந்த இன படுகொலைகள் போன்று தமிழகத்தில் சாதி படுகொலைகளாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்னும் என்னுள் உள்ள மன குமுறலை அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தோழமையுடன்

பகலவன்

www.madhanlovable.blogspot.com
madhanraj.pandiyan@gmail.com