வேட்டைக்காரன் படம் வெளியாகி 30 நாட்களையே எட்டியுள்ள நிலையில் 40 நாட்கள் என்று கூறி போஸ்டர் அடித்துக் கலக்கியுள்ளனர் சென்னையில்.
டிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர் சென்னையில். இதைப் பார்த்து விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் போல குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமா... வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று ஆடித் தள்ளுபடி ரேஞ்சுக்கும் போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர் விஜய் ரசிகர் மன்றத்தினர்.
மேலும், குறைந்த கட்டணத்தில் என்ற புது பிட்டையும் வேட்டைக்காரன் பட போஸ்டர்கள் மீது ஒட்டி வருகின்றனராம் தியேட்டர்காரர்கள்.
ஏன் இந்தக் குழப்பம், குளறுபடி என்று தெரியவில்லை. நல்ல வேளை 30 வது நாலுக்கு பதிலா 100 வது நாள் போஸ்டர் ஒட்டலேயே அதுவரைக்கும் சந்தோசம்.
போக்கிரி, கில்லி. போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றன. வேட்டைக்காரன் அளவுக்கு மேற்கண்ட படங்கள் விளம்பரம் செய்யப்பட்டிருக்குமானால் வாழ்க்கையில் அவர்கள் வேறு படங்கள் எடுக்க வேண்டியதில்லை அவ்வளவு வருமானம் வந்து கொண்டிருக்கும். போக்கிரி, கில்லி அளவுக்கு வேட்டைக்காரன் இல்லை. மீடியாக்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை சன் நெட்வொர்க் நிரூபித்துள்ளது "இதுக்கா இவ்ளோ பில்ட்-அப்" என்று படம் பார்த்த ரசிகர்கள் புலம்புவது தான் பரிதாபத்தின் உச்ச கட்டம்.
இன்னும் வெளிவர போகும் விளம்பரம்.
வேட்டைக்காரன் படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்.கூடவே நூறு கிலோ பொன்னி அரிசி, ஆறு மாசத்துக்கு மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு ஜியோமேட்ட்ரிக் பாக்ஸ், இந்த கல்வி ஆண்டுக்கான பாடநூல், பெண்களுக்கு ஜிமிக்கி மூக்குத்தி எல்லாம் இலவசம்.முக்கியமாக ரசிகர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இலவசமோ இலவசம்.
மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நாட்டுப்பற்று உள்ள தீவிரவாதத்தை ஒழிக்கும் ரௌடிகளை ஒழிக்கும் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்கும் படங்களைச் செய்து கோடிக்கணக்கில் கறுப்புப்பணம் புழங்கும் வரிஏய்ப்பு செய்யும் நடிப்புத் தொழிலை புறக்கணிக்காதவரை இந்த தேசம் உயராது உருப்படாது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் (பாதி கருப்புப்பணம்) வரிஏய்ப்பு ஒரு பிரபல நடிகர் ஆந்திர புயல் பாதிப்புக்கு ஒரு லட்சம் தருகிறார் நம்மைப்போல் சாமானியன் கொட்டித் தரும் காசில் கோடிபார்க்கும் இவர்கள் லட்சத்தில் தருவதாகச் சொல்லி தராத கேடிகளே தவிர நல்லவர்கள் கிடையாது.
திரு டாக்டர் விஜய்க்கு ஒரு அறிவுரை,
அடுத்த படம் சுறா பாத்துப்பா புறா மாதிரி அதுவும் பரந்துற போவுது,
....பகலவன்....
....பகலவன்....