தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வெற்றிக் கணக்கு

வம்பர் 10ஆம் நாள் மாலை கோவை நடுவண் சிறை வாயிலுக்கு வெளியே... தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டிருந்தோம். த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் தியாகு, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் ஆகியோரோடு இரு அமைப்புகளேயும் சேர்ந்த முன்னணித் தோழர்கள் பலரும் வந்திருந்தார்கள். பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு. இராமகிருட்டிணன், மக்கள் குடியியல் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கண.குறிஞ்சி, தோழர் சந்திரன், ம.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு. கிருட்டிணசாமி,... மேலும் பலர் வந்திருந்தார்கள். காவல் துறையினரும் பெருங்கூட்டமாய் வந்து விட்டதைச் சொல்லவும் வேண்டுமோ?

பாரதி & தமிழரசன்

சிறையின் முதன்மை வாயிலுக்கும் நாம் நின்ற சிறைச் சுற்று வளாகத்தின் வாயிலுக்கும் இடையே நல்ல தொலைவு. ‘பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டு சிறுத்தை வெளியேவருகிறதா என்று சிறை வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தோம். சிறுத்தையன்று, சிறுத்தைகள்! சிறுத்தைகளல்ல, புலிகள்! த.தே.வி.இ. தோழர் பாரதியும், த.தே.பொ.க. தோழர் தமிழரசனும்!

மாலை 4 மணிக்குத் தொடங்கிய காத்திருப்பு 6 மணி ஆகியும் முடியவில்லை. விட்டு விட்டுத் தூறலும் மழையுமாய் நம்மை ஆற்றிக் கொண்டிருக்க, அந்தி சாய்ந்து இருள் சூழ, சிறைவாயிலிலிருந்து வருகிறவர்களே உற்றுப் பார்த்தாலும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 200 நாள் சிறையடைப்புக்குப் பிறகு விடுதலைக் காற்றெடுக்கப் போகும் பாரதிக்காகவும், தமிழரசனுக்காகவும் தாரை தப்பட்டை முழங்க, மலர் மாலைக¼ளாடும், மதிப்பாடைக¼ளாடும், சால்வைக¼ளாடும் காத்திருந்தது தோழர் கூட்டம். மணி 6.30க்கு மேலாயிற்று. மழை சற்று ஓய்ந்திருந்தது. இருட்டுக்குள்ளிலிருந்து இரண்டு உருவங்கள் வெளிப்பட்டு வந்து கொண்டிருந்தன... ஆ! பாரதி, தமிழரசனேதான்!

பறை முழக்கத்துக்கு மேல் தோழர்களின் வாழ்த்து முழக்கங்கள் ஒலிக்க... வெளியே அடி வைப்பதற்குள் இருவரும் தோழர்களின் தோளுக்கு மேலே ... சிறை வளாக வாயிலுக்கு வெளியே வேட்டு முழக்கம், ஊர்தி ஒன்றை மேடையாக்கி வரவேற்புக் கூட்டம். தோழர் கி. வெங்கட்ராமன் (த.தே.பொ.க) தொகுத்துரைக்க, தோழர்கள் பெ. மணியரசன், தியாகு, கு. இராமகிருட்டிணன் வரவேற்புரையாற்ற, தோழர்கள் பாரதி - தமிழரசன் ஏற்புரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.

இது சிறையிலிருந்து விடுதலையாகும் இருவருக்கான வாயில்-வரவேற்பு வாடிக்கை நிகழ்ச்சியன்று. உண்மையில் இது ஒரு வெற்றி விழா. எப்படி? பாரதியும், தமிழரசனும் இந்திய உச்ச நீதி மன்றம் பிறப்பித்த ஆணையின்படி பிணை விடுதலை பெற்று வெளியே வந்தார்கள். உயர் நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை விடுதலை மறுக்கவில்லை. ஆனால் அது விதித்த பிணை நிபந்தனைகளே அவர்கள் ஏற்க மறுத்தார்கள். இந்தியக் கொடியை எரித்து அவமதிக்க முயன்றதாக அவர்கள் மீது வழக்கு.

stify;"> சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி இரு புதுமையான நிபந்தனைகளே விதித்தார்: (1) குற்றவியல் நடுவர் குறிப்பிடும் அநாதை இல்லத்துக்குச் சென்று ஒரு வார காலம் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் சமுதாய சேவை ஆற்ற வேண்டும்; (2) வீட்டு வாசலில் கம்பம் நட்டு ஒரு வார காலம் காலை 6 மணிக்கு இந்தியக் கொடியை உரிய மதிப்புடன் ஏற்றி மாலை 6 மணிக்கு உரிய மதிப்புடன் இறக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளே நீக்கும்படி நீதிபதி ரகுபதியிடம் கேட்ட போது மறுத்து விட்டார். பிறகுதான் உச்ச நீதிமன்றம் சென்று பொருத்தமற்ற நிபந்தனைகளே நீக்கக் கோரினோம். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி மேற்படி நிபந்தனைகள் நீங்கி விட்டதால் இருவரும் பிணை விடுதலையில் வெளியே வந்தனர்.

இந்திய - சிங்களக் கொடிகளே எரிக்க முயன்றார்கள் என்பது வழக்கின் குற்றச்சாட்டு. இந்தியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனை நம் கொள்கைக்கு மாறானது என்பதால் அதை ஏற்க மறுத்தோம் என்பதுதான் மையச் சிக்கல். நிபந்தனையை ஏற்றுக் கொடியேற்ற ஒப்புக்கொண்டு மற்றவர்கள் விடுதலையான போதும், பாரதியும் தமிழரசனும் கொடியேற்ற மறுத்து உறுதி காத்தார்கள். இந்த உறுதிக்கு விடையாகவே 200 நாள் சிறையில் கிடந்தார்கள். நிபந்தனை நீங்கியதால்தான் அவர்கள் வெளியே வந்தார்கள். ஆகவே இது வெற்றி! தோழர்கள் பாரதி, தமிழரசனின் உறுதிக்கு வெற்றி! இவர்களது நிலைப்பாட்டை ஆதரித்து ஊக்கங் கொடுத்த த.தே.வி.இ., த.தே.பொ.க ஆகிய இரு இயக்கங்களுக்கும் வெற்றி! கருத்துரிமைக்கும் தமிழ்த் தேசிய உரிமைக்கும் வெற்றி! சட்டத்தின் ஆட்சிக்கு வெற்றி!பாரதி - தமிழரசனின் பிணை விடுதலை வழியாகக் கிடைத்த இந்த வெற்றி நல்லூழ்வயப்பட்டோ, திடீரென்று தற்செயலாகவோ வந்து விடவில்லை. இந்திய வல்லாதிக்கத் தேசிய உணர்ச்சியில் இயல்பாக உள்ளந்தோய்ந்த நீதிபதிகளிடமிருந்து ஒரு நீண்ட போராட்டத்துக்குப் பிறகே இந்த வெற்றியைப் பறித்தெடுக்க முடிந்தது!

போராட்டத்தின் ஒரு களம் கோவையில் நடுவண் சிறைச்சாலை. மற்றொரு களம் தில்லியில் இந்திய உச்ச நீதிமன்றம். கோவைச் சிறையில் பாரதியும் தமிழரசனும் ஊசலாட்டமின்றி அமைதியாக உறுதி காத்திருக்க, தில்லியில் நம் வழக்கறிஞர் படை திட்டமிட்டுத் தெளிவுடன் களம் வகுத்தது.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் தனி இசைவு விண்ணப்பம் வழியாக நாம் பிணை நிபந்தனைகளே எதிர்த்து வழக்காடினோம். தமிழகத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ், பிரபு சுப்பிரமணியம்,பார்வேந்தன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளே ஊக்கத்துடன் செய்தார்கள். இவர்க¼ளாடு சந்தன் இராமமூர்த்தி, மயில்சாமி, சாந்தகுமார், ராபின் டேவிட் ஆகியோரும் சேர்ந்து ஓர் அணியாகச் செயல்பட்டார்கள்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தியத் தேசியப் பார்வையில் ஊறியவர்களாயிற்றே! இந்தியக் கொடி எரிப்பா? இந்தியக் கொடி ஏற்ற மறுப்பா? அவர்களது உள்ளம் எப்படித் தாங்கும்? நமது விண்ணப்பத்தைப் பார்த்த மாத்திரத்தில் தள்ளி விட்டால்? நம் வாதங்களேச் செவிமடுக்கவே மறுத்துவிட்டால்?

ராஜீவ் ரூஃபஸ் சொன்ன அறிவுரைப்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் இந்தியச் சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானியை அணுகத் தீர்மானித்தோம். இதில் இரண்டு சிக்கல்கள் இருந்தன: (1) இந்தியத் தேசியக் கொடியை எரிப்பதா? அந்தக் கொடியை ஏற்ற மறுப்பதா? என்று அவரது இந்திய உள்ளம் கேட்டாலும் கேட்கும்; (2) அவருக்குக் கட்டணமாகப் பெருந்தொகை கொடுக்க வேண்டியிருக்கும். என்ன செய்வது?

கருத்துரிமை என்ற அடிப்படையிலும், பிணை விடுதலைக்குப் பொருத்தப்பாடற்ற நிபந்தனைகளே விதிக்கும் போக்கிற்கு எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் அவரை இணங்கச் செய்யலாம். இந்த வழக்கின் அரசியல் தன்மை கருதிக் கட்டணமின்றி வாதிடுமாறு கேட்கலாம். ஆனால் அவரிடம் பேசுவது யார்?

ராம் ஜெத்மலானி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை ஜெத்மலானியிடம் பேசச் செய்யலாம் என்றார் ரூஃபஸ். திரு பழ.நெடுமாறன் தலைமையில் தோழர்கள் பெ. மணியரசன், தியாகு, கார்முகில் தில்லி சென்று இராசீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரிய போது, வைகோதான் அவர்களே ஜெத்மலானியிடம் அழைத்துச் சென்றார். ஜெத்மலானியும் நம் கோரிக்கைக்கு அட்டியின்றி ஆதரவு தந்தார்.

வைகோ உடனடியாக நம் வேண்டுகோளே ஏற்று மீண்டும் மீண்டும் பல முறை முயன்று ஜெத்மலானியிடம் தொடர்பு கொண்டு நம் வேண்டுகோளேத் தெரியப்படுத்தினார். அது மட்டுமல்ல, தில்லி சென்று அவரை நேரில் சந்தித்து, அவர் எழுப்பிய வினாக்களுக்குத் தெளிவாக விடையளித்து, இந்த வழக்கை நடத்த அவரது ஒப்புதலைப் பெற்றார்.

வழக்கறிஞரான ஜெத்மலானி தம் ஓயாப் பணிகளுக்கிடையே நம் வழக்கறிஞர் குழுவிற்கு நேரம் கொடுத்து வழக்கு விவரங்களே முழுமையாகத் தெரிந்து கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை இரு முறை ஒத்தி வைத்து மூன்றாவது முறைதான் தீர்ப்பளித்தார்கள். மூன்று முறையுமே ராம் ஜெத்மலானி நேர்நின்று வழக்காடியது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் கருத்தறிவதற்காக என்று சொல்லித்தான் இரு முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றாலும், இறுதி வரை தமிழக அரசு தன் நிலைப்பாடாக எதுவும் சொல்லவில்லை.

நம் நிலைப்பாடு தெளிவானது: பிணை விடுதலைக்கு விதிக்கப்படும் நிபந்தனை என்பது வழக்கின் புலனாய்வுக்குப் பொருத்தப்பாடுள்ளதாக இருக்க வேண்டுமே தவிர, குற்றத்தை முன்முடிவு செய்து தண்டிக்கும் தன்மையிலானதாக இருக்கக் கூடாது. இந்தியக் கொடியேற்றும் நிபந்தனை பொருத்தப்பாடற்றது என்பது எடுத்த எடுப்பிலேயே தெளிவாகத் தெரியக் கூடியது. அநாதை இல்லத் தொண்டும் கூட இப்படித்தான்.

நம் தரப்பு வாதத்தை ராம் ஜெத்மலானி அழுத்தந்திருத்தமாக முன்வைத்த போது தமிழக அரசு வழக்கறிஞரிடமிருந்து மறுப்பே இல்லை. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்திய உள்ளம் தவியாய்த் தவித்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது - பிணை விடுதலைக்கு நிபந்தனையாக இந்தியக் கொடியை ஏற்றி இறக்கச் சொல்வது சட்டத்திற்கும் இயற்கை நீதிக்கும் முரணானது என்று தெளிவாகப் புரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பு!

எனவே அவர்கள் சிக்கலைத் திசைதிருப்ப முயன்றுள்ளார்கள். அநாதை இல்லத் தொண்டு என்ற நிபந்தனையை நாம் உண்மையில் பெரிதுபடுத்தவே இல்லை. நாம் குறி வைத்துத் தாக்கியது கொடியேற்ற நிபந்தனையைத் தான். ஆனால் நீதிபதிகள் அநாதை இல்லத் தொண்டுதான் சர்ச்சையின் மையம் என்று காட்டிக் கொடியேற்றச் சிக்கலைத் தவிர்க்க முயன்றுள்ளார்கள். ஆனால் ஜெத்மலானி விடவில்லை.

இந்தியத் தேசியக் கொடியை ஏற்றினால் என்ன? என்று நீதிபதிகளில் ஒருவர் கேட்ட போது ஜெத்மலானி விடையிறுத்தார்: கொடியேற்றுவதில் தவறில்லை; ஆனால் விரும்பி ஏற்ற வேண்டுமே தவிர, கட்டாயத்தின் பேரில் ஏற்றக் கூடாது, தேசியக் கொடி ஏற்றுவதா இல்லையா என்பது அவரவர் கொள்கையைப் பொறுத்தது. அதைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைப்பது தவறான முன்னுதாரணமாகி விடும்.

சரி சரி, இது எவ்வகையிலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படலாகாதுஎன்பது நீதிபதிகள் சொன்ன தீர்வு. அப்படியானால், இந்த வழக்கில் மட்டும் கொடியேற்ற நிபந்தனையைத் தக்க வைத்துக் கொள்ளலாமா? எதிர்காலத்தில் கூடாத ஒன்று நிகழ்காலத்தில் மட்டும் எப்படி ஏற்புடைத்தாகும்? இந்த முரண்பாட்டுக்கு நீதிபதிகளிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை.

உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி விதித்த கொடியேற்ற நிபந்தனையானது அநாதை இல்லத் தொண்டு நிபந்தனையைப் போலவே பொருந்தப் பாடற்றது, சட்டப் புறம்பானது என்பது நன்கு தெரிந்தும் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றத் தேவையில்லை என்று வெளிப்படையாகச் சொன்னால் தெய்வக் குற்றமாகி விடும் என்று நீதிபதிகள் அஞ்சி விட்டார்கள் போலும். எவ்வளவுதான் நடுவுநிலைமை பற்றியும் சட்டத்தின் முதன்மை பற்றியும் பேசினாலும், இந்தியத் தேசியம் கொஞ்சங்கூட கசங்கி விடக் கூடாது என்ற கவலை இவர்களுக்கு. ஆனால் கொடியேற்ற நிபந்தனையை உறுதிப்படுத்துவது சட்டத்தின் பார்வையில் அபத்தமாகி விடும் என்பது அவர்களுக்குப் புரிகிறது. இந்தப் பிணை விடுதலை வழக்கிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்ற பரிதாப நிலைக்கு நீதிபதிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். அவர்களால் முழு விடுதலை பெற முடியவில்லை, பிணை விடுதலைதான் பெற முடிந்துள்ளது. முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது என்பதுதான் பிணை.

இந்த வகையிலும் இது பெரிய வெற்றி - வருங்காலத்தில் எந்த நீதிமன்றமும் இந்திய தேசியக் கொடியை ஏற்றும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. கொடி எரிப்பு வழக்கிலேயே முடியாது என்னும் போது, மற்ற வழக்குகளேப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இது இந்தியத் தேசிய கீதம் பாடுவதற்கும் பொருந்தும் என்பதே காரணம். இந்தியத் தேசியத்தை கொடியாகவோ கீதமாகவோ இவற்றை ஏற்க மறுப்பவர்கள் மீது நீதிமன்ற ஆணைகள் வாயிலாகத் திணிக்கும் முயற்சிக்கு இந்தத் தீர்ப்பு தடையாக அமையும்.

நம் சனநாயக உரிமைகளே இந்தியச் சட்ட அமைப்புக்குள் ஓரளவு தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு வழிகள் முழுமையாக அடைபட்டுவிடவில்லை என்பதை நம் தந்திரவுத்திகள் கணக்கிற் கொள்ளவேண்டும்.

இந்தியக் கொடி ஏற்றும் நிபந்தனையை உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதாக இந்து (16.11.2009) வெளியிட்டுள்ள செய்தி தவறானது. தீர்ப்பாணையில் அப்படி எதுவும் இல்லை.

இந்த வழக்கிலிருந்து விடைபெறுமுன் நம் உளமார்ந்த நன்றியை மூத்த வழக்கறிஞர் திரு ராம் ஜெத்மலானி அவர்களுக்கு உரித்தாக்குகிறோம்.

நம் நியாயத்தை அழுத்தமாக உணர்த்தி அவரை இந்த வழக்கில் நமக்காக வாதிடச் செய்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு நன்றி!

ஓர் அணியாக அமைந்து கொள்கைப் பிடிப்புடன் இந்த வழக்கில் நமக்காக உழைத்த ராஜீவ் ரூஃபஸ், பிரபு சுப்ரமணியம், பாரிவேந்தன், சந்தன் இராமமூர்த்தி, மயில்சாமி, சாந்தகுமார், ராபின் டேவிட் ஆகியோருக்கு நன்றி!

கோவை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நமக்காக உழைத்த வழக்கறிஞர்கள் காந்தி, ப.பா.மோகன், கலையரசன், சிவசாமித் தமிழன், சம்பந், ஆனந்தராஜ், விசயராகவன், நெளஃபஸ், க. நாகேந்திரன் ஆகியோருக்கு நன்றி!

தோழர்கள் பாரதியும் தமிழரசனும் எவ்விதச் சலனத்துக்கும் ஆட்படாமல் நெஞ்சுறுதியோடு 200 நாள் சிறைப்பட்டிருக்கவில்லை என்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. அவர்களின் இந்த நெஞ்சுறுதிக்குத் துணைநின்ற அவர்களின் குடும்பத்தினர் பாராட்டத்தக்கவர்கள். சிறை வாழ்க்கையில் தோழர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்த சிறையாளிகள் அத்தனை பேரும் நம் நன்றிக்குரியவர்கள்.

பாரதி-தமிழரசன் போலவே நம் தோழர்கள் உறுதியான போராட்டங்களுக்கும், நீண்ட சிறைப்படுத்தலுக்கும் எப்போதும் அணியமாக இருக்க வேண்டும். நம் இலக்குகள் உன்னதமானவை, ஆகவே கடினமானவை. ஈகமில்லாத போராட்டமில்லை; 200 நாள் சிறையடைப்பு என்பது ஒப்பளவில் சிறிய ஈகமே.

நன்றி

கீற்று