தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அம்மாவின் முடிவு சின்னம்மாவின் கலக்கம் - மிஸ்டர் நாரதர்

நாராயணா... நாராயணா...என்ற திருநாமம் காதில் விழுந்ததுமே நாரதரை வரவேற்க தயரானார் நான்முகன் நாரதர் அமர்ந்தும் அமராமலும் தொடங்கினார்.

’’பிரபு, எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று ஜெயலலிதா அ.தி.மு.க தலைமைக் கழகம் வந்தார்.’

’’என்ன நாரதரே, கட்சித்தலைவி கட்சி அலுவலகம் வருவது கூட செய்தியா...?

’’ஆம் பிரபு, ஜெயலலிதா வருவதே செய்திதான். எப்போதும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளின்போது தலைமைக் கழகத்தில் நீண்ட
நேரம் இருப்பார். கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்கள் சந்திப்பு எல்லாம் நடக்கும் . ஆனால் இந்த முறை அதெல்லாம் இல்லை’’

"அது ஏனாம்?"

"கட்சித் தேர்தல் தான் காரணம். ஏற்கனவே கட்சி தேர்தல் காரணமாக அ.தி.மு.க கொடியை இறக்கிக் கறுப்புக் கொடி ஏற்றல் ,
போயஸ்தோட்டத்தில் சாலை மறியல், ஆர்பாட்டம் என்று தொண்டர்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த எதிர்ப்புகுரல்கள்
தலைமைக் கழகத்திலும் ஒலித்தால் எப்படிச் சமாளிப்பது? ஆகவே உஷாராக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணிவிப்பு, இனிப்பு
வழங்கல். வட சென்னை மாவட்டச் செயலர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த இளைஞர் பாசறை உறுப்பினர்களுக்கு கம்ப்யூட்டர்
பயிற்சி சான்றிதழ் விநியோகம் என்று அரை மணியில் எலலா நிகழ்சசிக¨ள்யும் முடித்துவிட்டு பறந்துவிட்டார் ஜெயலலிதா’’ ...

’’ நாரதரே ...உள்கட்சித் தேர்தல் தலைமையை இவ்வளவு பாதித்து இருக்கிறதா என்ன..?’’

’’ஆம் பிரபு ... இப்போது உள்கட்சி தேர்தல் தொடர்பாக ஜெயலலிதா செய்துள்ள முடிவு வரும் சட்டமன்றத் தேர்தல்வரை
கட்சியின் எந்த மட்டதிலும் மாற்றம் வேண்டாம்என்பதுதான்’’

’’இது நல்ல முடிவு என்று தொண்டர்கள் ஏற்கிறார்களா?’’

’’அது தெரியவில்லை.ஆனால் தலைவியின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவின் சொந்த பந்தங்களுக்கு இந்த முடிவு நல்ல
முடிவு அல்ல’’

’’அது ஏன்?’’

’’நீதான் மாவட்டச் செயலாளர், பகுதி செயலாளர் பதவி உனக்கு, கிளைக்கழகச் செயலாள்ர் இனிமேல் நீதான் என்று கைநீட்டி
கரன்சிகளை வாங்கிவிட்டார்கள். இப்போது அதற்கெல்லாம் என்ன செய்வது என்று பேய்முழி முழிக்கிறார்கள் பாவம்’’

’’சரி,அடுத்த செய்திக்கு வாரும்.’’

’’அப்படியே பிரபு.தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிற்கு சோதனைமேல் சோதனை’’

’’சமீபத்தில் வந்த சோதனை என்ன? அதை மட்டும் சொல்லும்’’

’’மகா நகர் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (எம்.டி.என்.எல்) தலைவர் ஆர்.எஸ்.பி.சின்க¡ அமைச்சர் ராசாவுக்கு
நெருக்கமான அதிகாரி. சென்ற வாரம் எம்.டி.என்.எல் நிர்வாக குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தச் சென்றபோது
பொதுத் தொலைத்தொடர்பு துறைச் செயலாளர் , அவரை செல்பேசியில் அழைத்து உஙகளை பதவியிலிருந்து
விலகிக்கொள்ள சொல்லியிருக்கிற்து. எனவே நீஙகள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்.சின்காவும்
அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் திரும்பி விட்டார்’’

’’ நாரதரே ... ராசாவின் ஜாதகத்தை வாங்கி அவரை பாடாய் படுத்துவது எது என்று நீராவது சொல்லக் கூடாதா?’’

’’அதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் பிரபு, நான் அடுத்த செய்திக்கு போகலாமா?”

’’கேட்கவேண்டுமா நாரதரே’’ ...

’’புதிய ஆளுநர் நியமனம் தான் எம்.கே.நாராயணன் சர்வ அதிகாரம் கொண்ட அதிகாரமயைமாக இருந்தார் . அவரை
மே.வங்க ஆளுநராக டெல்லியை விட்டு இடப்பெயர்ச்சி செய்துவிட்டார் ப.சிதம்பரம்’’

’’காரணம்?’’

’’உள்துறை,பாதுகாப்பு ஏற்பாடு போன்றவற்றில் மாற்றங்கள் செய்யத் தீர்மானித்திருக்கிறார் ப.சிதம்பரம் ... நாராயணன்
இருந்தால் சரிப்படாது என்பதால் அவரை டெல்ல்¢யை விட்டே அனுப்பிவிட்டார்’’


’’பாதுகாப்பு விஷயமல்லவா? ப.சிதம்பரத்தின் முடிவு சரியாகத்தான் இருக்கும். சரி, அடுத்த செய்தி?’’

’’அடுத்த செய்தியும் ஆளுநர் நியமனம் சம்பந்தப்பட்டது தான். ஆளுநர் பதவி கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.
பாலசுப்ரமணியம் முயற்சி செய்தார். இதற்காக டெல்லிக்கு அடிக்கடி பறந்தார்.இதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
அன்பரசுவும் முயற்சி செய்தார். கோஷ்டி பூசல் காரணமாக இவர்கள் பெயர் பரிசீலிக்கப்படவேயில்லை.ஆனால் பாண்டிச்சேரி
முன்னாள் முதல்வர் பருக் மரைக்காயர் பெயரை எல்லோரும் சிபாரிசு செய்தனர். அவரும் ஆளுநராகி விட்டார்’’

’’அடடா ...தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டிப்பூசல் முதலுக்கே மோசம் விளைவிக்கிறதே நாரதரே?’’

’’நீங்களும் . நானும் கவலைப்பட்டு என்ன செய்ய பிரபு? ’’ என்று விசனத்துடன் எழுந்தார் நாரதர்.