சென்ற ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழா என்று ஒன்றை நடாத்தி அதிலே அண்ணாவை பற்றி மேலோட்டமாக பேசிவிட்டு தன்னைப்பற்றி அதிகமாக பேசிய கவிஞர்களையும் , கட்சிக்காரர்களையும் பார்த்து புழகாகிதம் அடைந்த கலைஞரின் செயற்பாடு எப்பிடி தெரியுமா இருந்திச்சு, பசுமாட்டை பற்றி கட்டுரை எழுதிய ஒருவன் "பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிட்டேன் " என்று கூறி பின்னர் தென்னைமரத்தை பற்றி எழுதியதை போல இருந்தது. அந்த விழாவில் தனக்குதானே 'அண்ணா விருதை' கொடுத்து அற்ப சந்தோசம் கண்ட கலைஞர் அன்று கவிஞர்களின் பாராட்டுக்கள் காணாதென்று இன்று நடிகர்களை பாராட்டுவதற்கு அழைத்துள்ளார்.
திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடு கட்டிக் கொள்ள, சென்னையை அடுத்த பையனூரில், 116 ஏக்கர் நிலத்தை முதல்வர் வழங்கியுள்ளாராம் , அவர்களும் அந்த இடத்தில் அமைய இருக்கும் குடியிருப்புகளுக்கு, 'கலைஞர் திரைப்பட நகரம்' என்று பெயர் சூட்ட முடிவு செய்ததுடன் பாராட்டு விழாவிற்கும் ஏற்பாடு செய்துள்ளனராம்.நன்றிமறவாத தமிழனின் பண்பை கலைஞரிடம் வெளிப்படுத்தும் திரையுலகினரே அதை கொஞ்சம் மக்களிடமும் வெளிப்படுத்தினால் நல்லது. என்றைக்காவது எம்மை தாங்கிப்பிடித்திருக்கும் மக்களுக்காக என்று ஏதாவதொரு பாராட்டுவிழா திரைஉலகின் ஏதாவதொரு சங்கம் நடாத்தியிருக்கிறதா? மாறாக தங்கள் சங்க கடனை அடைக்க மக்கள்முன் நடிகர்களை கொண்டுவந்து அங்கும் மக்களது பணத்தை டிக்கெட் போட்டு பிடுங்கித்தானே இவர்களுக்கு பழக்கம்.
ஒருதடவை நடிகர்கள் ஜெயலிதாவை பாராட்டியபோது நடிகர்களை 'காக்கைகள்' என்று கேலி பேசியதை நாம் மறக்காவிட்டாலும் நம்ம நடிகர்கள் மறந்துவிட்டார்கள் போலுள்ளது, இவனுகள் மறக்காட்டியும் மறந்துபோச்செண்டுதானே சொல்லுவாங்க ( 'நாடோடிகள்' பட ஸ்டயிலில). இல்லாவிட்டால் மீண்டும் இப்போது கலைஞரை பாராட்ட கிளம்புவாங்களா? இதில நாடகங்கள் அழிந்து கொண்டு வருகின்றது நாடகங்களை காப்பற்றுங்கள் என்று பாலசந்தர் கேட்டபோது மொவுனமாக இருந்த நம்ம 'உலக நாயகன்' கலைஞருக்காக நாடகம் போடுராராம். எதுக்குதான் கலைஞருக்கு நடிகர்களும் , நடிகர்களுக்கு கலைஞரும் தேவைப்படுகிறார்கள்?
நடிகர்களுக்கு என்ன பிரச்சினை ? எதற்கு கலைஞரை நாடுகிறார்கள் ? ஜெயலாலிதாவின் காலத்தில் இப்படி தொட்டதற்கும் போய் அவரிடத்தில் நின்றதில்லையே, இப்போது மட்டும் அடிக்கடி கலைஞரை நடிகர்களும் , நடிகைகளும் சந்திப்பது எதற்கு ? கிடைக்கும்வரை
மக்கள் பணத்தை சுருட்டும் கலைஞருடன் இவர்கள் கூட்டு களவாணித்தனம் ஏதும் செய்கிறார்களா? ஒண்ணுமே புரியல. அனால் கலைஞரை பொறுத்தவரை அரசியல் பண்ண நடிகர்கள் தேவை, அதற்குதான் இந்த அன்பளிப்பெல்லமே.ஒருவேளை கலைஞருக்கு யாராவது சோதிடக்காரர்கள் "உங்களை பற்றி மற்றவர்கள் புகழ புகழ உங்கள் ஆயுள் அதிகரிக்கும் " என்று கூறி இருப்பார்களோ, அதனால்தான் மூன்று மாதத்திற்கொரு தடவை புகழ்ச்சி ஏற்பாடு செய்கிறாரோ, அதனால்தான் அடுத்து உலகளவில் தன்னை புகழ 'உலக தமிழ் மாநாட்டிற்கு' ஆயத்தம் செய்து விட்டார். இவருக்குதான் வயதுபோய் வாக்குமாறி விட்டதென்றால் கூட இருப்பவர்களாவது சொல்லக்கூடாதா?
காடு 'வாவா' என்கிறது வீடு 'போபோ' என்கிறது, இருந்தாலும் புகழுக்கு அலையும் 'முத்தமிழை வித்தவரே' வரலாற்றில் சிறந்த காமடியனாக உருவாக வாழ்த்துக்கள், பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யலாமா?