தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவனே !



பிரபாகரன் தந்தை நோய்வாய்ப்பட்டுத்தானே இறந்தார், அவர் மரணத்துக்கு திருமாவளவன் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே.

ஆனால், தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மரணத்துக்கு தொல்.திருமாவளவனே காரணம் என்று அறுதியிட்டு கூறலாம்.



“அடங்க மறு, அத்து மீறு“ என்ற முழக்கத்தோடு, தமிழக அரசியல் வானில் இளைஞர்களின், தலித்துகளின் நம்பிக்கை நட்சத்திரமாக 80களின் இறுதியில் தன் பயணத்தை துவங்கிய திருமாவளவன் 90களின் இறுதியில் பண்ணையார் ஜி.கே.மூப்பனாரோடு கூட்டணி சேர்ந்த்தும் தன் நேர்மையிலிருந்து சறுக்கி விழுந்தார்.

அன்று சறுக்கி விழுந்தவர், இன்று வரை எழு முடியாமல், திமுகவின் மாவட்டச் செயலாளர் அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கின்றார்.


திருமாவளவனின் ஆரம்பக் கால அரசியல் பயணம் நேர்மையாகவும், உணர்ச்சி பூர்வமாகவுமே இருந்த்து. இன்றைய அரசியலின் விஷக் காற்று அன்று திருமாவளவனை தழுவவில்லை.

மிகவும் பின்தங்கிய, ஏழை பின்புலத்திலிருந்து வந்தவரான திருமாவளவன் தனது பின்புலத்தையும், தான் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நிறையவே கொண்டிருந்தார்.


என்னதான் கல்வியும் அரசியல் அனுபவமும் ஒரு மனிதனை செம்மைப் படுத்தினாலும், ஒரு மனிதனின் இயல்பான குணத்தை மாற்றவே முடியாது. அது திருமாவளவன் விஷயத்திலும் சரியாகவே நடந்த்து.


தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் திருமாவளவனை தலித்துகளின் நம்பிக்கைக்குரிய தலைவனாக பார்த்தார். அப்போதெல்லாம் திருமாவளவனிடம் இப்போது இருக்கும் ஆள் பலம், பண பலம் உட்பட எதுவும் கிடையாது.

எங்கு சென்றாலும், நடந்தோ, பேருந்திலோ செல்வார் திருமா. இதைக் கண்ட ராஜாராம், திருமாவளவனுக்காக ஒரு காரை வாங்கி பரிசளித்தார்.


சில ஆண்டுகளுக்கு பிறகு, போலீசால் தேடப்பட்டு வந்த ராஜாராம் போலீசில் சிக்கினார். இவர் போலீசில் சிக்கியவுடன், திருமாவளவனை பயம் பிடித்து ஆட்டத் தொடங்கியது.

மிகுந்த அச்சம் அடைந்த திருமா, சிறிது காலம் முன்பு வரை, தன்து உற்ற தோழனாக இருந்து வந்த செல்வப் பெருந்தகையை அணுகி, தனது பெயர் இந்த வழக்கில் வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி பகீரத பிரயத்தனம் செய்தார். செல்வப் பெருந்தகை தனக்கு காவல்துறை உயர் அதிகாரிகளோடு உள்ள தொடர்பை பயன்படுத்தி திருமாவளவனின் பெயர் எதிலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

காவல்துறை ராஜாராமிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் படியே, திருமாவளவன் அந்த வழக்கில் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், பலரிடம் கெஞ்சி, கூத்தாடி, திருமாவளவன் தனது பெயர் அவ்வழக்கினில் வராமல் பார்த்துக் கொண்டார்.

இது தவிர, ராஜாராம், போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் படப் போகிறார் என்ற செய்தி அறிந்த்தும், அவரைக் காப்பாற்ற முயற்சி எதுவும் எடுக்காமல் நிம்மதி பெருமூச்சு விட்டவர்தான் இந்த்த் திருமாவளவன்.

தனது நண்பன் நடந்து செல்கிறானே என்று அவனுக்காக கார் வாங்கிக் கொடுத்த ராஜாராம் எங்கே ?

அதே நண்பனை போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்தும், மவுனியாக இருந்த திருமாவளவன் எங்கே ?


1999 பாராளுமன்றத் தேர்தலில், அப்போதைய தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவர் மூப்பனார், தமிழ்நாட்டில், ஒடுக்கப் பட்ட மக்கள், ஆதரவற்றோர் ஆகியோரை துணைக் கொண்டு மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கினார்.

பண்ணையார் மூப்பனாரின் அணியில், அன்று சம பலம் கூட பெற்றிருக்காத விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், புதிய தமிழகமும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. அது வரை அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி என்றெல்லாம், வீறாப்பு பேசி வந்த திருமாவளவன், தேர்தல் அரசியலில் பங்கெடுக்கத் தொடங்கினார்.


மாறி மாறி, இரண்டு திராவிட இயக்கங்களுடன் கூட்டு வைத்து தனது அரசியல் அடையாளத்தை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தார் திருமாவளவன். 2001 சட்டசபைத் தேர்தலில், திமுக அணியில் போட்டியிட்டு மங்களூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆனார் திருமாவளவன்.

தேர்தல் அரசியலில் நுழைந்த உடனேயே திருமாவுக்கு திராவிட கட்சிகளுக்கே உரிய தனி மனித துதிபாடல் நிரம்ப பிடித்துப் போனது. தனக்கு எங்கு பார்த்தாலும் கட் அவுட்டுகள், தான் செல்லும் இடமெல்லாம் கட்சிக் கொடிகள், பேனர்கள் என பிரமாதப்படுத்தினால்தான், வளர முடியும் என்று கருதி, அதே வழியை கடை பிடிக்கலானார் திருமாவளவன்.

2006 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக அணியில் கூட்டணி சேர்ந்தார் திருமா. 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 2 தொகுதிகளில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெற்றி கிடைத்த்து.

இக்கட்சியின் செல்வப்பெருந்தகை மற்றும், திடீர் அரசியல்வாதி ரவிக்குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.


தேர்தல் முடிந்த்தும், தான் ஒரு கைத் தேர்ந்த அரசியல்வாதி என்பதை திருமாவளவன் நிரூபித்தார். தேர்தலுக்குப் பிறகு ஒரு பத்திரிக்கை பேட்டியில் திமுக அரசு, மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப் போகிறது என்று நினைத்திருந்தோம், ஆனால், அரசு மக்களுக்கு ஒரு கையகல டிவி (போர்ட்டபிள் டிவி) தந்து ஏமாற்றி விட்டது என்று பேசியவர்தான் இந்த திருமாவளவன்.


சிறிது காலம் கழித்து, தங்கள் கட்சி எம்எல்ஏ ரவிக்குமாரின் தயவால், திமுக அணிக்குத் தாவினார் திருமாவளவன். திமுக அணிக்குச் சென்றவுடன் தான், தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து, திமுக மாவட்டச் செயலாளரை விட தரம் தாழ்ந்து போனார் திருமாவளவன்.


ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத்தை உலுக்கி எடுக்கத் தொடங்கியது. தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமாயின. ஈழத் தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய திருமாவளவன், தான் களமிறங்கியபோதும் கவனமாக கருணாநிதியின் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டார்.


ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவையோடு சேர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டாலும், நான் மட்டும் தனி ஆவர்த்தனம் என்று கருணாநிதி வழியே என் வழி என்று நடக்கத் தொடங்கினார்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் சுயரூபம் அம்பலமாகத் தொடங்கியதும், அவரோடு சேர்ந்து ஜால்ரா அடித்த திருமாவளவனின் சுயரூபமும் அம்பலமாகத் தொடங்கியது.

ஊரில் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, நாமும் இருப்போம் என்று, சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதம் தொடங்கினார் திருமாவளவன். 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டு, அன்று மாலை உண்ணாவிரத்த்தை முடித்துக் கொண்டு திருமா என்ன பேசினார் தெரியுமா ?



"தமிழர்களைப் பொறுத்தவரை முதல் எதிரி காங்கிரஸ்தான்.இனி எக்காலத்திலும் அக்கட்சியுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது. அதுமட்டுமல்ல, இனி காங்கிரஸ் கட்சியை புல், பூண்டு தெரியாமல் இருக்கும் இடமே தெரியாமல் அழிக்க வேண்டும்’’



அடுத்து நடந்த தேர்தலில் என்ன நடந்த்து என்று அனைவருக்குமே தெரியும். அப்போது திருமாவளவன் அளித்த விளக்கம், கூட்டணி திமுகவோடு தான். காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் கூட்டணி கிடையாது என்றார்.

ஆனால் காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி தனக்கு கவலையில்லை என்றார். சோனியா தமிழகத்தில் கலந்து கொண்ட திருமாவளவனுக்கு உரிய மரியாதை வழங்கப் படவில்லை என்பதை அனைவரும், நேரடி ஒளிபரப்பிலேயே கண்டு களித்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை, காங்கிரஸ் மனம் நோகும் என்று, புலிகள் பற்றியோ, பிரபாகரன் பற்றியோ, வாயைத் திறக்காமல், மவுனச் சாமியாராய் போராட்டம் நடத்தினார் திருமா.



இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப் பட்டவுடன், ஈழத் தமிழர்கள் பற்றி கொஞ்ச நஞ்சம் பேசிக் கொண்டிருந்த்தையும் நிறுத்தினார் திருமாவளவன்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் தனது அடையாளத்தை முற்றிலும் இழந்து கருணாநிதியின் கைப்பாவையாக ஆகி விட்டதை உணர்ந்த திருமா, அவ்வப்போது, நானும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள குரல் கொடுத்து வந்திருந்தார்.


இந்த நிலையில்தான், முள் வேலிக்குள் சிக்கியுள்ள தமிழர்களை விடுவிப்பதற்காக அக்டோபர் 2009ல் இலங்கைக்கு பயணமானது தமிழக எம்பிக்கள் குழு. இந்தக் குழுவில் வேண்டாத தொங்கு சதையாக ஒட்டிக் கொண்டு சென்ற திருமாவளவன், முள் வேலிக்குள் அடைபட்டுக் கிடந்த தமிழர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.



இந்த தூதுக்குழு இலங்கை செல்வதற்கு 20 நாட்களுக்கு முன் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர் என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர், இவையெல்லாம் திருப்தியளிக்கின்றன,”
இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன என்று கூசாமல் புளுகும் கருணாநிதியை கண்டித்தாரா திருமாவளவன் ?

ராஜபக்ஷேவாவது எதிரி. ஆனால் கருணாநிதி தமிழினத்தை அழித்த துரோகி அல்லவா ? இந்த்த் துரோகியோடு திருமாவளவனுக்கு என்ன வேலை ? எம்பி பதவி அளித்துள்ளார் அல்லவா ?

அதற்கான நன்றிக் கடன்.


இலங்கை சென்று திரும்பிய எம்பிக்கள் குழு கருணாநிதி மூலமாக அளித்த பேட்டி என்ன தெரியுமா ?

”முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் ராஜபட்சவை நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வாரகாலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.”

என்ன ஒரு அயோக்கியத்தனம் ? அக்டோபர் மாத்த்துக்குப் பிறகு பல வாரங்கள் கடந்து விட்டனவே ?

விடுவிக்கப் பட்டார்களா தமிழர்கள் ?


இலங்கை சென்ற எம்பிக்கள் குழு உடனடியாக ராஜபக்ஷேவிடமிருந்து எந்த ஒரு உத்தரவாத்த்தையும் பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும், தன்னோடு எடுத்துக் கொண்ட அவர் அவர் படத்தை புத்தக்க் கண்காட்சி முழுக்க விளம்பரம் செய்யத் தெரிந்த திருமாவளவனுக்கு குறைந்த பட்சம் பிரபாகரனின் பெற்றோரை முள்வேலிக்குள் இருந்து விடுவிக்க துணிச்சல் இருந்த்தா ?

திருமாவளவன் கேட்டு, ராஜபக்ஷே மறுத்திருந்தால், அடுத்த விமானம் ஏறி இந்தியா திரும்பி வர வேண்டியது தானே ?

கருணாநிதியின் சீமந்தப் புத்ரி தலைமையில் அல்லவா இலங்கை சென்றிருந்த்து எம்பிக்கள் குழு ? அவர் கோபித்துக் கொண்டால் ?


இலங்கை சென்ற எம்பிக்கள் குழு ராஜபக்ஷேவோடு சிரித்துப் பேசி விருந்துண்டு வந்த புகைப்படங்கள் தமிழகத்தில் அனைவர் மனதிலும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தின.

இந்தியா திரும்பி வந்த எம்பிக்கள் குழு கருணாநிதியை சந்தித்து விட்டு பின்னர் டெல்லி சென்றது. ஆனால், திட்டமிட்டே இந்த குழுவில் திருமாவளவன் புறக்கணிக்கப் பட்டார்.





தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை துடைக்க திருமாவளவன், ராஜபக்ஷே சகோதர்ர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே திருமாவளவன் ?

அயோக்கியத்தனம் இல்லையா இது ? இலங்கை சென்று, ராஜபக்ஷேவோடு பல்லிளித்து விருந்துண்ணும் போது தெரியவில்லையா அவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று ?


"கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்! " எத்தகைய இறுமாப்பு இது ?

இதையும் கேட்டுக் கொண்டு பெட்டைக் கோழி போல, பொழுது சாய்ந்த்தும் வந்து கூண்டுக்குள் அடைவதைப் போல, இந்தியா திரும்பி வந்து கருணாநிதியின் காலடியில் சரணடைந்த திருமாவளவன் சிங்களக் காடையனை விட மோசமான கயவன் அன்றோ ?


ஈழத் தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும். தன் தலைவன் அழைப்பு விடுத்துள்ளான், அவன் கட்டளையை நிறைவேற்றுவோம் என்று போராட்டம் நடத்தி கைதான விடுதலைச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 193. அவர்களுள் 26 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார்கள்.

குறைந்த பட்சம் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்தாரா திருமாவளவன் ?


இன்றும் சிறையில் உள்ள இந்த விடுதலைச் சிறுத்தைகளின் குடும்பத்தினரை யார் பார்ப்பது ?

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்த வசதி இல்லாமல்தான் இன்னும் சிறையில் உள்ளார்கள் என்ற விபரம் தெரியுமா திருமாவுக்கு ?

காடுவெட்டி குரு கைதானதால் கூட்டணியை முறித்துக் கொண்ட மருத்துவர் அய்யா, மீண்டும் கூட்டணி சேர்வது போல பாவ்லா காட்டியே குரு மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலை நீதிமன்றம் உறுதி செய்த பிறகு கூட, கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்து ரத்து செய்ய வைத்தாரே ?

ராமதாசோடு, அணி தாவுவது தவிர வேறு ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லையா திருமா ?




"எழும் தமிழ் ஈழம்" என்ற மாநாட்டுக்கு, ஒட்டப் பட்டிருந்த பிரபாகரனின் புகைப்படங்களை அகற்றியும், ஈழம் என்ற வார்த்தை மேல் இரவோடிரவாக வெள்ளைத் தாளை ஒட்டியதே கருணாநிதியின் காவல்துறை ?

எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பாரா திருமா ?


திருமாவளவனின் நூல் வெளியீட்டிற்காக, வள்ளுவர் கோட்டத்தின் அருகே வைக்கப் பட்டிருந்த, திருமாவளவன் மற்றும் பிரபாகரனின் பேனர்களை காங்கிரஸ் கட்சியினர் அகற்றச் சொன்னதும், சிரமேற்கொண்டு அவற்றை அகற்றிய கருணாநிதியை கண்டிக்க முடிந்த்தா திருமாவளவனால் ?


சுயமரியாதை உள்ளவர்கள் கண்டிப்பார்கள்.



இலங்கை சென்று, ராஜபக்ஷேவோடு பல்லிளித்து விட்டு, இந்தியா வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, "முள் வலி" என கட்டுரைத் தொடர் எழுதினால் திருமாவின் கபட நாடகம் தெரியாமல் போய் விடுமா என்ன ?




தேசியத் தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை மறைவுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்று, அங்கே புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து வந்திருக்கிறார் திருமாவளவன்.



1) முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் என் தலைவனின் பெற்றோரை மட்டுமாவது விடுதலை செய்யுங்கள் என்று ராஜபக்ஷேவிடம் கேட்டிருக்க முடியாதா திருமாவளவனால் ?


2) ராஜபக்ஷே கேட்கவில்லை என்றால், அவருடைய தலைவர் கருணாநிதியிடம் செர்ல்லி எப்படியாவது பிரபாகரனின் பெற்றோர்களை விடுவிக்கச் சொல்லி சோனியாவை வற்புறுத்த வைத்திருக்கலாம் அல்லவா ?


3) இவரே பாராளுமன்றத்தில், என் தலைவனின் பெற்றோர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று முழங்கியிருக்கலாம் அல்லவா ?


4) பிரபாகரனின் பெற்றோர்களை முள்வேலிக்குள் இருந்து விடுவிக்கப் படும் வரை உண்ணாவிரதம் என்று ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கலாம் அல்லவா ?


5) பிரபாகரனின் பெற்றோர்கள் விடுவிக்கப் படாவிட்டால், எம்பி பதவி ராஜினாமா என்று ஒரு அறிவிப்பாவது செய்திருக்கலாம் அல்லவா ?


6) தன் பின்னால் இருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி, பிரபாகரன் பெற்றோர்கள் விடுதலை செய்யப் பட வேண்டும் என்று கோரி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கலாம் அல்லவா ?


7) அய்யா நெடுமாறன், மற்றும் எதிர்க்கட்சிகளை இணைத்து ஒரு பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கலாம் அல்லவா ?


இதையெல்லாம் செய்யாமல், பிரபாகரனின் தந்தை இறந்த்தும், கருணாநிதியிடம் சிறப்பு அனுமதி பெற்று, வல்வெட்டித்துறை சென்று, பிணத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, மீண்டும் இந்தியா வந்து, வல்வெட்டித்துறை எங்கும் சிங்களர்கள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் திருமாவளவன்தான், தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை மரணத்துக்கு முழு முதல் பொறுப்பு.


ராஜபக்ஷே சகோதர்ர்கள் போன்ற எதிரிகளோடு சமராடலாம். ஆனால், திருமாவளவன், ஜெகத் கஸ்பர் போன்ற, பசுத்தோல் போற்றிய கழுதைப் புலிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.


ஏன் பசுத்தோல் போற்றிய கழுதைப் புலி தெரியுமா ? கழுதைப் புலி தான் அழுகிய பிணங்களைத் தின்னும்.



முறுக்கு மீசையில் இருந்தால் போதாது திருமா... நேர்மையான நடத்தையில் வேண்டும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் வேண்டும்.

நன்றி
சவுக்கு