தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா?

செய்தி ஒன்று :

இலங்கைத தமிழர்கள் துயரத்தில் உள்ள இந்நேரத்தில் தமிழக மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமெண்ட் தலையங்கம் :

இடையில் தமிழர்கள் தீபாவளியை அமர்களமாய் கொண்டாடிவிட்டார்கள் , திருமா அப்போது அதை மறந்து விட்டாரா அல்லது ஈழ விடயம் தலைப்பு செய்திகளில் வரவில்லையா ?
....................................................................................................................................................................

செய்தி இரண்டு :

உச்சநீதிமன்றமும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும் என்று தில்லி உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.88 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில், 'நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தான்' என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கமெண்ட் தலையங்கம் :

ஜனநாயகத்தின் மாண்பு எல்லா மட்டத்திலும் பின்பற்றப்படவேண்டும், இதற்க்கு நீதிபதிகளும் விலக்கல்ல. அவர்கள் துறையை பற்றியது எனினும் இந்த தீர்ப்பு வரவேர்க்கபடவேண்டியதுதான்.
....................................................................................................................................................................

செய்தி மூன்று :

ஆஸ்திரேலியாவில் 28 வயது இந்தியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும், அவர் பாதுகாப்பு கருதி தனது பெயர் விபரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று மாலை சிட்னி அருகேயுள்ள கூகி கடற்கரைக்குச் சென்றபோது அவரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இத்தகவலை அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தான் 11 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் இதுவரை இத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் போலீஸôர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கமெண்ட் தலையங்கம் :

இந்தியர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் தாக்கபடுவது தவறுதான், ஆனால் இந்த செய்தி பெரும் முக்கியத்துவம் ராமேஸ்வரம் மீனவ தமிழன் இலங்கையினால் சுட்டு கொல்லப்படும்பொழுது , பெறப்படுவதில்லையே என்பது தமிழன் என்ற முறையில் ஒவ்வொருவரும் அவர்களின் இந்திய மீதான உரிமையினை எடை போட்டு பார்க்க வேண்டும்.
....................................................................................................................................................................

செய்தி நான்கு:

கேரளாவின் புதிய ஆணை பற்றி (முல்லைபெரியார் இல்லை ) வைகோ அறிக்கை.தமிழ்நாட்டின் நதிநீர் வாழ்வாதாரங்களுக்குத் தீங்கான கேடு செய்யும் வகையில், கேரள அரசு செயல்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அராஜகப் போக்கை மேற்கொண்டு உள்ள கேரள அரசு, தற்போது, கொங்குச் சீமையிலும் நமக்குக் கேடு செய்ய முற்பட்டு விட்டது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு, கேரள மாநிலத்தில் உள்ள பாம்பாறு, தேனாறு, தமிழக எல்லையில் உள்ள சின்னாறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்து தண்ணீர் வருகின்றது. 1956-ஆம் ஆண்டு இந்த அணை நீர்ப்பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.


அணை கட்டுவதற்கு முன்பே உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருந்து கரூர் வரை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டி, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. அமராவதி அணை கட்டிய பின்னர், புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் வழியாகச் செல்லும் இந்தத் தண்ணீரால், 30-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் மூலம் பல கிராமங்களுக்கும் தாராபுரம் போன்ற நகரங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தமிழக -கேரள எல்லையான மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள, மறையூர் அருகே ரூ.230 கோடி செலவில் புதிய அணைகட்ட கேரள அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கி வரும் பாம்பாற்றின் குறுக்கே, 110 ஏக்கர் பரப்பளவில் அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


இந்த அணையின் மூலம் சுமார் 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்போவதாகக் கூறும் கேரள அரசு, இதற்கான இறுதிக்கட்ட சர்வேயை முடித்து உள்ளது. பாம்பாற்றின் வழித்தடத்தில் உள்ள தூவானம் அருவிக்கு மேல்புறம் 170 மீட்டர் நீளமும், 30 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையின் கட்டுமானப்பணிகளை, அடுத்த ஆண்டு துவங்குவது எனவும், நான்கு ஆண்டுகளில் அணையைக்கட்டி முடித்து விடுவது எனவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.


ஜனவரி 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி, காவிரி நடுவர் மன்றம், மத்திய சுற்றுச்சூழல்துறை, நீர்வளம் மற்றும் மின்சாரத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மின்சாரம் தயாரிக்கத்தான் அணைகட்டுகிறோம் என கேரள அரசு சொல்வது ஏமாற்று வேலை. தனியார் குளிர்பானக் கம்பெனிகளின் வசதிக்காகத்தான் இந்த அணை கட்டப்படுவதாகத் தெரிகிறது.


ஏற்கனவே காவிரியின் உப நதிகளில் கட்டப்பட்டுள்ள அமராவதி அணைப்பகுதி, காவிரி நடுவர் மன்றத்திற்கு உட்பட்ட வழக்கின் ஒரு பகுதி ஆகும். அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமராவதி அணையை நம்பி வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சி ஆகும். இதனால் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீரை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாலைவனமாகி விடும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையைச் சார்ந்து உள்ள, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும்.


தொடக்கத்திலேயே இதைத்தடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பாம்பாற்றில் கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு, குறிப்பாக சுற்றுச்சூழல் அமைச்சரகம், அனுமதி தரக்கூடாது. முல்லைப்பெரியாறு பிரச்சினையில், மத்திய அரசு, தமிழகத்தின் நியாயமான உரிமைகளுக்கு எதிராக, புதிய அணை கட்ட, ஆய்வுக்கு அனுமதி அளித்த துரோகத்தை, பாம்பாற்றுப் பிரச்சினையிலும் செய்து விடக்கூடாது என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கமெண்ட் தலையங்கம் :

இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா?