கடந்த ஆண்டு மே 18ம் தேதி நடந்த இறுதிப் போரின்போது பிரபாகரன் தப்பி ஓட முயன்றார். ஆனால் எங்களது ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர் என்று கூறியது இலங்கை அரசு. இதையடுத்து உடல் மீட்கப்பட்டதாக பின்னர் கூறி உடலையும் காட்டியது.
ஆனால் இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது நிச்சயம் பிரபாகரனே இல்லை என்று ஈழ அபிமானிகள் திட்டவட்டமாக கூறினர். இதுதொடர்பாக இன்னும் சர்ச்சை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந் நிலையில் சிங்கள ராணுவத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு ராணுவ வீரர் சக வீரர்களுடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த வீரர் அப்படியே சாட்சாத், பிரபாகரன் உடல் என்று இலங்கை ராணுவம் வெளியிட்ட உடலின் உருவத்துடன் ஒத்துப் போகிறார்.
இந்த வீடியோவை தமிழ்வின் இணையம் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
கூப்பிடும் தூரத்தில் என் தமிழ் சகோதரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி வாழ்ந்த நம் சுற்றத்தாரை நாம் காப்பாற்ற முயலவில்லையே..! அதை எண்ணி எண்ணி வெட்கபடுவோம்... அடுத்த சில வினாடிகளில் அதை மறந்து விடுவோம்... வாழ்க தமிழனின் ஒற்றுமை... ஒன்று மட்டும் யோசித்து பாருங்கள் ஒரு நாயை கல்லால் அடித்து பார் மற்ற நாய்களும் உன்னை பார்த்து குரைக்கும் எனபது மட்டும் நம் பழமொழி உண்டு எனபது நிதர்சனமான உண்மை...
....பகலவன்....