தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பி.எஸ்.என்.எல் மொபைலுக்கு வரும் ஆபாச எஸ்.எம்.எஸ்!!!

பி.எஸ்.என்.எல். செல்போன் சந்தாதாரர்களை குஷிப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆபாச ஜோக்குகள் கஸ்டமர்களுக்கு அனுப்பப்படுகின்றன. பி.எஸ்.என்.எல். போஸ்ட்பெய்டு இணைப்பு வைத்துள்ள, ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளருக்கு BA-56677 என்ற எண்ணிலிருந்து ஒரு எஸ்எம்ஸ் வந்துள்ளது.


அதில், 18 வயதிற்கு மேற்பட்டவராக நீங்கள் இருந்தால் MLJ என்று டைப் செய்து 56677 எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு மலையாள ஜோக் உங்களுக்கு வரும். நீங்கள் ஜோக்கை படித்து உங்கள் நண்பர்களுடன் சிரித்து மகிழலாம். இதற்கான கட்டணம் ரூ.2 என அந்த குறுஞ்செய்தி கூறியுள்ளது.


இதைக்கண்ட வாடிக்கையாளர் அதுபோல டைப் செய்து அனுப்பிவிட கீழ்கண்ட எஸ்எம்ஸ் அவருக்கு வந்தது.

Cherukkan: Sex Cheyyumbol Koodudal Sugham Penninano Cherukkano Labhikunnad
Penn: Kadil viral idumbol viralinano sugham kittunnad ado kaadino


மலையாள நண்பர் ஒருவர் இது மிகவும் ஆபாசமான ஜோக் என்றார். ஆபாச ஜோக்குகளை கண்ட நாம் தூத்துக்குடி மாவட்ட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் நடராஜனை சந்தித்து இதுகுறித்து கேட்டோம். தகவல் வழங்குவதற்காக Content Provider என்று அழைக்கப்படும் தகவல் வழங்கும் பல தனியார் கம்பெனிகளோடு பிஎஸ்என்எல் நிர்வாகம் டைஅப் வைத்துள்ளது. சந்தாதாரர்களுக்கு ரிங்டோன் அனுப்புவது, படங்கள் அனுப்புவது, கிரிக்கெட் ஸ்கோர் போன்ற செய்திகள் அனுப்புவது போன்ற சேவைகளை இந்த கம்பெனிகள் செய்து வருகின்றன.


செக்ஸ் ஜோக் வந்துள்ளதாக எந்த சந்தாதாரரும் எங்களிடம் இதுவரை புகார் கூறவில்லை. புகார் மனு எங்களுக்கு வரும்பட்சத்தில் இது குறித்து நாங்கள் மண்டல அலுவலகத்திற்கு தெரிவிப்போம். மட்டுமல்லாது, இதுபோன்ற கண்டென்ட் புரவைடர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் வருவதை விரும்பாதவர்கள், எங்களிடம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையற்ற எஸ்எம்எஸ் அனுப்புவது தடுக்கப்படும். இவ்வாறு பொது மேலாளர் நடராஜன் கூறினார்.


வருடத்திற்கு 3ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான அளவில் பிஎஸ்என்எல் நிர்வாகம் லாபம் ஈட்டிவரும் வேளையில், செக்ஸ் ஜோக் அனுப்பும் தரமற்ற கம்பெனிகளோடு ஏன் டைஅப் வைத்துள்ளார்கள் என்று பி.எஸ்.என்.எல். சந்தாதரர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதுபோல, "உங்களுக்கு போரடிக்கிறதா? கேர்ள் பிரன்டோடு சேட்டிங் பண்ண விரும்புகிறீர்களா? இந்த எண்ணுக்கு டைப் செய்து அனுப்புங்கள் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கும் 2ரூபாய் கட்டணம்.


நீங்கள் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு 2500US$ விழுந்துள்ளது. இந்த எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள். 2ரூபாய் கட்டணம்" என்பது போல பல எஸ்எம்எஸ் துனுக்குகளை இந்த டைஅப் கம்பெனிகள் சந்தாதாரர்களுக்கு அனுப்பி ஏமாற்று வழியில் பணம் சம்பாதிக்கின்றன. இவற்றின் மீது தகவல் தொடர்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.