தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வங்கக்கடலின் வங்காளம்

ரஜீவனின்
வங்கக்கடலின் வங்காளம்

கையில் ஒரு ஆயுதம்
கொடுத்தவனே பறிக்கையில்
ஆயுதமும் கொஞ்சம் பேசுகிறது...

ஏய் வங்கத்தமிழனே...
மானங்ககாக்க மாற்றான் உயிர் கேக்க
உன் மானத்தலைவன் அனுப்பிவெச்சான்
கொஞ்சம் மாவீர மண்ணுக்காய்...

கேட்கிறாய மறுபடியென்னை
உன் சிதறிப்போன சிந்தனைகளுக்காய்..

பதவி நிறுத்த பணம் பார்க்க
அழிக்கிறாய் ஜனநாயகம்
விதைக்கிறாய் இன வெறி

உன்னைப்போல் ஒரு பிறப்பா நானெடுத்தேன்
மானம் பறிபோக சேரா இடம் சேர...

கொடுத்தவன் ஒருவன் வாங்கியவன் மற்றொருவன்
அழிப்பதோ கொலையாளி வதைப்பதோ ஈழமண்ணை
எவன் குற்றம் இங்கே?

கொடுத்தவனா ? வாங்கியவனா ?
அழிப்பவனா ? அழிக்கப்படுபவனா ?

வங்கக்கடலில் நடக்குது ஆயுதவிழையாட்டு
உயிர் மட்டும் போகுது ஈழத்தமிழனுக்கு...

எத்தனையோ ஒப்பந்தங்கள்
இரகசியமாய் பரகசியமாய்
மூன்றாம் தரப்போடு
முழுமையடையா இணைப்போடு

பண்டா செல்வா என்றான் ஒருவன்
ராஜீவ் ஜெ.ஆர் என்றான் மாற்றுவன்
ரணில் பிரபாவில் முடிக்க நினைத்தான்
அத்தனையும் எங்கே அவசரமாய் அழிந்ததோ?

அழித்தவன் எவன் இங்கே
கொடுத்தவனா வாங்கியவனா
அழிப்பவனா அழிக்கப்படுபவனா
எவன் குற்றம் இங்கே?

உன் எல்லைகளோடு விழையாடக்கிடைத்தவன்
ஈனமாய் போன ஈழத்தமிழனா?

காந்தியென்றாய் புத்தன்னென்றாய்
புண்ணிய தேசமமென்றாய்
உன் பூமியின் ஒரு பிடியில்கூடவா
இரக்கமில்லை?

ஏய் சுயநலவாதியே
அடிப்படை உன்னுடையது
வேர் நீயிட்டது
ஆயிரம் இலைகள் உதிருகையில்
வேரை மட்டும் காப்பாற்றுகிறாயா?

வங்கக்கடலில் நடக்கிறது ஆடுபுலியாட்டம்
எப்போதும் ஆடுகள் ஈழத்தமிழனா?

மாநிலத்தோடு மத்திக்கு இணையில்லை
இணைக்க வழியுமில்லை
பாவம் என் பாமரன்
இன்னும் பட்டினிப்பிரவேசம்...

அலையலையாய் படைகள்
மாநிலத்திற்கு சம்மந்தமில்லை
கப்பல் நிறைய ஆயுதம்
மத்திக்கே பழி
ஒரு இனமே எரிகிறது
இருந்தும்மென்ன
என் வீட்டில் நூறு ரூபாய் நன்கொடை

அறியாத என் இனம் அவதிப்படுகிறதே
ஜனநாயகத்துக்குள் அகப்பட்டு...

வரலாரோடு ஒரு போராட்டம்
ஏட்டில் எழுத நாதியில்லை
இனமோ பாமரன் என்ராயிற்றே
இனி ஏது
உனக்கு வழி

பரவாயில்லை
நீ
பாரதியை விரட்டியவன் காந்தியை கொன்றவன்
கட்டப்பொம்மனை காட்டிகொடுத்தவன்
உயிர்கள் போகையில் சாஸ்திரம் படித்தவன்
உடல்கள் அழிக்கையில் ஜாதி கேட்ப்பவன்
உன்னிடம் ஏது அறிவுடைமை?

வங்கக்கடலில் நடக்குதொரு அரசியல் சூழ்ச்சி
சுலறுபவன் மட்டும் ஈழத்தமிழனா?

தீர்ப்பு எழுத வருபவன் எவனோ?

பாரதி உன்மேல் தான் குற்றம்
" நம் நாட்டவன் சண்டை செய்யினும்
சகோதரன் அன்றோ"
என்றாய்
பாடையிலே இனம் போகையிலும்
சகோதரனோடு குலுக்குகிறான் கை
எவர் குற்றம் கண்டீர் பாரதி?

பாலமமைத்து பணிபுரிபவனே
பலம் கொடுத்து அழிக்கையில்
தீர்ப்பு எழுத எவன் வருவன்
கண்டீர் பாரதி உம் கவி சொன்ன நோக்கம்...

உலகெலாம் மொழி பரவ
உம் கவி வெற்றிக்கான
ஈழத்தமிழனை துரத்துகி றாய
உலகெல்லாம் அகதியாய்
எவர்மேல் குற்றம் சொல்ல பாரதி?

நீவீர்
விரட்டியடித்தவனே நிற்கிறான்
மனித நேயத்தோடு
உம் தேசத்தின்
ஒரு மொழிகேட்டு

என்ன சொல்லப்போகிரீர்
புதுமைக்கவிஞ்ஞனே...

புதிதாய் ஒரு வங்காளம் நீவீர் படையும்
தமிழனையும் இனத்தின் பால் காதல் செய்ய...