சௌந்தர்யா ரஜினியின் கோவா, சிம்புதேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய இரு படங்களும் வரும் ஜனவரி 29ம் தேதி வெளியாகின்றன. இந்த இரு படங்களுமே சௌந்தர்யா மற்றும் சிம்புதேவனுக்கு மிக முக்கியமானவை.
அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் அசல், கார்த்தி-தமன்னா நடித்துள்ள பையா படங்கள் பிப்ரவரி 5ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹாங்...சரத்குமார் நடித்து இணையத் தளங்களில் கூட ஓடாமல் போன ஜக்குபாயும் இந்த லிஸ்டில் உள்ளது!
இவற்றில் எத்தனை தேறும் என்பது ஒருபக்கம்... உண்மையிலேயே எத்தனை படங்கள் சொன்ன தேதியில் ரிலீஸாகும் என்பதுதான் முக்கியம்.
....பகலவன்....