யாரு சாகடிச்சாங்க அவரை...
தோழர்களே சாக பிறந்தவன் இல்லை இவன்.சாதிக்க பிறந்தவன்.இதை கேளுங்க....
யாரு சாகடிச்சாங்க அவரை.. அவரு செத்துட்டாருன்னு சொல்றாங்கஅவரோட படத்தை காட்டினாங்க.அவர் மகன் செத்ததாக சொன்னாங்க அவன் படத்தையும் போட்டாங்க செத்தது அவங்க இல்லைங்க எங்களோட நம்பிக்கை அவரு என்ன செஞ்சாருன்னு உனக்குன்னு கேட்டாங்க எனக்காக போராடினாருன்னேன். நிறைய பேர கொன்னாரு நிறைய பேருக்கு எதிரியானாருன்னு நிறைய தப்பு செய்தாருன்னும் சொன்னாங்க.தமிழனா பிறந்து தமிழனுக்கு போரிடியதுதான் பெரிய தவறோன்னு நினைக்க தோணுதுங்க.எட்டாப்பு தான் படிச்சாருன்னாங்க எத்தனை வகுப்பு அதிகம் படிச்சவந்தான் அவரை காட்டி கொடுக்கிறான்
என்ன செய்ய படிப்ப வச்சுங்க அவரு. இருந்தப்ப எல்லாரும் பயந்தாங்க என்னை அடிச்சா அவரு வருவாருன்னு இப்ப என்னை கொன்னாலும் யாருங்க வருவாங்க தத்துவம் கம்யூனிசம் எதுவும் தெரியாதுங்க அவருக்கு ஆனா எங்களுக்கு ஒண்ணுன்னா
அவர் வருவாருன்னு என்னோட விரோதிக்கும் தெரியுங்க.
எங்களுக்கு கஞ்சி இல்லாம போச்சு நாதியில்லாம போச்சுங்க.பெரிய பெரிய விசயம் பேசினவங்கஒண்ணு மட்டும் செய்யுங்க.அவரு செஞ்சதுல கால்வாசி செய்யுங்க.அப்பதாங்க அவர குறை சொல்ற தகுதி வருங்க,அவரு பெரிய சண்டைகாரருங்க,கோபக்காரருங்க. அவரு ஜெயிச்சப்ப எல்லாம் பாராட்டுனாங்க. தோத்ததும் அவர திட்டுறாங்க.இவங்கல்லாம் எதையாவது புடுங்கட்டுங்க. அவர்தான் இல்லைன்னு சொல்றாங்களேஅப்படியே இருக்கட்டுங்க.
இவங்க எதாவது செய்யட்டும்.இனிமேலாவது குறை சொல்றத நிறுத்திபுட்டு நிசமா சொல்றேங்க அவரோட துவக்கு இன்னும் இருக்குங்க.அது துரோகிகளை இன்னும் மறக்கலைங்க .நீங்க பார்க்கதான போறீங்க என்ன நடக்குதுன்னு.ஆனா சொல்றேங்க
ரொம்ப நாளைக்கு நாங்க அடிவாங்க மாட்டோங்க .நாங்க அடிச்சோம்னா அப்புறம் நீங்க இருந்த இடமே இருக்காதுங்கவரேங்க
- தியாகுகணினிப்பொறியாளர் தமிழ்நாடு