தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

காங்கிரசு கட்சியின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

இந்தியாவை ஆளும் காங்கிரசு கட்சியின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், சிங்கள பயங்கரவாத கொலை வெறி அரசுடன் ‘கை’ கோர்த்து திட்டமிட்ட தமிழினப்படுகொலை பயங்கரவாதத்தை இலங்கையில் நடத்தி முடித்துள்ளது

உலக வரலாற்றிலும், தமிழர் வரலாற்றிலும் மன்னிக்க முடியாத, மறக்க முடியாத மாபெரும் குற்றத்தை சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி இழைத்துள்ளது. இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, 6 ஆயிரம் ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்த இராசீவின் கொடூரமான கொலை வெறியைவிட, இது பன்மடங்கு கொடிய கொடூரமான குற்றமாகும்.

ம.தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் சோனியாவை ‘சேலை கட்டிய முசோலினி’ என்றார். இதில் உண்மை இல்லாமல் இல்லை. இத்தாலிய நாட்டின் கொடுங் கோலனாகவும் உலக நாடுகளை நடுங்க வைத்த பயங்கவர வாதியாகவும் திகழ்ந்த உலகளாவியக் கொடியவன் முசோலினியின் கொலைவெறிப் படையில் முக்கியத் தளபதியாக இருந்தவர் ஸ்டிஃபானோ.

இவரின் மகள்தான் அன்டோனிய மைனோ என்கிற சோனியா. இவரின் தலைமையிலான காங்கிரசு கட்சி, இந்தியாவை கொலை வெறிப் பிடித்த பயங்கரவாத நாடாக பறைசாற்றி உள்ளது.

2004&ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த உடனே, ஈழத் தமிழர்களை முற்றாக கொன்றழிக்கும் நோக்கத்துடன், இலங்கை அரசுடன் இராணுவ ஒப்பந்தத்தை சோனியா காங்கிரசு போட முயன்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, வெளிப் படையாக ஒப்பந்தம் போடவில்லை. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி கள்ளத்தனமாக ஆயுதம் மற்றும் இராணுவ உதவிகளை சிங்கள அரசுக்கு காங்கிரசு ஆட்சி வழங்கி உள்ளது.

“இலங்கைக்கு எவ்வகையான இராணுவ உதவியும் வழங்கக் கூடாது” & என்று வாஜ்பாய் அவர்கள், தலைமை அமைச்சராக இருந்தபோது, முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசின் இந்த முடிவை, சோனியா காங்கிரசு மீறியது.

ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க ஆயுதங்களையும், இராணுவ உதவிகளையும் வழங்கக் கூடாது” என்று இந்திய பொதுவுடைமை கட்சியின் தேசியச் செயலாளர் பரதன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மன்மோகன் சிங்கிடமும், பிரணாப் முகர்சியிடமும் வலியுறுத்தினார்கள். கூட்டணித் தலைவர்களின் கோரிக்கையை காங்கிரசு ஆட்சி மதிக்க வில்லை.

இந்தியாவில் முறைகேடாக நடத்தப்படும் பாக்கிசுதான் நாட்டின் வன்முறையை ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்று சோனியாவும், மன்மோகன் சிங்கும் கண்டிக்கிறார்கள். இவர்கள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ள கூட்டணிக் கட்சியினருடன் கலந்தாய்வு செய்யாமல், குடியரசுத் தலைவரின் முறையான இசைவைப் பெறாமல், ஈழத் தமிழர்களை கொன்றழிக்கும் சிங்கள பயங்கரவாத இராணுவத்துக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்கள். ஆயுதம் மற்றும் இராணுவ உதவிகளை கொடுத்தார்கள். இத்துடன் நிற்காமல் இந்திய இராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்பி, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றழித்து, வரலாறு காணாத எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்தி முடித்துள்ளார்கள். அக்டோபர் 2008 முதல் மே 2009 வரை 8 மாதங்களில் 5 லட்சம் பேரை சொந்த மண்ணில் அனாதையாக்கி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்களை ‘போர்’ என்ற பெயரால் கொன்று குவித்த ராட்சச பக்சே, 2009 சூலை முதல் வாரத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் “இந்தியாவுக்காக போரை நடத்தினேன். ஆகவே, இந்தியாவால் போரை நிறுத்து என்று சொல்ல முடியவில்லை” என்றான். போர் என்ற பெயரால் மாபெரும் இனப்படுகொலையை ஈவு இரக்கம் இல்லாமல் செய்து முடித்த ராட்சச பக்சே, இதற்கு காரணமான சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும் நன்றி தெரித்துள்ளான். இவரின் தம்பி பசில் இராட்சசபக்சே, 2009 மே இறுதியில் அம்பாரை வைத்திய சாலையில் பேசும்போது, “இந்தியாவின் ஆதரவைப் பெற்ற பிறகுதான் போரைத் தொடங்கினோம். போரில் கொல்லப்படும் மக்களின் இழப்புகளை இராணுவத் தரப்பில் உயர் குழு அமைத்து உடனுக்குடன் இந்தியாவுக்கு தெரிவித்து வந்தோம்” என்று சொல்லி உள்ளான்.

2002 முதல் நார்வே முன்னிலையில் அமைதித் தீர்வை நோக்கி இலங்கை அதிபரான ரணில் அரசின் போக்கு கனிந்து வந்த நிலையில், 2005ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர்களை கொன்றழிக்கும் காங்கிரசின் சூழ்ச்சிக்கு ஏற்ப மிகவும் சாதகமாக இந்திய வெளியுறவு அமைச்சக மற்றும் அதிகாரிகளால் மாற்றி அமைக்கப் பட்டது.

2005ஆம் ஆண்டில் சிங்கள இனவாதக் கொலை வெறியன் இராட்சச பக்சே அதிப ரான உடனே, சிங்கள பயங்கரவாத கொலை வெறியர்கள் தில்லிக்கு வருவதும், அவர்களை காங்கிரசு ஆட்சியாளர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று விருந்தளித்து மகிழ்ந்ததும், ஈழத் தமிழர்களிடையே மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்தியக் கடற்படைத் தளபதி அருள் பிரகாசு, “இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்களக் கடற்படைக்கு இராடார்கள், தளவாடங்கள், நவீன ரக துப்பாக்கிகள் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.

இதனால், 2002ஆம் ஆண்டில் நார்வே நாட்டின் முயற்சியால், விடுதலைப்புலிகளுடன் சிங்கள அரசு ஏற்படுத்திக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை கொலை வெறி அதிபர் இராட்சச பக்சே மீறினான்.

பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்றிழிப்பதற்கு காரணமாகத் திகழ்ந்த பலாலி வானூர்தி நிலையத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். ஆனால், அந்த வானூர்தி நிலையத்தை இந்தியா சீரமைத்துக் கொடுத்தது. அதனால் மீண்டும் அங்கிருந்து சிங்களக் கொலைவெறி அரசு வான்படையை ஏவி, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு, காங்கிரசு ஆட்சி காரணமாக இருந்தது.

சிங்களக் கொலை வெறிப்படையின் இன அழிப்பில் பெற்றோர்களை இழந்து மனநிலை பாதித்த மற்றும் ஊனமுற்றக் குழந்தைகளை “செஞ்சோலைக் காப்பகம் பாதுகாத்து வந்தது. இதன் மீது, காங்கிரசு ஆட்சியாளர்கள் சீரமைத் துக் கொடுத்த பலாலி வானூர்தி தளத்தில் இருந்து புறப்பட்ட வான்படை, 2006 ஆகஸ்ட் மாதத்தில் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இதில் 61 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 150 குழந்தைகள் படு காயம் அடைந்தார்கள்.

2006 அக்டோபர் இறுதி வாரத்தில் கிளி நொச்சி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 நோயாளிகள் தலைதெறிக்க ஓடி, பதுங்கு குழிகளில் உயிர் தப்பினார்கள். இதில் 45 பேர் பரிதாபமாக செத்தார்கள். அதற்குப் பிறகு 2009 மே 19 வரை பலமுறை தொடர்ந்து மருத்துவமனைகள் மீது சிங்கள இராணுவம் அபாயகரமான குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக் கொன்றுள்ளது.

உண்மையில் அப்பாவி ஈழத் தமிழர்களை காப்பாற்றி, அவர்களுக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதுதான் காங்கிரசு ஆட்சியின் நோக்கமென்றால், 2006&ஆம் ஆண்டிலே, ஈழத் தமிழினத்தை பூண்டோடு அழிக்கத் தீவிரமாக துணிந்துவிட்ட, இராட்சச பக்சேவை காங்கிரசு ஆட்சியாளர்கள் கண்டித்து இருக்க வேண் டும். ஆனால் கண்டிக்கவில்லை. மாறாக, தமிழினத்தை பூண்டோடு அழித்தொழிப்பதற்கு நிதி, ஆயுதங்கள் மற்றும் இராணுவ உதவிகளை அள்ளிக் கொடுத்தனர்.

இந்த உண்மையை 2006 நவம்பர் மாதத்தில் இந்தியா வந்த இராட்சச பக்சே, “இந்திய ராணுவ உதவி அளிக்கிறது” என்று ஒத்துக் கொண்டார். காங்கிரசின் இச்செயல், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல வும், சாராயம் குடித்து விட்டு போதையில் உள்ள குரங்கிடம் தீப்பந்தம் கொடுத்ததைப் போலவும் ஆகி விட்டது.

2006 திசம்பர் மாதத்தில் உலக நாடுகள் அவையின் மனித உரிமைக் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சப்பான், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்தன. ஆனால் சிங்கள அரசை, காங் கிரசு ஆட்சியாளர்கள் பத்தினி வேடம் அணிந்து காப்பாற்றினார்கள்.

15.10.2007ஆம் நாள் “டைம்ஸ் ஆப் இண்டியா” நாளிதழில் விமானங்களை சுட்டு வீழ்த்தக் கூடிய 400 எம்.எம்.எல். ஏவுகணை களையும், 40 ஆயிரம் டாலர் மதிப்புள்ள ஈ70 நவீன ரக துப்பாக்கிகளையும், சிங்கள அரசுக்கு இந்தியா வழங்கி உள்ளது” என்ற செய்தி வெளியானது.

ஈழத் தமிழர்கள் மீது அபாயகரமான குண்டு களை வீசிக் கொன்றிழிப்பதற்கு முதன்மை தளமாக விளங்கும் அனுராதபுரம் விமானத் தளத்தையும் புலிகளின் வான்படை தாக்கி அழித்தனர். உடனே, வெளியுறவுச் செயலாள ரும் மலையாளியுமான சிவசங்கர் மேனன், இந்தியா & இலங்கை ராணுவக் கூட்டு ரோந்து திட்டத்தை முடிவு செய்வோம்” என்றார்.

இவர் இதை சொல்லி முடிப்பதற்குள்ளாக விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கப்பற் படைகள் இராமேசுவரம் நோக்கி நகர்ந்து விட்டன. இலங்கை கப்பற்படைத் தளபதி கிரானாடோ “கொழும்பு போஸ்ட்” இதழுக்கு அளித்த நேர்காணலில் “விடுதலைப் புலிகளை ஒடுக்குவதில் இந்தியக் கப்பற்படை பெரும் உதவியாக இருந்தது. புலிகளை வென்றதில் இந்தியக் கப்பற்படையின் ஒத்துழைப்பு தான் பெரிதும் காரணமாக இருந்தது” என்றார்.

2008 செப்டம்பர் 9&ஆம் நாள் அனுராத புரத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய வான் படைத் தாக்குதலில் வேவு பார்க்கும் இந்திய ரேடார் கருவிகளை இயக்கிக் கொண்டிருந்த இந்திய இராணுவ தொழில்நுட்ப பொறி யாளர்கள் இருவர் படுகாயம் அடைந்தபோது தான், சோனியா காங்கிரசின் ஆட்சி, இந்திய இராணுவ வீரர்களை நேரடியாக களத்தில் இறக்கி, ஈழத் தமிழர்களை கொன்றழித்து வரும் உண்மை வெளியானது.

2009 சனவரி மாத இறுதியில் இந்தியப் போர்ப் படையினர் 4 பேர் படுகாயம் அடைந்து, கொழும்பு இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததை, ஆஸ்தி ரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் உலகத் தமிழ் (ஜி.டி.வி.) தொலைக்காட்சி தெரிவித்தது.

சிங்களப் படைக்கு ஆதரவாக ஈழத் தமிழர் களை கொன்றிழிப்பதற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவத்தினரில் 200&க்கு மேற்பட் டோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர் களின் உடல்கள் இந்தியக் கொடி போர்த்தப் பட்டு, சிங்கள இராணுவத்தினருடன் மரியாதை யுடன் புனே நகருக்கு கொண்டு வரப்பட்ட செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து போரில் காயமடைந்த 125&க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள இந்தியப் போர்ப்படை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். “கல்மடு குளம் அணையைத் தகர்த்தபோது இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் செத்துப் போயினர். இதில் கணிசமானோர் இந்திய இராணுவத்தினர் ஆவர். அதேபோல் 58 மற்றும் 59ஆவது இராணுவப்பிரிவு, விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனது.

இந்த இழப்புகளை எல்லாம் ஈடுகட்டும் வகையில் 2009 சனவரி 30ஆம் நாள் 3000 இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு அனுப் பப்பட்டார்கள். இவர்கள் பாதுகாப்பாக போர்ப் பகுதிகளுக்கு செல்ல 48 மணி நேர போர் நிறுத்த கெடுவை இலங்கை விதித்தது. ஆனால், இந்த உண்மையை மறைப்பதற்காக, அப்பாவி மக்களை வெளியேற்ற போர் நிறுத்த கெடு என்று சிங்கள இராணுவம் பொய் மூட்¬யை அவிழ்த்து விட்டது. “இலங்கையில் போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து, தமிழின அழிப்பை நடத்துவதே இந்திய இராணுவம் தான்” என்கிற திடுக்கிடும் செய்தியை பிரான்சு நிறுவனம் வெளியிட்டது.

“சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப்போருக்கு இந்தியா அனுப்பி உள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகள் அந்த பீரங்கி களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கிகளின் கடுமையான வெப்பம் விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்” என்று ஜூனியர் விகடனும் (29&03&2009) இந்தியாவின் கொலைகாரதனத்தை அம்பலப் படுத்தியுள்ளது.

2005ஆம் ஆண்டில் அதிபரான இராட்சச பக்சே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினான். தொடர்ந்து ஈழத் தமிழர்களை தாக்கத் தொடங் கினான். எனினும் வெளிப்படையாக, போர் நிறுத்த உடன்பாட்டை முறித்துக் கொள்ளும் துணிச்சல் இல்லை. காரணம், விடுதலைப் புலிகளை போரில் வெல்ல முடியாது என்பதை மிக நன்றாகத் தெரிந்து வைத்திருந்தது சிங்கள இராணுவம்.

“எங்களுக்கு விடுலைப் புலிகள் பெரும் மிரட்டலாக விளங்கினர். அவர்களது போர் உத்திகள் ஒரே மாதிரியாக இருக்காது. எனவே தான் நாங்கள் தடுமாறினோம். ஆனால், இந்தியா கொடுத்த பயிற்சியின் மூலம் அதை சமாளிக்கும் திறமை எங்களுக்கு கிடைத்தது.

வனப்பகுதிகளில் போர் புரிவது உள்ளிட்ட முக்கிய பயிற்சிகளை நாங்கள் இந்தியாவில் தான் பெற்றோம். அங்கு எங்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

அதேபோல் தற்போது நடந்து வரும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கிய உளவுத் தகவல்களையும் எங்களுக்கு அவ்வப்போது இந்தியா அளித்து வந்தது. இந்தியக் கடல் பகுதியில் இந்தியன் கப்பற் படையும் எங்களுக்கு உதவியது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத் தின் வெற்றிக்கு முதன்மைக் காரணம், இந்தியா வழங்கிய தாராள பயிற்சி, இராணுவ உதவிகள், ஆயுதங்கள்தான் காரணம்” என்று இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை அழித் தொழிக்கும் முழுப் பொறுப்பை இந்திய இராணுவம் ஏற்றுக்கொண்ட காரணத்தால், 2008 சனவரியில் “போர் நிறுத்த உடன் பாட்டை முறித்துக் கொள்கிறேன்” என்று இராட்சச பக்சே வெளிப்படையாக அறிவித் தான்.

“2008 மாத இறுதியில் சார்க் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்ற மன்மோகன் சிங்குடன் பாதுகாப்புக்கு இந்தியப் படையினர் சென்ற னர். இவர்கள் யாரும் திரும்ப வரவே இல்லை. கிளிநொச்சியைத் தொடர்ந்து சனவரி 2ஆம் வாரத்தில் தர்மபுரத்தை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தது.

சிங்கள இராணுவத்துடன் ‘சுராஜ்’ என்கிற இந்திய இராணுவ வீரன் நெற்றிப் பொட்டுடன் இருந்தார். சிங்கள வழக்கப்படி நெற்றியில் பொட்டு இடக்கூடாது. இதன் மூலமும் நெற்றிப் பொட்டுடன் இலங்கை இராணுவத் துடன் இருந்த சுராஜ் இந்தியப் படையைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது. இந்தியா கொடுத்த ஆயிரம் கோடி ரூபாய் வட்டி இல்லாக் கடனைக் கொண்டுதான் இசுரேல், ரசியா, சீனா, ஈரான், பாக்கிசுதான் ஆகிய நாடு களில் இருந்து இலங்கை அரசு ஆயுதம் வாங் கிக் குவித்தது.

இந்தியாவின் உளவு நிறுவனமான ‘ரா’வின் அதி நவீன செயற்கைக்கோள் கேமரா மூலம் முல்லைத் தீவை படம் பிடித்து இலங்கை இராணுவத்திற்கு தந்தார்கள். இதன் காரண மாக ஈழத் தமிழர்களின் உயிர்காக்கும் மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், ஏற்றி வந்த 14 கப்பல்களை சிங்கள இராணுவம் சுட்டு கடலில் மூழ்கடித்தது. சிறப்புப் பயிற்சி பெற்ற 700 இந்தியப் படையினர், முல்லைத் தீவு காட்டுப் பகுதியில் ஊடுருவி தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர். குறைந்த தொலைவில் தாக்குதல் நடத்தும் சார்ட் ரேஞ்ச் ஏவுகணைகளை இலங்கைக்கு இந்தியா கொடுத் துள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இந்தப் போரை பின்னால் இருந்து இயக்கியதே இந்திய அரசு தான்” என்று வைகோ இந்திய அரசுமீது 2009 சனவரி மாதத்திலேயே குற்றம் சாட்டி உள் ளார்.

“2005&2006ஆம் ஆண்டில் 977 சிங்கள ராணுவத்தினருக்கும், 2006&2007 ஆம் ஆண்டில் 870 சிங்கள இராணுவத்தினருக்கும், 2007&2008 ஆம் ஆண்டில் 1058 இராணு வத்தினருக்கும் போர்ப் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணைய தளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இவைகள் எல்லாம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்த செய்திகள். வெளியில் தெரி யாத செய்திகள் எவ்வளவோ. ஈழத்தமிழர்களை அழித்தொழித்து போர்க்குற்றத்தை செய்த ராட்சச பக்சேவையும், பொன்சேகாவையும், கோத்தபய ராட்சச பக்சேவையும், பன்னாட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டுமென்று சிலர் முழங்குகிறார்கள். அப்படியானால், போர்க் குற்றத்திற்கு உடந்தையாகி இன அழிப்பை தூண்டிவிட்டு இன அழிப்புக்கு முழுக் காரணமாகத் திகழ்ந்த காங்கிரசு ஆட்சி யாளர்களை இவர்கள் என்ன செய்யப் போகி றார்கள்.

நன்றி

தமிழ் உலகம்