தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கண்ணீர் சாபம்!


இந்தியாவின் இராணுவ உதவியும், ஆயுத உதவியும், லட்சக்கணக்கான மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி யது. வீட்டை இழந்து, வயல்வெளிகளில், வெட்டவெளியில், உணவு இன்றி, உறக்கமின்றி தவித்த ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்...

கேட்பதற்கு நாதியில்லாமல் அன்றாடம் கொல்லப்பட்ட பல்லா யிரக்கணக்கான ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்...

ஒவ்வொரு நாளும் வீசப்பட்ட அபாயகரமான குண்டு வீச்சில் கால்களை இழந்து, கைகளை இழந்து, உடல் முழுவதும் ரத்த காயங் களால் ஊனமுற்று, மருத்துவ வசதி இல்லாமல் துடிதுடித்த பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகளின் கண்ணீர் சாபத்திற்கும்...

எப்படியாவது ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று பல ஆண்டு காலமாக அறவழியில் போராடி அவமதிக்கப்பட்ட பத்து கோடி தமிழர்களின் கண்ணீர் சாபத்திற்கும் காங்கிரசு கட்சி ஆளாகி உள்ளது.

இலங்கையில் எந்த விபரீதம் நடக்கக் கூடாது என்று தமிழக மக்கள் போராடினார் களோ, அந்த விபரீதம் 18&05&09 ஆம் நாள் நடந்து முடிந்திருக்கிறது. அந்நாள் உலகத் தமிழர்களின் கறுப்புநாள்.

6 கோடித் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி காங்கிரசு ஆட்சியாளர்கள் கொல்லைப்புறமாக சிங்கள பயங்கரவாத கொலைவெறியர்களுக்கு கொடுத்த கொலைகார ஆயுதங்கள், லட்சக் கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்களை கொன்று குவித்து, 35 லட்ச ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வுரிமையை வினாக்குறி(?) ஆக்கி உள்ளது.

காங்கிரசு கட்சியின் இப்படிப்பட்ட கொடூர மான கொலைவெறிக்கு யார் காரணம்? வெளி யுறவைத் தீர்மானிக்கும் மலையாளிகளா? மலையாளிகளைத் தீர்மானிக்கும் காங்கிரசா? இராசீவின் காலத்தில் இந்தியத் தூதராக இருந்த சிவசங்கரமேனன், இப்பொழுது (2005&2009) வெளியுறவுச் செயலாளராக உள்ளார். அப்பொழுது உளவுத்துறைத் தலைவ ராக இருந்த எம்.கே.நாராயணன், இப்பொழுது பாதுகாப்புச் செயலாளர். பாதுகாப்பு அமைச்ச ராக இருப்பவர் ஏ.கே.அந்தோணி. இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் சதீசு நம்பியார். இவர்தான் இப்பொழுது சிங்கள இராணுவத்திடம் ஊதியம் வாங்கிக் கொண்டு ரகசியங்களை சொல்லிக் கொடுக்கும் ஆள்காட்டியாக உள்ளார். இவரின் உடன் பிறப்பான விசய் நம்பியார், உலக நாடுகள் அவையின் சிறப்புத் தூதராக இருக்கிறார்.

இவர்களைப் பட்டியலிடுவதன் காரணம், இவர்கள் அனைவரும் மலையாளிகள். மன் மோகன் சிங்கின் தனிச் செயலாளர் டி.ஏ.கே. நாயரும், சோனியாவின் தனி உதவியாளராக உள்ள ஜார்ஜூம், தமிழக காங்கிரசின் மேலிடப் பார்வையாளர் வயலார் ரவியும் மலையாளி கள். இவர்கள்தான் இந்தியாவின் வெளியுறவை தீர்மானிப்பவர்கள். தமிழர்களை இலங்கை மண்ணில் அழித்தொழிக்கும் எண்ணத்துடன் செயல்படும் சிங்கள பயங்கரவாத வெறி அரசைப்போல, உலகளவிலும் இந்திய அளவிலும் தமிழர்களை அழித்தொழிப் பது இவர்களின் அறிவிக்கப்படாத உட்கிடக்கையாகும்.

இவர்கள் வாஜ்பாய் ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டார்கள். ஆகவே தான் அவர் தலைமை அமைச்சராக இருந்தபோது, இந்தியா தலையிட்டு ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்ய வில்லை என்றாலும், மிகப்பெரிய கெடுதல்களை செய்யவில்லை.

ஆனால் 2004&ஆம் ஆண்டு முதல் சோனியாவின் விரல் நுனியில் ஆட்டு விக்கப்படும் காங்கிரசு ஆட்சியாளர் களுக்கு வெளியுறவை தீர்மானிக்கும் மலையாள உடன்பிறப்புகள், சிங்கள பயங்கரவாத கொலைவெறியன் இராட்சச பக்சேவுடன் கள்ள உறவை அமைத்துக் கொடுத்தார்கள். இராணுவ உதவிகளை கொல்லைப்புறமாக (கமுக்க மாக) அள்ளிக் கொடுத்தார்கள்.

இதனால் 2006 ஆம் ஆண்டில் இருந்தே சிங்கள இனவாத கொலை வெறி அரசு, உச்சகட்ட தமிழின அழிப்பை முழுவீச்சில் தொடங்கி விட்டது. ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த, பலாலி வானூர்தி நிலையத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர். அந்த விமானத் தளத்தை இந்திய இராணுவம் சீரமைத் துக் கொடுத்தது. அந்த விமானத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட வான்படை, தேவாலயத் தில் ஆண்டவனை வழிபட்டுக் கொண்டிருந்த 168 அப்வாவித்தமிழ் மக்களை தாக்கி அழித்தது. இதற்கு போப் ஆண்டவரும் கண்டனம் தெரி வித்தார். ஆனால் இந்தியக் கபடதாரிகள் மட்டும் வாயைத் திறக்கவே இல்லை.

10 கோடி உலகத் தமிழர்களின் உயிர் நடுவமாகத் திகழ்ந்த கிளிநொச்சியை சுடு காடாக்க 2007ஆம் ஆண்டு முதலே கொலை வெறித் தாக்குதலை தொடங்கிய சிங்கள வெறி அரசால் அன்றாடம் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் கோட்பாரின்றி கொல்லப் பட்டார் கள். 2008 ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தில் முதன் முதலாக தீர்மானம் போட்டு, “இலங் கையில் போரை நிறுத்துமாறு” இந்தியாவை தமிழக அரசு வலியுறுத்தியது.

அதற்குப்பிறகு, ஒட்டுமொத்த தமிழகமே ஒன்று திண்டு எண்ணற்ற போராட்டங்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் நடத்தியது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்சியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வேண்டுமென்று, 6 கோடித் தமிழகத் தமிழர்களும் ஒரே குரலில் முழங்கினார்கள.

ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும்போது, பதறாமல் வேடிக்கை பார்த்த காங்கிரசின் வெளியுறவு அமைச்சர்களும், செயலர்களும் சிங்கள கொலை வெறி இராணுவத்துக்கு ஆபத்து என்றால் மட்டும் இலங்கைக்கு ஓடோடி உதவினார்கள். பிரணாப் முகர்சியும், எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேனனும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி சிங்கள கொலைவெறி அரசுக்கு உதவிகளைச் செய்ய இலங்கைக்கு செல்லும்போது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இவர்கள் இலங்கை செல்வதாகவும், போரை நிறுத்தச் சொல்லப் போவதாகவும், முதலமைச்சர் கருணாநிதி வாய்க் கூசாமல் அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்களை ஏமாற்றினார்.

அக்டோபர் 20ஆம் நாள் செய்தியாளர் களிடம் பேசிய இராட்சச பக்சே, 18&10&2008 ஆம் நாள் “மன்மோகன் சிங்குடன் பேசினேன். போரை நிறுத்துமாறு அவர் சொல்லவில்லை. கடந்த காலங்களில் கேட்ட உதவியை தேவைப் பட்டபோதெல்லாம் தட்டிக் கழிக்காமல் இந்தியா செய்துள்ளது” என்றார்.

அதையொட்டி மாநிலங்களவையில் பேசிய பிரணாப் முகர்சி, “இலங்கை இனச் சிக்கலுக்கு போர் மூலமாக தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சின் மூலமாகவே தீர்வு காண முடியும். ஆனால், இலங்கைக்கு இராணுவ உதவியை நிறுத்த முடியாது” என்றார். ஏன் இந்த இரட்டை நாக்கு-? அமைதி மூலம்தான் தீர்வு என்றால், இலங்கைக்கு இராணுவ உதவியை இந்தியா ஏன் அளிக்க வேண்டும்?

2008 நவம்வர் 13ஆம் நாள், ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்க ராட்சசபக்சே தில்லி வந்தார். தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகு, “போரை நிறுத்த முடியாது” என்று இந்தியாவின் தலைநகரிலேயே திட்டவட்டமாக சொன்னார். இதில் என்ன வேடிக்கை என்றால் அதற்கு முன் நாள் (12&11&2009) தமிழக சட்டமன்றத்தில், “இலங்கையில் இந்தியா தலையிட்டு உடனடி யாகப் போரை நிறுத்த வேண்டும்” என்று இரண்டாம் முறையாக தீர்மானம் போடப் பட்டது.

காங்கிரசின் தூண்டுதலில் இன அழிப்பை நடத்தும் சிங்கள அரசின் கொலை வெறியை உணர்ந்துகொண்ட விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக 2&01&2009 ஆம் நாள் கிளிநொச்சியில் இருந்து முல்லைத் தீவை நோக்கி நகர்ந்தார்கள். புலிகளுடன் 3 லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்களும் இடம் பெயர்ந்தார்கள்.

ஆள் அரவம் அற்ற கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கொண்டாடியது சிங்களக் கொலைவெறி இராணுவம். சொந்த மண்ணை இழந்து, வீடு வாசல்களை இழந்து, மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களைப்போல சொந்த மண்ணிலேயே அகதிகளான மூன்று லட்சம் மக்களைப்பற்றி கவலைப்படாத இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், கிளிநொச்சியைக் கைப் பற்றிய சிங்கள இனவாத கெலைவெறி யன் பொன்சேகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவரின் தமிழின அழிப்பு நடவடிக் கைக்கு சற்றும் சளைத்தவனில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களை தங்க ளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சு வதைப்போல பேசினார். ஈழத் தமிழர்கள் மீது முப்படை களை ஏவி அப்பாவி மக்களை கொல்லும்போதெல் லாம், இலங்கை சென்று உடனடி யாக போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக மக்களும் போராடியபோதெல்லாம் இலங்கை செல் லாத இந்திய வெளியுறவுச் செயலாளர்கள், கிளி நொச்சியைப் பிடித்ததும், 5 லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள் சொந்த மண்ணில் சிங்கள இராணுவத்தால் உயிருக்கு உத்தரவாதம் இன்றி அகதிகளாக மரண ஓலம் எழுப்பியபோது, சனவரி 2ஆம் வாரத்தில் இலங்கை சென்ற சிவசங்கரமேனன், இலங்கை அரசுடன் எங்கள் உறவு கதகதப்பாகவும், இதமாகவும், சுமுகமாகவும் இருக்கிறது” என்று சொன்னார். இதிலிருந்து காங்கிரசு ஆட்சி யாளர்கள் தமிழின அழிப்பு சதியை நிறை வேற்றியதில் சிங்களவர்களைவிட முனைப் பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள் என்பது விளங்கும்.

கிளிநொச்சியைக் கைப்பற்ற, போர் விதி களை மீறி, சிங்கள கொலை இராணுவம் ஓராண்டாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக் கில் கொன்று குவித்த அப்பாவி தமிழர்களைப் பற்றியோ, சொந்த மண்ணிலேயே அகதிகளாக் கப்பட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களைப் பற்றியோ, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஒருநாளும் கவலைப் பட்டதில்லை.

பாதுகாப்பு வளையங்கள் மீது தஞ்ச மடைந்த மக்கள் மீது கொலைவெறித் தாக்கு தலை சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி யது. நாள்தோறும் நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவிப்பதை நிறுத்தவில்லை. இதனால் மூன்றாம் முறையாக 23&01&09 ஆம் நாள் “ஐயகோ! இலங்கையில் தமிழினம் அழிகிறது. அங்கே உடனடியாக போர் நிறுத்தம் செய்து, புத்தர் உலவிய புனித பூமியில் அமைதி நிலவ ஆவன செய்ய வேண்டும்” & என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுக்கப் பட்டது.

தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்திற்கு செவி சாய்க்காத வெளியுறவு அமைச்சர் பிரனாப், இலங்கை வெளியுறவு அமைச்சரின் அழைப்பை ஏற்று 27&01&09 ஆம் நாள் இலங்கை சென்றார். தமிழின அழிப்புப் போரை நிறுத்தச் சொல்வதற்காக, பிரணாப் முகர்சி கொழும்பு வரவில்லை என்று இலங்கை யில் உள்ள இந்திய தூதரகம் தெளிவு படுத்தி யது. இதற்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர் இராமதாசு அவர்கள், “பிரணாப்பின் கொழும்பு பயணம் ஏமாற்றமாக உள்ளது. நாடகம் நடக்கட்டும்” என்று கண்டித்தார்.

இதைத் தொடர்ந்து, 2009&பிப்ரவரி 13 ஆம் நாள் “போரை நிறுத்த கட்டாயப் படுத்த முடியாது” என்று மக்களவையில் பிரணாப் முகர்சி அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், சிங்கள கொலை வெறியர்களின் தமிழின அழிப்பை மூடி மறைக்கும் வகையில், ஈழத் தமிழர்களை பாதுகாக்க உயிரைக் கொடுத்துப் போராடும் விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டினார்.

இதைக் கண்டித்து பா.ம.க.வின் மக்களவை உறுப்பினர்கள், பல நாட்களாக தொடர்ந்து கறுப்புச் சட்டை அணிந்து, நாடாளுமன்றத்தில் கண்டனக் கணைகளை எழுப்பியதுடன், நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமர்ந்தும் போராடினார்கள்.

“மக்களவையில் பிரணாப் முகர்சி வெளி யிட்ட அறிக்கை, இலங்கைத் தமிழர் மீது, சிங்களக் கொடியவர்கள் வீசிய குண்டுகளை விடக் கொடுமையானது” என்று வைகோ வேதனையை வெளிப்படுத்தினார். 22&04&09 ஆம் நாள் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செய்தியாளர் ஒருவர் பிரணாப்பிடம், “இந்தியா வலி யுறுத்தியப் பிறகும் இலங்கை அரசு போரை நிறுத்தவில்லையே?” என்று கேட்டார். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதைப்போல, “நாங்கள் நிறுத்தச் சொல்லவில்லை. நாங்கள் சொல்வதைத் தான் இலங்கை அரசு செய்கிறது” என்று பிரணாப் முகர்சி சொன்னார். இதிலிருந்து தெரிவதென்ன? இலங்கையில் தமிழின அழிப்புப் போரை நடத்துவதே காங்கிரசு அமைச்சரவைதான்.

சிங்கள கொலைவெறியர்களுக்கு ஆயுதப் பயிற்சி, ஆயுத உதவி இராணுவ உதவி, நிதி உதவி, இராச தந்திர உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கி, ஈழத் தமிழர்களை அன்றாடம் நூற்றுக் கணக்கிலும் ஆயிரக் கணக்கிலும் கொன்று குவிக்க காங்கிரசு ஆட்சியே காரணமாக இருந்தது.

இது தெரிந்திருந்தும் இந்தியாவின் ஒருமைப் பாட்டையும், இறையாண்மை யையும் காக்கும் வகையில் தமிழகத் தமிழர்கள் அமைதி வழியில் போராடி னார்கள். திசம்பர் 4 ஆம் நாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், மன்மோகன் சிங்கை நேரில் பார்த்து, இலங்கையில் போரை நிறத்துமாறும், அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்குமாறும் வேண்டி னார்கள்.

அதற்குப் பிறகும் போரை நிறுத்தாத காங்கிரசு ஆட்சி, அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோதும், இந்தியா, சிங்கள அரசை கண்டிக்கவில்லை. 2009 மே 9 ஆம் நாள் தமிழக முதல்வர் கருணாநிதியை அமைதிப்படுத்த சென்னை வந்த மன்மோகன் சிங், 35 லட்சம் தமிழர்களின் இறை யாண்மையை காக்க உயிரைக் கொடுத்துப் போராடிக் கொண்டிருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை “பயங்கரவாத இயக்கம்” என்று வாய் கூசாமல், மனசாட்சியில்லாமல் சொன்னார்.

உண்மையைச் சொல்வதென்றால், ஈழத் தமிழர்களை அன்றாடம் நூற்றுக் கணக்கிலும், ஆயிரக் கணக்கிலும் கொன்று குவிப்பதற்கு முழு முதற்காரணமாகத் திகழ்ந்த காங்கிரசு கட்சிதான் பயங்கரவாதக் கட்சி ஆகும்.

அதற்கடுத்த நாள் (மே. 10) சோனியா, தமிழகம் வந்தபோது, 3000&க்கும் மேலான ஈழத்தமிழர் களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இலங்கையில் போரை நிறுத்த எங்க ளால் இயன்றதை செய்துவிட்டோம்” என்றார். உண்மை என்னவென்றால் இலங்கை அரசு போரை நடத்தவும், அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்கவும் அதிகபட்ச உதவிகளை சோனியா செய்தார் என்பதே உண்மை.

இவைகள் எல்லாம் தெரிந்திருந்தும், ஈழத் தமிழர்களைக் காக்கவும், போரை நிறுத்தவும் போராடுவதைப்போல் பேராடாமல், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதற்கு திராவிடத் தலைவர் கருணாநிதியும் ஒரு காரணமாக இருந் தார் என்பதே உண்மை. தமிழக முதல்வரை மீறி, இந்தியாவை ஆளும் காங்கிரசால் நிச்சயமாக ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க உதவியிருக்க முடியாது.

நன்றி

தமிழ் உலகம்