கேட்டால் தேசியம் என்பார்கள் அல்லது இறையாண்மை என்பார்கள் , இவை எல்லாவற்றையும் விட மிகபெரிய துணை அவர்களுக்கு , அந்தந்த மாநிலத்தை சேர்ந்த அரசியல் வாதிகளும் அரசியல் கட்சிகளும் மாநில நலனை விட்டுவிட்டு , மக்கள் மன ஓட்டத்திற்கு எதிராய் டெல்லியில் இருப்பவர்களை குளிர்விக்க பாடுபடுவதுதான் , டெல்லியின் அதிகார உறுதியின் மூலம் தமது மாநில அரசியல் எனும் வியாபாரம் அல்லது தமது பொருள் ஈட்டும் வேலைகளுக்கு அரசியலை பயன்படுத்தும் ஒரு மிகபெரிய உத்தியே இது .
காங்கிரஸ் காரர்களை பொறுத்த வரை ,அவர்களிடம் பொதுநலம் நாட்டின் நலம் எப்போதுமே இல்லை.அப்படி இருந்தால் தமிழ் நாட்டில் , பெரியார் அவர்களை எதிர்த்திருக்க மாட்டார் இப்போது எக்கட்சியிலும் இல்லாத நெடுமாறன் அதனை எதிர்த்திருக்க மாட்டார் ஏன் மூப்பனார் கூட சாகும் வரையில் காங்கிரஸ் கட்சியில் இல்லை . தமிழ் மாநில காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதிலேயே இயங்கினார்.
இந்தியாவின் பீடை, என்று திருந்தும் இந்த காங்கிரஸ் அன் கோ .?