இந்த வருடம்- தெலுங்கானா , ஏமாற்றும் ஆந்திர அரசு சென்ற வருடம் ஈழதமிழர் பிரச்சினை - ஏமாற்றிய தமிழக அரசு.
ஈழதமிழர் பிரச்சினையை ஆந்திராவின் தெலுங்கானா பிரச்சினையோடு நாம் சம்பந்தபடுத்தி பார்த்தால் (இரண்டுக்கும் பொதுவானது மத்திய காங்கிரஸ் அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது நாடகம் ஆடுகிறது என்பது இருபதனால்) உஸ்மானியா பலகலை கழக மாணவர்களின் தீவிர போராட்டத்தின் ஊடாக , சந்திரசேகர் ராவின் உண்ணாவிரதத்தில் ஆரம்பித்தது இப்போதைய தெலுங்கானா தனி மாநில பிரச்சினை.
பின்னர் உண்ணாவிரத்தை கை விட்டார் ராவ், உண்ணாவிரதத்தை கைவிட்டால் ரவை அடிப்போம் என்று மாணவர்கள் குறிப்பாக உஸ்மானியா பல்கலை கழக மாணவர்கள் போராட்ட எச்சரிக்கை விடுத்ததால் , ராவ் மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார் இந்த முறை அவர் பத்து நாள் உண்ணாவிரதம் இருந்தார். அந்த பத்து நாளும் தெலுங்கானா மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வன்முறை ஏற்பட்டது . அரசாங்கம் இயங்க முடியவில்லை.
தெலுங்கான பகுதியை சேர்ந்த அத்துனை சட்டமன்ற உறுப்பினர்களும் மதிய அரசாங்கதிற்கான மக்கள் பிரதிநிதிகளும் (நாடாளுமன்ற உறுபினர்கள்) , கட்சி பேதம் இல்லாமல் தமது பதவியை ராஜினமா செய்தனர்.
காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது . ஆளுநர் ஆட்சி ஏற்படும் என்று செய்திகளும் வந்தது.
இச்சமயத்தில் காங்கிரஸ் அரசு , தெலுங்கானாவை பரிசீலிப்போம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதற்க்கான ஆய்வு வேலைகள் நடபதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார் .
ராவ் உண்ணா விரதத்தை கைவிட்டார்.
தெலுங்கானா அல்லாத பகுதிகளில் ஒன்று பட்ட ஆந்திரா என்ற கோரிக்கைகளில் போராட்டம் தொடர்ந்தது. வீம்புக்கு இப்பகுதியில் உள்ள அமைச்சர்கள் அனைத்து உறுப்பினர்கள் தமது பதவியை ராஜினாமா செய்தனர் .
ஒன்றுபட்ட ஆந்திராவிற்க்காக சிரஞ்சீவி போன்றோர், தமது பதவியை துறந்தனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் ச ம உ உஸ்மானியா பலகலை கழகத்தில் தாக்கப்பட்டார் . தக்க சொன்னது ராவ் என்று தெலுகு தேசம் சொன்னது. தெலுகு தேசம் நாடகம் ஆடுகிறது என்று ராவ் சொன்னார்.
இப்போதுதான் மத்திய காங்கிரஸ் அரசு தனது வழக்கம் போலான ஈழத்தமிழர் விசயத்தில் சென்ற ஆண்டு தமிழர்களுக்கு, தமிழக அரசாங்கத்தையும் கையில் வைத்து கொண்டு செய்த துரோகத்தை போல , தெலுங்கான துரோகத்தை, ஆந்திர மாநில அரசாங்கத்தை கையில் வைத்து கொண்டு (ஒரு வித்தியாசம் தமிழகத்தில் காங்கிரஸ் பேச்சு கேட்ட திமுக இருந்தது, ஆந்திராவில் மேலும் வசதி காங்கிரஸ் அரசே மாநிலத்திலும் இருக்கிறது ) அரங்கேற்ற தொடங்கியது,
தனது அரசின் அதாவது காங்கிரஸ் அரசின் அங்கத்தினர் அனைவரையும் தனது நாடகத்திற்கு நன்றாய் பயன்படுத்தி கொண்டது, கவிழ்வது போல் இருந்த அரசாங்கத்தை கள்ளதனதினால் காப்பாற்றியது. எப்படி ?
தெலுங்கான எதிர்ப்பு போராட்டத்தை தீவிரம் அடைய அரசாங்கமே முன்னின்று உதவியது. தெலுங்கான எதிர்ப்பு போராட்ட செய்திகளை அணைத்து மீடியாக்களிலும் பிரதானமாய் ஆக்கியது.
அறுபது ஆண்டு கால தெலுங்கான போராட்டத்தை ராவின் போராட்டமாய் காட்டியது அவரை டெல்லி வரவழைத்தது. பேசியது .
பின்பு தெலுங்கான எதிர்ப்பு போராட்ட பிரதிநிதிகளாய் இருக்கும் தமது பிரதிநிதியான சிரஞ்சீவி போன்றோரை வரவழைத்து பேசியது அதை மீடியாக்களின் செய்தியாக்கியது.
பின்னர் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர் தான் 'தெலுங்கான' பற்றிய முடிவு எடுக்கப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை(?) எடுத்தது.
இப்போது மறுபடியும் தெலுங்கான ஆதரவு பிரச்சினை போராட்டம் ஆரம்பித்து விட்டது. இடையில் ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு ரிலையன்ஸ் கம்பெனி தான் காரணம் என்ற ஒரு அடுத்த கட்ட அரசாங்க மோசடி போராட்டத்திநை தூண்டி விட்டது. அத காங்கிரஸ் காரர்களை கொண்டே செய்ய விட்டது. பத்து நாட்களுக்கு தெலுங்கான பிரச்சினையை நீர்த்து போக முயற்சித்தது.
இப்போது பல போராட்டங்கள் செய்து அழுத்த மாணவர்கள் தீக்குளிப்பு தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
மேற்கண்ட போல்தான் பல நிகழ்வுகள் சென்ற ஆண்டு ஈழத்தில் தமிழர்களை இந்திய சார்பு இலங்கை அரசு தினம் தினம் குறைந்தது நூறு பேரை 2008 சூன் மாதம் முதற்கொண்டே கொன்று குவித்து வந்தது ,
யுத்த நெறிமுறைகளை மீறி , தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பிரயோகித்தது, அதை டெல்லியிலிருந்து காங்கிரஸ் அரசின் பிரதிநிதிகள் சென்று போர் மேர்பார்வையிட்டார்கள்.
கொள்ளும் தமிழர்களை காப்பாற்றுமாறு தமிழகமே மன்றாடியது , போராட்டங்கள் வெடித்தன. வெடித்த போராட்டத்தை கருணாநிதியே நீர்த்து போக செய்தார்.
ராஜினாமா செய்வோம் என்றார். ஏமாற்றினார்.
பின்னர் கொட்டும் மழையில் அனைவரையும் நிற்க வைத்தார். ஏமாற்றினார் .
இடையில் காங்கிரஸ் தலைவர்கள் அது ஒரு நாட்டின் இறையாண்மை நாம் எப்படி தலையிட முடியும் என்றார்கள் . இந்தியாவிற்கும் ஈழ பொறுக்கும் சம்பந்தம் இல்லை என்றார்கள் . ஏமாற்றினார்கள் .
தமிழகத்தின் அணைத்து தரப்பினரும் போராட்டத்தை கையில் எடுத்தனர் . வக்கீல்கள் தீவிரமாய் போராட்டத்தை கையில் எடுத்தனர் . அதை அவர்களை அடித்து உதைத்து அவர்களுக்கு கட்சி பேதங்களை புகுத்தி உயர்நீதிமன்றத்தில் பெரிய கலவரத்தை உண்டு பண்ணி போராட்டத்தின் ஓட்டத்தை மாற்றினார்கள் . தமிழக அரசு ஏமாற்றியது.
முத்து குமார் குமுறினார். தன்னையே தீக்கிரை ஆக்கினார் .போராட்டம் வலுபெற்றது . முத்து குமாரை தொடர்ந்து பதினேழு பேர் தீக்கிரை ஆனார்கள் . அனைத்தையும் அரசாங்கம் கொச்சை படுத்தியது . குடும்ப சண்டையில் இறந்தார்கள் என்றது அவர்கள் மீதே பொய் வழக்கும் போட்டது . தமிழர்களை ஏமாற்றியது.
இத்தனைக்கும் நடுவில் இலங்கையில் இஅலங்கை அரசின் அட்டகாசங்கள் அனைத்தும் "லைவ் கமெண்டரி " போல தமிழக அரசிற்கும் இந்திய அரசிற்கும் வழங்கப்பட்டது. எல்லாம் செய்து தமிழர்களை ஏமாற்றியது.
மிக முக்கியமாய் , தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருமாவளவனை கைக்கும் போட்டு கொண்டு அடுத்த கட்ட 'ஈழ சார்பு ஆனால் உண்மையில் எதிர்ப்பு ' என்ற நாடகத்தை மிக திறமையாக நடத்தியது . தமிழர்களை ஏமாற்றியது .
உச்ச கட்டமாக . மெரீனாவில் முதல்வர் கருணாநிதியே உண்ணாவிரதம் இருந்தார் , இலங்கையில் போரை நிறுத்தி விட்டோம் என்றார் . அப்போதும் ஏமாற்றினார் . உண்மையான போராட்டத்தை நீர்த்து போக செய்தார் . சரித்திர புகழ் வாய்ந்த மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தார் . சிதம்பரம் போர் நின்று விட்டதாக அறிவித்தார் .
மூன்றே மணி நேரத்தில் ஈழ போராட்டத்தை நிறுத்து விட்டார்கள் என்று ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டினார்கள் . இப்போதும் ஏமாற்றினார்கள்.
இலங்கையில் தமிழர் அழிப்பு உச்ச கட்டத்தை அடைந்த பொது ஒரு ஆளும்கட்சியின் சார்பில் ஒரு மாநாடு நடத்தினார்கள் , பிரபாகரனை போரஸ் மண்ணை போல் நடத்த வேண்டும் என்றார்கள் . என்றால் அர்த்தம் என்ன? தேர்தலுக்காக அப்போதும் ஏமாற்றினார்கள் .
தேர்தல் வந்தது , முடிவுக்காக காத்திருந்தார்கள் , முடிவு காங்கிரஸ் அரசிற்கு சாதகமாக வந்தது . உச்சக்கட்டமாய் ஒரே நாளில் 'புள் டோசர்களை ' கொண்டு தமிழர்கள் அனைவரையும் உரியிரோடு இருந்தவர்கள் , கை கால இல்லாதவர்கள் , குழந்தைகள் , போராளிகள் என்று அனைவரையும் கொன்றார்கள் .
இதற்கும் காங்கிரஸ் அரசிற்கும் சம்பந்தம் இல்லை என்று தமிழக முதல்வரும் சொன்னார் மத்திய அரசும் சொல்லியது. ஏமாற்றினார்கள் .
போராளிகள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் என்று இலங்கை போரை நிறுத்தியது . பிரபாகரன் செத்தார் என்று செய்தி பரப்பியது .
முள் வெளிக்குள் மூன்று லக்ஷம் தமிழர்களை சிங்கள அரசு அடைத்தது , இப்போது தமிழகத்தில் ஒரு சலிப்பு அல்லது எளவு வீட்டின் தன்மை ஏற்பட்டது .
உரிமையக்கு போராடிய தமிழ் உலகம் இப்போது முள் வெளிக்கு வெளியே வர போராட வேண்டியிருக்கிறது , ஆம் நன்றாய் தமிழகத்தை மத்திய காங்கிரஸ் அரசும் தமிழக ஆளும் அரசும் ஏமாற்றியது .
நடேசன்
நெல்லை