தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நான்கு திசைகளில் இருந்தும் தமிழ் இளைஞர்கள் செல்வார்கள்-காசியானந்தன்

நடக்கப்போகும் ஈழ விடுதலைப்போரில் தமிழ்நாட்டில் இருந்தும் உலகின் நான்கு திசைகளில் இருந்தும் இளைஞர்கள் செல்வார்கள் என்று உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூலினை வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்துகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆயுதங்கள் மிகவிரைவில் ஈழமண்ணில் முளைக்கும். ஆயுதம் தேவை என்பதை உணர்ந்த மக்களாக வதைமுகாம்களுள் உள்ள மக்கள் உணர்வுகளுடன் காணப்படுகின்றார்கள். தேவை இருந்தால் போரட்டம் தொடரும். இதுவரை தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கவில்லை. இதனால் தமிழ்மக்களின் தேவையுள்ளது. ஆகவே தேவை இருந்தால் போராட்டம் தொடரும், எமக்கு உறுதியாக தெரியும் தமிழ் மக்களின் விடுதலையினை சிங்களவர் தரப்போவதும் இல்லை. அதேவேளை தமிழர்கள் பெறாமல் விடப்போவதும் இல்லை.

இப்போது விடுதலைப்புலிகளின் இயக்கத்தை பற்றி திறனாய்வு செய்கின்றார்கள். ஆனால் ஈழமண்ணில் எதிர்காலத்தில் நடைபெறுகின்ற ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்தும் இளைஞர்கள் செல்வார்கள். உலகின் நான்கு திசைகளில் இருந்தும் தமிழ் இளைஞர்கள் செல்வார்கள்.

தமிழ் இளைஞா்களின் துணையுடன் ஈழ விடுதலைப் போராட்டம் மேலும் மேலும் எழும் என்பதில் உறுதியாகியுள்ளது என்றும் உணர்ச்சிகவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.