தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்பில் விபச்சாரம்!


பாண்டிச்சேரியில் சில தோழர்களிடம் சமூக குற்றங்கள் நடைப்பெறும் இடங்களையும் அதன் பின்னணி அரசியல் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.

பணம் கிடைக்குமென்றால் மலத்தில் இருந்தும்கூட அரிசி பொறுக்கும் பொறுக்கிகள் தானே அரசியல்வாதிகள்.

பாலியல் தொழிலாளியாக ஒரு பெண்ணை சமூகம் உருவாக்கும்போது அவள் உடல் மூலதனத்தில் பங்கு கேட்கும் வேலையை மாமா என்பவன் மட்டுமா செய்கிறான்? போலீஸ்காரனும் அங்கே மாமாவாகிறான். ஆளும் கட்சிக்காரனும் மாமாவாகிறான். இவர்களிடம் திண்டாடும் பாலியல் தொழிலாளிகளின் நிலை எப்படி இருக்கும்?

தெரிந்துக் கொள்ள விரும்பினேன்.

சில தோழர்களின் உதவியுடன் பாண்டிச்சேரி மறைமலை அடிகள் சாலையில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிற்குள் புகுந்தோம்.

எப்பவும் கூட்டம் அதிகமாகவே இருக்கும் பொது இடம்தானே பஸ் ஸ்டாப். ´ஜே ஜே´ வென்றிருந்த கூட்டத்தில் தேட ஆரம்பித்தனர் தோழர்கள்.

"அதோ இருக்காங்க பாருங்க, சிகப்பு கலருல பூ போட்ட சேலை. கூட இருக்கிறதுங்களும் அதுங்கதான்" என்றார்கள்.

தோழர்கள் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கினேன். சராசரி கிராமத்து பெண்கள் தோற்றம். கூட்டாக நான்கைந்து பெண்கள்.

இந்த பஸ் ஸ்டாப்பில் இவர்கள் மட்டும் தானா?

"இல்லை அங்கங்கே குரூப்பா இருக்குங்க..."

"சரி இந்த குரூப்பை நோட்டம் விடுவோம்" என்றேன்.

"ம்ம்ம்...." என்றார்கள் தோழர்கள்.

பஸ் ஸ்ட்டாப் ஆண்களோ என்னை நோட்டம் விட ஆரம்பித்தார்கள்.

"தோழர் உங்களை தப்பா புரிஞ்சிப்பாங்க.. நீங்க வேணா போங்க! நாங்க தகவல் சேகரித்து எடுத்துத்திட்டு வறோம்" என்ற தோழரை அமைதிப்படுத்தினேன்.

"பார்த்தால் பார்க்கட்டும், ரேட்டு கேட்டு வந்தா பார்த்துக்களாம்" என்றேன்.

தோழர்கள் அதிர்ச்சியோடும், சங்கடத்தோடும் பார்த்தார்கள்.

இந்திய சட்டத்தின்படி விபச்சாரம் செய்வது குற்றமா? என்ற கேள்வி எழும்போது ´ஆம்´ என்கிறது இந்திய சட்டம்.[1]

அதுவும் பொது இடங்களில் விபச்சாரம் செய்வது கடும் குற்றம் என்னும் இந்திய சட்டம் பொது இடத்தில் இருந்து 182-மீட்டர் தூரம் தள்ளி விபச்சாரம் இருந்தால் குற்றமில்லை என்கிறது.

[a woman (male prostitution is not recognized in the Indian constitution) can use her body´s attributes in exchange for material benefit. In particular, the law forbids a sex worker to carry on her profession within 200 yards of a public place. The Immoral Traffic (Prevention) Act or PITA is a 1986 amendment of legislation passed in 1956]

ஆனால் பொது இடத்தின் மையத்தில் விபச்சாரம் நடக்கிறது பாண்டிச்சேரியில் பட்டப்பகலில்...

இது அரசாங்கத்திற்கு தெரியாதா? போலீசுக்கு தெரியாதா?

தெரியும். மிக நன்றாகவே தெரியும். மாமாக்களுக்கு மாமுல் சரியாக கொடுக்கப்படும் வரையில் சட்டமாவது, மசுராவது என்னும் நிலையில் அரசியல்வாதிகளும், போலீசும் இருக்கிறது. இவர்களை மீறி என்ன செய்துவிட முடியும்?

யாரோ நடுத்தர வயதுடைய இளைஞன் ஒரு பெண்ணிடம் சென்று ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான். சில நிமிடங்களிலேயே அவர்களுக்குள் பேசி முடிவு செய்திருக்க வேண்டும்.

வந்த ஆள் நடக்க ஆரம்பித்தான். சில அடிகளின் பின் அந்த பெண் செல்ல ஆரம்பித்தாள். அவள் பச்சை கலர் புடவை கட்டியிருந்ததால் அவளுக்கு பச்சை என்று குறிச் சொல் வைக்கிறோம்.

அடுத்து மஞ்சள் புடவையிடம் ஒரு ஆள் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறான். கொஞ்சம் காரசாரமாக பேரம் நடக்கிறது. கடைசியாக வந்தவனுடன் செல்ல ஆரம்பித்தது மஞ்சள்.

தோழர்களிடம் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கவனிக்க பின்னால் செல்வோம் என்றதும் ஓகே என்றார்கள். நாங்களும் அவர்களுக்கு பின்னால் நடக்க ஆரம்பித்தோம். நெரிச்சலான கூட்டத்தை தள்ளிக் கொண்டு வெளியேறிய போது, அந்த ஜோடி பாலத்தின் மீது ஏறி நடக்க ஆரம்பித்தது. கீழே சாலை. அந்த பாலம் ரோட்டை தாண்டி அடுத்த பக்கத்தில் இறங்குகிறது. அங்கேயே பக்கத்து பக்கத்தில் இரண்டு
லாட்ஜ்.

ஒன்று ´எல்.மங்கலஷ்மி கெஸ்ட் ஹவுஸ்´
மற்றொன்று ஆங்கிலத்தில் ´ஸ்டார் கெஸ்ட் ஹவுஸ்´

என்று எழுதிய போர்டுகள்.

அதில் மங்கலஷ்மிக்குள் புகுந்தது ஜோடி.

இதற்கு மேல் என்ன செய்வது? உள்ளே நுழைவதா? இங்கேயே இருப்பதா?

தோழர்களிடம், "கெஸ்ட் ஹவுஸ்ல வேலை செய்பவரிடம் விசாரிக்கலாம் வாங்க" என்றேன்.

"அது மட்டமான கெஸ்ட் ஹவுஸ். அதனுள் நுழைய வேண்டாம். பாதுகாப்பாக வெளியே இருப்பதே நல்லது" என்றார்கள்.

சரியென்று பட்டது. கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் பெட்டி கடை. வெளியே தான் நிற்க முடியும். அங்கே ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு நேரத்தை ஓட்டலாம் என்று தோன்றியது.

அப்படியே தோழர்களோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. 15-நிமிடங்களில் ஸ்டார் கெஸ்ட் ஹவுஸில் இருந்து முதலில் சென்ற பச்சை வெளியே வந்தது. எங்களை பார்த்துக் கொண்டே சென்றது. பாலத்தின் மீது தனியே நடக்க ஆரம்பித்தாள் பச்சை. தளர்வாய், சோர்வாய் அடிக்கும் வெயிலுக்கு வழிந்த வியர்வையை முந்தானையில் துடைத்தபடி மீண்டும் என்னை திரும்பி பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தாள். மீண்டும் சில நிமிடங்களுக்குள்ளோ அல்லது சில மணி நேரங்களுக்குள்ளோ வேறு ஆணோடு பச்சை மீண்டும் இந்த இடத்திற்கு வரக்கூடும். நடுத்தர வயதான அந்த பெண்ணிடம் படுத்த பொடியனுக்கு 25-வயதிற்குள் தான் இருக்கக்கூடும். கொடுமை!

35-வது நிமிடத்தில் மங்கலஷ்மி கெஸ்ட் ஹவுசில் இருந்து வெளியேறிய மஞ்சள் பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்தது. நாங்களும் நடக்க ஆரம்பித்தோம்.

அருகில் இருந்த ஒரு தோழரை போய் ரேட் கேட்க சொன்னேன்.

"என்னங்க தோழர்... குடும்பத்துல பிரச்சனை வந்துடப் போகுது.." பயந்துக் கொண்டே சொன்னார்.

"அட போங்கப்பா! சும்மா மேட்டரை கேட்க போறதுக்கு இப்படி யோசிச்சிட்டு..." என்றேன்.

கொஞ்சம் தயங்கி தயங்கி மெதுவாக நடந்தவர் சற்று வேகமாக மஞ்சள் புடவையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

"என்னங்க..."

அந்த பெண்ணை பார்த்து குரல் கொடுத்ததும் மஞ்சள் திரும்பியது. ஏதோ பேச ஆரம்பித்தார். மஞ்சள் பாலத்தின் கைப்பிடியில் உடம்பை சாய்த்து வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். குரலில் சோர்வு தெரிந்தது. நாங்கள் அவர்களை கடந்து செல்ல ஆரம்பித்தோம்.

பாலத்தில் இருந்து இறங்குவதற்குள் பச்சை வேறு ஆளோடு பாலத்தில் ஏற ஆரம்பித்தது.

"அதுக்குள்ளவா கிராக்கி வந்திருச்சி?" ஆச்சரியமாக தோழர்களை கேட்டேன்.

"ஆமாங்க தோழர் இந்த இடத்துல ஆளு இருந்துட்டே இருக்குல்ல..." என்றார்கள்.

பாவம் பாலியல் தொழில் பெண்கள்!

மீண்டும் பழைய இடத்திற்கே வந்தபோது அங்கே 3-பெண்கள் இருந்தார்கள்.

தோழர்களை அங்கே இருக்க சொல்லிவிட்டு அப்பெண்களை நோக்கி நடந்தேன். இரண்டு பெண்கள் ரோட்டின் ஓரத்தில் இருந்த திண்ணையில் உட்காந்திருக்க, ஒரு பெண் இடுப்பில் கை வைத்தபடி சுவராசியமாக பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்களிடம் எப்படி பேச்சை தொடங்குவது என்ற குழப்பம். என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டார்கள். முகத்தில் வெட்கமும், பேச்சும் தடுமாற ஆரம்பித்தது.

"நீங்க செக்ஸ் ஓர்க்கஸ்னு சொன்னாங்க. நீங்க எல்லாம் இந்த ஊரைச் சேர்ந்தவர்களா?" என்று பேச்சை ஆரம்பித்தேன். இரண்டு பெண்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். ஒரு பெண் வெடுக்கென்று எழுந்து சென்றுவிட்டாள். நின்று கொண்டிருந்த பெண் உட்கார்ந்திருந்த பெண்ணை பார்த்தாள். நடுத்தர வயது பெண்ணான அவள் சொன்னாள்.

"இந்த ஊருதான். கிராமத்துல இருந்து வரோம்..."

"நீங்க இந்த வொர்க் செய்யறது உங்க குடும்பத்தினருக்கு தெரியுமா?"

"இன்னாம்மா, தொழில் நடக்குற இடத்துல டிஸ்டப் பண்ற... அப்பறம் வாம்மா பேசலாம்." வெடுக்கென்று நின்றுக் கொண்டிருந்த பெண் அதட்டியது.

உட்கார்ந்திருந்த பெண் சுதாரித்துக் கொண்டாள்.

அவசர அவசரமாக சில நூறு பணத்தை கையில் வைத்தேன். "ஆளு வந்தாக்கா போங்க..." அதுவரை பேசுங்க என்றேன்.

நின்றுக் கொண்டிந்த பெண், "அதுக்கென்ன பேசுங்க.. பேசுங்க.. ஆனா அந்தாண்ட இருக்கு. அது பார்த்தா திட்டும்" என்றாள்.

அவள் காட்டிய திசையில் 65-வயதிற்கு மேற்பட்ட முதியவர் இருந்தார். நிறைய குடித்திருக்க வேண்டும். பழுப்பு நிற வேட்டியும், சாராய வாடையும் அவ்வப்போது முணங்குவதையும் தவிர வேறொன்றும் செய்யவில்லை.

"யாருங்க அவரு?"

"எங்களுக்கு உதவியா இருக்காரு.."

"அப்படின்னா மாமாவா?"

"ஆமா.."

"இந்த தாத்தாவா...?"

திரும்பவும் அந்த தாத்தாவை பார்த்துக் கொண்டேன். அட பாவிங்களா!

"ஒரு ஆளுக்கு எவ்வளவு வாங்குறீங்க?"

"அது ஆள பொறுத்துங்க."

"சரி, தோராயமா எவ்வளவு வாங்கறீங்க?"

"எனக்கு வயசு போயிருச்சில்ல, இன்னா 250-வரும். இவளுக்கு 500-கூட வரும்" நின்று கொண்டிருந்தவளை காட்டி சொன்னார்.

"இந்தா இன்னா அங்க பேச்சி.." தாத்தா கத்தியது.

ஏற்கனவே சிலர் நான் பேசுவதைக் கண்டு கூட்டம் சேர ஆரம்பித்தது.

"இல்லம்மா... அது கத்துது நீ சாயங்காலம் வாம்மா..."

"எத்தனை மணிக்கு..?"

"ஆறுக்கு முடிச்சிறுவோம்..."

"எத்தனை மணிக்கு தொடங்குறீங்க...?"

"காலைல 10-மணிக்கு ஆரம்பிச்சிறுவோம்..."

"ஆறு மணிக்கு மேல இருக்க மாட்டிங்களா..?"

"வேற செட்டுங்க வரும். நாங்க வுட்டுக்கு போகணும்ல..."

"எல்லாரும் ஒரே கிராமமா?"

"ஆமா..."

"உங்க ஊர்ல இப்படி செய்யறது தெரியுமா?"

"இந்தாம்மா.. இங்க இன்னா பேச்சி? ஆள கூப்புடவா?" கிழம் மிரட்டியது.

உட்கார்ந்து கொண்டிருந்த பெண் சட்டென்று எழுந்தார். "இந்தாம்மா போயிடு பிரச்சனையாயிடப் போவுது...."

எட்ட இருந்த தோழர்கள் ஓடிவந்தார்கள்.. "என்னாச்சி தோழர்?"

நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஒருவன் ரேட் பேச ஆரம்பித்தான். மஞ்சள் புடவை அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தது. ரேட் கேட்ட தோழர் என்னோடு இருப்பதை பார்த்துவிட்டு ஏதோ முணகியது. தோழர் என்னை பாவமாய் பார்த்தார்.

துட்டு வாங்கிய பெண்ணை அங்கே காணவில்லை. நின்றுக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணை பார்த்து கேட்டேன். "வரீயா?"

"எங்க?"

"கெட்ஸ் ஹவுஸ்.."

"யாரு ஆளு?..."

"நாந்தான்.."

"இன்னாது..?"

"அட வாம்மா! பேசணும். கூட போட்டுத் தரேன்..."

"இந்தாம்மா, அந்த மாதிரி பொண்ணு நானில்ல... இன்னா அசிங்கமா பேசற..."

ஓட ஆம்பித்த பெண்ணின் கையை இழுத்தேன்.

"வாணாம் தோழர் ரகளையா போயிடப் போவுது..." தோழர்கள் சங்கடத்தோடு பேசினார்கள்.

"அட பின்னாடி என்ன நடக்கிறதுன்னு தெரிஞ்சிக்கணும்ல... அதான் கேட்டேன்.."

"இருந்தாலும் தோழர், நீங்க செய்யறதெல்லாம் ரொம்ப ஓவரு. லாட்ஜிக்கா போறது?.."

"என்ன சும்மா பயந்து பயந்து பேசிட்டு.... இந்தாள பாருங்க இவனெல்லாம் மாமாவாம் ச்சே..."

"ஏதோ மேட்டரு கிடைக்கும்னு பார்த்தா காமெடி கணக்கா போயிடுச்சே!"

"சரி... படத்தையாவது உருப்படியா எடுத்திங்களா?"

கூட வந்திருந்த போட்டோ கிராப்பர், "அதெல்லாம் நல்லா வந்திருக்குங்க.." என்றார்.[2]

திரும்பி நடக்க ஆரம்பித்தோம்...

பாலத்தின் மீது நின்றுக் கொண்டிருந்த பெண் வேறொரு ஆளோடு நடக்க ஆரம்பித்தாள்.

ஓர் அரசாங்கம் என்பது சட்டத் திட்டங்களுக்குள் இயங்குகின்றதா? சட்ட ஓட்டைக்கள் புகுந்து விளையாடுகிறதா? என்பதற்கு இவை போன்ற சம்பவங்கள் எத்தனையெத்தனை..?

பாண்டிச்சேரி அரசு மாமா கூட்டமானது எப்போது..?

நன்றி,
தமிழச்சி,மகிழன்


*இந்திய சட்டம்![1]
http://bit.ly/4pJS0n
*புகைப்படங்கள்![2]
http://bit.ly/௫௧ஆ