தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

விமான கழிப்பறையில் பயணம் செய்த ஹாபீப் ஹுசைனின் கண்ணீர் கதை.

சவுதி அரேபியா லிருந்து இந்தியாவிற்கு விமான கழிப்பறையில் பயணம் செய்த ஹாபீப் ஹுசைனின் கண்ணீர் கதை.
மொரடபாத் ஐ சேர்ந்த அவரின் ரத்த கண்ணீர் கதை இதோ .

இவர் இவரின் இரு ஏக்கர் நிலத்தை விற்று அதை ஏஜென்டிடம் கொடுத்து சவுதி அரேபியா வுக்கு வேலை பார்க்க சென்றுள்ளார். அவருக்கு ஆயிரம் ரூபாய் மத சம்பளம் என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது. ஆனால் அரை ரொட்டியும் கொஞ்சம் பருப்பு கொழம்பும் மட்டுமே கொடுக்கப்பட்டு நாளொன்றுக்கு மணி நேரம் அடிமையாக வேலை வாங்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாளொன்றுக்கு கிடைக்கும் ரூபாய் எவ்வளவோ மேல் என்றும் கூறியுள்ளார். தாம் நாட்டை விட்டு போகும்போது தம் மனைவி இரண்டு மாத கர்ப்பம் என்றும், நோய் வாய்ப்பட்ட தாய் இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.
தாம் ஏமாற்ற பட்டதால் இந்தியாவில் தமது குடும்பமும் பட்டினியில் இருப்பதாக கூறியுள்ளார். தாமும் சவுதி அரேபியாவில் பட்டினி தமது குடும்பமும் இந்தியாவில் பட்டினி என்பதை கண்டு கண்ணீர் வடித்த இவர் , இந்திய வர தீர்மானித்து விமானத்தில் கழிவறையில் புகுந்ததாக தெரிவித்துள்ளார்.
தமது நாட்டை சேர்ந்தவர்கள் தம்மை காப்பார்கள் என்ற தைரியத்தில்தான் தாம் விமானத்தில் ஏறியதாக தெரிவித்துள்ளார்.
தம்மை போலவே அடிமைகளாக பாஸ்போர்ட் மறுக்கப்பட்டு ஆயிரக்கனகானோர் சவுதி யில் விற்கப்பட்டுல்லார்கள் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு என்று மோகம் கொண்டு அலைபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இவரின் கதை, மேலும் அரசாங்கத்தின் வெளி நாடு செல்போர்களின் கணக்கு (எண்ணிக்கை) பற்றிய கண்காணிப்பும் மிக அவசியம். அவர்கள் எங்கே உள்ளார்கள் , எப்படி வாழ்கிறார்கள் என்ற விவரங்களை அந்தந்த நாட்டில் உள்ள தூதரகம் மேற்பார்வையிட்டால் இது போன்று யாரும் அடிமை வாழ்வு வாழ வேண்டியிருக்காது.