தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

1982 - காதல் கதை

என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!
gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்.”இளமை என்னும்
பூங்காற்று” கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக……..!
“கண்ணே கலை மானே” ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது “மடை திறந்து” பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் “உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்” முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.

அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்.”இதயம் ஒரு கோவில்”"பூ மலையே தோள் சேரவா” “மன்றம் வந்த
தென்றலுக்கு” “என்ன சத்தம் இந்த நேரம்…”

மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்….! அவளும் காதலிக்கிறாள் …..

“ஒரு கோலமே

கோலம் போடுகிறதே…..!”

நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்.”அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்”.இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.

நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.

“உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே”……அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்.”சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்”
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்

பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் “நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்”