தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது

எந்தப் பார்ப்பான் தொழிலாளியாக இருக்கிறான்? விவசாயம் செய்யும் பார்ப்பனன் உண்டா? மில்லில் கூலி வேலை செய்யும் பார்ப்பனன் உண்டா? அத்தனைத் தொழிலாளர்களும் தமிழ் மக்கள் தானே?

எனவே, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்தின் மீது அவர்களிடம் ஆத்திரமூட்டி, தூண்டிவிட்டு முதலாளியிடம் இவ்விதம் வம்புக்குப் போகும்படி செய்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களே பார்ப்பனர்களும் அவர்களுக்குத் துணை புரியும் கம்யூனிஸ்ட்களும். இவர்கள் கம்யூனிஸ்ட்களாக இருப்பதனால், முதலில் ஜாதியை ஒழிக்கப் பாடுபட வேண்டும். ஜாதிப்பாகுபாடு நிலைநாட்டப்பட்டிருப்பதால்தானே, உழைக்கும் தொழிலாளியும், உழைக்காமல் சுகமாக வாழும் பார்ப்பனரும் இருக்கின்றார்கள்.
ஜாதிப் பிரிவு இல்லையானால், தொழிலாளி - முதலாளி என்ற பிரிவும் மறைந்துபோகும். எனவே, ஜாதியின் பெயரால் இருக்கும் சின்னங்களையும், உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கான எண்ணங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் முதலாவது தன் கையில் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் புகவேண்டும். அங்குள்ள பார்ப்பனர்களின் ஒரு உச்சிக் குடுமியோ, பூணூலோ இல்லாமல் அடியோடு கத்திரித்து விட வேண்டும். முதலில் இதில் ஈடுபட்டால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

ஆனால், இந்த முயற்சியில் புகுந்தீர்களானால் முதன் முதலில் தங்களுக்குத் தலைவர்களாக உள்ள பார்ப்பனர்களின் பூணூலைக் கத்தரித்துவிட்டுத்தான் மற்ற பார்ப்பனர்களிடம் போக நேரிடும். ஆனால், இவற்றால் ஜாதி ஒழியும் என்று கூறுவதற்கில்லை.
இன்னமும் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற யாருடைய முயற்சியாலும் ஜாதி ஒழிவதற்கு வழியே கிடையாது. இதுவரை கீழ்ஜாதி என்பவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் மரியாதை இருந்திருக்குமானால், அவர்களுடைய முயற்சினால் தான் வந்திருக்கும்.

காந்தியார் கூட மேல் ஜாதிக்காரனுக்கு என்று தனியாக கோயிலும் குளமும் வேண்டும், கீழ் ஜாதிக்காரனுக்கென்று தனியாகக் கோவிலும் குளமும் வேண்டும் என்றார். நாங்கள் பிறகு கூப்பாடு போட்டு இரண்டு பேருக்கும் தனித்தனியே இருக்குமானால் அந்தக் கோவிலும் குளமும் பறையன் கோவில், பறையன் குளம் என்று பெயரிடப்பட்டு அவை உள்ளவரை அந்த ஜாதியும் மறைவதற்கு வழி இல்லை என்று சொன்னோம்.

அதன் பிறகுதான் ஒரே கோவிலில் எல்லோரும் சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னமும் பார்ப்பான் கோவிலில் அனுபவிக்கும் சுதந்திரம் சூத்திரனும் பறையனும் அனுபவிக்க முடியாது. பார்ப்பான் மட்டும்தான் சாமிக்கு பக்கத்தில் போகமுடியும். அந்த இடத்தில் நாம் போக முடியாது.

இப்படிக் கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது? இன்னமும் இந்த மூடங்கள் அவிழ்த்துக் கொடுக்கின்றன. பார்ப்பான் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டே இருக்கிறான். 1956 ஆம் ஆண்டிலும் இந்த அக்கிரமம் நடக்கலாமா? இதையல்லவா கம்யூனிஸ்ட்கள் ஒழிக்க வேண்டும்?

எந்த நாட்டில் கம்யூனிஸ்ட்களுக்குப் பாதிரி தலைவனாக இருக்கிறான்? கம்யூனிஸ்ட் என்றாலே பாதிரிக்கு வேலை இல்லை. இந்தப் பாதிரியை விட மகாக் கொடுமையும், பித்தலாட்டமும் செய்யும் முதல்தரப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்க்குத் தலைவராக இருக்கின்றனர். ஏன்? நம்முடைய ஆளுக்கு யோக்கியதையும் திறமையும் இல்லையா? பார்ப்பனர் கம்யூனிஸ்ட்களின் தலைவராக இருக்க என்ன யோக்கியதை உடையவர்கள்? எப்படியாவது உண்மை கம்யூனிசம் நம் நாட்டில் பரவினால் பார்ப்பனர்களுக்குச் சீட்டுக் கொடுத்தனுப்பும் நிலையைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்காகப் போலி கம்யூனிசம் நாட்டில் பார்ப்பனர்களால் பரவச் செய்யப்படுகிறது.

உண்மைக் கம்யூனிசம் இந்த நாட்டில் பரவுமானால் இங்கே பார்ப்பனருக்கும், மதம் சாஸ்திரம் புராணங்களுக்கும், கடவுள்களுக்கும் வேலையே இருக்காது. எனவே, இந்த மதமும் ஜாதியும் ஒழிய வேண்டுமானால், எங்களைத் தவிர வேறு யாரும் கவலை கொள்பவர்கள் கிடையாது. நாங்கள் தான் முதன் முதலில் ஜாதி ஒழியவேண்டும் என்றும் கூறியவர்கள்.

காந்தியார் கூட செத்துப் போவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாகத்தான் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார். அதற்கு முன் ஜாதியைப் பற்றிய கவலை காந்திக்கு இருந்ததேயில்லை. ஜாதியைக் காப்பாற்றியதால்தான் அவர் "மகாத்மா" என்று போற்றப்பட்டார்.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவரும், புத்தரும் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதைத் தவிர இப்போது முதன் முதலில் எங்களைத் தவிர வேறு யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினதுமில்லை. நாங்கள் சொன்ன பிறகு, டாக்டர் அம்பேத்கர், காந்தியின் தவறுகளை உணர்ந்தபின் தான் அவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினார். அதற்கு முன் அவரும் காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றப்பட்டவர்தான். காந்தியார் ஜாதியைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார்.

இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும் தான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறோம்.

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்டமிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத்தனர். இவரும் ஒப்புக் கொண்டார். மாநாடு நடத்தும் தினம் நெருங்குவதற்கு ஆரம்பித்தது. அம்பேத்கரை, "நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும்" என்று கேட்டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவதாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். "நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே" என்று கூறினர்.

ஆனால், அம்பேத்பர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். "நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட்சேபனை இல்லை" என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.

இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று அடிக்கடியும் கூறுகிறார். ஆனால், முதலில் அவருடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அப்படியே வைத்துக் கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார். ஆகக்கூடிய காரியமா?

சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைப்பாராகில் அதற்கென்று சட்டமே இயற்றிவிடலாம். "இனிமேல் யாரும் ஜாதிச் சின்னம் அணியக்கூடாது பூணூலை அறுத்து எறியவேண்டும். இல்லையேல் இந்தச் சட்டப்படி போலீசார் கத்தரித்து விடுவார்கள். கோவில்களில் பார்ப்பனர் மட்டுமல்லாது பறையன், சக்கிலியன் யாவரும் மணி அடிக்கலாம்" என்று சட்டமியற்றி விட்டால் சீக்கிரமாகவே ஜாதியை ஒழிக்கலாம். அதன்றி வாயினால் சொன்னால் மட்டும் போதாது.

ஆனால், நேரு அப்படிக் கூறுவதற்கு அவருக்குப் பைத்தியம் பிடித்தால் ஒழியக் கூறமுடியாது. பச்சைப் பார்ப்பனராக இருந்து கொண்டு அப்படிக் கூறுவாரா? அவருடைய ஆட்சியே பார்ப்பனர்களின் நன்மைக்கென்று இருக்கையில் பார்ப்பனர்கள் விஷயத்தில் கை வைக்க மாட்டார்.

இப்போது கூட நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்ற காரணம் என்ன? அரசாங்கம் பார்ப்பனருடையது.... பார்ப்பனரை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆகையால்தான் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன்.

நான் என் வேலையை விட்டு, "இனிமேல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். ஏதோ இதுவரை தெரியாமல் பார்ப்பனர்கள், சாஸ்திரம், கடவுள் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறினேன். இப்போது பகவான் என்முன் தோன்றி இதுவெல்லாம் கூடாது என்று சொன்னார். ஆகவே பார்ப்பனர்கள் 'பூலோகத் தேவர்கள்' என்று காமராசருக்கு மட்டுமல்ல. நேருவுக்கும் தந்தி கொடுத்தேனாகில், உடனே மறு தந்தியில் உனக்கு ஒரு மந்திரி மட்டும் போதுமா? அல்லது இரண்டு மந்திரி உத்தியோகம் வேண்டுமா? சென்னை அரசாங்கத்தில் வேண்டாம். மத்திய அரசாங்க மந்திரியாகவே அமர்ந்துவிடலாம். எந்த இலாகாவுக்கு என்று கவலைப்பட வேண்டாம் இலாகா பொறுப்பு இல்லாத இலாக்கா என்று ஒன்று அமைத்து அந்த இலகாவுக்கு மந்திரியாக இருக்கலாம் என்று தெரிவிப்பாரே."

ஏனெனில், என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலை நாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை. முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலன்டியராக இருந்தாராம். அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்தபோது எனக்கு வாலன்டியராக இவரை அமர்த்தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன். அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன். எனக்கு வாலன்டியராக இருந்தவர் சென்னை முதன் மந்திரியாக இருக்க நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கூட ஆகமுடியும்.

ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியின் கொடுமை அடியோடு ஒழிய வேண்டும். நான் மற்றவர்களைப் போல் சும்மா பணக்காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால் இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல. கடவுளையே ஒழிக்க முற்படுபவனாகிய எனக்கு இந்தப் பணக்காரர்களை ஒழிப்பதா பெரிய காரியம்?

மேலும் இப்போது கூறுகிறேன். மந்திரிகளைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை. சட்டத்தின் மூலம் ஜாதி ஒழியவேண்டும் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் நான் கொஞ்சம் அயர்வேன்.

பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல, வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்திவிட்டு பிறகு நேரு 'ஜாதி ஒழிய வேண்டும்' என்று சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.

காமராசராவது ஓரளவு தம்மால் இயன்ற அளவு ஜாதியினால் ஏற்பட்ட கொடுமைகளையாவது உணர்ந்திருக்கிறார். வேறு யாருடைய ஆட்சியிலும் இல்லாத முறையில் நல்லவர்களுக்கு உதவி செய்கிறார். தேவஸ்தான இலாகா மந்திரியாக பஞ்சம ஜாதி என்று இகழப்படுபவரை (பரமேஸ்வரன்) அமர்த்தினார். அர்ச்சகப் பார்ப்பனர் எல்லாம் இவரைக் கண்டால் கை கட்ட வேண்டும். இந்த அளவுக்காவது பார்ப்பனத் திமிரை ஓரளவு அவரால் அடக்க முடிந்தது. மேலும் அவர் காலியாகிற உத்யோகங்களை எல்லாம் தமிழர்களுக்கே கொடுத்து வருகிறார். இதைவிட இன்னமும் அவர் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்?

மேலும் அவரும் வடநாட்டுப் பார்ப்பனத் தலைமை பீடத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர். வடநாட்டினர் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் ஆட்சியில் இருந்து கொண்டு நமக்கு இவ்வளவாவது நன்மை செய்கிறார் என்பதைக் கொண்டு நாம் சந்தோஷமடைய வேண்டும்.

அதைவிட அவருடைய ஆட்சிக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சிப்பது மிகவும் அறிவீனமாகும். அவரைப் பற்றி ஏதேதோ இல்லாதவைகளைச் சேர்த்துப் பேசி அவர் மேல் மக்களுக்கு வெறுப்பூட்ட நினைக்கிறார்கள். இதுவரை அவர் அந்த இடத்தில் இருக்கவில்லையானால் அந்த இடத்தில் நண்பர் ஆச்சாரியார் அவர் அவருடைய தொழிலாளியான ஜாதி வளர்ப்புத் தொழிலையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் இல்லையேல் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய சுப்ரமணியனோ அல்லது பக்தவத்சலமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.

பூணூல் உள்ள பார்ப்பனர்களாவது கொஞ்சம் நம்பலாம். இந்த பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது. பார்ப்பனர்களாவது பதவியின் பேரால் கொஞ்சம் கோழைத்தன்மை உடையவர்கள். தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட தமிழர்கள் எந்தக் கொடுமையும் துணிந்து செய்வர்.

உங்கள் குல வேலையை நீங்கள் பார்த்த பிறகல்லவா பிறருக்குப் புத்தி சொல்ல வேண்டும்? என்றேன். இதைக் கேட்டு அவர் ராமசாமிக்கு ஜாதித் துவேஷம் ரொம்பவும் முத்திப் போச்சுது என்றாராம்.

பிறகு இந்த ஆள் ஒழுங்குபடமாட்டார் என்று தெரிந்து அதற்காக கத்தியும், பெட்ரோலும் தயாரா இருக்கும்படி செய்திருந்தேன். அதன் பிறகுதான் ஒரு வழிக்குச் சரியாக வந்தது. அவரும் ஆட்சியை விட்டுப் போனார். மறுபடியும் காமராசர் வர முடிந்தது.

இவருக்குத் தொல்லை கொடுப்பவர்கள் இப்போது மலிந்து போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் பீர்மேடு, தேவிகுளம் என்று தாண்டிக் குதிக்கிறார்கள். தேவிகுளம், பீர்மேடு வேண்டாம் என்ற ஆட்களெல்லாம் இப்போது விளம்பரத்திற்காக மாற்றிக் கூறுகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு நம்முடையதாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட போது, இதே கம்யூனிஸ்ட்கள் நடுநிலைமை வகித்தார்கள். சோஷலிஸ்ட்கள்தான் இதன் சம்பந்தமாக என்ன யோக்கியதை உடையவர்கள்? பட்டம் தாணுவின் சர்க்கார் நடக்கும் சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு வேண்டுமென்று கேட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைப் பார்த்து "இப்படித்தான் சுட்டுக்கொல்ல வேண்டும். தேவிகுளம், பீர்மேட்டைக் கேட்க தமிழர்கள் தகுதியற்றவர்கள்" என்றெல்லாம் இங்குள்ள சோஷலிஸ்டுகள் கூறினார்கள். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டும், சோஷலிஸ்டும் இன்றைக்குத் தேவிகுளம், பீர்மேடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களாம்.

நன்றி,
கீற்று,