சிறீலங்காவில் எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவின் மனைவி பெரும்தொகை நிதியுடன் ஆசிய நாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இதனை தொடர்ந்து அரச தரப்பில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர் எனவும் அரச ஊடகங்களின் தலைவர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நுளைவு அனுமதிகளை பெற்றுள்ள அதே சமயம் பாதுகாப்பு செயலாளரின் மனைவியும் நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளார் எனவும் கொழும்புச்செய்திகள் தெருவிக்கின்றன. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவின் மனைவி பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றிற்கு முதலில் சென்றுள்ளதாகவும், அதனை தொடர்ந்து அவர் வேறு ஒரு நாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் தன்னனுடன் அதிகளவு பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தன்வசம் உள்ள ஏனைய நிதிகளையும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றுவதற்கு கோத்தபாயா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி, வருடல் |
கோத்தபாயாவின் மனைவி பெரும்தொகை நிதியுடன் சிறீலங்காவில் இருந்து தப்பி ஓட்டம்.
தொகுப்பு
இலங்கை