தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

2020 ன் தமிழகத்தின் முதல்வர் சினேகா அம்மையார் !

சினிமாவில் ரசிகர்கள் சீண்டவில்லை என்ற நிலை ஏற்ப்பட்டால் அரசியல்தானே அள்ளிக்கொட்டும் அடுத்த தொழில். இதோ புன்னகை இளவரசி என்று பட்டம் பெற்று இன்று புண்ணாக்கு திரைப்படங்களில் நடித்து கலை சேவை செய்து கொண்டிருக்கும் சினேகாக்கும் அரசியல் ஆசை ஆரம்பமாகி விட்டது.



நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.

யார் வேண்டுமானாலும் இப்போது அரசியலுக்கு வந்து விடலாம். மக்களுக்கான போராட்டத்தை நடத்திய அனுபவம் தேவையில்லை, அடிப்படை தகுதி தேவையில்லை. சினிமாக்காரர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், நான்கு படங்களில் நடித்தாலே நாற்காலி கனவுக்குப் போய் விடுகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது சினேகாவும் அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது வர மாட்டாராம். பத்து வருடங்களுக்குப் பிறகு அது குறித்து தெரிவிப்பாராம்.


தமிழக திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட `வைஜயந்தி ஐபிஎஸ்' படம் ரீமேக்காக `பவானி' என்ற பெயரில் மீண்டும் தயாராகிறது. விஜயசாந்தி நடித்த வேடத்தில், சினேகா நடிக்கிறார். கிச்சா இயக்குகிறார். இசையமைப்பாளர் தினா. ஒளிப்பதிவு பூபதி. இப்படம் குறித்து சினேகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

'நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். இந்த 9 வருடங்களில் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களிலும், மாறுபட்ட வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் அவ்வப்போது ஏற்படும்.

சேலையை விட்டால், சுடிதார். சுடிதாரை விட்டால், பாவாடை அல்லது தாவணி என ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து அலுத்துப்போய் விட்டது.


வைஜயந்தி ஐபிஎஸ் படத்துக்கு பிறகுதான் விஜயசாந்தி அரசியலுக்கு வந்தார். அதேபோல் நானும் வருவேனா என கேட்கிறார்கள்.

முதலில் பவானி படம் திரைக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம். நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்பது இன்னும் 10 வருடங்கள் கழித்து தெரியும். என்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி பத்து வருடங்களுக்குப் பின் அறிவிப்பேன்' என்றார்.

கண்டிப்பாக உங்களை போன்று மக்களுக்கு சேவை செய்யும் பெண்கள்தான் தமிழ்நாட்டு அரசியலுக்கு வர வேண்டும். என்ன செய்ய எல்லாம் எங்கள் தலைவிதி !

ஒரு ஜெயலலிதா அம்மையார்,பிரேமலதா அம்மையார் இருக்கும் போது ஒரு சினேகா அம்மையார் இருக்க கூடாதா என்ன?

....பகலவன்....