தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்தியாவில் இந்த ஆண்டு பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஹைடி நமக்கு தரும் படிப்பினை - இரண்டாவது மற்றும் இறுதி பதிவு.

அரசியல் தலைவர்களாலும் அல்லது அரசியல் கட்சியாலும் அல்லது அவர்கள் அமைக்கும் அரசாங்கத்தினாலும் ஒரு நாட்டை அதன் முன்னேற்றத்தை நோக்கி இட்டு செல்ல முடியவில்லை என்பதற்கு ஹைடி இன் அரசியல் சூழல் நமக்கு சொல்லும் பாடம்.

அரசாங்கத்தை நம்பாத அல்லது அரசியல் கட்சிகளை நம்பாத ஒரு சமூகத்தை அனைத்து நாடுகளும் எதிர் நோக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை தான் ஹைடி இன் அரசியல் நிலைமை நமக்கு கூறுகிறது.

நாமும் , இந்தியாவில் குஜராத் மகாராஷ்டிர என்று இரு பெரும் பூகம்பக்களை சந்தித்து விட்டோம் .

எனக்கு நினைவில் உள்ளவரையில் சென்னையில் நான்கு ரிக்டர் அளவு கோல் வரைக்கும் பூகம்பம் வந்து விட்டது , சென்னை முதற்கொண்டு இந்தியாவின் எந்தபகுதிக்கும் பூகம்பங்கள் வாராது என்று யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது .

ஒரு வேலை சுனாமி வந்ததை போல , ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் , அதை எதிர் நோக்கும் வலிமைகள் அல்லது கட்டமைப்புகள் எப்படி உள்ளன?

சென்னை போன்ற நகரங்களில் பத்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டலே விழுந்துவிடும் அளவிற்கு பல ஆயிரம் கட்டடங்கள் உள்ளன.

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பல ஆயிரம் கட்டடங்கள் உள்ளன.

இவைகளுக்கு எல்லாம் ஒரு கடுமையான தீர்வையும் விதிகளையும் பயன்படுத்தவிட்டால் நாம் ஏதேனும் இயற்கையின் கோரதிர்க்காக உயிரை பயணம் வைத்து காதிரிகிறோம் என்பது மட்டும் உறுதி. இறுதியாக நேற்று வந்த செய்தியை இங்கு பதிகிறேன் .

செய்தியின் தலைப்பு : இந்தியாவில் பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சென்னையைச் சேர்ந்த புவியியல் நிபுணர் எஸ். ராமச்சந்திரன். கிரகங்களின் மாற்றம் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் மற்றும் அபூர்வ நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார். பூகம்பமானது உலக அளவில் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வரை இருக்கும். 5 முறை இந்த பூகம்பம் நிகழும். அது மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையிலும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு குறைந்தது 5 முறையாவது பூகம்பம் ஏற்படும். சனி, வியாழன், கிரகங்களிடையே சாதகமான நிலை இல்லை. இது புதன், செவ்வாய், சனி கிரகங்களின் நிலையிலும் மாற்றும் ஏற்படுவதால் இயற்கை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். இவர் இதற்கு முன் 2005-ல் கத்ரினா புயல், 2008-ம் ஆண்டு நிஷா புயல் தாக்கும் என்று கணித்து கூறியுள்ளார்.


இந்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவானிலும், ஜூன் 1-ந்தேதியும், 4-ந்தேதியும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து துருக்கி வரை பூகம்பம் ஏற்படும். ஜூலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் தாக்கும். இதனால் இத்தாலிக்கு பாதிப்பு ஏற்படும்.


ஜூலை 18-ந்தேதி முதல் ஜூலை 28-ந்தேதிக்குள் இந்தியாவில் பூகம்பம் ஏற்படும். அது மத்திய கிழக்கு நாடுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக புவியியல் துணை பேராசிரியர் என்.ராஜேஸ்வரராவ் கிரகங்கள் மாற்றத்தால் பூகம்பங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.