தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆரியர்களின் உண்மை முகம் !

ஆரியர்கள் மக்கள் பகைவர்களாக இருப்பது ஏன்?

ம.செந்தமிழனின் ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு சிறப்பான கட்டுரை. பாராட்டுகள். அது குறித்து மேலும் சில செய்திகளைச் சொல்ல விரும்புகிறேன். உலகில் இன்றும் வாழ்ந்து வரும் மரபினங்களான நீக்ரோ, மங்கோலியர், ஆத்திரிக்குகள் மற்றும் ஆரியருள் முதல் மூன்று மரபினத்தாரும் (race) பிற மரபினத்தாரை வேற்றவரைத் தமக்கு நிகராகவே கருதி சமமாகவே மதித்தனர்.

ஆயினும் ஆரியர் மட்டும் விலக்காக இவர்களிலிருந்து மாறுபட்டு தாம் குடியேறிய நிலப்பகுதிகளில் வாழ்ந்துவந்த மண்ணின் மக்களை அடிமைப்படுத்தியும், பூண்டோடு அழித்தும் வந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள. மாந்தன் காலடிபட்ட இடத்திலெல்லாம் புல் பூண்டுகள் வளரவொட்டாமல் தடயம் இன்றி அழிவது போல ஆரியர் தாம் குடியேறிய வட தென் அமெரிக்க நாடுகளின் நாகரிகங்களையும் நடுவாசியா, வட ஆப்பிரிக்கா, மற்றும் பிற நாடுகளிலும் வாழ்ந்த மக்களை தடயம் இன்றி அழித்துப் போட்டனர்.

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் சகாரா பாலைக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்காவில் வாழ்ந்த வாழும் மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி ஆண்டு வருவதும் வரலாற்று உண்மையே. ஆரியர் மட்டும் இவ்வாறான மனப் போக்கை கொள்வதற்கு அவர்களின் தாய்நிலமான ஐரோப்பாவில் நிலவும் கடுங்குளிரே காரணம். ஓர் ஆண்டின் பெரும்பகுதி பனிமூட்டமாகவே இருப்பதால் உணவுக்குப் பெரும் தட்டு நிலவும். ஐரோப்பிய வடஅமெரிக்கப் பறவைகள் இதன் காரணமாகவே தொலைவான இடங்களுக்குப் பெயர்கின்றன. Early Bird catches the prey என்ற பழமொழியும் இதன் காரணமாக எழுந்ததுதான்.

ஒரு பக்கம் குளிர்வாட்ட மறுபக்கம் பசி வாட்ட ஆரியர் வாழ்க்கை மிகக் கடினமானதாகவே இருந்தது. பனியின் காரணமாகவே ஆரியர்களால் எந்தத் துறையிலும் முன்னேற முடியவில்லை. ஆயினும் போர்க் கலையில் பிற மரபினத்தாரை விட வல்லமை பெற்றிருந்தனர். பிறமரபினத்தார் விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தினர். ஆரியர்களோ ஒருவரிடம் உள்ள பொருட்களைத் தட்டிப் பறிப்பதற்காகவே அவரை அழித்து அவர் பொருளைத் தமதாக்கிக் கொள்வதற்காகவே ஒரு ஆள் இன்னொரு ஆளை அழிக்கின்ற போர்த் திறனைப் பெற்றிருந்தனர்.

1. இதற்குச் சான்று பகர்வதுதான் Might is Right என்ற பழமொழி. அதாவது, ஒருவர் என்ன தான் முயற்சியால் அலைந்து திரிந்து ஒரு பொருளை அல்லது உணவுப் பொருளைப் பெற்றாலும் அது அவருக்கே சொந்தமாக வேண்டும் என்ற ஞாயம் இருந்தாலும் அவரை ஒருவர் ஆயுதம் கொண்டு தாக்கி வெல்வாரானால் அப்பொருள் வென்றவருக்கே சொந்தம். அது உணவானாலும் சரி , வாழ்க்கைத் துணையானாலும் சரி.

இதுவே ஆரியர் ஞாயமாக இருந்தது. உணவுத் தட்டின் காரணமாக survival of the fittest என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஞாயத்தை ஆரியர் ஏற்றனர். இதனால் பிறரை அழித்துச் சுரண்டி வாழ்வது என்ற மனப்போக்கு ஆரியருள் பரவலாக ஏற்கப்பட்டு வாழ்க்கை நெறியாகி விட்டது.

மற்ற பிற மரபினத்தார் வாழ்ந்த நிலப்பகுதியில் உணவு மண்டிக் கிடந்ததால் அவர்கள் பிறரை வரவேற்று உணவு கொடுத்து முகமன் செய்தனர். அவர்களுடைய ஞாயம், ஒருவர் முயன்று உழைத்து பெற்ற பொருள் அவருக்கே சொந்தமாகும் என்பதாகும், பிறர் வன்மையால் அதைக் கொள்வது ஞாயமற்றது அது கொள்ளையாகும்.

ஆரியர் உணவுத்தட்டின் காரணமாக ஐரோப்பாவை விட்டுப் பிற பகுதிகளில் குடியேறிய போது அவர்களுக்கு உழவுத் தொழில் மற்ற பிற தொழில்கள் ஏதும் தெரியாமையால் வல்லமைக்கே உரிமை (Might is Right) என்ற தம் ஞாயத்தை அங்கும் கடைப்பிடித்தனர்.

உண்மையில் அவர்கள் மற்ற மரபினத்தாரைப் போல உழவிலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தால், அம்மக்களுடைய ஞாயத்தை ஏற்றிருந்தால் குமுகத்தில் அமைதி தவழ்ந்திருக்கும். நடந்ததென்னவோ எதிர்மாறு. போர்ப்பயிற்சி பெற்றிருந்த ஆரியர் போர்ப்பயிற்சி அற்ற பிற மரபினத்தார் மீது வன்மையால் போர்புரிந்து அவர் பொருளைக் கவர்ந்து அவர்களை அடிமைப்படுத்தி அவர் நாகரிகங்களை அழித்தனர்.

கலைகளை மொழிகளை அழித்தனர். இதுவே உலகம் முழுமையிலும் ஆரியரால் இன்றுவரை நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. ஆரியர் இந்தியத் துணைக் கண்டத்தில் அடியெடுத்து வைத்த போது மேற்சொன்ன நிகழ்வே அரங்கேறியது. தமிழர் ஆரியரிடமிருந்து அவருடைய போர்ப்பயிற்சியை கற்றபிறகு நல்ல தேர்ச்சி பெற்றதால் ஆரியரால் தமிழரைத் தென்னாட்டிலும் கிழக்குப் பகுதிகளிலும் வெல்ல முடியவில்லை.

ஆதலால் ஆரியர் தாக்கம் இப்பகுதியில் மிகக் குறைவு. இதை இன்றும் இம்மக்களின் தோல் நிறம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனினும் ஆரியர் தம் வஞ்சகத்தாலும், தமிழர் கோட்பாட்டை ஏற்று அதனோடு தம் வேள்விச் சமயக் கோட்பாட்டைக் கலந்து தமிழரிடம் பரப்பியதாலும் உடல் வலிமையால் வெல்ல முடியாத தமிழரைக் கருத்தால் வீழ்த்தினர்.

தமிழரும், இன்றுவரை ஆரியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். இன்று புதிதாகத் தோன்றி பரவலாகி உள்ள ஊழியத் (service) தொழில்களில் ஆரியப் பார்ப்பனரே கோலோச்சுகின்றனர். இந்தத் தொழில்களில் முடிவு எடுக்கும் பொறுப்புகளில் இவர்களே பெருவாரியாக உள்ளனர். இன்னமும் தம் அதிகார ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். ஆதலால் வேலை நிகழ்த்துவோர் (performer) அறிக்கை தருவோர் (reporter) என்ற இருபிரிவுக் கேட்பாடு உள்ளது. இந்தக் கோட்பாட்டை நன்றாக உணர்ந்து நாம் அதில் தலை கீழ் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அறிக்கை தருவோர் பதவிகளில் தான் அதிகமாக ஆரியப் பார்ப்பனர் இருக்கின்றனர்.

எனவே, அறிக்கை தருவோர் பதவிகளை தேர்தலின் மூலமாக நிரப்பி அவற்றை தற்காலிகப் பதவிகளாக மாற்ற வேண்டும். வேலை நிகழ்த்தப் பதவிகளுக்கு அறிக்கைதருவோர் பதவிகளைக் காட்டிலும் அதிக சம்பளம் தருவதன் வாயிலாக அவர்களை அறிக்கை தருவோர் பதவிகளிலிருந்து அகற்றி வேலை நிகழ்த்துவோராக மாற்றினால் நம் போன்ற வேலை நிகழ்த்து வோரோடு பழகுவதாலும் அவ்வேலைகளின் முகாமையை நாம் அவர்களுக்கு உணர்த்துவதாலும் ஆரியப் பார்ப்பன மனப்போக்கை மாற்ற இயலும். பிறருக்குச் (குமுகத்திற்கு) சுமையாக உள்ள அவர்களைச் பிறருக்குத் துணையாக மாற்றினால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் அகலும். வெறும் கலப்பு மணங்களால் மட்டுமே ஆரியப் பார்ப்பனர்களைத் திருத்தி விட முடியாது. இதைத் தமிழ்த் தேசியத் தலைவர்களும் விரும்பிகளும் உணர்ந்து கொள்கைகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்பதைச் சுட்டவே இதை எழுதிட நேர்ந்தது.


ஆரியரும் அக்னியும்

கோயில் குடமுழுக்கு, திருமணம், நீத்தார் இறுதிச் சடங்கு என நீளும் எல்லாச் சடங்குகளிலும் தீ வளர்த்து, வேதம் ஓதி சடங்கு செய்வதை ஒரு அடிப்படையான செயல்முறையாகக் கொண்டுள்ளனர் பார்ப்பனர், பார்ப்பனர் எனப்படும் ஆரியர்கள். அவர்களுக்கு அக்னி எனப்படும் தீ, ஒரு முதன்மையான தெய்வமாக இருந்துள்ளது. இதை ஆய்வு செய்வது தான் இந்தக் கட்டுரையின் முதன்மை நோக்கம். அதற்கு முன், ஆரியர்கள் என்பவர்கள் யார், எங்கிருத்து வந்தவர்கள் என்பதனைப் பார்க்து விடலாம்.

பெரும்பாண்மை பார்ப்பனர்கள் என்பவர்கள் வௌ்ளை வௌேர் என்ற வெண் தோற்றத்தை உடையவர்கள். பார்ப்பனர்களின் உண்மையான வண்ணம் அது தான். கருத்த நிறப் பார்ப்பனர்களைப் பற்றி வேறொறு கட்டுரையில் பார்க்கலாம். ஆனால், வெண் தோல் என்பது வெப்ப நாடான இந்தியாவுக்கான நிறமல்ல. இது பற்றிய அறிவியல் ரீதீயான காரணத்தை முதலில் காண்போம். தீக்கும் வெண்தோலுக்குமான தொடர்பை இக்கட்டுரையின் பிற்பகுதி தௌிவு படுத்தும்.

உலகின் மக்கள் பலவேறு நிறங்களில் வாழ்கின்றனர். குளிர் பிரதேசங்களில் நீண்ட நெடிய காலம் வாழ்ந்து வருபவர்கள் வெண்ணிறமாகவும், வெப்பப் பகுதியில் வாழ்பவர்கள் கருத்த நிறமாகவும், மற்ற இடங்களில் வாழ்பவர்கள் இடத்திற்கேற்ப இந்த இரண்டு வண்ணங்களுக் கிடைப்பட்ட நிறமுடையவர்களாகவும் உள்ளனர்.

குளிர் பிரதேசத்தில் வாழ்பவரின் நிறம் வெண்மையாக இருக்கவேண்டியதன் அவசியம் என்ன?

மனித உடல் சீராக இயங்க அதன் வெப்ப நிலை 98.6F (37C) டிகிரியாக இருக்கவேண்டியுள்ளது. இது இயற்கையின் நியதி. இந்த வெப்ப நிலையை உடல் தனது உணவில் உள்ள எரிபொருளிலிருந்து தான் பெருகிறது. ஆனால், குளிர் பிரதேசங்களில் வருடத்தின் பெரும்பாண்மையான நாட்கள், சுற்றுச் சூழல் வெப்பம் பனியின் வெப்பநிலையைவிடக் குறைவானதே. ஆக, சுற்றுச் சூழலின் வெட்பம் உடலின் வெப்ப நிலையை விடக் குறைவாக இருப்பதால், மனித உடலிலிருந்து வெப்பம் தொடர்ந்து வௌியேறுகிறது. இந்த வௌியேற்றத்தின் அளவு, இந்த "வெப்பநிலை வித்தியாசத்தின்" இருமடிக்கு (Square) நேரடி விகிதாச்சாரம் கொண்டதென, குளிர்தல் பற்றிய நியூட்டனின் விதி சொல்கிறது. இந்த வௌியேற்றத்தை ஈடுகட்ட உடலுக்கு மிகுதியான உணவும் அதன் தொடர்ந்த செரிமானமும் தேவைப்படுகிறது. ஆக, உடலின் வெப்ப வௌியேற்றத்தைக் குறைத்தால், உடலின் உணவுத் தேவையும் குறையும்.

இதற்கான தீர்வாக இயற்கை தேர்ந்தெடுத்த வழி தான் வெண் தோல். வெண்ணிறப் பொருட்கள் தனது வெப்பத்தை எளிதில் வௌியிடாது. வெப்ப வௌியேற்றம், வெண்ணிறப் பொருட்களுக்கு மிகவும் நிதானமாகவே நடைபெரும். ஆகையினால் தான் கடுங்குளிர்ப் பிரதேச மக்கள் வெண்ணிறத் தோலுடையவர்களாக உள்ளனர். இதிலிருந்து பார்ப்பனர்கள் அத்தகைய குளிர்ப் பிரதேசங்களிலிருந்து இந்திய நிலப்பரப்பிற்கு வந்தேறியவர்கள் என்பது புலனாகிறது. வெப்ப நாட்டுக் கரடியின் மயிர் கறுப்பாகவும், பனிக்கரடியின் மயிர் வெண்மையாகவும் இருப்பதையும் சேர்த்து ஒப்புநோக்குக.

வெப்ப நாடுகளில் திறந்தவௌி வெப்பம், பகல் நேரத்தில், மனித உடலின் வெப்பத்தைவிட மிகுதியாகவும், நிழலில் உடலின் வெப்பத்தைவிட சற்று குறைவாகவும், பருவகாலங்களுக்குத் தகுந்த மாற்றங்களோடு நிலவும். எனவே, பகலில் திறந்தவௌியில் மனித உடலுக்குள் சுற்றுச் சூழல் வெப்பம் புகும். இது மனிதனுக்கு இன்னல் கொடுக்கக் கூடியது. ஆதலால், நிழலுக்கு வந்தவுடன் உடல் விரைந்து குளிரடைய வேண்டிய தேவை உள்ளது. கருத்த நிறமுடைய பொருட்கள் வெப்பத்தை எளிதில் வௌியேற்றும் குணமுடையவை. ஆதலினால், வெப்ப பிரதேசங்களில் மனிதர்களின் உடல் இயல்பாகவே கருத்துள்ளது. (நிறம் கருப்பதற்கு சூரிய ஒளியோடு வரும் வெப்ப மற்றும் புறஊதாக் கதிர்களும் காரணம். இவை பற்றி முழுமையாக விவாதிக்க இக்கட்டுரையில் இடமில்லை; தேவையுமில்லை)

நீக்ரோக்கள் மிகவும் கருப்பாயிருப்பது, அவர்கள் வெப்பம் மிகுந்த பூமத்திய ரேகை பகுதியில் வாழ்வதனால் தான். மேற்க்கத்தியவர்கள் வெண்மையாய் இருப்பது, அவர்கள் வாழும் பகுதிகளில் சூரியனின் சாரய்கதிர்கள் மட்டும் அதுவும் ஒவ்வொரு நாளின் சிறிய பகுதிகளில் மட்டும் விழுவதால், நிகழும் கடுங்குளிராலேயே என்பது அறிவியல் உண்மை.

இந்த இரண்டு உச்ச நிலைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மஞ்சள், பழுப்பு மற்றும் இளங்கறுப்பு என்று வாழும் பகுதிகளுக்கேற்ற வண்ணம் கொண்டுள்ளனர்.

ஆரியர்கள் கடும் குளிர்ப்பிரதேசத்திலிருந்து 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் வந்தேறியவர்கள். கடுங்குளிர்ப் பிரதேசங்களில் உடலின் இயல்பான வெப்ப நிலையை விட, சுற்றுச்சூழல் வெப்பம் குறைவாயிருப்பதனால், உடலின் வெப்பம் வௌியறுவதைத் தடுக்க, இயற்கை, மனித உடலின் நிறத்தை வெண்மையாக்கிக் கொண்டது என்று பார்த்தோம்.

4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வாழக்கை முறை எப்படி இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம். குளிர்ப்பிரதேசங்களில் வாழ்ந்த ஆரியர்கள் உழவுத்தொழில் செய்ததாக எந்த சான்றும் சிக்கவில்லை. மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட அக்காலத்தில் சிறு, சிறு இனக்குழுக்களாகவே அம்மக்கள் வாழ்ந்து வந்தனர். இயற்கையாக கிடைக்கும் உணவு வகைகளோடு, மாமிசம் உண்பதும் அவர்களது வழக்கம். மாமிச உணவில் மிகையான எரிசக்தி கிடைப்பதாலும், நிதானமாக செரிமானம் நிகழ்வதாலும், குளிர் பிரதேசத்திற்கு ஏற்ற உணவாக அது அவர்களுக்கு அமைந்தது.

தமிழர்களாகிய நாம் தொல்பழங்காலத்திலேயே, ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ, வௌி (Space) என்று ஐந்தையும் போற்றி வந்துள்ளோம். இதில் ஆரியர்களும் வௌியைத் தவிர்த்து மற்ற நான்கு பூதங்களை வணங்கி வந்துள்ளனர். அதிலும் ஆரியர்கள் அந்த நான்கு பூதங்களைவிட, அக்னி எனப்படும் தீயையே முதன்மையான தெய்வமாக வழங்கி வந்தனர். அதனுடைய நீட்சிதான் பிராமணர்களின் இன்றய யாககுண்டம் வளர்க்கும் சடங்குகள். அவர்கள் தீய்க்கு முதன்மை தரவேண்டிய தேவை என்ன? தமிழர்களாகிய நாம் தீக்கு சிறப்பான முதன்மையை ஏன் தரவில்லை?

இங்கு தான் வாழும் இடம் சார்ந்த பண்பாடு, வழக்கம், குணம் போன்றவற்றை நாம் கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது. பனிப்பிரதேசங்களில் வருடத்தில் பெரும்பாண்மையான நாட்களில் கடுங்குளிரே நிலவும். அக்கடுங்குளிரை எதிர்கொள்ள குகை அல்லது குடிசைகளின் நடுவில் தீயை எரிய விடுவார்கள். அந்தத் தீயே இரவில் ஒளியையும் கொடுக்கும். தீயை மூட்டுவது எளிதல்ல என்பதால், அனையாத தீயாகவே அத்தீயைக் காப்பார்கள்.

தீயில் சுட்ட மாமிசம் சுவையாயிருந்ததைக் கண்ட ஆரியர்கள், அந்த தீயிலேயே தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பொசுக்கி உண்டு மகிழந்தனர். நாளின் பெரும்பாண்மையான நேரங்கள் தீயைச்சுற்றியே அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது. அவர்களின் கல்வி, கேளிக்கைகள் எல்லாம் தீயைச் சுற்றியமர்ந்த படியே தான் நடந்தது. பெரியவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவங்களை, இளைய தலைமுறையினருக்கு சிறிய பாடல்கள் வாயிலாக, மனனம் செய்துகொள்ள ஏதுவான முறையில் சொல்லிக்கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எழுத்துருக்கள் உருவாகாமல் இருந்ததனால், 'சுலோக' வடிவிலேயே பாட்டுகளாக அந்த கல்வி இருந்தது. அப்போது அவர்கள் அறிந்த இசை என்பது இரண்டு சுரங்கள் கொண்டது தான். எனவே தான் அவர்களின் இன்றய சமஸ்கிருத சுலோகங்கள் கூட இரண்டு சுரங்களைப் பயன்படுத்தி இன்றும் பாடப்படுகின்றன. அவர்கள் பேசிய மொழி அஸ்வெதா என்று அழைக்கப்பட்டதாக தெரிகின்றது.

ஆக, குளிர்காய மூட்டிய தீ, உணவு பொசுக்கவும், கல்வி போதிக்கவும் பயன்பட்டது. தீயின் முன்னே இவையனைத்தையும் இவர்கள் செய்ததனால், இது அவர்களின் அடிப்படை பண்பாடாக பரிணமித்தது. அத்தகைய பண்பாட்டோடு இந்திய நிலப்பரப்பில் நுழைந்த ஆரியர்கள் இங்கும் அதே வழக்கங்களைக் கைக்கொண்டனர். இந்திய நிலப்பரப்பில் குளிர் காய வேண்டிய நாட்கள் குறைவானதாக இருந்தாலும், அவர்களின் பண்பாடாக இந்த வழி முறைகள் தொடர்ந்தன.

ஆனால், இந்திய நிலப்பரப்பில் அப்போது வாழ்ந்த தமிழர்களுக்கு இது புதிதாகவும், வினோதமானதாகவும் பட்டது. ஏற்கனவே, ஆரியர்களின் வெண் தோலால் மயக்கமுற்ற, பழுப்பு நிற/கருத்த நிற வட இந்தியத் தமிழர்கள், அவர்களின் இந்த வழிபாட்டு முறையின் மீதும் கவர்ச்சி கொண்டனர். இதை ஆரியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு அந்த யாககுண்டங்களை மையப்படுத்தியே தங்களின் ஏய்ப்புத் திட்டங்களை வகுத்துக்கொண்டனர்.

முதலில் அவர்களது வழிபாட்டு முறையை முழுதாக நம்முள் திணிக்கப்பார்த்த அவர்கள், அதில் முழு வெற்றியடையாமல் போனதால், நமது தெய்வவழிபாட்டோடு அவர்களது முறையை இணைத்து, ஒரு கலவை வழிபாட்டு முறையை ஏற்படுத்தினர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். அது இன்றுவரை ஆழ வேரூன்றித் தொடர்கிறது.

ஆனால், அவர்கள் தற்போது யாககுண்டத்தில் உயிர்களைப் பொசுக்குவதில்லையே என்று கேட்கலாம். ஆனால், புத்தன் காலம் வரை அதை அவர்கள் செய்துகொண்டுதான் இருந்தனர். யாககுண்டம் மூட்டி, உயிரோடு விலங்குகளை அதில் எரித்து, சடங்கு முடிந்ததும் அவற்றின் சுட்ட ஊணைப் புசித்தனர். புத்தர் இது பற்றிக் கேள்வி எழுப்பியபோது ஆரியர்கள், இந்த விலங்குகள் சொர்க்கம் போகும் என்று விளக்கினர். அப்படியானால், ஆரியர்களாகிய உங்களையும் தீயில் போட்டால், சொர்க்கம் போகலாமல்லவா, என்று கேட்ட புத்தரைப்பார்த்து அலரிப்போன அவர்கள், அப்போதிலிருந்து யாககுண்டத்தில் உயிர்ப்பலி கொடுத்து ஊண் உண்ணும் வழக்கத்தை விட்டனர். காலப்போக்கில் ஊண் உண்ணுவதையே கூட விட்டொழித்தனர். ஆனால் மற்றபடி தீமூட்டி சடங்கு செய்யும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

இங்கே ஒரு ரசனையுள்ள ஒர் செய்தியை கவனிக்க வேண்டும். ஆரிய இனம் அனைத்தும் இந்தியாவுக்குள் வந்து விடவில்லை. ஆரிய இனக்குழுக்களுள் பல உலகெலாம் பரவி, இன்றும் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாககுண்ட வழக்கம் அவர்களுள் யாருக்கும் இன்று இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்களது அக்கால யாககுண்ட பண்பாடு, இயற்கையான மாற்றங்களை அடைந்து, தற்போது வீட்டின் Living Roomல் Fire Place என்று நாகரிகமான நவீன பயன்பாடாகி மலர்ந்துள்ளது. இதுவும் குளிர் நாடுகளில் மட்டும் தான்.

அதேபோல, யாககுண்டம் தேவைப்படாத இந்திய நிலப்பரப்பில், அந்த பண்பாடே அழிந்திருக்க வேண்டுமே? 4000 ஆண்டுகளுக்கு முந்தய ஆரியப் பண்பாடு, இந்திய நிலப்பரப்பில், இன்றும் தொடரவேண்டிய காரணம் என்ன?

ஒரு பண்பாடு என்பது சூழலியல் தேவையின் அடிப்படையிலேயை படிப்படியாக உருவாகி, வளர்ந்து செழிப்படைகிறது. ஆனால், சூழல் மாற்றத்தால் அந்த பண்பாடும் மாற்றமடைவது தான் இயல்பானது. மேற்குலகில் அறிவியல் வளர்ச்சியினால், அவர்களின் பழைய அக்னியை மையப்படுத்திய பண்பாடுகள், கால, சூழல், அறிவியல் மாற்றங்களால் இயற்கையான மாற்றமடைந்தது. சமையலறை இருப்பதால் Fire Placeல் மாமிசம் சுடத்தேவை இல்லை. எழுத்து மொழி உருவான பிறகு சுலோக வழிக்கல்வி தேவையற்றதாகி விட்டது. ஏய்க்க அங்கு கறுப்பர்கள் இல்லாததால், தாங்கள் மட்டும் படிக்கவென்று, தங்களது ஏய்ப்பு சுலோகங்களை எழுதவென்று, உருவாக்கப்பட்ட, பேசப்படாத சமஸ்கிருதம் என்ற குழூஉக்குறி மொழி, தேவையற்றதானது.

ஆனால், இந்திய நிலப்பரப்பில் வந்தேறிய ஆரியர்களால், இது இந்திய மக்களை ஏய்த்துப் பிழைக்க ஒரு கருவியாக பயன்பட்டதால், அவர்கள் ஏய்த்துப் 'பிழைப்பதற்கான தேவையை' நிறைவு செய்ததால், இந்திய 'நிலப்பரப்புக்கு தேவையற்ற பண்பாடாக' இருந்தாலும், இந்த ஆரியப் பண்பாடு இன்றும் சீரும், சிறப்போடும் தொடர்கிறது. இந்த ஆழமான உண்மையை நாம் உணர்ந்தால் தான், தீயை மூட்டி சடங்கு செய்வதில் 'நமக்கு' எந்தப் பலனும் இல்லை என்பது புரியும்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், தீயால் நன்மையும் உண்டு, கெடுமையும் உண்டு. ஆதிகாலத் தமிழர்களுக்கு தீயால் நன்மைகளைவிட கெடுதியே மிகையாக நிகழ்ந்தது. தற்காலத்தில் தீயின் நற்பயன்கள் மிகுதியாக வளர்ந்திருந்தாலும் அதன் அழிவுத்திசைகளும் வளர்ந்தேயுள்ளது. உண்மையாகப் பார்த்தால் தீயோடு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதால் தான், கெடுதிக்குப் பெயரே 'தீய்மை', 'தீயது' என்றாகியது, ஆதிகாலத் தமிழ்ச் சொல்வழக்கில்.

ஆக, தீயைப் 'புனிதத்தின்' அடையாளமாக பார்ப்பனீயம் சொல்வதெல்லாம் முழுப் பித்தலாட்டம் தான். புனிதமானதாக ஒரு பொருள் பார்க்கப்பட வேண்டுமானால், அப்பொருளால் நன்மைகள் மட்டுமே விளையவேண்டும். தீயால் நன்மையும், தீய்மையும் நிகழ்வதால் அதை ஒரு இயல்பான ஒரு பொருளாகப் பார்க்க வேண்டுமே தவிர, புனிதமாகப் பார்க்க இயலாது. ஆக, கடுங்குளிரிலிருந்து தப்பிக்க தீ ஆரியர்களுக்கு உதவியதால்தான் அது அவர்களுக்கு முதன்மையானதும், புனிதமானதுமான தெய்வமானது. நமக்கு அப்படிப்பட்ட தேவை இல்லாததால் அது நமக்கு ஒரு முதன்மையான தெய்வமாகவில்லை. ஆனால், தீ என்பது தமிழர்களின் பல தெய்வங்களில் ஒன்றானது. தீயின் அழிவு சக்தியை உணர்ந்திருந்த ஆதித் தமிழன், சிவனையே கூட தீயின் (அழிவின்) ஒரு வடிவமாகவும் வணங்கினான் (சிவம் -> சிவப்பு -> நெருப்பு). இது தன்னை அச்சுறுத்தும் அனைத்தையும் வணங்கும் இயல்பான ஆதி மனிதர் பண்பாடுதான்.

புனிதமாகப் பார்க்கவேண்டியது ஜோதி எனப்படும் ஒளிதானே தவிர அக்னி எனப்படும் தீ அல்ல. ஒளியால் தாவரங்கள் வளர்கின்றன, மற்ற அனைத்து உயிர்களுக்கு உணவளிக்கும் மூலமாக திகழ்கின்றன. ஆனால், தீயால் தாவரங்கள் எரிந்து பொசுங்கி அழிகின்றன. தீயிலிருந்து ஒளியும் பிறந்தாலும், தீ வேறு, ஒளி வேறு. தீயில்லாமல் ஒளியை ஏற்படுத்த இயலும். தீயில்லாமல் ஒளி ஏற்படுத்தும் எண்ணற்ற சாதனங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கையும் பல இலக்கம் ஆண்டுகளுக்கு முன்பே அதையும் நிகழ்த்தியுள்ளது. மின்மினிப் பூச்சி Photo- (bio)Chemical Reaction வாயிலாக ஒளி ஏற்படுத்துவது ஒரு விந்தை. இதைப் போன்று பல உள.

ஆக, ஒளி புனிதமானது. ஆறாம் திருமுறையில் பகுத்தறிவு ஆன்மீகம் பேசிய வள்ளலாரும், ஒளியை வழிபடச் சொன்னார். ஒளி தரும் சூரியனுக்கு தை முதல் நாளன்று தமிழர்கள் நன்றி செலுத்துவது பண்டைத் தமிழரின் மாண்புக்கு ஒரு அடையாளம்.

ஆக, தமிழர்கள் தங்களது சடங்குகளை அகல் விளக்கு அல்லது குத்துவிளக்கு போன்றவற்றின் முன்னிலையில் நிகழ்த்துவது தான் அறிவுக்குகந்த செயல். மற்றவை அறிவீனம்!


நன்றி

கீற்று