செய்தி :
பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்கிறது. அத்துடன் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது சட்ட விரோதமானது மட்டுமின்றி, இந்தியாவுக்கு கவலை தரும் விஷயம்,'' என வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம், சீன பயணம் மேற்கொள்ள உள்ள அமைச்சர் கிருஷ்ணா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:
தொந்தரவு தரும் அண்டை நாடுகளுக்கு இடையே இந்தியா உள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து உருவாகும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவது, 2010ம் ஆண்டிலும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமிப்பது, காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவது, அருணாச்சல பிரதேசம் மற்றும் தலாய்லாமா விவகாரங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பது போன்றவற்றை சீனா செய்வது, நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
தலையங்கம் :
அப்பாவி தமிழர்களை அழிக்க இலங்கைக்கு போட்டி போட்டு கொண்டு இந்தியாவும் சீனாவும் ஆயுதங்கள் வழங்கின, இப்போது அதே இலங்கை நமக்கு பாதுகாப்பற்ற பிரதேசமாக உள்ளது. இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்த ஈழ தமிழர்களை அல்லது போராளிகளை இந்தியாவின் நலன் என்று கருதாது ,சோனியா போன்ற ஒரு சில பேரை திருப்தி படுத்துகிறோம் என்று நினைத்துகொண்டு அழிக்க இந்தியாதான் முதல் காரணம்.
ராஜீவ் காந்தியை போராளிகள் கொன்றிருந்தாலும் , இப்போதைக்குள்ள மாறிவந்திருந்த சூழலில் இந்தியாவின் பாதுகாப்பைவிட அல்லது இந்தியாவின் நன்மையைவிட ராஜீவ் என்ற ஒரு நபர் பிரதானம் இல்லை. (சீனாவின் அச்சுறுத்தலை பார்க்கையில்)
ஜனநாயக கோட்பாட்டை சரியாக மதித்திருந்தால் அல்லது இந்தியாவை காங்கிரஸ் பொய் இல்லாமல் ஏமாற்றாமல் உண்மையாக நேசித்திருந்தால் ஈழத்தில் தமிழர்களை அழிக்க உதவி இருக்காது. சீன அங்கே காலூன்ற விட்டிருக்காது.
இந்தியா எக்கேடு கேட்டு போனால் என்ற நினைப்பில்தான் அவர்களின் ஈழ அழிப்பு செயல் இருந்தது.
இந்தியாவிற்கு, ஈழ தமிழர்கள் வலிய தந்த ஆதரவை நிராகரித்து , அவர்களை அழிக்க விரும்பும் முதல் சக்தியாக இந்தியா(காங்கிரஸ்) இருந்தது என்பது உண்மை. அது ஏன் என்று இது நாள்வரை காங்கிரஸ் விளக்கம் அளிக்கவில்லை.
அதன் பலனை காங்கிரஸ் அனுபவிக்காது ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவே சீனாவின் அச்சுறுத்தல் என்று இப்போது பார்க்கிறது, சங்கடப்படுகிறது.