இயேசு வர தாமதம் ஆவதற்கான காரணத்தை கண்டுபிடித்தி விட்டார்கள்அதாவது இவர்கள் கூறும் காரணம் -இஸ்ரேலில் அதிகரிக்கும்கருத்தடைகள் தனாம்.அவர்கள் கூறுவதை கீழே பாருங்கள்,
இஸ்ரேலில் கருத்தடை ஆபரேஷன்கள் அதிகரித்து விட்டன. சட்டவிரோதமாக பெருமளவில் இவை நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட செயல்களால்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்து வர தாமதமாகிறது என்று இரண்டு யூத மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யூத மதகுருமார்களான யோனா மெட்ஜெர், ஷ்லோமோ அமர் ஆகியோர் கூறுகையில், குழந்தைப் பிறப்பைத் தடுப்பது இஸ்ரேலில் அதிகரித்து வருகிறது. இதுவே நமது மீட்பரின் மறு வருகை தாமதமாக முக்கியக் காரணம்.இப்பபடிப்பட்ட செயலால் ஆண்டுதோறும் ஆயிரக்ணக்கான, லட்சக்கணக்கான யூதர்கள் மறைமுகமாக பூமிக்கு வராமல் தடுக்கப்படுகிறார்கள்.
இஸ்ரேலில் ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 20 அறுவைச் சிகிச்சைகள் சட்டவிரோதமாக நடைபெறுகின்றன.
இதுபோன்ற செயல்களால்தான் இயேசு நாதர் மீண்டும் பூமிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
இங்கே நமக்கு சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது.
- முட்டாள்கள் கூறுவது போல் கடவுள் சக்தி மிக்கவர் என்றால் அவரின்பிறப்பை சாதாரண மனிதன் தடுக்க முடியுமா?
- இஸ்ரேலில் தான் இயேசு பிறக்க வேண்டுமா?ஏன் எதாவதுஅக்ரிமெண்ட் உண்டா ?
- பல ஆயிரக்கணக்கான மக்கள் சுனாமியால் சாகும் போது என்னசெய்தார்கள் இந்த சிவனும் விஷ்ணுவும் இயேசுவும் அல்லாவும்.
மக்களே கடவுளை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த பிழைப்பு வாதிகளை ஒதுக்காத வரை எத்தனை பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது,அழிஞ்சி தான் போக போறீங்க.
....பகலவன்....