கொலை நடக்காத நகரம் எங்கும் இல்லை. மும்பை, டில்லியில் கூட கொலைகள் நடக்கின்றன - ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பு.
செய்தி :
ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம், என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது கடந்த ஓராண்டாக தாக்குதல் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நிதின் கார்க்(21) மெல்போர்ன் நகரில் உள்ள ஓட்டலில் பகுதி நேர வேலைக்கு சென்ற போது வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார். இதற்க்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலால் அங்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
இது தொடர்பாக, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் க்ரையேன் குறிப்பிடுகையில், "ஆஸ்திரேலியா பாதுகாப்பான நாடு என்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஒப்பு கொண்டுள்ளன. வழக்கமாக கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் ஏற்படும் தகராறில் சிலர் தாக்கப்படுவது வழக்கம். அந்த விதத்தில் தான் நிதின் கொலையும் நடந்துள்ளது. கொலை நடக்காத நகரம் எங்கும் இல்லை. மும்பை, டில்லியில் கூட கொலைகள் நடக்கின்றன. எனவே, நிதின் கார்க் கொலையை பற்றி பேசி, இந்திய தலைவர்கள் பீதி கிளப்ப வேண்டாம். இதனால், பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.
தலையங்கம்:
ஒரு வாரத்திற்கு முன்னாள், ஹாபீப் ஹூசைன் என்னும் ஒரு இந்தியர் பட்டினியாய் அடிமையாக சவுதியில் வேலை பார்த்துவிட்டு , விட்டால் போதும் என்று , விமான கழிப்பறையில் மறைந்து வந்து தம்மை போல் கணக்கில்லாமல் ஆயிரக்கணக்கானோர் பாஸ்போர்ட் ஐ கூட வாங்க முடியாமல் இருபதாக கூறினார்.
அந்த ஆயிரக்கணக்கானோர் இன் எண்ணிக்கையும் பதிவும் இந்திய அரசாங்கத்திடம் இருக்குமா என்று தெரியவில்லை . அவர்களில் எத்தனை பேர் உயிருடன் போராட்டம் நடதிகொண்டிருக்கிராகள் என்று கூட தெரியவில்லை .
பிறிதொரு செய்தி , ராமேஸ்வரம் மீனவர்கள் அயல் நாடான இலங்கையின் மூலம் இதுவரை எண்ணூறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், அதற்கும் நமது அரசாங்கம் எந்த நடவடிக்கையோ அல்லது மத்திய அரசாங்கமோ கண்டனம் கூட தெரிவிக்கவில்லை , மாநில அரசு கூட எச்சரிக்கை தொனியில் மிரட்டல் கூட விடவில்லை. மொத்தத்தில் சாகும் மீனவர்களை பற்றி கவலை கொள்ளவில்லை.
ஆஸ்திரேலியா வில் நடப்பதை நாம் நியாயப்படுத்தவில்லை , அது கண்டனத்திற்குரியது என்றால் , ஹாபீப் ஹூசைன் போன்றவர்களுக்கும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் என்ன பதில் ? மேட்டுக்குடி மக்களிற்கான அரசாங்கம் என்று மத்திய அரசு இருப்பதன் குள்ளநரித்தனம் என்ன ? ஏழை செத்தால் கூட கவலை இல்லை , பணக்கார ஒருவன் அடி வாங்கினால் ஒட்டுமொத்த நாடே ஏதோ கொந்தளிப்பதை போல நமது அமைச்சர்கள் பேசுவது என்னைபோன்றவர்களுக்கு வேடிக்கையாக உள்ளது.
தமிழக மீனவன் - இந்திய மாணவன் இந்த இரண்டு வார்த்தை பிரயோகத்தின் அர்த்தம் என்ன ?