இன்று இரண்டு செய்திகளை நாம் இங்கே கவனத்தில் எடுத்து கொள்ள போகிறோம் , முதலில் தலையங்கம் பின்பு செய்தி
தலையங்கம் :
எந்த வித ஆராய்வும இல்லாமல் செய்திவெளியிட்ட டி வி க்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அல்லது ஜெகன் மோகன் ரெட்டி போன்றோர்கள் தமது இருப்பையும் காட்டுவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்து கொண்டார்களா ? என்ற நோக்கில் ஒரு தீவிர விசாரணை வேண்டும் .
எதற்கெடுத்தாலும் கொளுத்துவது மறியல் செய்வது பின்னர் தற்கொலை செய்வது .. ஆந்திரா அழிந்து வருகிறது.. அங்குள்ள அரசியல்வாதிகள் குளிர் காய்கிரார்களோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.மத்திய காங்கிரஸ் அரசும் தமது கட்சிக்கு , தமது மத்திய கமிட்டியின் முடிவுக்கு அனுசரணையான சாதகங்களை மட்டுமே நோக்கி காய் நகர்த்துகிறது.மத்திய மாநில அரசு செயல்படுவதற்க்கான அறிகுறியே ஆந்திராவில் இல்லை .
ஒன்று :
ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்திற்கு, ஒரு பிரபல நிறுவனத்தின் சதியே' என, "டிவி' சேனல் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டதால், ஆந்திராவில் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் "பங்க்'களை அடித்து நொறுக்கினர்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு செய்தி சேனலான டிவி-5 நேற்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. அதிகம் பிரபலமாகாத இணைய தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தச் செய்தியை வெளியிட்டது. அதில், ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு பிரபல தனியார் நிறுவனத்தின் சதியே காரணம் என, தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, "சாக்ஷி டிவி' உட்பட வேறு சில "டிவி' சேனல்களும் இதே செய்தியை வெளியிட்டன.(எந்த வித ஆராய்வும் இல்லாமல்)
இந்த விவகாரம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத், கடப்பா, விஜயவாடா, எலுரு உட்பட ஆந்திராவின் பல பகுதிகளில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள், பெட்ரோல் "பங்க்'கள் மற்றும் மொபைல் டவர்களை அடித்து நொறுக்கி, சூறையாடினர். அதுமட்டுமின்றி, ராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதி இருப்பதாகக் கூறி, இன்று "பந்த்' நடத்தப் போவதாக கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டு :
தனி தெலங்கானா விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை தில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் உள்ளிட்டோர் பங்கேற்பர்.தனி தெலங்கானாவுக்கு மத்திய அரசு ஆட்சேபனை காட்டாததால், தெலங்கானா எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தெலங்கானா ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நடத்திவரும் போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆந்திரத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இதன் தலைவர்களையும் தனித்தனியாகவும் சந்தித்துப் பேசினார். செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.ஆந்திர அரசியல் தலைவர்கள் அவரவர் பிராந்திய நோக்குடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.இதற்கிடையே தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் கே.சந்திரசேகர் ராவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியை வியாழக்கிழமை சந்தித்து தனி மாநில கோரிக்கை குறித்து பேச்சு நடத்தினார். அதேபோல் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ப.சிதம்பரத்தை வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினர். தாங்கள் தெரிவித்த கருத்துகளை பிரதமரிடம் தெரிவிப்பதாக அவர்களிடம் சிதம்பரம் உறுதி அளித்துள்ளார்.தெலங்கானா விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்கவேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளதால், இதுதொடர்பாக அடுத்த சில நாள்களில் மத்திய அரசின் சார்பில் அறிக்கை வெளியாகலாம் என்று அரசியல் கட்சிகள் ஆவலோடு காத்திருக்கின்றன.