தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அனைவருக்கும் முக்கிய செய்தி,வாருங்கள் தோழர்களே,

வணக்கம் தோழர்களே,

உங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இதோ ஒரு களம்.கூகிள் குழுமத்தில் தமிழ் இனப்பற்று கொண்ட தோழர்களை அடையலாம் காணவும் முரண்பாடுகளை களையவும் பகலவன் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களை தோழமையுடன் பகலவன் குழுமத்திற்கு வரவேற்கிறோம்.சமுதாய அவலங்களையும் தமிழையும் முன்னிலைப் படுத்தி விவாதிக்கும் குழுமமாகவே இதை கொண்டு செல்ல வேண்டும் என்று தோழர்களை கேட்டு கொள்கிறோம்.அரசியல்,சமுதாயம் என அனைத்தையும் சார்ந்த அனல் பறக்கும் விவாதங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பதை தெருவித்து கொள்கிறோம். இந்த களத்தில் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து தோழர்களை கேட்டு கொள்கிறோம்.இது எந்த ஒரு அரசியல் கட்சியையும் மதத்தையும் சாதியையும்சார்ந்தது அல்ல, முழுக்க முழுக்க தமிழுக்காக,தமிழால்,தமிழுடன் காதல் கொண்டவர்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.கிழே உள்ள முகவரியை கொண்டு உங்களை இணைத்து கொள்ளுங்கள்.


தோழமையுடன்
பகலவன் குழுமம்
pagalavan@googlegroups.com