தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழர்களுக்கு எதிராக தொடரும் கொலைவெறி...!


காங்கிரசு கட்சியின் கொலைவெறிப் பசிக்கு 400 தமிழகத் தமிழர்களின் ரத்தம் விருந் தானது. 1965&ஆம் ஆண்டில் நேருவின் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய தமிழகத் தமிழர்கள் மீது, காங்கிரசு கட்சியின் ஆட்சி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 400 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். 12 தமிழர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் செத்துப் போனார்கள். இந்தியைத் திணித்த காங்கிரசின் கொலை வெறித் 412 தமிழர்களைக் கொன்று குவித்து அடங்கிப் போனது.

செயவர்தனேயுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த, அமைதிப்படையை இராசிவ் இலங்கைக்கு அனுப்பினார். ஒப்பந் தத்தை மீறிய சிங்கள வெறியர்களிடம் மண்டி யிட்டது இந்திய அமைதிப்படை, சிவப்புக் கம்பளம் விரித்து, ஆரத்தி எடுத்து வரவேற்ற ஈழத் தமிழர்கள் மீது நரவேட்டை ஆடியது.

இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரத்துக் கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவத்தின் காமவெறிக்கு சூறையாடப் பட்டார்கள்.

35 லட்சம் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவான 6 கோடித் தமிழர்களின் அறவழிப் போராட்டத்தையும் மீறி, சிங்களக் கொலைவெறியர்களுக்கு ஆயுதப் பயிற்சி, ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை காங்கிரசு ஆட்சியாளர்கள் வழங்கினார்கள்.

மேலும், இலங்கைக்கு இராணுவ வீரர்களை அனுப்பி, உலக நாடுகள் தலையிடாத வண்ணம் தடுத்து நிறுத்தி, கடந்த ஓராண்டில் ஒரு லட்சத் திற்கு மேலான ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க காங்கிரசு ஆட்சி காரணமாகி உள்ளது.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடிகளான 35 லட்சத்திற் கும் மேலான ஈழத் தமிழர்களின், ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை கொண்ட இறையாண்மையை, சோனியா தலைமையிலான காங்கிரசு ஆட்சி குழி தோண்டி புதைத்துள்ளது. இனி ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்னவாகுமோ? தமிழ் நெஞ்சங்களும் உயிர்மநேய நெஞ்சங்களும் பதைபதைக்கின்றன.

1965ஆம் ஆண்டுக்கும் 1987 ஆம் ஆண்டுக் கும் 2009 ஆம் ஆண்டுக்கும் 22 ஆண்டு கால இடைவெளியை, தமிழின உறவுகளே ஒப்பிட் டுப் பாருங்கள். 2009 ஆம் ஆண்டுடன் 22 ஆண்டுகளைக் கூட்டினால் 2031. இந்த ஆண்டிற்குள் தமிழினத்திற்கு நான்காம் கட்ட மாக மாபெரும் ஆபத்து உருவாகலாம்.

பின்குறிப்பு :& கச்சத்தீவை அன்னை இந்திரா காந்தி அவர்கள் இலங்கைக்கு தாரை வார்த்த தால் இதுவரையில் 600க்கும் மேலான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்கிறது.

நன்றி

தமிழ் உலகம்