தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு தயார்!

அடி வாங்கியே பழக்கப்பட்ட தமிழக மகா சனமே உங்களுக்கு அடுத்த ஆப்பு கியாஸ் சிலிண்டரில் தயராகி விட்டது .இன்று நான் படித்த ஒரு செய்தி என்னை கொஞ்சம் அதிகமாகவே ஆத்திரப்பட வைத்தது.

http://www.iocl.com/iocl-logo-types/jpg/1024X768.jpghttp://www.indiabuzzing.com/wp-content/uploads/oylr3sil1lpg-cylinder-picture.jpg

கியாஸ் சிலிண்டர் குறித்த நேரத்தில் தவறாமல் கிடைக்க வேண்டும் என்றால் இனி ரூ 50 போட்டுக் கொடுக்க வேண்டுமாம்.

இதனை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனே அறிவித்துள்ளது. ஏற்க்கனவே சிலிண்டர் வெளி சந்தையில் 700 ருபாய் வரை விற்கிறார்கள்.அவர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க முடியாத இந்த அரசு தன் பாணியில் அதுவும் கொள்ளை அடிக்க தயாராகிவிட்டது.

நடுத்தர குடும்ப மக்களின் பணத்தை இது போன்ற அரசு நிறுவனங்களே சுரண்டுவதை பார்த்தால் அரசாங்கமே கொல்லை கூட்டமாக மாறி விட்டதா ?

வாடிக்கையாளர்கள் சர்விஸ்க்கும் சேர்த்துதானே பணம் கட்டுகிறார்கள்,அப்படி இருக்க எதற்கு இந்த புண்ணாக்கு அறிவிப்பு.

பல நேரங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஊழியர்கள் கொண்டு வரும்போது, வீட்டில் ஆள் இருப்பதில்லாமல் போகிறதாம். இதனால ஊழியர்களுக்கு நேர விரயமும், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காத நிலையும் ஏற்படுகிறதாம்.

இதைத் தவிர்க்க, எந்த நேரத்துக்கு சிலிண்டர் கொண்டு வரவேண்டும் என்று வாடிக்கையாளர்கள் சொல்லிவிட்டால் போதும், சரியாக அந்த நேரத்துக்கு ஊழியர்கள் சிலிண்டர்களோடு வந்து நிற்பார்கள் என்று ஐஓசி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஏன் என்றால் இங்குதான் அதிக பணக்காரர்கள் வாழ்கிறார்கள் போலும்.

ஏற்கெனவே பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு, மக்கள் தாராளமாக பணம் தருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே இந்த வேலையில் இறங்கியுள்ளதாம் ஐஓசி.


உயர் வர்க்கத்து மக்களை இது பாதிக்காத விஷயம் என்றாலும் மாத சம்பளத்தையே பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள் ? காசு வாங்கி ஒட்டு போட்ட கூட்டம் நாமாக இருக்க மத்திய அரசுக்கு குஜா தூக்கும் மாநில அரசுதான் என்ன செய்யும்.

தமிழக பாமர மக்களே உங்களுக்கு ஒரு துணுக்கு செய்தி,

வளைகுடா நாடுகளில் சிலிண்டரின் விலை ரூபாயின் மதிப்பில் வெறும் 4 ருபாய் மட்டுமே,இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் இந்தியா எப்படி ஒளிர்கிறது என்று.

....பகலவன்....