இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், மதிமக செயலர் வை.கோ மீதும், கடுமையான விமர்சனங்களை வைத்து உரையாற்றினார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உரையில், " தன் பின்னால் உள்ள இளைஞர்களை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் திருமாவளவன் பயன்படுத்த வேண்டுமே தவிர தவறான வழிக்கு அவர்களை இட்டுச்செல்லக் கூடாது." எனக் குறிப்பிட்டார்.
மதிமுக செயலாளர் குறித்துத் தெரிவிக்கையில், "பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், வருவார் எனத் தானும் ஏமாந்து, மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார் வை.கோ. இல்லாத ஒருவரை இருப்பதாக மாயம் செய்து கொண்டிருக்கிறார். யாரை எதிர்த்து கட்சி தொடங்கினீர்களோ, அவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். பின் சிறையில் தள்ளியவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். உங்கள் அணி மாறுதல் என்பது என்ன கொள்கை ? " எனக்குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், "விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் அவ்வாறு பேசுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் கருணாநிதி தயங்குகிறார். தி.மு.க.வும், காங்கிரசும் கொள்கை ரீதியாக எதிரெதிர் கட்சிகளாக இருக்கலாம் ஆனால், காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தை பாதுகாக்கும் கட்சி. தி.மு.க. அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். ஆகவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது முதலமைச்சர் கருணாநிதி தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழமை கட்சி என்ற பெயரில் வேட்டு வைக்க காத்திருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக, பிரபாகரன் படத்தை வைக்க முதல்வர் அனுமதிக்க கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல" என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி தங்கபாலு பேசுகையில், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. காங்கிரஸ் கட்சியினால் தான் இங்கு ஜனநாயகம் காக்கப்படுகிறது. தீவிரவாதத்தை வேரறுக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், காங்கிரஸ் கட்சி எந்த விளைவையும் சந்திக்கத் தயாராக உள்ளது" எனக் குறிப்பிட்டார்.
முதலில் தீவிரவாத எதிர்ப்பு என்றால்,ஏன் இலங்கைக்கு, ஈழத்திற்கு இவர்கள் ஓடுகிறார்கள் . இங்கே எந்த பிரச்சினையும் இல்லையா ! ஏன் பிரபாகரனின் படத்திற்கு இவ்வளவு பயம் இவர்களுக்கு .
தீவிரவாததிற்கும் போராட்டத்திற்கும் என்ன வித்தியாசம் என்ற அடிப்படையே இவர்களுக்கு தெரியவில்லை ? . ராஜீவ் காந்தியை கொன்றார்கள் அதனால் தீவிரவாதிகள் என்றால் , அப்பாவி மக்கள் ஒரு லக்ஷம் பேரை இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து உதவிகளும் செய்து கொன்ற காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களை என்னவென்று சொல்லுவது ?
வைகோ பிரபாகரனை மட்டும் பேசவில்லை இங்கே முல்லை பெரியாரை பற்றியும் பேசுகிறார், போராட்டம் செய்கிறார் அதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்.
தேவையில்லாமல் தமிழ் ஈழம் வராது என்று சொல்ல இவர்கள் யார் ? அந்த நாடு மக்களே ,புலம் பெயர்ந்தோரே ஈழம்தான் தனி தீர்வு என்று சொல்லிகொண்டிருக்கையில் இவர்களுக்கு ஈழம் வந்தால் என்ன நட்டம் அல்லது ஏன் ஈழத்தின் மீது இவ்வளவு வெறுப்பு இவர்களுக்கு ?
தமிழ் ஈழத்தை பற்றியோ அல்லது அங்குள்ள தமிழர்களை பற்றியோ பேச ஏன் தமிழ் நாட்டு தமிழர்களை பற்றிகூட பேச காங்கிரசின் எந்த நாய்களுக்கும் அருகதை கிடையாது.
ஏனென்றால் ஈழத்தில் கடந்த ஆண்டு போரில் தமிழர்களை திட்டமிட்டு கொல்லுவதற்கு அனைத்து உதவிகளும் செய்தது காங்கிரஸ் அரசு. இதை சொல்லுவதற்கு பெரிய ஆராய்ச்சி படிப்பு தேவையில்லை .
பிறிதொரு நாட்டு விவாகரத்தை அந்த நாட்டு மக்களின் விருப்பம் என்னவென்றே அறியாமல் , ஈழம் வராது என்று சொன்னால் அது இவர்களின் முட்டாள்தனம்தானே.
திருமாவளவனை தெரியும் "சிங்கம் புலிக்கு நடுவில் இவர் இருப்பார் " என்றால் அது திமிர்த்தனம் தானே ? மடத்தனம் தானே.
பேசு பேசு முடிந்த வரை பேசிப்பார்.அப்படியும் திருந்தவில்லை என்றால் களத்தில் இறங்கி களை எடுத்துதான் ஆக வேண்டும் .....