தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இலங்கை அரசை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை - வைகோ?

ஐ.நா. நிபுணர் குழுவை அனுமதிக்காத இலங்கை அரசை இந்தியா ஏன்
கண்டிக்கவில்லை என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில்
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு ஐ.நா. அமைத்துள்ள ஆய்வுக்
குழுவை, இலங்கை அனுமதிக்காமல் உள்ளது. இதை ஏன் இந்திய அரசு
கண்டிக்கவில்லை. இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுகிறது. இலங்கை
அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்கிறது.


ஐ.நா. அலுவலகத்தையே இழுத்து மூடுவோம் என்று அங்குள்ள சிங்கள மந்திரி
கூறுகிறார். ஐ.நா.அலுவலகத்தை மூடி, அங்குள்ள பணியாளர்கள் வெளியேற
முடியாதபடி நடந்து கொண்டனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கண்டனம்
தெரிவித்துள்ளன. இந்தியா ஏன் கண்டிக்கவில்லை. தமிழ்நாட்டில் வாழ்வாதார
பிரச்சனைகளான பாம்பாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசு
செயல்பட தவறிவிட்டது. 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநிறுத்திய பெருமை
ஜெயலலிதாவையே சாரும். விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டால் தமிழக மக்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து,
வேதாரண்யத்தில் எனது தலைமையில் மதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறுகிறது என்றார்.