தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ரஞ்சிதாவுடன் அடுத்த லீலைக்கு அடிபோடும் நித்யானந்தா

நடிகை ரஞ்சிதா நேர்மையான மற்றும் பணிவான ஒரு பக்தை என நித்யானந்தா
தெரிவித்துள்ளார். பாலியல் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில்
வெளிவந்துள்ள நித்யானந்தா இதுவரை நடிகை ரஞ்சிதா குறித்து எதுவும்
தெரிவிக்காமல் இருந்து வந்தார்.


இந்நிலையில், இணையதளம் ஒன்றில் பேசிய அவர், பாலியல் சர்ச்சை குறித்த
வீடியோ வெளிவந்த போது, அதுகுறித்து தான் மனவேதனை அடையவில்லை எனவும், தனது
பக்தர்கள் குறிப்பாக நடிகை ரஞ்சிதா குறித்து தான் மிகவும் மனவேதனை
அடைந்ததாக தெரிவித்துள்ளார். ரஞ்சிதா நேர்மையான மற்றும் பணிவான ஒரு பக்தை
என தெரிவித்த நித்யானந்தா, ரஞ்சிதா தனது குடும்பத்தினரால் மிகவும்
மனவேதனை அடைந்திருந்ததாக தெரிவித்தார். மக்கள் யாராவது என்னை தாக்க
வேண்டும் என நினைத்தால், அல்லது பழிவாங்க வேண்டும் என நினைத்தால் அதை
நேரில் வந்து செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.