தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இளம் தமிழ் பெண்களை இரவில் வேட்டையாடும் இலங்கை ராணுவம்

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து அண்மையில்
விடுவிக்கப்பட்டு, மன்னார் பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ள
இளம்பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் இலங்கை இராணுவத்தினர் இளம்
பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருதாகவும் மன்னார் தகவல்கள்
தெரிவிக்கின்றன.


இது குறித்து முறைப்பாடு செய்ய பெற்றோர் அஞ்சி வருகின்றனர். இந்த
நிலையில் தமது பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர் உறவினர்களின்
வீடுகளுக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.


மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள பகுதிகள் முற்றாக இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த பகுதிகளில் எட்டு பேருக்கு ஒருவர் என்ற
வீதத்தில் இராணுவத்தினர் உள்ளனர். இரவு நேரங்களில் இளம் பெண்கள் உள்ள
வீடுகளுக்குள் பிரவேசிக்கும் இராணுவத்தினர் பெண்களை பாலியல்
துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


யுத்தம் காரணமாக பல இளம் பெண்கள் விதவைகளாக மாறியுள்ளதுடன் சிலரது
கணவன்மார் தடுத்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை போரினால்
பாதிக்கப்பட்டு உடல் அங்கங்களை இழந்துள்ள நிலையில் மீள்குடியேற்றப்பட்டு
உள்ளவர்களும் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.