தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆந்திர அரசியல்வாதிகளின் இன உணர்வும் , தமிழக அரசியல்வாதிகளின் இன துரோகமும்.

நான்கு நாட்களிற்கு முன்னர் , உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல்,
மகாராஷ்டிர அரசு கோதாவரி ஆற்றின் குறுக்கே, பாப்லி அணை கட்டுவதாய் வந்த
தகவலை அடுத்து அந்த இடத்திற்கு சென்று போராட்டம் நடத்த முனைந்த
ஆந்திராவின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தெலுகு தேசம் தலைவர் சந்திரபாபு
நாயுடு , மகாராஷ்டிர அரசினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்தது அசோக் தவான் தலைமையில் உள்ள மகாராஷ்டிர காங்கிரஸ் அரசு.

ஆந்திராவில் இருப்பது ரோசையா தலைமையில் உள்ள ஆந்திர காங்கிரஸ் அரசு.

இந்த பிரச்சினையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது மத்திய காங்கிரஸ் அரசு
அல்லது மத்திய காங்கிரஸ் கட்சி. ஏனென்றால் மிகபெரும் தலைவலியாய் இருந்த
ஜெகன் மோகன் ரெட்டியின் ஆறுதல் யாத்திரை பிரச்சினை அப்படியே ஆறிவிட்டது.
ஆனால் புது தலைவலி நாயுடுவின் காங்கிரஸ் எதிர்ப்பு மூலம் வந்தது.

கைது செய்த மகாராஷ்டிர , நாயுடுவை ஒரு கல்லூரியில் சிறை வைத்து பின்னர்
அவுரங்கபாத்க்கு மாற்றியது.

இந்நிலையில் ரோசையா, மகாராஷ்டிர அரசை தொடர்பு கொண்டு , நிலைமை மிக
மோசமாய் உள்ளது எனவே நாயுடுவை விடிவியுங்கள் என்று எச்சரித்தார்.

மத்திய அரசிற்கும் இந்த இதே மாதிரியான எச்சரிக்கையை விடுத்தார். இனி
காங்கிரஸ் கட்சி இங்கு இயங்கமுடியாது அந்த அளவிற்கு பிரச்சினை பூதாகாரம்
ஆகிவிடும் என்று மத்திய காங்கிரஸ் பார்வையாளர்களிடம் ரோசையா
தெரிவித்தார்.

ரோசையா காங்கிரஸ் கட்சியின் முதல்வர் , நாயுடுவிற்கு எதிர்கட்சியாக
இருந்தாலும் மாநில நலனில் விட்டுகொடுக்கவில்லை. ஒரே இனத்தை சேர்ந்த
அரசியல்வாதியான நாயுடுவை அவர் விட்டுகொடுக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்க , பிரணாப் முகர்ஜி ஹைதராபாத் வந்தபொழுதும்(தென்
மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு) அவரை தெலுகு தேசம் கட்சியினர் முற்றுகை
இட்டு ஆர்பாட்டம் செய்தனர். அவர்களை கைது கூட செய்ய வில்லை. கண்டித்து
விட்டு விட்டார்கள். பிரணாப் முகர்ஜி விட்டால் போதும் என்று டெல்லிக்கு
ஓடிவிட்டார்.

அலுவல் வேலையாக ஆந்திரா வரவேண்டியிருந்த அசோக் தவானை, ரோசையா எச்சரித்து
வராது செய்துவிட்டார்.

ஆனால் நமது தமிழ்நாட்டில் நிலைமை, இதே பிரணாப் முகர்ஜி சென்ற ஆண்டு
தூத்துக்குடி வந்தபொழுது,

அப்பொழுது தினமும் குறைந்தது ஆயிரம் பேராவது ஈழத்தில் , இந்தியாவின்
துணையோடு கொல்லப்பட்டுகொண்டிருந்த நேரம், தமிழகத்தில் எழுந்த எழுச்சியை
நீர்த்து போக செய்யும் பொருட்டு, முதல்வர் கருணாநிதி இங்கு பல சித்து
வேலைகளை செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு விளையாட்டு இந்தியாவில்
இருந்து பிரதிநிதிகள் பலர் இலங்கை சென்று அங்குள்ள ஆட்சியாளர்களை
சந்தித்து விட்டு வருவது. அப்படி பிரணாப் முகர்ஜியும் இலங்கை சென்றார்.
அவர் திரும்பி வந்திருந்த நேரம் , வந்தவர் கருணாநிதியின் வீட்டு
வாசலிலேயே , இன்னொரு நாட்டின் இறையாண்மையில் தலையிட முடியாது என்று
இறுமாப்பு பேசிய நேரம் ,

பிரணாப் முகாஜி ஒரு நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வந்திருந்த நேரம் வைகோ
தலைமையில் இலங்கை பாதுகாப்பு இயக்கத்தினர் அவருக்கு கருப்பு கோடி காட்டி
போராடிக்கொண்டு இருந்தனர்.

கருணாநிதி ஆந்திராவில் ரோசையா செய்ததை போல் செய்யவில்லை, மாறாக
அனைவரையும் கைது செய்து பாளை சிறையில் அடைத்தார். இதை போல் எத்தனையோ
நிகழ்வுகள். கைதுகள்.


கருணாநிதி இன்று ஆந்திராவில் ரோசையா செய்ததை போல , மத்திய அரசையும்,
காங்கிரசையும் இங்குள்ள உண்மை நிலையை சொல்லி இருந்தால் , நிலைமை விபரீதம்
ஆகும் ஒவ்வொரு தமிழனும் இங்கு கொதித்து கொண்டிருக்கிறான் என்று சொல்லி
இருந்தால் , ஈழத்தில் முள்ளிவைக்காளில் தமிழன் ஒரு லக்ஷம் பேர்
செத்திருக்க மாட்டான். இன்னமும் முள்வேலிக்குள் முடங்கி இருந்திருக்க
மாட்டான். கருணாநிதியின் கையில் அப்போது அதிகாரம் இருந்தது. கருணாநிதி
சொன்னால் மத்திய அரசும் இலங்கை அரசை கட்டுபடுத்தி இருக்கும்.

கருணாநிதி அப்படி செய்யவில்லை என்பதை விட ஒரு படி மேலே பொய் , நீங்கள்
(மத்திய அரசு) என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் , இங்கே
தமிழர்களை ஒடுக்கும் வேலைகளை , மாநிலத்தில் செய்துவிடுகிறோம் என்று
உறுதிபத்திரம் கொடுத்ததின் விளைவே, ஈழத்தில் நடந்தேறிய மிக பயங்கர மனித
கொடூரம்.

கருணாநிதி மட்டும் அல்ல , அப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும்
தமிழர் எதிர்ப்பு நிலையையே கொண்டிருந்தனர். செத்துகொண்டிருப்பவன் தமிழன்
என்ற ஈரம் கொஞ்சமும் இல்லாது தங்கபாலு 'இறையாண்மையை' பேசி
கொண்டிருந்தார்.

சிதம்பரம் , பிரபாகரனுக்கு அறிவுரை கூறுவது போல் எச்சரிக்கை கூறிகொண்டிருந்தார்.
பீடர் அல்போன்ஸ் மற்றும் பல காங்கிரஸ் குட்டிகள் , நாச்சியப்பன் போன்றோர்
, சீனாவிற்கு எதிராய் இந்திய இலங்கையில் இறங்கியுள்ளது என்று , தமிழர்கள்
சாவதை பற்றி மட்டும் மறந்து விட்டு பேசினார்கள்.

இன ஒற்றுமை இல்லாத தமிழ்நாடு மட்டும் இல்லையென்றால் , இந்த காங்கிரசின்
தலைவர்கள் யாரும் இங்கே இப்போது அரசியல் மட்டுமல்ல குடியிருந்திருக்கவே
முடியாது.

ஆனால் என்ன செய்வது தமிழனுக்கு முக்கியம் இறையாண்மையும் , இந்திய தேசிய
ஒற்றுமை என்னும் நடிப்பும்தானே.

சாதாரண ஆணை பிரச்சினைக்கே ஆந்திராவின் அனைத்து அரசியல்வாதிகளும் இனத்தை
விட்டுகொடுக்க மாட்டது இருக்கிறார்கள்.

இங்கே ஒரு லக்ஷம் சொந்த மொழி பேசும் தமிழன் இறந்த பின்னும் தேசிய நியாயம்
பேசி கொண்டிருக்கிறான். இங்கே தமிழனுக்கு பிரச்சினை வரும்பொழுது தமிழனாக
மாற மாட்டேன் என்கிறான்.

கருணாநிதிக்கு கொஞ்சமும் இனத்தின் ஈரம் இல்லை. இனி அவரிடம்
எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.

ஜெயலலிதாவின் மேல் பலமான சந்தேகம் இருக்கிறது. தேர்தலுக்கு மட்டும் இவர்
தமிழர்களின் நலம் பேசுகிறாரா? என்று.

ஈழ தமிழனின் சாபம் இங்கு கொஞ்சமேனும் ஈரம் கொண்டுள்ள திருமாவும்
ராமதாசும் பதவி அதிகாரத்தை விரும்பி அரசியல் காய் நகர்த்த வேண்டிய
சூழலில் இருக்கிறார்கள். அல்லது அவர்களது இயக்கம் இங்கே பலம் பெறாது.


ஈழத்தில் உள்ள கொடுமைகளை பேசினால் , வைகோ, நெடுமாறன், சீமான்,
ராஜேந்திரன், மணி போன்றோருக்கு சிறை அல்லது தடை.

இன துரோக அரசியலில் இருந்து தமிழன் வெளியே வந்தால்தான் , ஈழ தமிழன்
மட்டும் அல்ல தமிழக தமிழனுக்கும் விடிவு.


ஏனென்றால் நமக்கு பிரச்சினை இங்கேயும் உள்ளது.

காவிரியில் பிரச்சினை,
பாலாற்றில் பிரச்சினை,
ராமேஸ்வர மீனவனின் உயிர் பிரச்சினை,
முல்லை பெரியாற்றில் பிரச்சினை,
ஆழியாற்றில் பிரச்சினை,
ஒக்கேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தில் பிரச்சினை,

எல்லா பிரசினகளிற்க்கும் விடிவு , தமிழர்கள் அரசியல் எழுச்சி பெறுவதுதான்.